Thursday, September 21, 2017

எம்டன்... சென்னையைத் தாக்கிய ஒரே போர்க்கப்பல்! Thanks to Thatstamil

எம்டன்... சென்னையைத் தாக்கிய ஒரே போர்க்கப்பல்!

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/emden-the-only-warship-attacked-chennai-296565.html

This article is written by Stanly Rajan

அது ஐரோப்பாவில் நாங்களும் குறிப்பிடதக்க நாடு என ஜெர்மன் களமிறங்கிய காலம், அன்றைய அண்ணாச்சி பிரிட்டனின் பெரும் கை அவர்களது கடல்படை. யுத்தத்தில் பிரிட்டனை வெல்லவேண்டுமனால் பெரும் வலிமையான கடல்படை இல்லாமல் அது சாத்தியமில்லை என்பது ஜெர்மனுக்கு புரிந்தது. 

முதல்கட்டமாக கட்டபட்டதுதான் அந்த பிரமாண்ட கப்பல், அதனை உருவாக்கும் பொழுதே மகா தந்திரமாக உருவாக்கினார்கள். அதாவது ஒரு சாதாரண கப்பலாக வெளியே தெரியும், ஆனால் நொடிக்குள் ஒரு போர்கப்பலாக தன்னை மாற்றி கடும் ஆட்டம் ஆடும். சகலமும் முடிந்தவுடன் பீரங்கிகள் எல்லாம் உள் இழுக்கபட்டு, ஏதோ நல்லெண்ண பயணமோ அல்லது நல்லெண்ணெய் வியாபார கப்பலாகவோ மாறிவிடும். போலந்தில்தான் கட்டபட்டது, ஜெர்மன் பாரம்பரிய‌ பட்டணமான எம்டன் எனும் பெயர் அதற்கு சூட்டபட்டது, கப்பல் நிபுணர்களை தவிர யாராலும் அது யுத்தகப்பல் என கண்டுபிடிப்பது கடினம், இந்த காலத்தில்தான் முதல் உலகப்போர் தொடங்கியது. உண்மையில் அந்த கப்பல் ஆசியா வரவேண்டிய அவசியமில்லை, பிரிட்டன் படைகளை குழப்ப ஐரோப்பிய கடற்கரையில் சுற்றிருக்க வேண்டியது, ஆனால் ஒரு சுதந்திரபோராட்ட தமிழன் சென்பகராமனால் ஆசியாவிற்குள் வந்தது. சென்பகராமன் யார் என்றால் இனி ராமராஜன் படத்து ரசிகரா? என கேட்கும் அளவிற்கு இந்திய வரலாறு மாற்றபடும். திப்புசுல்தானையே மறக்கடிக்க நினைப்பவர்களுக்கு சென்பகராமன் எம்மாத்திரம்?, இனி இந்திய வரலாறு என்றால் கோட்சே,சாவர்கர் அப்படியே இன்னும் பலர் வருவர். மற்றவர் எல்லாம் வேலைவெட்டி இல்லாமல் வெள்ளையரிடம் செத்தவர்கள். பெரும் பதிவாக எழுதவேண்டியவர் சென்பகராமன், இன்னொருவனுக்கு அந்த வரலாறு சாத்தியமே இல்லை. பின்னர் பார்க்கலாம். இப்பொழுது கப்பலில் ஏறுவோம். அப்படியாக அந்த கப்பல் ஆசிய கடலுக்குள் நுழைந்தது, அதுவரைக்கும் அதுவரை என்ன, பின்னாளில் ஜப்பான் தாக்கும் வரைக்கும் ஐரோப்பிய நவீன போர்க்கப்பல்களுக்கு ஆசியாவில் வேலை இல்லை, இன்னொரு வகையில் சொல்வதென்றால் இந்தியாவில் நடைபெற்ற ஒரே கப்பல்படை தாக்கம் அல்லது உலகப்போர் தாக்குதல் என்றால் அது இன்றுவரை செனையில் நடந்த எம்டன் தாக்குதல் மட்டுமே. (இன்று மாறிவிட்ட காலங்கள், இன்னொரு உலகப்போர் வந்தால் பாகிஸ்தான், சீனாவின் ஏவுகனைகள் நிச்சயம் சென்னையினை குறிவைக்கும், அவ்வளவு இல்லை என்றால் இலங்கையின் நாட்டு வெடிகுண்டாவது நிச்சய்ம் வீசபடும்.) அது 1914 செப்டம்பர் 22, நவராத்திரி கொண்டாங்களில் சென்னை மூழ்கி இருந்தது, அப்பொழுது திடீரென சென்னை துறைமுகத்தில் நுழைந்து கோட்டையினை தாக்க தொடங்கியது எம்டன். ஆடிபோனது சென்னை, இலக்குகளை மிக துல்லியமாக தாக்கியது எம்டன். சென்னை உயர்நீதிமன்றம் வரை குண்டுகள் தாக்கின, துறைமுக பணியாளார் 10 பேர் செத்தனர். பதிலுக்கு பிரிட்டிஷ் படைகள் தாக்க தொடங்கும் முகமாக, விளக்குகள் அணைக்கபட்டு, சென்னை இருட்டில் மூழ்க தொடங்கியது. விளக்கையா அணைக்கிறாய், இதோ பார் தீபம் என பர்மா ஆயில் கம்பெனி குடோனை குண்டு வீசி அழித்தது எம்டன், பெரும் தீ, சென்னைக்கே வெளிச்சம் தெரிந்தது. அந்த வெளிச்சத்தில் இன்னும் சில குண்டுகளை வீசிவிட்டு மறைந்தது எம்டன். முதல் தாக்குதலை எதிர்கொண்ட சென்னை காலியானது, கிட்டதட்ட 25 ஆயிரம் பேர் காலிசெய்து ஊர் திரும்பினர், இன்றைய நீதிமன்ற, துறைமுக, சென்னை கோட்டை பகுதிகள் எல்லாம் வெடித்த ஷெல்கள் கிடந்தது. முதல்முறையாக தனது ஆசியபகுதிக்குள் ஜெர்மன் தாக்கியதை கண்டு அலறிய பிரிட்டன் எம்டனை தீவிரமாக தேடியது, இன்றைய காலம் என்றால் செயற்கை கோளின் உதவியில் நொடியில் தீர்த்துவிடுவார்கள், அல்லது நீர்மூழ்கி மூலம் முடிவு கட்டுவார்கள். அக்காலம் அப்படியல்ல தேடவேண்டும் அதுவும் கடலில். எம்டனும் கலக்கியது, ஏதாவது ஒரு நாட்டின் துறைமுகத்தில் வேறுநாட்டு கொடிபறக்க, யுத்தத்திற்கும் தனக்கும் சம்பந்தமே இல்லாதது போல காட்டிகொண்டு பொருட்களை நிரப்பி கொண்டு பயணித்தது. திடீரென மலேசியாவின் பினாங்கினை தாக்கியது, கிழக்காசிய பிரிட்டன் காலணிகளை தாக்கியது. அப்படியாக 31 பிரிட்டன் கப்பல்களை மூழ்கடித்தது. அவமானத்தில் சிவந்தது பிரிட்டன். காரணம் எங்கள் சாம்ராஜ்யத்தில் இந்துமாக்கடல் "பிரிட்டனின் ஏரி", எம்மை மீறி யாரும் புகமுடியாது என்ற கர்வத்தில் அறிக்கையிட்ட பிரிட்டனுக்கு எம்டன் மகா அவமானத்தை கொடுத்தது. இனி எம்டனை அழிக்காவிட்டால், ஆசியாவில் பிரிட்டன் வர்த்தகம் சாத்தியமில்லை எனும் அளவிற்கு அச்சுறுத்தியது எம்டன் கப்பல். வழக்கம் போல மாறுவேடம், அவ்வப்போது அந்நியன் அவதாரம் என சென்றுகொண்டிருந்த எம்டன் கப்பல், ஒரு கட்டத்தில் ஆஸ்திரேலியா அருகே ஒரு கப்பலை மூழ்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது, வியாபார கப்பல்போல அச்சிறிய கப்பலின் அருகில் வந்த எம்டன், திடீரென விஸ்வரூபமெடுத்து அக்கப்பலை தாக்கியது, ஆஸ்திரேலியர்கள் கண்டுகொண்டனர், ஓ இவர்தான் எம்டன். இங்குதான் இருக்கின்றார். சொல்லபோனால் ஒரு வலை, காரணம் அந்த கப்பலை தூரத்தில் கண்காணித்து கொண்டிருந்தது ஆஸ்திரேலியாவின் சிட்னி போர்கப்பல். சிட்னி கப்பல் மகா நவீனமானது, எம்டனை அழிப்பதற்காகவே கடலில் விடபட்டது, இந்த வலையில் சிக்கியது எம்டன். கடும் யுத்தத்தில் கடல் யுத்த வியூகபடி, எம்டனின் அடிபாகத்தை சிட்னியால் உடைக்கமுடியவில்லை, திகைத்தார்கள். ஆனால் கப்பல் தொடர்ந்து இயங்கமுடியாதவாறு எம்டனின் பாய்லர்களை ஆஸ்திரேலியாவின் சிட்னி முந்திகொண்டு உடைத்தது, இன்னொன்று தனியாக சிக்கிகொண்ட எம்டனுக்கு உதவிக்கும் யாருமில்லை. ஆஸ்திரேலிய படையினரோ குற்றால குறவஞ்சி கொண்டாட்டத்தில் இருந்தனர், அவ்வளவு பெரும் சாதனையாக அது கருதபட்டது. முதல் உலகப்போரில் தனி முத்திரை பதித்து, இங்கிலாந்தே அக்கப்பல் "கிழக்கின் அன்னப்பறவை" என ஒப்புகொண்ட எம்டன், சுமார் 200 வீரர்களோடு அழிக்கபட்டது. அதன்பின்னரே பிரிட்டன் நிம்மதி பெருமூச்சுவிட்டது. சுருக்கமாக சொன்னால் இன்றைய நவீன போர்கப்பல்களுக்கு அதுதான் முன்னோடி, 1972 வங்கபோரில் இந்தியாவின் விக்ராந்த் கப்பல் பாகிஸ்தானில் எம்டன் என்றே அழைக்கபட்டு, அதனை அழிக்கவந்த பாகிஸ்தானின் நீர்மூழ்கி (அவர்கள் என்று உருப்படியாக செய்தார்கள்? எல்லாம் அமெரிக்க அன்பளிப்பு) விசாகபட்டினம் அருகே மூழ்கடிக்கபட்டதும் பின்னாளைய வரலாறுகள். எப்படியோ இன்றுவரை சென்னையினை தாக்கிய ஒரே போர்கப்பல் எம்டன் மட்டுமே, அந்த பெருமை எம்டனுக்கு மட்டுமே இருந்துவிட்டு போகட்டும் என்பதுதான் சென்னை விரும்பிகளின் பிரார்த்தனை. - ஸ்டான்லி ராஜன்

Read more at: https://tamil.oneindia.com/news/tamilnadu/emden-the-only-warship-attacked-chennai-296565.html

Sunday, June 18, 2017

பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.வாரியார் சுவாமிகள் அவன் மொழியிலேயே பதில் சொன்னார்

ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக் கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம் கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா? கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.

Sunday, March 26, 2017

பக்திப்பரவசம் கொண்ட கதிர்காமம்

My post in Face book -> January 2013



பக்திப்பரவசம் கொண்ட கதிர்காமம் மனதை விட்டு நீங்காத கோவில்.
எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் பக்தியோடு அந்த முருகனை வழி பட்டு நிம்மதி அடைவார்கள்
அவன் புகழை பாடி அவன் இடத்தில் அமர்ந்தாலே நாம் தோஷங்கள் யாவும் நீங்கி உடல் நோய் மாறி மக்களை நிம்மதி அடையச்செய்யும் சக்தி கொண்ட கதிர்காமககந்தன் அவன் அருளை வேண்டிட மக்கள் அலை போதும் திருத்தலம் கதிர்காமம்.
கதிர்காமம் ஊவா மாகாணத்தில் புத்தளப்பிரிவில் உள்ள தியகம என்னும் வனாந்திரப் பிரதேசத்தில் மாணிக்க கங்கைக்கு அருகாமையில் அமைந்துள்ளது
கதிர்காமத்தை சுற்றி பல கோவில்கள் உள்ளன இதில் கதிர்காம சந்நதி . வள்ளியம்மை சந்நதி என்ற கோவில் உள்ளது.
ஒவ்வொரு நோய்களை தீர்த்துவைக்கும் பக்தியான முருகனிடம் வேண்டுதல் செய்து காவடி, கற்பூரச்சட்டி, பாத யாத்திரை என்று நேத்திக்கடன்களை முடித்துவைப்பதற்கே அங்கு பக்தர் கூட்டம் ஒவ்வொரு நாளும் காணலாம்
எனக்கு சற்றே புரியாத விபரங்கள்
1. இந்த கோவிலில் எந்த சந்நிதியிலும் விக்ரக வழிபாடு காணவில்லை. ஒரு படுதாவில் (ஸ்க்ரீனில்) சமிக்கி வேலைப்பாடுகளுடன் ஆறுமுகன் படம் வள்ளி தெய்வானையுடன் வரையப்பட்டுள்ளது. அந்த படுதாவை மட்டுமே எல்லோரும் வணங்குகிறார்கள். என்ன காரணம்? விக்ரகங்கள் இருந்து ஏதாவது யுத்தத்தில் சேதப்படுத்தப்பட்டதா? அல்லது அத்தகைய நுட்பமே அறிமுகப்படுதப்படவில்லையா?
2. இந்த கோவிலை எல்லா மக்களும் வணங்கினாலும் தமிழர்களுக்கான கடவுளாகவே நாம் அறிந்திருக்கிறோம். அப்படி இருக்க ஒரு அறிவிப்பு கூட தமிழில் செய்வது இல்லை. இத்தகைய பாதிப்பு சமீபத்தில்தான அல்லது மிக நீண்ட நாட்களாகவே இப்படித்தானா?
வியப்புறும் செய்திகள்
ஒவ்வொரு பக்தரும் அங்கே இருக்கும் கடைகளில் வித விதமாக பழங்களை வாங்கி முருகனுக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். இதில் என்ன வியப்பெனில் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப தட்டின் அளவும் பழங்களின் வகையும் அதிகரிப்பதுதான். நங்கள் வாங்கிய தட்டின் அளவு ஒன்றரை அடி விட்டமுள்ளது. ஒரு குடும்பத்தினர் சுமார் ஐந்தரை அடி விட்டமுள்ள தட்டு நிறைய வழியும் அளவிற்கு பழங்கள் வாங்கி காணிக்கை செலுத்தினார்கள். நான் நினைக்கிறேன்.. ஒரு காட்டுகோவிலாக இருந்து காட்டுக்குள் இருந்து கிடைக்கும் பொருட்களை மட்டுமே காணிக்கை செலுத்தும் பழக்கம் இருந்திருக்க வேண்டும். அதுவே இன்றைய நாகரிக உலகில் கடையில் வாங்குகிறோம் போலே!
சாமிக்கு பின்னாலே (திரைக்கு பின்னாலே) நைவேத்யம் பண்ணுகிறார்கள். பக்தி பரவசத்துடன்..அங்கே சிலை இருக்கிறதோ என்று பார்த்தேன். இல்லை. ஆனால் ஒரு சட்டத்திற்குள் (பிரமேக்குள்) வெள்ளியாலான அலங்காரத்துடன் முருகன் படம் இருக்கிறது.
இன்னொரு விஷயமும் பகிர்ந்திட வேண்டும். அப்படி கொண்டு வந்த பழங்களை ரொம்ப நேரம் கைகளில் சுமக்க முடியவில்லை என்றால் அதற்கென வரிசையாக கண்ணாடி பெட்டி வைத்து டோகேன் போட்டு கொடுக்கிறார்கள். நாம் எல்லா சந்நிதிக்கும் போய்விட்டு வந்து வாங்கி கொண்டு பிறகு முருகன் சந்நிதிக்கு போகலாம்.
இவ்வளவு மலை மலையாக பழங்களை வாங்கி கோவில் நிர்வாகம் என்ன செய்யும் என்று எனது நண்பரிடம் விசாரித்தேன். அவர் சொன்னார் இவற்றையெல்லம் விலங்குகள் பரமரிப்புக்கென்று வைத்துகொள்கிறார்கள் என்று. நம்புவோம் மறு சுழற்சி ஆகவில்லை என்று.
கோவிலில் கோபுரம் முறையும் இல்லை. ஒரு விதமான கேரளா முறையிலேயே கட்டப்பட்டுள்ளது சந்நிதி.
அருகே ஓடும் மாணிக்க கங்கை என்னும் ஆறு. அதில் மீன்கள் மிக அருமையாக கரை ஓரம் கொத்து கொத்தாக வந்து பொரி சாப்பிட்டு கொண்டு இருக்கிறது. ஒவ்வொரு மீனும் ஒரு சராசரி மனிதனின் புஜங்களின் அளவில் இருக்கிறது. அதுவும் இன்றைக்கு நாங்கள் பார்க்கயிலே வெள்ளம் மிகுந்த சீற்றத்துடன் சென்று கொண்டு இருந்தது. அதிலும் ஒரே இடத்தில் சமாளித்து நின்று பொரி சாப்பிடுகின்றன.
ஒரு யானை குட்டி (சற்றே பெரியது) மிக வேகமாக நடந்து வந்து ஒரு சந்நிதியின் வாசலில் மிக நேர்த்தியாய் உட்கார்ந்து வணக்கம் செலுத்தி பின் மிக வேகமாக எழுந்தது. வியந்து போனேன். இந்த யானை குட்டி என்ன ரஜினி வேகத்தில் வருகிறது என்று வியந்தேன்
மற்றுமொரு பெரிய யானை அதன் தந்தம் மிக அழகாக பின்னிக்கொண்டிருந்தது. மிக லாவகமாக தும்பிக்கையை வெளியே போடவும் உள்ளே போடவும்.. அடடா என்ன அற்புத காட்சி!
யானை கால்களுக்கிடையில் போய் வந்தால் ஏதோ தோஷம் விலகுமாம். ஒரு நம்பிக்கை.. இங்கிருக்கும் மக்களுக்கு. செய்கிறார்கள்.. பாகன் நம்பிக்கையில் அவர்களும் சுற்றி வருகிறார்கள் (அப்புறம் என்ன பாகனுக்கு வருமானம்தான்)
மிக முக்கிய செய்தி. இந்த கோவிலில் அதிகாலை 4.30 மணிக்கும், காலை 10.30 மணிக்கும் பின்பு மாலை 6.30 மணிக்கும் பூஜை செய்கிறார்கள். மனிதர்கள் மிக நீ........ண் ........ட வரிசையில் நிற்கிறார்கள். பழங்களையும் சுமந்து கொண்டு நிற்கிறார்கள். வரிசை மீறுவது இல்லை. வி ஐ பி என்று யாரும் உள்ளே நுழைவது இல்லை. அர்ச்சனை சீட்டு கிடையாது. தரிசன கட்டணம் கிடையாது. அபிஷே கம் கிடையாது (சிலை இல்லேன்னாலும் வேலுக்கு அபிஷேகம் பண்ணுவாங்களோன்னு நினைச்சேன்). அதை விட முக்கியம்.. நேரம் முடிந்து விட்டது என்று சந்நிதியை மூட மாட்டார்கள். வரிசை கடைசி ஆள் வரை அனுமதி தருகிறார்கள். நாங்கள் பார்த்துக்கொண்டிருந்தோம் ஒரு குடும்பம் 9.20 மணிக்கு (இரவு) சாவகாசமாய் பழங்கள் வாங்கி 1001வது ஆளாக வரிசையில் சேர்ந்துகொள்கிறார்கள்.
மேலும் ஒரு தகவல்
இதற்கு முந்தய ஒரு இடுகை பகிர்தலிலே குமரிக்கோட்டம் மூலமாகதான் நாம் பஞ்சாங்க முறையை பின்பற்றினோம் என்று சொல்லப்பட்டு இருந்தது. இந்த கதிர்காமதிற்கும் அதில் தொடர்பு இருந்ததாக கேள்விப்படுகிறேன். எனக்கு தெரிந்த ஒரு ஜோதிட கலா பூஷணி ஒரு தகவல் தெரிவித்தார். அவருடைய தகப்பனார் (அவரும் ஜோதிட வல்லுநர்) கதிர்காம பஞ்சாங்கம் ஒன்றை மட்டும்தான் கணக்கில் கொண்டு பழங்கள் சொல்வாரம். இப்பொழுது கதிர்காம பஞ்சாங்கம் புழக்கத்தில் இருக்கிறதா என்று தெரியவில்லை.
எனது நண்பர்களே உறவினர்களே நலம் விரும்பிகளே நல்லோர்களே வல்லோர்களே ..... இத்தனை நேரம் பொறுமை காத்து என்னுடைய இந்த இடுகையை படித்தமைக்கு மிக்க நன்றி.

இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய்

ஒருவர் தான் எப்படி வாழ வேண்டும் என்பதை ஒரு குட்டிக்கதை மூலம் தெரிந்து கொள்வோம். பல வருடங்களாக தச்சர் பணி செய்து வந்த தொழிலாளி ஒருவன் தன் பணியிலிருந்து ஓய்வு பெற விரும்பினான். எஜமானனிடம், தான் தன் குடும்பத்துடன் அமைதியாகக் காலம் கழிக்க விரும்புவதைத் தெரிவித்தார். எஜமானனுக்குத் தன் தொழிலாளியை விட மனமில்லை. இருந்தாலும், கடைசியாக ஒரே ஒரு வீடு கட்டித் தந்துவிட்டு ஓய்வு பெறுமாறு கேட்டுக் கொண்டார். தச்சர், சரி என ஒப்புக் கொண்டாலும், அவர் மனம் வேலையில் ஆழ்ந்து ஈடுபடவில்லை. ஏனோ தானோவென்று மட்டமான பொருள்களைக் கொண்டு வீடு கட்ட ஆரம்பித்தார். தன் கடைசிப் பணியை அப்படி அசிரத்தையுடன் செய்தது துரதிர்ஷ்டம்தான். எப்படியோ ஒரு வழியாக வீடு கட்டி முடிந்ததும், வீட்டை வந்து பார்த்தார் எஜமானன். அமைதியாக வீட்டின் சாவியைத் தச்சரிடம் கொடுத்து, இதோ, இந்த வீடு உனக்காக நான் அளிக்கும் பரிசு என்றார். அதிர்ச்சி! வெட்கம்! அடடா, இது தனக்கான வீடு என்று முன்பே தெரிந்திருந்தால் நன்றாகக் கட்டியிருக்கலாமே? தான் மோசமாகக் கட்டிய வீட்டில், தானே வாழ வேண்டிய நிலைமை அந்தத் தச்சருக்கு. மனிதர்களும் இப்படித்தான். தங்கள் வாழ்க்கையை ஏனோ தானோ வென்று வாழ்ந்து கழிக்கிறார்கள். தங்களுடைய திறமையை முழுமையாகப் பயன்படுத்தாமல் சோம்பி வாழ்கிறார்கள். திறமை காட்ட வேண்டிய சந்தர்ப்பங்களைக் கோட்டைவிட்டு விடுகிறார்கள். நம் வாழ்க்கையும் அந்த வீடைப் போன்றதுதான். ஒவ்வொரு ஆணி அடிக்கும் போதும், மரத்துண்டுகளைச் சேர்க்கும் போதும் புத்திசாலித்தனத்தோடு செயல்படுங்கள். இந்த வாழ்க்கை உனக்காகத் தான், உனக்கு தான் அளிக்கப்பட்டுள்ளது. அதை நீயே உருவாக்குகிறாய். ஒரு நாள் நீ வாழ்ந்தாலும் அமைதியோடும் கவுரவத்தோடும் வாழ வேண்டும். வாழ்க்கை என்பது நமக்கு நாமே கட்டிக் கொள்ளும் வீடு.

Thanks to Dinamalar May 2012

பாரத தாயை வணங்குவோம்

பாரத தாயை வணங்குவோம்
ஒப்புவமை இல்ல உயர் உடை இந்தியன்
ஓங்கார புகழுடன் திகழ்வான் இந்தியன்
அக்தே என்றும் நிலைப்பவன் இந்தியன்
இத்தனை நேரம் இந்தியன் என்று சொல்ல
இறுமாப்பு பெருகுது இந்தியன் மனதிலே
இயற்கைதான் இந்த இறுமாப்பு என
இறக்கை கட்டுது ஏன் மனது
இந்தியன் என்கிற ஒரு சொல்லே இத்தனை பெருமை தரும் என்றால்
இந்தியன் என்கின்ற ஒருமித்த
இணையில்லா பெரும் செயலுக்கு
எத்தனை சக்தியோ
ஒற்றை எழுத்து மாறுகையில்
ஒப்பில்ல பெருமையும் வருகுதன்றோ
தாயை போற்றுதல் மகவுக்கு உயர்வு
தாய் நாட்டை போற்றுதல் மக்களுக்கு உயர்வு
தாயை பேணுதல் மகவுக்கு அழகு
தாய் நாட்டை பேணுதல் மக்களுக்கு அழகு
வாழ்க பாரதம் என்றுரைத்து
வல்லரசாகும் என்று சூளுரைத்து
வறுமை போக்குவோம் என உறுதி பூண்டு வலிமையாய் உழைப்பேன் என வாக்கு கொண்டு
வாழ்க பல்லாண்டு பல நூறர்யிரம் ஆண்டு
பெருமை மகள் பலவும் கொண்டு
@ Ramanan Seshadri

நாமாவது நன்கு இருப்போமே

கஞ்சிக்கு வழியுமில்லை
கச்சை கட்ட துணியுமில்லை
கையிலே காசு இல்லை
கதறக்கூட திராணியில்லை
கட்டிய கணவனிடம்
கையேந்தி கெஞ்சுகிறாள்
கால்காசு கொடுமையா
கைபிள்ளை அழுகுதென்று
காலாலே உதைத்து சொன்னான்
கையில் ஏதுமில்லையென்று
கருமத்தை நொந்துகொண்டு
கைமாத்து வாங்கி வந்தாள்
கண்ணிமைக்கும் நேரத்திலே
கை திருகி பிடுங்கிசென்றான்
கள் குடிக்கும் கடையினிலே
கடன் தர மாட்டானென்று
கவுரவமாய் குடித்துவிட்டு
கால்வாயிலே தவழ்ந்திருந்தான்
கட்டிய மனைவி அவள்
கண்ணீரில் நனைந்திருக்க
நாகரிகமாய் சென்றோ
நாற்றமுடன் வந்திருந்தான்
நாம் சொல்லி திருந்துவானோ
நாட்கள்தான் திருத்திடுமோ
நமது அண்ணல் இருந்திருந்தால்
நரன் இவனை துவைத்தெரிந்து
அஹிம்சை எல்லாம் அப்புறம்தான்
ஒழுக்கம்தான் முதலில் என்பார்
வெட்கம் கெட்ட செயலன்றோ
நாகரிகம் எனும் பெயரில்
நாறிபோன சமூகமோ
நாடு மாற நினைப்போமே
நாமாவது நன்கு இருப்போமே

''இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது!''

''இந்த நீதிமன்றம் பல விசித்திரமான வழக்குகளைச் சந்தித்திருக்கிறது!''
அவதூறு வழக்குகள், சொத்துக் குவிப்பு வழக்குகள், நில அபகரிப்பு வழக்கு கள், முன்ஜாமீன், தப்பி ஓட்டம், சரண்டர் என்று பேப்பரைத் திறந்தாலே, கோர்ட், கேஸ் என்று கண்ணில் அடிபடாத நாளே கிடையாது. நம்மை நாமே ரிலாக்ஸ் செய்துகொள்ள சில வினோதமான வழக்குகளைப் பார்ப்போம்.
சென்னையைச் சேர்ந்த ஒருவர், பாட்டிலில் விற்கப்படும் குளிர் பானத்தை வாங்கிக் குடித்துள்ளார். அப்போது பாட்டில் தவறிக் கீழே விழுந்து உடைந்துவிட்டது. கடைக்காரர் பாட்டிலுக்குக் காசு கேட்க, குளிர்பானம் வாங்கியவர் கொடுக்க மறுக்க, இருவருக்கும் இடையில் கலாட்டாவாகி, போலீஸ் வரை போய், பிரச்னை கோர்ட்டுக்கும் வந்துவிட்டது. கடைக்காரர் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர், ''ஹோட்டலில் காசு கொடுத்துத்தான் சாப்பிடுகிறோம். அதற்காக அங்கு உணவு பரிமாறும் தட்டு, கிண்ணம், தண்ணீர் டம்ளர் என எல்லாவற்றையும் நாம் கொண்டுவந்துவிட முடியுமா? அதுபோல்தான் குளிர்பானம் வாங்கினால், பாட்டிலைக் கொண்டுபோக முடியாது'' என்று வாதிட்டார். எதிர்த்தரப்பு வழக்கறிஞர் என்ன சாதாரண ஆளா? அவரும் அசராமல் திருப்பி அடித்தார். ''ஹோட்டல் சாப்பாடு என்பது பேக்டு அயிட்டம் (அடைக்கப்பட்டு விற்பனை செய்யப்படும் பொருள்) அல்ல. அதனால் தட்டு, டம்ளருக்கு நாம் உரிமை கொண்டாட முடியாது. ஆனால், குளிர்பானம் என்பது பேக்டு அயிட்டம். இதுபோன்ற பேக்டு அயிட்டங்கள் விற்பனைக்கு வரும்போது பேக்கிங்கிற்கும் சேர்த்துத்தான் விலை வைக்கப்படுகிறது. குளிர்பானம் வாங்கும்போது, பாட்டிலுக்கும் சேர்த்துதான் நாம் விலை கொடுக்கிறோம். எனவே, குளிர்பானம் வாங்கு பவருக்கே பாட்டில் சொந்தம். மெடிக்கல் ஷாப்பில் இருந்து ஒயின் ஷாப் வரை பாட்டிலில் வாங்கப் படும் பொருட்கள் பாட்டிலோடுதான் தரப்படுகின்றன'' என்று வாதிட்டார். ஏறத்தாழு ஆறு மாதங்கள் இழுத்தடித்த இந்த வழக்கில், 'குளிர்பானம் வாங்குபவருக்குத்தான் பாட்டில் சொந்தம்’ என்று தீர்ப்பானது.
மதுரை அருகே உள்ள கிராமம் ஒன்றில் முதியவருக்குச் சொந்தமாக நிலம் இருந்தது. அந்த நிலத்தைத் தனது மகன்களுக்குச் சமமாகப் பிரித் துக் கொடுத்தார். ஆனால், வரப்பில் இருந்த பனை மரம் யாருக்குச் சொந்தம் என்பதில் அண்ணன் தம்பிகள் இரு வருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு அந்தப் பிரச்னை கீழ்கோர்ட், மாவட்ட நீதிமன்றம் என்று சுற்றி கடைசியில் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு வந்தது. இதற்கே 18 ஆண்டு களுக்கும் மேலாக ஆகி இருந்தது. இருந்தாலும் வழக்கு இழு....த்துக்கொண்டே போனது. ஒரு நாள் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்ய, அப்போது விழுந்த இடியில் பனைமரம் முற்றிலுமாக எரிந்து கருகிப்போய்விட்டது. இதையடுத்து அந்த வழக்கு உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப் பட்டது.
ஹூம், இதுக்குப் பேருதாய்யா இயற்கை!
- ஜோ.ஸ்டாலின்

Monday, March 13, 2017

WOMAN SUBSTANCE - HON'BLE Ms.SHOBHANA RAMACHANDHRAN - MD TVS TYRES - THANKS TO THE HINDU





On the eve of International Women’s Day, the Managing Director of TVS Srichakra Ltd., Shobhana Ramachandran, shares with Soma Basu the story of her journey on a less travelled path for women and how she made it to the top staying in small town Madurai
There are no two ways about Shobhana Ramachandran, a scion of the powerful TVS family that runs the country’s largest automotive conglomerate company. Strongly opinionated, she never sways from decisions once taken. The firm person that she is it reveals the clarity in her thoughts and actions thatfollow.
Yet, feels Shobhana, feared as a boss for her aggressive temperament, “Clarity is a struggle.”
“I want to be slim but I also want to eat,” she explains in simple terms to underline if you are clear about what you want and let go of the other, you can understand your role better and deliver far better. The belief in the process of ‘letting it go’ has helped Shobhana take many more definitive steps in her journey from being the great granddaughter of iconic industrialist T.V.Sundaram Iyengar and daughter of R.Ramachandran to the straight talking no-nonsense businesswoman who has taken her Madurai-based tyre company to a premium position in the world market. Yet, not many know much about her. She is a woman impacting on people. But, she says, gender does not matter to get to any position. “Your commitment and achievement matter.”
In the male dominated automotive industry, one would presume a woman is likely to feel diffident. But Shobhana Ramachandran believes in producing great results and tirelessly works towards the goal. Did she ever think of working anywhere else? “It never crossed my mind when I was in school or university. But my father surely did not want me to be in business,” she says.
A strict upbringing kept Shobhana confined to the house. She and her three brothers had to strictly follow the rules. The children were not allowed air conditioners or mattresses to sleep on, had to fold their beds every morning, finish every morsel that was served to them on their plate, never went on a holiday even though their cousins came visiting them from other cities and pushed off to Kodaikanal.
“My father did not like being in limelight because he felt it would drift us away from family values,” she says. But then he allowed her the freedom to do what she wanted to -- play boys’ games! The girly presents and dolls gifted to her just lined up the shelves. The cricket and badminton coaches came home to train them and she would play with her brothers’ friends as a team.
Shobhana says she always made best use of the choices available without ever feeling bad or complaining. She wanted to do her under-graduation in psychology but her father told her she is “supposed to study literature”. After her B.A. English from Fatima College, Shobhana did M.A. Psychology from Lady Doak College.
“I never pushed myself, but remained among the top 10 in class, and had much interest in sports and drama,” she says. She would have loved to dance away too but for the lack of partners as tall as her. Shobhana taught English for a year at Fatima College and resigned hurt when told that the job should go to someone needy and not somebody as affluent as her.
It is not in her nature to ever fight or rebel. “I always move away from those who pick up fights and find a way to get around the blocks to do what I want to do,” she says. If there was anything that she ever refused, it was marriage. “It was a choice I made early in life. My parents did not object,” she says.
Left to her father, says Shobhana, she would have never got into family business. It was her grandfather T.S.Rajam, who brought her on board in 1982 when she started taking interest in the TVS school at Palanganatham. Shobhana who attended Noyes and OCPM School, apparently used to tell her friends that one day she would build the best school in Madurai with the best infrastructure.
“I never had a perfect dream project to execute,” she adds, “but one thing led to another.” Her love for children and passion for education turned the Lakshmi Vidya Sangham (LVS), a registered society formed by members of TVS family, into a leading education group in Madurai.
As the LVS chairperson, Shobhana is constantly expanding and innovating to provide quality education to 12,000 plus students enrolled in the nine institutions including exclusive rural and primary schools, one for children with special needs, a finishing school for engineering students, teachers’ training school, and those under the various boards (State/Matriculation and ICSE).
Always attentive to others, Shobhana’s plans and projects are need-based and well-calibrated and the single thought that drives it is ‘why should her city Madurai be deprived of it?’ In her business Shobhana oversees each detail to improve the quality of service -- from introducing modern technologies, encouraging performance-based work culture, recruiting youth and more women, establishing sustainable and profitable relationship with customers, suppliers and stakeholders.
In the schools that she runs she is equally sensitive and particular about providing the best infrastructure, faculty and child-friendly atmosphere. Her practical approach and financial prudence have only led to growth of the academic institutions and the company over the years. She joined the latter in 1986.
Shobhana inspires girls to think forward and create options for themselves. She is ever-willing to help and support women who seriously want to come up in life. “Women should be clear of what they want and break the glass ceiling. They should have emotional intelligence and not an emotional reaction to everything,” she says.
“A lot of it is your personal choice on how you interpret your responsibilities and what you view as your obligation,” says Shobhana, who also finds sympathising with women all the time is being unfair to men.
In sync with TVS family thinking, she desires a corporate culture of giving, rather than only earning profits. Professional to the core, she has everything in her -- honesty and humility, feelings and cravings to do something for others. Beneath her so-called hard exterior, Shobhana is very human and humorous. She laughs off her “Female Hitler” tag. “I am aware of the epithets I have earned being a non-conformist and a very blunt person,” she says and adds, “I appreciate people who have the guts to speak out.”
Though hard pressed for time, Shobhana does not neglect other social responsibilities. She founded the Arogya Welfare Trust to facilitate inclusive and participative community development through health care, education, skill development, general hygiene and women empowerment in villages around Madurai. Her love for light, Western and Classical music also made her take charge of the Madurai-based Sathguru Sangeetha Samajam encouraging younger artistes and honouring senior vidwans for their contribution to Carnatic music.
There is a soft and gentle side to the bold Shobhana, who is much in love with simple things in life. Recently when she went visiting the Table Mountain with her cousins, while everybody went gaga over the view of the city of Cape Town from the top, Shobhana yearned to return to her home in Madurai. “I have not known any other city better,” she says, “and I like being with myself.” Shobhana loves watching movies but hates visiting malls or partying. She would rather meditate to keep her focus and read books on philosophy and management. A nature lover, Shobhana draws comfort in being alone. But right now she has found new companions to share much of her time with at home. “Till two months ago I was scared of dogs and would jump on to a table seeing them,” she admits. But after her brothers gifted her two golden retriever and labrador pups, she is herself bemused at the changing equation!
Success doesn’t just pick a lucky few. It chooses those who make conscious decisions and seize the opportunities and implant their ideas for others to notice. Shobhana is one of them. Her success and her relative anonymity stem from the same source -- a steely resolve. “Everything comes to you with a purpose,” she says.



ஸ்ரீராமாயணம்யுத்தகாண்டத்தில் அணில் ஆழ்வார் பாசுரத்தில் இடம் பெற்று விட்டதே



ஸ்ரீராமாயணம் யுத்தகாண்டத்தில் இலங்கைக்கு போக பாலம் கட்ட ஏற்பாடுகள் நடக்கின்றது.சுக்ரீவனின் கோஷ்டியில் நலன் ன்னு ஒரு வானரம் இருக்கு.அது தான் அங்கே சிவில் இன்ஜினியர் போலிருக்கு.அவர்(அது)சொல்றார் நான் விரைந்து கற்களை அடுக்குவேன் அதற்கு இணையாய் வேகமாய் மலைகளையும் கற்களையும் கொண்டுவந்து சேர்க்கணும் ன்னு கண்டிசன் போடறார்.அந்த வானரசேனையோ அவரையே திருப்பிக்கொண்டு நாங்கள் போடும் வேகத்துக்கு நீ சீக்கிரம் அணை காட்டுவியா ன்னு கேக்கறா.எல்லாம் ராமசேவைல உள்ள உத்சாகம் தான் காரணம்.சரி இப்போ குரங்குகள் மலை மலையாய் கற்களைக் கொண்டுவந்து கொட்டகொட்ட நலன் வரிசையா அடுக்குகிறார்.ஆனால் கற்களுக்கு இடையே உள்ள இடைவெளியை அடைக்க யாரும் முயற்சிக்கலையாம்.இதை கரைல நின்னு வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஒரு அணில் யோசித்ததாம் எப்படி அடைக்கலாம் ன்னு.கையாலோ வாயாலோ மண் கொண்டுபோய் கொட்டினால் முடியாதுன்னு புரிஞ்சுண்டு ஓடிப்போய் கடலில் ஒரு முழுக்குப் போடும்.கரைல உள்ள மணல் ல புரளும்.ஒவ்வொரு கல்லுக்கு இடுக்கிலும் போய் உடம்பை உதறிக்கொண்டு மணலை உதிர்த்துவிட்டு மீண்டும் குளிக்கும் .மணலில் புரண்டு கற்களுக்கு நடுவில் போய் கொட்டும்.என்னே ஒரு ராமசேவை.வானரசேனை இங்குமங்கும் தாவித்தாவி மலைகளைக் கொண்டுவந்து போடும்போது இந்த அணில் நடுவில் மாட்டிகிட்டு என்னவாகுமோ ன்னு நினைக்காம உயிரைப் பணயம் வெச்சு செய்த சேவைக்கு பரிசாக ஆழ்வார் பாசுரத்தில் இடம் பெற்று விட்டதே இந்தஅணில்.
திருமாலை ல தொண்டரடிப்பொடியாழ்வார் இப்படிப் பாடறார்
குரங்குகள் மலையை நூக்க
குளித்துத் தாம் புரண்டிட்டோடி
தரங்கநீர்அடைக்கலுற்ற
சலமிலா அணிலம் போலேன்
மரங்கள்போல் வலியநெஞ்ச
வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
அரங்கனார்க்குஆட்செய்யாதே
அளியத்தேன் அயர்க்கின்றே

எத்தனை முரண்பாடு


சினிமா தியேட்டரில் நிறையக்காசு கொடுத்து டிக்கெட் வாங்குபவர்களை கடைசில உக்காத்துறாங்க கம்மி துட்டுக்கு டிக்கெட் வாங்குனவனை முன் பெஞ்சுல உக்கார வெக்கிறாங்க 
பெரிய என்னும் சொல்லிற்கு சின்ன ர போடுறோம்.சிறிய என்னும் சொல்லிற்கு பெரிய ற போடுறோம்.
எத்தனை முரண்பாடு பாருங்கோ மக்களே

Thursday, March 2, 2017

⁠⁠⁠மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம்

⁠⁠⁠மகா பெரியவா எரிமலையாய் வெடித்த தருணம் – நெஞ்சை உலுக்கும் சம்பவம் –

மகா பெரியவா பக்தர்களுக்கு அருளியது தொடர்பாக பல பதிவுகளை வெளியிட்டுள்ளோம். எந்த சூழ்நிலையிலும் மகா பெரியவா கோபங்கொண்டு எவரிடமும் பேசியது கிடையாது. சபித்தது கிடையாது. சில சமயம் பக்தர்கள் தவறுக்காக அவர் கோபப்படுவதுண்டு. காலில் விழுந்தவுடன் அடுத்த நொடி கோபம் நீங்கி சாந்தமாகிவிடுவார். தவறு செய்வது மனித இயல்பு அதை மன்னிப்பது மட்டுமல்ல மறப்பது தான் தெய்வ குணம் என்பது அவருக்கு தெரியும். ஆனால்… தவறுக்கும் தவறான தவறை ஒருவர் செய்த காரணத்தால் மகா பெரியவா எரிமலையாய் சீறி அனல் கக்கிய தருணம் பற்றி தெரியுமா?

2006 ஆம் ஆண்டு சக்தி விகடனில் வெளியான இந்த சம்பவத்தை படியுங்கள். பல இடங்களில் நமக்கு திக் திக் என்று இருக்கும். கண்ணீர் பொத்துக்கொண்டு வரும்.

மிராசுதாரை மிரள வைத்த மகா பெரியவா!

பல வருஷங்களுக்கு முன், ஒரு சித்ரா பௌர்ணமி தினம். திருவிடைமருதூர் ஸ்ரீமகாலிங்க ஸ்வாமி கோயிலில் மஹாந்யாஸ ருத்ர ஜபத்துடன் ஓர் அபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. 11 வேத பண்டிதர்களை வைத்து அதை நடத்தியவர், திருவாரூரைச் சேர்ந்த மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் என்பவர். காலை எட்டு மணிக்கு ஆரம்பித்த ருத்ராபிஷேகம், மதியம் ஒரு மணி அளவில் பூர்த்தி அடைந்தது.

காஞ்சி மகா ஸ்வாமிகளிடம் அபரிமிதமான பக்தி கொண்டவர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். ‘எப்படியும் இந்த ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பெரியவாளிடம் சமர்ப்பித்துவிட வேண்டும்’ என்று தீர்மானித்தார். ருத்ராபிஷேகப் பிரசாதத்தை பயபக்தி யுடன் ஒரு வாழை இலையில் வைத்து, புதுப் பட்டு வஸ்திரத்தில் சுற்றி எடுத்துக் கொண்டார். அன்று மாலையே திருவிடைமருதூர் ரயில்வே ஸ்டேஷனில், மதுரை- சென்னை பாசஞ்சர் ரயிலில் ஏறினார் மிராசு தார். விடியற்காலம் செங்கல்பட்டு ஸ்டேஷனில் இறங்கி, பஸ் பிடித்து காஞ்சிபுரம் வந்து இறங்கினார் நாராயணஸ்வாமி ஐயர்.

அன்று மடத்தில் ஏகக் கூட்டம். ஸ்நானம் இத்யாதி களை முடித்துக் கொண்டு, பெரியவா தரிசனத்துக்காக பிரசாதத்துடன் காத்திருந்தார் மிராசுதார். நண்பகல் 12 மணி சுமாருக்கு, ஸ்ரீசந்திரமௌலீஸ்வர பூஜையை முடித்துவிட்டு வந்து உட்கார்ந்தார் மகா ஸ்வாமிகள். பக்தர்கள் கூட்டம் நெருக்கியடித்தது. மிராசுதாரால் ஸ்வாமிகளை நெருங்க முடியவில்லை. உடனே மிராசுதார், ‘‘எல்லாரும் நகருங்கோ… நகருங்கோ. நா பெரியவாளுக்கு திருவிடைமருதூர் மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதம் கொண்டு வந்திருக்கேன். அத அவர்ட்ட சமர்ப்பிக்கணும்’’ என்று பிரசாத மூட்டையைக் காட்டிக் கெஞ்சினார்.

ஒருவரும் நகருகிற வழியாகத் தெரியவில்லை. மிராசுதாரின் தவிப்பையும் பதற்றத்தையும் பார்த்த மடத்தைச் சேர்ந்த ஒருவர், வழி ஏற்படுத்திக் கொடுத்து நாராயணஸ்வாமி ஐயரை, பெரியவாளுக்கு அருகே அழைத்துச் சென்றார். பெரியவாளைப் பார்த்தவுடன் மிராசுதாருக்குக் கையும் காலும் ஓடவில்லை. தொபுக் கடீர் என்று சாஷ்டாங்கமாக தரையில் விழுந்து எழுந்தார். மகா ஸ்வாமிகள் அவரை அண்ணாந்து பார்த்தார்! ‘என்ன விஷயம்’ என்பதைப் போல புருவங்களை உயர்த்தினார்.

உடனே மிராசுதார் கைகள் உதற பிரசாத மூட்டை யைப் பிரித்துக் கொண்டே, ‘‘பிரசாதம்… பிரசாதம் பெரியவா’’ என்று குழறினார். மீண்டும் பெரியவா, ‘‘என்ன பிரசாதம்?’’ என்று கேட்டு அவரைப் பார்த்தார். அதற்குள், மூட்டையைப் பிரித்து, பிரசாதத்தை எடுத்து, அங்கிருந்த மூங்கில் தட்டு ஒன்றில் வைத்து, ஸ்வாமிகளுக்கு முன்பாகச் சமர்ப்பித்தார் மிராசுதார். அதில், ஒரு சிறிய வாழை இலையில் விபூதி, குங்குமம், சந்தனம் ஆகியவற்றுடன் கொஞ்சம் வில்வ தளம், இரண்டு தேங்காய் மூடிகள், பூவன் வாழைப்பழங்கள் சில இருந்தன.

Periyava copy

மகா ஸ்வாமிகள், ‘‘இதெல்லாம் எந்த க்ஷேத்ர பிரசாதம்?’’ என்று கேட்டு மீண்டும் மிராசுதாரைப் பார்த்தார். மிராசுதார் சற்று தன்னை நிதானப்படுத்திக் கொண்டு மிக விநயமாக, ‘‘பெரியவா! நேத்திக்கு திருவிடைமருதூர்ல மகாலிங்க ஸ்வாமிக்கு ருத்ரா பிஷேகம் பண்ணி வெச்சேன். மஹாந்யாஸ ருத்ர ஜபத்தோட பெரிய அபிஷேகம். அந்தப் பிரசாதம்தான் இது. பெரியவா சந்தோஷப்படுவேளேங்கறதுக்காக எடுத்துண்டு ரயிலேறி ஓடி வந்தேன். வாங்கிண்டு அனுக்ரஹம் பண்ணணும்!’’ என்று சொல்லி முடித்தார்.

உடனே பெரியவா அந்த பிரசாத மூங்கில் தட்டையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்து விட்டுக் கேட்டார்: ‘‘நாராயணசாமி! நீ பெரிய மிராசுதான். இருந்தாலும் செலவுக்கு இன்னும் யாரை யாவது கூட்டு சேத்துண்டு இந்த ருத்ராபி ஷேகத்தை ஸ்வாமிக்கு பண்ணினயோ?’’

‘‘இல்லே பெரியவா… நானே என் சொந்தச் செலவுல பண்ணினேன்’’ என்று, அந்த ‘நானே’வுக்குச் சற்று அழுத்தம் கொடுத்துச் சொன்னார் மிராசுதார். பெரிய வாள் தனக்குள் சிரித்துக் கொண்டார். அத்துடன் விட வில்லை. ‘‘லோக க்ஷேமத்துக்காக (உலக நன்மைக்கு) மத்யார்ஜுன க்ஷேத்ரத்துலே (திருவிடைமருதூர்) ருத்ராபிஷேகத்தைப் பண்ணினாயாக்கும்?’’ என்று கேட்டார். உடனே மிராசுதார் ஆதங்கத்துடன், ‘‘இல்லே பெரியவா. ரெண்டு மூணு வருஷ மாவே வயல்கள்ல சரியான வெளச்சல் கிடை யாது. சில வயல்கள் தரிசாவே கெடக்கு. திருவிடைமருதூர் முத்து ஜோஸ்யரைப் போய்ப் பாத்தேன். அவர்தான், ‘சித்ரா பௌர்ணமி அன்னிக்கு மகாலிங்க ஸ்வாமிக்கு மஹாந்யாஸ ருத்ராபிஷேகம் நடத்து. அமோகமா வெளச்சல் கொடுக்கும்’னார்! அத நம்பித்தான் பண்ணி னேன் பெரியவா’’ என்று குழைந்தார்.

எதிரில் வைத்த பிரசாதம் அப்படியே இருந்தது. ஆசார்யாள் இன்னும் அதை ஸ்வீகரித்துக் கொள்ளவில்லை. ‘‘அப்டீன்னா ஆத்மார்த்தத் துக்காகவோ, லோக க்ஷேமார்த்தமாவோ நீ இதைப் பண்ணலேனு தெரியறது’’ என்று சொன்ன ஸ்வாமிகள், சற்று நேரம் கண் மூடி தியானத்தில் ஆழ்ந்து விட்டார்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து கண்களைத் திறந்தார் ஆசார்யாள். அவர் முகத்தில் அப்படி ஒரு தெளிவு! கண் மூடி தியானித்த பதினைந்து நிமிடங்களுக்குள், பல விஷயங்களைப் புரிந்து கொண்டு விட்ட ஒரு ஞானப் பார்வை. அனைவரும் அமைதியாக இருந்தனர். ஸ்வாமிகள் தொடர்ந்தார். ‘‘சரி… ருத்ர ஜபத்துக்கு எத்தனை வேத பிராமணாள் வந்திருந்தா?’’

‘‘பதினோரு வேத பண்டிதாளை ஏற்பாடு பண்ணியிருந்தேன் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள், ‘‘வைதீகாள் எல்லாம் யார் யாரு? எந்த ஊருன்னெல் லாம் தெரியுமோ? நீதானே எல்லா ஏற்பாடும் பண்ணினே?’’ என்று விடாப்பிடியாக விசாரித்தார்.

இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த பக்தர்களுக்கு, ‘பெரியவா ஏன் இப்படித் துருவித் துருவி விசாரணை செய்கிறார்!’ என வியப்பாக இருந்தது. இருந்தாலும், ஸ்வாமிகள் காரணமில்லாமல் இப்படி விசாரிக்க மாட்டார் என்பதையும் புரிந்து கொண்டார்கள். மிராசுதார், தன் இடுப்பில் செருகியிருந்த ஒரு பேப்பரைக் கையில் எடுத்தார்.

‘‘வாசிக்கறேன் பெரியவா. திருவிடைமருதூர் வெங்கட்ராம சாஸ்திரிகள், சீனுவாச கனபாடிகள், ராஜகோபால சிரௌதிகள், மருத்துவக்குடி சந்தான வாத்யார், சுந்தா சாஸ்திரிகள், சுப்பிரமணிய சாஸ்திரிகள், திருமங்கலக்குடி வெங்கிட்டு வாத்யார்… அப்புறம்…’’ என்று மிராசுதார் ஆரம்பிப்பதற்குள், ஸ்வாமிகள், ‘‘எல்லாம் நல்ல அயனான வேதவித்துகளாத்தான் ஏற்பாடு பண்ணிருக்கே. அது சரி… ஒன் லிஸ்ட்டுலே தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் பேரு இருக்கானு பாரு…’’ என்று இயல்பாகக் கேட்டார்.

உடனே மிராசுதார் மகிழ்ச்சி பொங்க, ‘‘இருக்கு பெரியவா… இருக்கு. அவரும் ஜபத் துக்கு வந்திருந்தார்!’’ என ஆச்சரியத்தோடு பதிலளித்தார்.

Periyava angryசூழ்ந்து நின்ற பக்தர்களுக்கெல்லாம் ‘பெரியவா எதற்காக ஒரு அபிஷேகம் நடந்த விஷயத்தைப் பற்றி, இப்படி துருவித் துருவி விசாரிக்கிறார்’ என்று வியப்பு. தவிர, ஒருவரும் வாய் திறக்கவில்லை. அமைதியாக நின்று கவனித்தனர்.

ஸ்வாமிகள், ‘‘பேஷ்… பேஷ்! வேங்கடேச கனபாடிகளையும் ஜபத்துக்குச் சொல்லிருந்தயா? ரொம்ப நல்ல காரியம். மகா வேத வித்து! இப்ப கனபாடிகளுக்கு ரொம்ப வயசாயிடுத்து. குரல் எழும்பறதுக்கே ரொம்பவும் சிரமப்படும். ஜபத்தை புடிச்சு (மூச்சடக்கி) சொல்றதுக்கு கஷ்டப்படுவார்’’ என்று கூறியதுதான் தாமதம்… மிராசுதார் படபடவென்று, உயர்ந்த குரலில், ‘‘ஆமாம் பெரியவா! நீங்க சொல்றது ரொம்ப சரிதான். அவர் சரியாவே ருத்ரம் ஜபிக்கலே! சில நேரம் வாயே திறக்காம கண்ண மூடிண்டு ஒக்காந்துருக்கார். அடிக்கடி கொட்டாவி விடறார். அதனால ஜப ‘ஸங்க்யை’யும் (எண்ணிக்கை) கொறயறது! நேத்திக்கு அவர் ரொம்ப சிரமம் கொடுத்துட்டார். ஏண்டா அவரை வரவழைச்சோம்னு ஆயிடுத்து பெரியவா’’ என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்… பொங்கி விட்டார் ஸ்வாமிகள்.

வார்த்தைகளில் கோபம் கொப்பளிக்க ஸ்வாமிகள், ‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ? அவரப் பத்தி என்னமா நீ அப்டிச் சொல்லலாம்? நேத்திக்கு மகாலிங்க ஸ்வாமி சந்நிதியிலே என்ன நடந்ததுங்கறத இப்போ நா புரிஞ்சுண்டுட்டேன்! நா கேக்கற கேள்விக்கு இப்போ நீ பதில் சொல்லு! நேத்திக்கு ஜப நேரத்துலே… கனபாடிகள் முடி யாமல் கண் மூடி ஒக்காந்திருந்த நேரத்துலே நீ அவர்ட்ட போய், கடுமையாக ‘ஏங்காணும், காசு வாங்கலே நீர்! இப்படி ஜபம் பண்ணாம வாயடச்சு ஒக்காந்திருக்கீரே’னு கத்தினது உண்டா, இல்லியா?’’ என்று பொரிந்து தள்ளிவிட்டார். விக்கித்து நின்றது மிராசு. கூட்டமும் பிரமித்துப் போனது.

    ‘‘என்ன சொன்னே… என்ன சொன்னே நீ? பணம் இருந்தால் எத வேணும்னாலும் பேசலாங்கிற திமிரோ! தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகளோட யோக்யதாம்சம் பத்தி நோக்கு என்ன தெரியும்? அந்த வேதவித்தோட கால்தூசி பெறுவயா நீ?

கை- கால்கள் நடுங்க சாஷ்டாங்க மாகப் பெரியவா கால்களில் விழுந்தார் நாராயணஸ்வாமி ஐயர். ஸ்வாமிகள் ஒன்றுமே சொல்லவில்லை. மிராசுதார் தானாகவே எழுந்தார். வாயைப் பொத்திக் கொண்டு நடுக்கத்துடன், ‘‘தப்புதான் பெரியவா! இப்போ நீங்க சொன்ன இதே வார்த்தைகளை நேத்திக்கு அந்த கனபாடிகளைப் பாத்து, ஸ்வாமி சந்நிதியிலே சொன்னது வாஸ்தவம்தான். என்னை மன்னிச்சுடணும் பெரியவா’’ என்று கெஞ்சினார். பெரியவா விடவில்லை.

‘‘இரு… இரு… நீ அந்த ஒரு தப்பை மாத்ரமா பண்ணினே? சொல்றேன் கேளு. எல்லாருக்கும் நீ தட்சிணை கொடுத்தியோல்லியோ… ஒவ்வொரு வைதீகாளுக்கும் எவ்ளவு தட்சிணை கொடுத்தே?’’ என்று கேட்டார். மிராசுதார் மென்று விழுங்கியபடியே, ‘‘தலைக்குப் பத்து ரூவா கொடுத்தேன் பெரியவா’’ என்றார் ஈனஸ்வரத்தில். ஸ்வாமிகள் நிறுத்தவில்லை. ‘‘சரியா சொல்லு! எல்லா வைதீகாளுக்கும் சமமா பத்துப் பத்து ரூவாயா கொடுத்தே! நேக்கு எல்லாம் தெரியும்’’ என்று மடக்கினார்.

மிராசுதார் மௌனமாக நின்றார். ஆனால், ஆசார்யாள் விடவில்லை! ‘‘நேத்திக்கு நீ என்ன பண்ணினேங்கறத நா சொல்றேன் கேட்டுக்கோ… நோக்கு சொல்ல வெக்கமாருக்கு போல. வைதீகாளை எல்லாம் வரிசையா சந்நிதியிலே ஒக்காத்தி தலைக்குப் பத்து ரூவா ஸம்பாவனை பண்ணிண்டே வந்தே. தேப்பெருமாநல்லூர் கனபாடிகள்கிட்டே வந்தபோது, ‘இவர்தான் சரியாவே ருத்ரம் சொல்லலியே… இவருக்கு எதுக்கு மத்தவா மாதிரி பத்து ரூவா கொடுக்கணும்?’னு தீர்மானிச்சு ஏழே ஏழு ரூவா சம்பாவனை பண்ணினே. ஏதோ அவரைப் பழி வாங்கிப்டதா எண்ணம் நோக்கு. கனபாடிகள் எதையாவது லட்சியம் பண்ணாரா பாத்தியா? நீ கொடுத்ததை வாங்கி அப்டியே தலப்பிலே முடிஞ்சுண்டுட்டார். நா சொல்றதெல்லாம் சரிதானே, சொல்லு’’ என்று உஷ்ணமானார் ஆசார்யாள்.

பக்தர்கள் அனைவரும் அப்படியே ஸ்தம்பித்து நின்றிருந்தனர்! ஒருவரும் வாய் திறக்கவில்லை!

‘நேற்று திருவிடைமருதூர் கோயிலில் நடந்த விஷயங்கள் பெரியவாளுக்கு எப்படித் தெரிந்தது?’ என அங்கே குழுமியிருந்த பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர். மிராசுதார் பெரியவா கால்களில் விழுந்து எழுந்து, ‘‘தப்புத்தான் பெரியவா! ஏதோ அஞ்ஞானத்தினாலே அப்படி நடந்துண்டுட்டேன். இனிமே அப்படி நடந்துக்கவே மாட்டேன்! என்னை நீங்க மன்னிச் சுடுங்கோ…’’ என்று சொல்லி முடிப்பதற்குள், பெரியவா, ‘‘இரு… இரு! இதோட முடிஞ்சுட்டாத்தான் பரவாயில்லையே… ஜப பிராமணாளுக்கெல்லாம் அங்க மகாதானத் தெரு ராமசந்த்ரையர் கிரஹத்துலதானே சாப்பாட்டுக்கு ஏற்பாடு பண்ணியிருந்தே?’’ என்று கேள்வி போட்டார்.

‘‘ஆமாம் பெரியவா!’’ – இது மிராசுதார்.

உடனே ஆசார்யாள், ‘‘சாப்பா டெல்லாம் பரமானந்தமா நன்னாத் தான் போட்டே. பந்தியிலே, நெய் ஒழுக ஒழுக நெறய மிந்திரி பருப்பு, திராட்சை எல்லாம் போட்டு சக்கரைப் பொங்கல் பண்ணச் சொல்லி, ஒங் கையாலே நீயே பரிமாறினே… சரியா?’’ என்று கேட்டார். வெலவெலத்துப் போய் விட்டார் மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர்!

மிராசுதார் வாயைப் பொத்தியபடியே, ‘‘ஆமாம் பெரியவா! பந்தியிலே சக்கரைப் பொங்கலை மட்டும் என் கையால நானே பரிமாறினேன்!’’ என்று குழைந்தார்.

ஸ்வாமிகள் விடவில்லை. ‘‘சரி… அப்டி சக்கரைப் பொங்கலை நீ போடறச்சே, பந்தி தர்மத்தோடு பரிமாறினதா ஒம் மனசாட்சி சொல்றதா?’’ என்று கேட்டார் கடுமையாக.

வாய் திறக்கவே இல்லை மிராசு. ஆசார்யாளே பேசினார்: ‘‘நீ சொல்ல வேண்டாம்… நானே சொல்றேன்! நீ சக்கரைப் பொங்கல் போடறச்சே, அது பரம ருசியா இருந்ததாலே வைதீகாள்ளாம் கேட்டுக் கேட்டு வாங்கிச் சாப்டா! நீயும் நெறயப் போட்டே. ஆனா, தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள் வாயவிட்டு, ‘சக்கரைப் பொங்கல் இன்னும் போடுடாப்பா… ரொம்ப ருசியாருக்கு’னு பல தடவை வாய்விட்டுக் கேட்டும்கூட நீ காதுலே வாங்கிண்டு அவருக்குப் போடாமலேயே போனயா இல்லியா? எத்தன தடவ வாய்விட்டுக் கேட்டார்! போடலியே நீ! பந்தி வஞ்சனை பண்ணிப்டியே… இது தர்மமா? ஒரு மஹா சாதுவ இப்டி அவமானப்படுத்திப்டியே…’’ _ மிகுந்த துக்கத்துடன் மௌனத்தில் ஆழ்ந்து விட்டார் ஸ்வாமிகள்!

மிராசுதார் தலை குனிந்து நின்றார். பக்தர்கள் வாயடைத்து நின்றனர். அனைவருக்கும் ஒரே பிரமிப்பாக இருந்தது. கண்களை மூடி, கால்கள் இரண்டையும் பின்புறமாக மடித்து, நிமிர்ந்து அமர்ந்து கொண்டார் ஆசார்யாள். சாட்சாத் பரமேஸ்வரனே அப்படி அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருமேனி விலாசம். அசையவில்லை.

பதினைந்து நிமிஷங்கள். மௌனம். பிறகு, கண்களைத் திறந்து, மௌனம் கலைந்தார் ஆசார்யாள். ஒருவரும் வாய் திறக்கவில்லை. ஆசார்யாளே நாராயணஸ்வாமி ஐயரைப் பார்த்து தீர்க்கமாகப் பேச ஆரம்பித்தார்.

‘‘மிராசுதார்வாள்! ஒண்ணு தெரிஞ்சுக்கணும். கனபாடிகளுக்கு இப்போ எண்பத்தோரு வயசாறது. தன்னோட பதினாறாவது வயசிலேருந்து எத்தனயோ சிவ க்ஷேத்ரங்கள்ளே ஸ்ரீருத்ர ஜபம் பண்ணியிருக்கார். ஸ்ரீருத்ரம் எப்பவுமே அவரோட நாடி நரம்புகள்ளேயும், ஸ்வாசத்திலேயும் ஓடிண்டே இருக்கு. அப்பேர்ப்பட்ட மகான் அவர். அவர்ட்ட நீ நடந்துண்ட விதம் மகா பாபமான கார்யம்… மஹா பாபமான கார்யம்!’’ _ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். கண் மூடி மௌனமாகி விட்டார். சற்றுப் பொறுத்து ஆசார்யாள் தொடர்ந்தார்:

‘‘நீ ‘பந்தி பேதம்’ பண்ணின காரிய மிருக்கே, அது கனபாடிகள் மனச ரொம்பவே பாதிச்சுடுத்து. அவர் என்ன காரியம் செஞ்சார் தெரியுமா நோக்கு? சொல்றேன் கேளு. நேத்திக்கு சாயங்காலம் அவர் நேரா தேப்பெருமாநல்லூர் போகலே. மகாலிங்க ஸ்வாமி கோயிலுக்குப் போனார். ‘அஸ்மேத’ (பெரிய பிராகார) பிரதட்சிணம் மூணு தடவை பண்ணினார். நேரா மகாலிங்க ஸ்வாமிக்கு முன்னாலே போய் நின்னார். கை கூப்பி நின்னுண்டு என்ன பிரார்த்திச்சார் தெரியுமா?’’ மேலே பேச முடியவில்லை பெரியவாளால். சற்று நிதானப்படுத்திக் கொண்டு தொடர்ந்தார்:

Venkatesa kanapadigal‘‘கண்ணுலேர்ந்து தாரையா நீர் வழிய, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒன் னோட பரமபக்தன். பால்யத்லேர்ந்து எத்தனையோ தடவ ஒன் சந்நிதியிலே மஹாந்யாஸ ஸ்ரீருத்ரம் ஜபிச்சிருக்கேன். நீ கேட்ருக்கே. இப்போ நேக்கு எம்ப்ளத்தோரு வயசாறது. மனசுலே பலமிருக்கு. வாக்குலே அந்த பலம் போயிடுத்துப்பா! இன்னிக்கு மத்யானம் சாப்படறச்சே நடந்தது, நோக்குத் தெரியாம இருக்காது. அந்த சக்கரப் பொங்கல் ரொம்ப ரொம்ப ருசியா இருந்துதேனு ‘இன்னும் கொஞ்சம் போடுங்கோ’னு வெக்கத்த விட்டு அந்த மிராசுதார்கிட்டே பல தடவ கேட்டேன். அவர் காதுல விழுந்தும் விழாத மாதிரி நகந்து போயிட்டார். நேக்கு சக்கரப் பொங்கல்னா உசுருங்கறது நோக்குதான் தெரியுமே. சபலப்பட்டுக் கேட்டும் அவர் போடலியேனு அப்போ ரொம்ப தாபப் பட்டேன்.

ஆனா, சாப்டு கையலம்பிண்டு வாசத் திண்ணைக்கு வந்து ஒக்காந்தப்புறம்தான், ‘இப்டியரு ஜிஹ்வா சபலம்’ (பதார்த்தத்தில் ஆசை) இந்த வயசுலே நமக்கு இருக்கலாமானு தோணித்து. அப்பா மகாலிங்கம்… இப்போ அதுக்காகத்தான் நோக்கு முன்னாடி வந்து நிக்கறேன். ஒன்னை மத்யஸ்தமா வெச்சுண்டு இந்த க்ஷணத்லேர்ந்து ஒரு பிரதிக்ஞை பண்ணிக்கறேன். எல்லாரும் காசிக்குப் போனா, புடிச்ச பதார்த்தத்த விடுவா. காசியிலேயும் நீதான்… இங்கயும் நீதான். அதனால ஒனக்கு முன்னாலே, ‘இனிமே என் சரீரத்தை விட்டு ஜீவன் பிரியற வரைக்கும் சக்கர பொங்கலையோ அல்லது வேற எந்தத் தித்திப்பு வஸ்துவையோ தொடவே மாட்டேன்! இது சத்யம்டாப்பா மகாலிங்கம்’னு வைராக்ய பிரமாணம் பண்ணிண்டு, ‘அப்பா ஜோதி மகாலிங்கம்! நா ஒங்கிட்ட உத்தரவு வாங்கிக்கறேன்’னு சொல்லி பன்னிரண்டு சாஷ்டாங்க நமஸ்காரம் பண்ணினார். கனபாடிகள் கண்ணுலேர்ந்து பொலபொலன்னு கண்ணீர். ஊருக்குப் பொறப்டுட்டார்! இப்போ சொல்லு… நீ பண்ணின காரியம் தர்மமா? மகாலிங்கஸ்வாமி ஒப்புத்துப்பாரா?’’

பெரியவா நிறுத்தினார். அப்போது மதியம் மூணு மணி. ‘‘நேக்கு இன்னிக்கு பி¬க்ஷ வேண்டாம்!’’ என்று சொல்லி விட்டார் ஸ்வாமிகள். அங்கிருந்த ஒருவருமே நகரவில்லை. சாப்பிடவும் போகவில்லை. அமைதி நிலவியது. அனைவரது கண்களிலும் நீர். மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர் பிரமித்து நின்றிருந்தார். அவருக்குப் பேச நா எழவில்லை. பக்தர்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. ‘நேற்றைய தினம் திருவிடைமருதூர் க்ஷேத்திரத்தில் நடந்த அத்தனை விஷயங்களையும் உடன் இருந்து நேரில் பார்த்த மாதிரி பெரியவா சொல்றாளே, இது எப்படி?’ என்று அனைவரும் வியந்தனர்.

    பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது: ‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

பெரியவா காலில் அப்படியே விழுந்தார் மிராசுதார். கேவிக் கேவி அழ ஆரம்பித்து விட்டார். அவர் நா தழுதழுத்தது: ‘‘பெரியவா! நா பண்ணது மகா பாவம்! அகம்பாவத்திலே அப்டி பண்ணிப்டேன். என்னை மன்னிச்சுடுங்கோ. இனி, என் ஜன்மாவிலே இப்டி நடந்துக்கவே மாட்டேன். ‘மன்னிச்சுட்டேன்’னு சொல்லணும் பெரியவா!’’ என்று கன்னத்தில் அறைந்து கொண்டார் மிராசுதார்.

ஆசார்யாள் வாய் திறக்கவில்லை. விடவில்லை மிராசுதார். ‘‘பிரார்த்திக்கி றேன் பெரியவா. நீங்க இந்த மகாலிங்க ஸ்வாமி ருத்ராபிஷேகப் பிரசாதத்தை ஸ்வீகரிச்சுக்கணும்… என்னை மன்னிச்சுடுங்கோ!’’ என்று பிரசாதத் தட்டை நோக்கிக் கைகளைக் காண்பித்தார்.

உடனே ஆசார்யாள், ‘‘இருக்கட்டும்… இருக்கட்டும். நேக்கு அந்த மகாலிங்க ஸ்வாமியே ப்ரசாத அநுக்ரஹம் பண்ணுவார்’’ என்று சொல்லி முடிப்பதற்குள், ‘‘நகருங்கோ… நகருங்கோ’’ என்று ஒரு குரல் கூட்டத்துக்கு வெளியே கேட் டது. எல்லோரும் விலகி வழிவிட்டனர். தலையில் கட்டுக் குடுமி. பளிச்சென்று பஞ்ச கச்ச வேஷ்டி. இடுப்பில் பச்சைப் பட்டு வஸ்திரம். கழுத்தில் பெரிய ருத்ராட்ச மாலை. பட்டுத் துணியில் பத்திரப்படுத்தப்பட்ட பிரசாதத்தை ஒரு பித்தளைத் தட்டில் வைத்துக் கைகளில் பக்தியோடு ஏந்தியபடி சுமார் அறுபத்தைந்து வயது மதிக்கத் தக்க பெரியவர் ஒருவர், பெரியவாளுக்கருகே வந்து சேர்ந்தார். பிரசாதத் தட்டை ஆசார்யாளுக்கு முன்பு பவ்யமாகச் சமர்ப்பித்து விட்டு, ‘‘எம் பேரு மகாலிங்கம். திருவிடமருதூர் மகாலிங்க ஸ்வாமி ஆலய அர்ச்சகர். நேத்திக்கு ஸ்வாமிக்கு ருத்ராபிஷேகம் நடந்தது. ஒரு மிராசுதார் நடத்தினார். இந்தூர்லே எங்க அக்காவ (சகோதரி) கொடுத்துருக்கு. ஆசார்யாளுக்கும் அந்த பிரசாதத்தைக் கொடுத்துட்டு, அவளையும் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேன். நமஸ்காரம் பண்ணிக்கிறேன். பெரியவா அநுக்ரஹிக்கணும்’’ என்று நமஸ்கரிக்கப் போனவரைத் தடுத்தார் ஸ்வாமிகள்.

‘‘நீங்களெல்லாம் சிவதீட்சை வாங்கிண்டவா. நமஸ்காரம் பண்ணப்டாது’’ என்று சொன்ன பெரியவா, அவர் கொண்டு வந்த பிரசாதங்களை ஸ்வீகரித்துக் கொண்டு, சிவாச்சார்யாருக்கு மடத்து மரியாதை பண்ணச் சொன்னார். அதற்குள், சற்றுத் தள்ளி நின்றிருந்த மிராசுதாரைப் பார்த்துவிட்டார் சிவாச்சார்யார். ‘‘பெரியவா! இவர் தான் நேத்திக்கு அங்கே ருத்ராபிஷேகம் பண்ணி வெச்சவர். அவரே இங்கே வந்திருக்காரே!’’ என்று ஆச்சரியத்துடன் கூறிவிட்டு, உத்தரவு பெற்றுக் கொண்டு போயே விட்டார் அந்த மகாலிங்கம் சிவாச்சார்யார்.

ஆசார்யாளை மீண்டும் ஒரு முறை நமஸ்கரித்து எழுந்து, கன்னத்தில் போட்டுக் கொண்ட மிராசுதார் நாராயண ஸ்வாமி ஐயர், ‘‘திரும்பத் திரும்பப் பிரார்த் திக்கறேன் பெரியவா. நா பண்ணினது ரொம்ப பாவ காரியம்தான்! இதுக்கு நீங்கதான் ஒரு பிராயச்சித்தம் சொல்லணும்’’ என்று மன்றாடினார்.

விருட்டென்று ஸ்வாமிகள் எழுந்து விட்டார். ‘‘இதுக்கு பிராயச்சித்தம் நா சொல்ல முடியாது. தேப்பெருமாநல்லூர் வேங்கடேச கனபாடிகள்தான் சொல்லணும்’’ என்றார்!

‘‘இந்தப் பாவி பண்ணின காரியத்துக்கு கனபாடிகள் பிராயச்சித்தம் சொல்வாரா பெரியவா?’’ என்று தாபத்தோடு கேட்டார் மிராசுதார்.

உடனே ஸ்வாமிகள் சற்று உரத்த குரலில், ‘‘நோக்கு ‘ப்ராப்தம்’ இருந்தா நிச்சயம் சொல்வார்!’’ என்று கூறிவிட்டு, விடுவிடுவென்று உள்ளே சென்று விட்டார். அதன் பிறகு பெரியவா வெளியே வரவே இல்லை. சில மணி நேரம் காத்திருந்து பார்த்தார் மிராசுதார். பின்னர் ஒரு முடிவுக்கு வந்தவராகப் புறப்பட்டு பஸ் பிடித்து செங்கல்பட்டு வந்து சேர்ந்தார். ரயிலைப் பிடித்து, அடுத்த நாள் காலை திருவிடைமருதூர் வந்து சேர்ந்தார்.

அங்கே காவிரி ஆற்றுக்குச் சென்று ஸ்நானத்தை முடித்துக்கொண்டு, ஒரு வைராக்கியத்துடன் அருகிலுள்ள தேப்பெருமாநல்லூரை நோக்கி நடையைக் கட்டினார். எப்படியும் வேங்கடேச கன பாடிகளைப் பார்த்து, அவர் காலில் சாஷ் டாங்கமாக விழுந்து, மன்னிப்புக் கேட்டு, அவர் கூறும் ‘பிராயச்சித்த’த்தைப் பூர்த்தி செய்து, பாபவிமோசனம் பெற்றுவிட வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் வேக வேகமாக நடந்தார்.

தேப்பெருமாநல்லூர் அக்ரஹா ரத்தில் நுழைந்தார் மிராசுதார். எதிர்ப்பட்ட ஒருவரிடம் கன பாடிகள் பெயரைச் சொல்லி, அவர் க்ருஹம் எங்கே என விசாரித் தார். உடனே அவர், வெளியே பலர் கூட்டமாக நின்றிருந்த ஒரு வீட்டைச் சுட்டிக் காட்டி, ‘‘துக்கம் விஜாரிக்க வந்திருக்கேளா? அதான் வேங்கடேச கனபாடிகள் வீடு. இன்னிக்கு விடியக் காலம் தான் கனபாடிகள் திடீர்னு காலமா யிட்டார். ‘அநாயாஸேன’ மரணம் (சிரமங்கள் இல்லாத சுலப மரணம்). போய்ப் பார்த்துட்டு வாங்கோ’’ என்று சொல்லிப் புறப்பட்டார்.

இதைக் கேட்டவுடன் பிரமித்து நின்று விட்டார், நாராயணஸ்வாமி ஐயர். யாரோ அவர் தலையில் சம்மட்டி கொண்டு தாக்கியது போலிருந்தது. நேற்று மடத்தில் ஆசார்யாள் உரத்த குரலில் ஆணித்தரமாகச் சொன்ன வாக்கியம் மீண்டும் அவர் காதுகளில் ஒலிப்பது போலிருந்தது: ‘நோக்கு ப்ராப்தம் இருந்தா நிச்சயம் சொல்வார்!’

‘பிராப்தம் இல்லேங்கறது நேத்திக்கே பெரியவாளுக்கு தெரிஞ்சிருக்கு’ என்பது மிராசுதாருக்கு இப்போது புரிந்தது. கனபாடி கள் வீட்டுக்குச் சென்றார் மிராசுதார். மானசீகமாக மன்னிப்புக் கேட்டுக் கொண்டு, கனபாடிகளின் பூத உடலுக்கு நமஸ்காரம் பண்ணினார். புறப்பட்டார்.

அதன் பிறகு, பல விதமான துன்பங்களுக்கு ஆளான மிராசுதார், ஓரிரு வருஷங்களுக்கு உள்ளாகவே தன் சொத்துகளையெல்லாம் இழக்க நேரிட்டது. வடக்கே சென்று பல சிவாலயங்களிலே திருமடப்பள்ளி கைங் கரியம் பண்ணிவிட்டு, காசி க்ஷேத்ரத்திலே காலகதி அடைந்தார்.

[நன்றி : எஸ்.ரமணி அண்ணா | சக்தி விகடன்]

Tuesday, February 28, 2017

எங்கே அடுத்த முட்டாள்?” - Sorry dont read last line

நாட்டை ஆண்டுகொண்டிருந்த மன்னருக்குத் திடீரென ஒரு சந்தேகம் உதித்தது. உடனடியாக அமைச்சரை வரவழைத்தார்.

“நான் இந்த நாட்டை இவ்வளவு நன்றாகவும், புத்திசாலித்தனத்துடனும் ஆண்டு வருகிறேன், ஆனால் இந்த நாட்டிலும் முட்டாள்கள் இருப்பார்கள் அல்லவா?”

“ஆம் மன்னா!”

“அப்படியானால் அவர்களில் முதல் ஐந்து முட்டாள்கள் யார்?? அவர்களைத் தேடிக் கண்டுபிடித்துக் கூட்டிக் கொண்டு வருவது உம் பொறுப்பு” என்றார்.

அமைச்சருக்கு ஒன்றுமே புரியவில்லை, புத்திசாலியைக் கொண்டு வரச் சொன்னால் ஏதாவது போட்டி வைத்து வெற்றியாளரைக் கொண்டு வரலாம். முட்டாளைக் கொண்டு வரச் சொன்னால்?? என்ன செய்வது சொன்னது மன்னராயிற்றே, “சரி மன்னா” என்று ஒத்துக் கொண்டார்.

ஒரு மாதம் நாடு முழுவதும் பயணம் செய்து இரண்டுபேரை மட்டும் கூட்டிக்கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும் மன்னர், “அமைச்சரே உமக்குக் கணிதம் மறந்து விட்டதோ??”

“இல்லை மன்னா! முதலில் நடந்ததை விளக்க அனுமதிக்க வேண்டும்!” என்றார் அமைச்சர்.

“தொடரும்” என்றார் மன்னர்.

“மன்னா! நான் நாடு முழுவதும் சுற்றும்போது, இவன் மாட்டு வண்டியின்மேல் அமர்ந்துகொண்டு தன் துணி மூட்டையைத் தலைமேல் வைத்து, பயணம் செய்து கொண்டிருந்தான், ஏன் அவ்வாறு செய்கிறாய்? எனக் கேட்டதற்கு என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதற்குத்தான் என்றான் – இவன்தான் நம் நாட்டின் ஐந்தாவது மிகப் பெரிய முட்டாள்.”’ என்றார் அமைச்சர்.

“சரி அடுத்து”

“இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் வளர்ந்த புல்லை மேய்க்க, எருமையைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான், இவன்தான் நம் நாட்டின் நான்காவது மிகப் பெரிய முட்டாள்”

“களிப்படைந்தோம் அமைச்சரே! களிப்படைந்தோம்! சரி, எங்கே அடுத்த முட்டாள்?”

“அரசவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்கும்போது, அதையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடி, கடந்த ஒரு மாதமாய் அலைந்துகொண்டிருந்த நான்தான் மூன்றாவது முட்டாள்.”

மன்னருக்குச் சிரிப்பு தாங்கவில்லை, விழுந்து விழுந்து சிரித்தார். பின்னர் “அடுத்தது” என்றார்.

””நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும்போது அதைக் கவனிக்காமல் முட்டாள்களைத் தேடிக் கொண்டிருக்கும் நீங்கள்தான் இரண்டாவது” என்றார் அமைச்சர்.

ஒரு நிமிடம் அரசவையே ஆடிவிட்டது. யாரும் எதுவும் பேசவில்லை.

“உமது கருத்திலும் நியாயம் உள்ளது. நான் செய்ததும் தவறுதான்” என ஒத்துக் கொண்டார் மன்னர்.

“சரி எங்கே முதலாவது முட்டாள்?”

அமைச்சர் சொன்னார்.”மன்னா! அலுவலகத்திலும், வீட்டிலும் எவ்வளவோ வேலைகள் இருந்தாலும் அதையெல்லாம் விட்டுவிட்டு whatsapp thaan குடியென வாழ்ந்து இந்த மொக்கையான கதையை மிக சுவாரசியமாக   வாசித்துக்கொன்டு  நாட்டின் மிகப் பெரிய முட்டாள் யாரென்று தேடி  படித்துகொண்டிருக்கிறாரே இவர்தான் அந்த முதல் முட்டாள்!”

உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்-Thanks Whatsup

ஆறு வயது சிறுவன் ஒருவன் தன் நான்கு வயது தங்கையை அழைத்து கொண்டு கடை தெருவின் வழியே சென்று கொண்டு இருந்தான்.

ஒரு கடையின் வாசலில் இருந்த பொம்மைகளை பார்த்து தயங்கி நின்ற தங்கையை பார்த்து, "எந்த பொம்மை வேண்டும்?'' என்றான்.

அவள் கூறிய பொம்மையை எடுத்து அவள் கையில் கொடுத்து விட்டு ஒரு பெரிய மனிதனின் தோரணையுடன் கடையின் முதலாளியை பார்த்து... ''அந்த பொம்மை என்ன விலை?'' என்று கேட்டான்.

அதற்கு சிரித்துக்கொண்டே அந்த முதலாளி,

''உன்னிடம் எவ்வளவு உள்ளது?'' என்று கேட்டார்.

அதற்கு அந்த சிறுவன்.... தான் விளையாட, சேர்த்து வைத்து இருந்த கடல் சிப்பிகளை தன் பாக்கெட்டில் இருந்து எடுத்து கொடுத்தான்!

''இது போதுமா...?" என்று கவலையுடன் கேட்டான்.

அதற்கு அந்த கடைக்காரர் அவனின் கவலையான முகத்தை பார்த்து கொண்டே...., "எனக்கு நான்கு சிப்பிகள் போதும்!'' என்று மீதியை கொடுத்தார்.

சிறுவன், மகிழ்ச்சியோடும் மீதி உள்ள சிப்பிகளோடும்.... தன் தங்கையோடு அந்த பொம்மையை எடுத்துக்கொண்டு சென்றான்.

இதை எல்லாம் கவனித்து கொண்டு இருந்த அந்த கடையின் வேலையாள்.... முதலாளியிடம்,

"அய்யா! ஒன்றுக்கும் உதவாத சிப்பிகளை வாங்கிக்கொண்டு விலை உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே...." என்றான்.

அதற்கு அந்த முதலாளி,

''அந்த சிறுவனுக்கு, 'பணம் கொடுத்தால்தான் பொம்மை கிடைக்கும்' என்று புரியாத வயது. அவனுக்கு அந்த சிப்பிகள்தான் உயர்ந்தவை.

நாம் பணம் கேட்டால் அவன் எண்ணத்தில் 'பணம்தான் உயர்ந்தது' என்ற மாற்றம் வந்து விடும்... அதை தடுத்து விட்டேன்.

மேலும், 'தன் தங்கை கேட்டவற்றை தன்னால் வாங்கித் தர முடியும்' என்ற தன்னம்பிக்கையை அவனுக்குள் விதைத்து விட்டேன்.

என்றோ ஒரு நாள்... அவன் பெரியவன் ஆகி இந்த சம்பவங்களை நினைத்து பார்க்கையில், 'இந்த உலகம் நல்லவர்களால் ஆனது!' என்ற நல்ல எண்ணம் அவன் மனதில் தோன்றும்.

ஆகையால், அவன் எல்லோரிடமும் அன்பு காட்ட தொடங்குவான். உலகம் அன்பினால் கட்டமைக்க பட வேண்டும்'' என்றார்!
"அன்பு" என்ற ஒரு வார்த்தையில் தான் இன்னும் இந்த உலகமும் உயிரினங்களும் வாழ்ந்துகொண்டிருக்கிறது.

Tuesday, February 14, 2017

நாம் எதை தருகிறோமோ அதுதான் நமக்கு திரும்ப வரும் ....Thanks to Whatsup

ஒரு கிராமத்தில் ராமசாமி என்பவர் வாழ்ந்து வந்தார்.

அவர் வீட்டுத் தோட்டத்தில் ஒரு முருங்கை மரம் இருந்தது

வாரம் ஒரு முறை முருங்கை காய்களை பறித்து, பையில் நிரப்பி தோளில் வைத்துக்கொண்டு ....

ஒன்பது கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கும் டவுன் வரை🚶🚶🚶🚶🚶
நடந்து சென்றே...

ரெகுலராக ஒரு மளிகை கடையில் விற்றுவிட்டு வருவது வழக்கம்

முருங்கை காயை கொடுத்துவிட்டு அதற்கு பதிலாக
அரிசி பருப்பு சர்க்கரை போன்ற வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்கி வருவார்


ராமசாமி கொண்டுவரும் முருங்கைக்காயின் சுவை அந்த பகுதி மக்களிடையே மிகவும் பிரபலம்

இதை பயன்படுத்தி மற்ற முருங்கைக்காயோடு கலந்து மளிகை கடைக்காரரும் நல்ல லாபம்
சம்பாதித்து விடுவார்!

பல வருடமாக ராமசாமி முருங்கைக்காய் கொண்டுவருவதால் மளிகை கடைக்காரர் அதை எடை போட்டு பார்த்ததில்லை;

ராமசாமி சொல்கின்ற எடையை அப்படியே நம்பி அதற்கு ஈடான மளிகை பொருட்களை கொடுத்து அனுப்புவார்!

காரணம்
ராமசாமியின் நேர்மையும் நாணயமும் எல்லோரும் அறிந்தது!

ஒரு நாள் ராமசாமி பத்து கிலோ முருங்கைக்காயை கொடுத்துவிட்டு அதற்கான பொருட்களை வாங்கிச்சென்றார்....

சிறிது நேரத்தில்
பத்து கிலோ முருங்கைக்காய் மொத்தமாய் வேண்டும் என்று ஒரு சமையல்காரர் வந்து கேட்க... அவருக்காக மளிகைக்காரர் ...
எடைபோட... அதில் ஒன்பது கிலோ
மட்டுமே இருந்தது!.......

அன்று முழுவதும் மளிகைகாரருக்கு தூக்கமே வரவில்லை! ராமசாமி மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தோம்,
இவ்வளவு பெரிய நம்பிக்கை துரோகத்தை செய்துவிட்டாரே!

இத்தனை வருடங்களுக்காக இப்படி முட்டாள்தனமாக எடை குறைவான முருங்கைக்காயை வாங்கி ஏமாந்து விட்டோமே!!

அடுத்த முறை ராமசாமி வந்தால் சும்மா விடக்கூடாது என்று கடுங்கோபத்தில் இருந்தார்!

நான்கு நாட்கள் கழித்து ராமசாமி மிகவும் சந்தோஷமாக வந்தார்!

நல்ல விளைச்சல் என்பதால் நிறைய கொண்டு வந்திருந்தார்!

"கையும் களவுமாக பிடிக்கவேண்டும்என்று, எத்தனை கிலோ என்று மளிகைக்காரர் கேட்க பத்து கிலோ என்றார் ராமசாமி..

அவர் முன்னாலேயே எடைபோட்டு பார்க்க ஒன்பது கிலோ தான் இருந்தது.

வந்த கோபத்தில் மளிகைக்காரர் பளார்,பளார் என ராமசாமியின் கன்னத்தில் அறைந்தார்!

இத்தனை வருஷமா இப்படித்தான் ஏமாத்திட்டு இருக்கியா?கிராமத்துக்காரங்க ஏமாத்த மாட்டாங்கன்னு நம்பி தானே எடை போடாம அப்படியே வாங்கினேன்,

இப்படி துரோகம் பண்ணிட்டியே சீய் என துப்ப, நிலைகுலைந்து போனார் ராமசாமி.

அய்யா...என்ன மன்னிச்சிடுங்க நான் ரொம்ப ஏழை, எடைக்கல்லு வாங்குற அளவுக்கு என்கிட்ட காசு இல்லீங்க..

ஒவ்வொரு முறையும் நீங்க கொடுக்கிற ஒரு கிலோ பருப்பை ஒரு தட்டுலயும், இன்னொரு தட்டுல முருங்கைக்காயையும் வச்சி தான் எடைபோட்டு கொண்டுவருவேன்.

"இதை தவிர வேற எதுவும் தெரியாதுங்கய்யா, என்று காலை பிடித்து அழ,
மளிகைக்காரருக்கு செருப்பால் அடித்தது போல் இருந்தது....

"தான் செய்த துரோகம் தனக்கே வந்ததை உணர்ந்தார்!

இத்தனை வருடங்களாக ராமசாமியை ஏமாற்ற நினைத்த மளிகைக்காரரும்...

அவருக்கே தெரியாமல் ஏமாந்து கொண்டுதான் இருந்திருக்கிறார் என்பது தெளிவானது!

இது தான் உலகநியதி!

நாம் எதை தருகிறோமோ
அதுதான் நமக்கு திரும்ப வரும் ....
நல்லதை தந்தால் நல்லது வரும்,...

தீமையை தந்தால் தீமை வரும்!

வருகின்ற காலங்கள் வேண்டுமானால் தாமதமாகலாம்,
ஆனா....
நிச்சயம் வரும்!

ஆகவே நல்லதை மட்டுமே தருவோம்,நல்லதை மட்டுமே விதைப்போம்!!

மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான்."

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல்


நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன் (காவல் கோட்டம் என்ற நூலில் இருந்து) படித்ததில் பிடித்தது - Got from Madura College Alumni Group - Courtesy Mr.Nagarajan

மதுரைக்கு மிக அருகில் உள்ள கிராமம் கடச்சனேந்தல். இங்கு விவசாயிகளை அமைப்பாகத் திரட்டும் ஒரு முயற்சிக்காக நான் சென்றிருந்தேன். அந்த ஊரைச் சேர்ந்த விவசாயச் சங்கத்தினர் உடன் இருந்தனர். அந்தச் சின்னஞ்சிறிய கிராமத்தின் குறுகிய வீதிகளின் வழியே, வயல் வேலைகள் முடித்துத் திரும்பும் விவசாயிகளைப் பார்த்துப் பேசிக்கொண்டிருந்தோம். சடசடவென மழை பெய்ய ஆரம்பித்தது.

எங்கு ஒதுங்குவது எனச் சுற்றும்முற்றும் பார்த்து, மூலையில் இருக்கும் ஒரு தாவாரத்தில் ஒதுங்கினோம். காற்றும் மழையுமாகக் கொட்டித் தீர்த்தது. ஒதுங்கி நிற்கிறோம் என்பதற்கான எந்த அடையாளத்தையும் மழை விட்டுவைக்கவில்லை. மேலெல்லாம் நனைந்து சற்றே நடுக்கம் எடுக்கத் தொடங்கியது. நான் எதையோ யோசித்தபடி அங்கு சிறு பலகை ஒன்றில் எழுதியிருந்ததைப் பார்த்தேன். 'கவுந்தியடிகள் ஆசிரமம்’ என எழுதியிருந்தது. என் கண்களையே நம்பாமல், ஆச்சர்யத்தோடு மீண்டும் ஒருமுறை படித்து உறுதிப்படுத்தினேன். கோவலனும் கண்ணகியும் மதுரைக்கு வருவதற்கு, உறுதுணையாக இருந்து ஆற்றுப்படுத்திய சமணத் துறவி கவுந்தியடிகளுக்கு இங்கு எதற்கு ஆசிரமம் என யோசித்தபடி நின்றேன்.

மழை குறையத் தொடங்கியது. தாவாரத்துக்கு அடுத்து இருந்தவரிடம், 'கவுந்தியடிகள் ஆசிரமம் என்ற பெயர் எதற்காக வைத்திருக்கிறீர்கள்?’ எனக் கேட்டேன். அவர் சொன்னார், 'இந்த அம்மாதானே கோவலன் - கண்ணகியை எங்க ஊருக்குக் கூட்டிவந்துச்சு’ என்றார்.

அவரின் பதில், மேலும் ஆச்சர்யத்தை ஊட்டியது. 'கோவலன் - கண்ணகி மதுரைக்குத்தானே வந்தார்கள்? உங்கள் ஊருக்கு எங்கு வந்தார்கள்?’ எனக் கேட்டேன். 'என்ன தம்பி... மதுரைக்குள்ள போறதுக்கு மொத நாளு அவங்க ரெண்டு பேரையும், எங்க ஊர்லதான அந்த அம்மா தங்கவெச்சுச்சு’ என்றார். எனக்கு என்ன சொல்வது எனப் புரியவில்லை. ஆனால், அவருக்கு என்னிடம் சொல்ல நிறைய விஷயங்கள் இருக்கின்றன என்பது மட்டும் புரிந்தது.

நான் பேச்சைத் தொடர்ந்தேன். அவர் மேலும், 'கோவலன் - கண்ணகி தங்கி இருந்த வீடு அருகில்தான் இருக்கிறது’ என்றார். நான் ஏறக்குறைய உறைந்துபோய் நின்றேன். அதற்கு மழை மட்டும் காரணம் அல்ல! தொடர்ந்து, 'கண்ணகி வீடுதானே... அது எனக்குத் தெரியும். நான் கூட்டிப்போய் காட்டுறேன்’ என உடன் இருந்தவர் பதில் சொன்னார்.

சிலப்பதிகாரத்தை வெளியில் இருந்து படித்த நான், முதன்முறையாக அதற்குள்ளே இருக்கும் மனிதர்களைச் சந்தித்தேன். அவர், 'வாருங்கள் போகலாம்’ எனச் சொல்லி என்னை அழைத்துப்போனார். மழை நின்ற அந்த இரவில் நான் காலத்துக்குள் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்.

இரண்டு தெரு தள்ளி ஓர் இடத்தைக் காட்டினார். 'இந்த இடத்தில்தான் கண்ணகியின் வீடு இருந்தது’ என்றார். நான் விழித்த கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். அந்த இடம் எதுவும் இல்லாத வெளியா... அல்லது காலவெளியா என்பது புரியாத திகைப்பில் நின்றிருந்தேன்.

வயதான ஒரு மூதாட்டி, 'என்னப்பா, இந்த ராத்திரியில வந்து கண்ணகி வீட்டைப் பார்த்துக்கிட்டிருக்கீங்க?’ எனக் கேட்டபடி எங்களைக் கடந்துபோனாள். இப்போதுதான் கண்ணகியை வீட்டில் விட்டுவிட்டுப் போகும் கவுந்தியடிகளைப்போல இருந்தது அவளது வார்த்தைக்குள் இருந்த உரிமை.

என்னை அழைத்துப்போனவர் தொடர்ந்து சொன்னார்... 'கண்ணகி - கோவலன் கடைசியா இருந்தது இந்த வீட்டில்தான். இங்கிருந்துதான் சிலம்பை விற்க கோவலன் மதுரைக்குப் புறப்பட்டுப் போனான். புதுவாழ்வு தொடங்க ஆசையோடு காத்திருந்த கண்ணகிக்கு, போனவன் கொலையுண்ட செய்திதான் வந்து சேர்ந்தது. செய்தி கேள்விப்பட்டதும் ஆத்திரம் பொங்க தனது காலில் இருந்த இன்னொரு சிலம்பை கையில் ஏந்தியபடி இங்கிருந்துதான் புறப்பட்டாள். அதனால்தான் எங்கள் ஊருக்கு 'கடை சிலம்பு ஏந்தல்’ எனப் பெயர்.

20 வருடங்களுக்கு முன்புவரைகூட ஊரின் பெயர்ப்பலகை எல்லாமே 'கடை சிலம்பு ஏந்தல்’ என்றுதான் இருந்தது. அதன் பிறகுதான் பேச்சுவழக்கில் எல்லோரும் 'கடச்சனேந்தல்’ என்றே அழைக்க ஆரம்பித்துவிட்டனர்’ என்றார்.

நான் மறுபடியும் ஊரின் பெயரில் இருந்து எல்லாவற்றையும் யோசிக்க ஆரம்பித்தேன். அவர் பேச்சைத் தொடர்ந்தார். 'கோவலன் - கண்ணகியை அவமதித்துப் பேசிய இருவரை, கவுந்தியடிகள் நரியாகப் போகுமாறு சபித்துவிட்டார் இல்லையா?’ எனக் கேட்டார், சிலப்பதிகாரத்தின் காட்சியை நினைவுபடுத்தி. 'ஆம்... ஓராண்டு காலம் நரியாகப் போகுமாறு சபித்தார்’ என்றேன். 'அதுதான் அந்த நரி’ என்றார்.

அவர் கைகாட்டும் திசையை மிரட்சியோடு பார்த்தேன். கும்மிருட்டாக இருந்த அந்தத் திசையில் இருந்து அடுத்து வெளிவரப்போவது என்னவோ என்ற திகைப்பு குறையாமல் அவரை நோக்கித் திரும்பினேன். அவர் சொன்னார், 'கவுந்தியடிகளால் சபிக்கப்பட்ட அந்த நரிகள் இரண்டும் ஓராண்டு காலமும் அந்தப் பக்கம் உள்ள காட்டில்தான் இருந்ததாம். அதனால்தான் அந்த இடத்துக்கு 'அந்தநேரி’ எனப் பெயர்’ என்றார். அடுத்து இருக்கும் ஊரின் பெயர் 'அந்தநேரி’ என்பது அப்புறம்தான் நினைவுக்கு வந்தது (அதுவே 'அந்தனேரி’ ஆகிவிட்டது).

நிகழ்காலத்துக்கும் கடந்தகாலத்துக்கும் இடையில் இடைவெளியற்ற ஒரு நிலத்தில், நின்றுகொண்டிருப்பதுபோல் உணர்ந்தேன். ஒருவகையில் மதுரையே இப்படி ஒரு நிலம்தான். காலத்தின் எந்தப் புள்ளியில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம் என்பது பல நேரங்களில் ஒரு புகைமூட்டமாகத்தான் தென்படும்.

அந்த வீடுதான் சிலப்பதிகாரத்தில் கொந்தளிக்கும் உணர்ச்சிகள் மையம் இட்டிருந்த இடம். கோவலன் - கண்ணகி இருவரும் இங்குதான் ஒரு புது வாழ்வைத் தொடங்கினர். கண்ணகியின் களங்கம் இல்லாத அன்பின் முன்பாக கோவலன் ஒரு தூசுபோல கிடந்தான். ஆண் எனும் அகங்காரம் முற்றிலும் அழிந்து, கண்ணகியின் கால் பற்றி நின்றான். 12 ஆண்டுகள் நெஞ்சம் முழுவதும் பெருகிக்கிடந்த துயரக் கடலை அன்பு எனும் மிதவைகொண்டு எளிதாகக் கடந்தாள் கண்ணகி. கால் சிலம்பைக் கழட்டிக் கொடுத்து புதுவாழ்வின் வாசல் நோக்கி அனுப்பினாள். நற்செய்தியோடு வருவான் என எதிர்பார்த்திருந்த கண்ணகிக்கு, அவன் கொலையுண்ட செய்தியே வந்து சேர்கிறது. அவள் வெகுண்டெழுந்தாள்.

சிலப்பதிகாரத்தில் உணர்ச்சிகளினால் உச்சம் பெற்ற காட்சி இங்குதான் அரங்கேறியது. பெருக்கெடுத்த அன்பும், புதுவாழ்வின் கனவும், கொடுங்கொலையும் வந்துசேர்ந்த இடமாக, இந்தச் சிறு குடிலே இருக்கிறது. கோவலனின் மனைவியாக மட்டுமே இருந்த ஓர் அபலைப் பெண், கண்ணகியாக உருமாற்றம்கொள்வது இந்த இடத்தில் இருந்துதான். ஒரு காப்பியத்தில் எந்த இடத்தை சமூகம் பற்றி நிற்கவேண்டுமோ, அந்த இடத்தை இறுகப் பற்றி நிற்கிறது இந்த ஊர்.

கதைகளின் பலம், பெருந்துக்கத்தை மறந்துவிடாமல் மீண்டும் மீண்டும் நினைவூட்டிக் கொண்டே இருப்பதுதான். 'எங்கள் ஊருக்கு வந்த பெண்ணுக்கு இப்படி ஆகிவிட்டதே’ என்ற துக்கம், இத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும் அந்தக் கதையைச் சொல்பவரின் தொண்டைக் குழியில் தேங்கி நிற்கிறது. அந்தத் துக்கம் மறக்காமல் இருந்தால்தான் மனிதன் அறம்சார்ந்த வாழ்வை வாழத் தொடர்ந்து தூண்டப்பட்டுக் கொண்டிருப்பான். மனிதனை நியாயவானாக மாற்றவேண்டிய செயல், மனிதன் இருக்கும் வரை நடத்தப்பட்டுக்கொண்டே இருக்க வேண்டிய செயல்.

அதற்கான கருவியை தனது அனைத்து அங்கங்களிலும் வைத்திருக்கும் பண்பாட்டையே சிறந்த பண்பாடாக நாம் கருதுகிறோம். அத்தகைய பண்பாட்டு விழுமியங்கள் செழிப்புற்று இருப்பதே நாகரிகச் சமூகத்துக்கான சான்று. கண்ணகியின் கண்ணீர்த் துளியைக் கைகளில் ஏந்தி, கவுந்திக்கு மரியாதை செய்துகொண்டிருக்கும் இந்தச் செயல்கூட அத்தகைய நாகரிகத்தின் அடையாளமே.

தார்ச்சாலையின் ஓரத்தில் இருக்கும் பெயர்ப்பலகையில் எனாமல் பெயின்டால் எழுதப்பட்ட எழுத்துக்குப் பின்னால் இவ்வளவு நெடிய கதையும் காலமும் மறைந்திருக்குமானால்... பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட எழுத்துக்களுக்குப் பின்னால் மறைந்திருக்கும் கதைகளை யார் அறிவார்?

அப்படிப்பட்ட எழுத்தைத் தாங்கிநிற்கும் கருங்கல் ஒன்று, வைகையின் தென்கரை கிராமம் ஒன்றில் நிமிர்ந்து நிற்கிறது. சுமார் 2,400 ஆண்டுகளாக...

நன்றி-  எழுத்தாளர் சு.வெங்கடேசன் (காவல் கோட்டம் என்ற நூலில் இருந்து) படித்ததில் பிடித்தது