Monday, August 3, 2026

சப்தமி சப்தகிரி சப்த நாடி - ஆமாங்க ஏழு சொற்கள் ஏழு அர்த்தங்கள்

 

ஒரு முக நூல் பதிவில் நண்பர் ஒருவர் திதிகளின் வரிசையை பற்றி பேசினார்.   அவரது பதிவில் சப்தமி என்பதற்கு விளக்கம் கொடுக்க முயன்றார்.  அதனால் தூண்டப்பட்ட நான் கீழ் கண்ட ஏழு விஷயங்களை தொகுத்துள்ளேன். 

1) சப்தகிரி (திருப்பதியில் உள்ள ஏழுமலைகள் சேஷாத்ரி (சேஷ மலை)நீலாத்ரி (நீல மலை)கருடாத்ரி (கருட மலை)அஞ்சனாத்ரி (அஞ்சன மலை)விருஷபாத்ரி (விருஷப மலை)நாராயணாத்ரி (நாராயண மலை)வெங்கடாத்ரி (வேங்கட மலை) ), 

2) சப்தஸ்வரம் (சரிகமபதநி ) 

3) சப்தநாடி (இடகலை, பிங்கலை' சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அத்தி),

4) சப்த ரிஷிகள் (கஸ்யப, அத்திரி, பரத்வாஜ, விஸ்வாமிதர, ஜமதக்னி, கௌதம , வசிஷ்ட ) 

5) சப்த கன்னியர் (பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) ) 

6) சப்த வாஹன (சூரியனின் ஏழு குதிரைகள் (காயத்ரி, பிரஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பக்தி)

7) திருமண சடங்கில் சப்தபதி (ஏழு வாக்குறுதி ஏழு அடிகள் எடுத்து வைப்பது)

தொகுப்பு: ரமணன் சேஷாத்ரி மதுரை

வேதம் விட்ட கண்ணீர் – Thanks to whats app message in Surabi Balu anna group

 ( ஸ்ரீ ஞானானந்த கிரி மஹாஸ்வாமிகள் - பத்தொன்பதாம் நூற்றாண்டின் மத்தியில் அவதரித்து இருபதாம் நூற்றாண்டின் எழுபதுகள் வரை(சுமார் 120+ஆண்டுகள்)ஸ்தூலமாயும் தற்போது சூட்ஷுமமாயும் அருள்பாலிக்கும் மஹாபுருஷர். 'நாமசங்கீர்த்தன' ஸம்ப்ரதாயத்தை அனுஸரித்து. தம்மை பற்றி ஒருமுறை குறிப்பிடுகையில், ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ பகவந் நாம போதேந்ர ஸரஸ்வதி ஸ்வாமிகளை மூலகுருவாகக்கொண்ட' என்று அருளியவர். திருக்கோவிலூரிலிருந்து திருவண்ணாமலை செல்லும் வழியில் ஊஞ்சலூர் என்னும் க்ஷேத்திரத்தில் வசித்து,  தற்போது பிருந்தாவனராய் அருளுபவர்)


இந்த கட்டுரை ஸ்ரீ ரமணி அண்ணாவால், அவரது சொந்த அனுபவமாக எழுதப்பட்டு, சக்தி விகடனில் வெளி வந்தது. எழுத்தும் நடையும் அவருடையதே.


       (வேதம் விட்ட கண்ணீர்)


பல வருடங்களுக்கு முன்பு......


ஒரு ஞாயிற்றுக் கிழமை, திருவண்ணாமலையில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரைத் தரிசித்து விட்டு, திருக்கோயிலூர் ஸ்ரீ ஞானானந்த தபோவனத்திற்குச் சென்றேன். தபோவனத்தை அடைந்தபோது, காலை 10.30மணி. அன்று ஏகக் கூட்டம். சுமார் 100 கார்களுக்குக் குறையாமல் சாலையோரம் நின்றிருந்தன.


தியான மண்டபத்தில், சாக்ஷாத் ஸ்ரீ தக்ஷிணாமூர்த்தி போன்று வீற்றிருந்தார் ஸ்ரீ ஞானானந்த குரு. ஒவ்வொருவராகத் தரிசித்து, ப்ரஸாதம் பெற்றுச் சென்று கொண்டிருந்தனர். பக்தர்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்லி அனுப்பிக்கொண்டிருந்தது அந்த கருணைக்கடல்.


நான், ஒரு தூண் ஓரத்தில் பயபக்தியுடன் கைகூப்பி நின்றிருந்தேன். அருகில், பரம தேஜஸ்வியான-நடுத்ததர வயது வைதீகர் ஒருவர் நின்றிருந்தார்.அவரது திருவாக்கினின்று வெளிவந்த ஸ்ரீருத்ரம், கணீரென்று மண்டபம் முழுவதும் வ்யாபித்ததது. அவரை உற்று நோக்கினேன். முகத்தில் வாட்டம்; கண்கள் பனித்திருந்தன.


இதற்குள், எங்கள் இருவரையும் பார்த்துவிட்ட ஸ்வாமிகள், வைதீகரை மட்டும் சைகை காட்டி அழைத்தார். அருகில் சென்ற வைதீகர் சாஷ்டாங்கமாக ஸ்வாமிகளை நமஸ்கரித்து, கைகட்டி நின்றார். அவரைக் கனிவுடன் ஏறிட்ட குருநாதர், "வேதம் எப்பவுமே கண்ணீர் விடப்படாது. தேசத்துக்கு சுபிக்ஷம் குறைஞ்சுடும்.  என்ன....புரியறதா? " என்றார்.


பிறகு, நம்ம வாக்குலேருந்து வந்த ஸ்ரீருத்ரம் தேவாமிர்தமா.....ஸ்வர சுத்தமா இருந்தது. நாம ஒரு காரியம் பண்ணுவோமே.......அங்கே, ஆஞ்சநேய ஸ்வாமி சந்நதியில் ஒக்காந்துண்டு ஸ்ரீருத்ரம், சமகம், புருஷஸூக்தம்...எல்லாத்தையும் ஆத்மார்த்தமா சொல்லிட்டு வரலாமே?" என்றார் ஸ்வாமிகள்.


(ஸ்ரீ ஞானந்தகிரி மஹாகுரு, எப்போதுமே பிறரை விளிக்கும் போது, "நீ, நீங்கள், உனக்கு.....சொல், செய், பண்ணு " என்று கூறாது " நாம, நமக்கு, சொல்வோம், செய்வோம், பண்ணுவோம்..."என்று தன்னிலைப் படுத்தியே கூறுவாராம். எனவே அதே சொல்லாட்சி கையாளப்படுகிறது.


"பரம பாக்கியம் ஸ்வாமி! அப்படியே பண்றேன்! என்ற வைதீகர், அனுமன் சன்னிதியை நோக்கி நகர்ந்தார். அடுத்து அடியேனை அழைத்த குருநாதர் "நாம எப்ப வந்தோம்?" அந்த வேதத்தோடு வந்திருக்கமா!?" என்று கேட்டார்.


"இல்லே குருதேவா! தனியாகத்தான்" என்று அடியேன் சொன்னதும் ஸ்வாமிகள் சிரித்தபடி." சரி...சரி...நாமளும் ஸ்ரீருத்ரம் தெரிஞ்சா சன்னதியில் சொல்லிட்டு வரலாமே....ரொம்ப புண்ணியம்" என்றார்.


"உத்தரவுபடியே செய்கிறேன்!" என்று கூறி நகர்ந்தேன்."


மதியம் 2.00 மணி...தனது பிட்சையை (மதிய எளிய உணவு) பூர்த்தி செய்த பிறகு, மீண்டும் மண்டபத்தில் வந்து அமர்ந்தார் ஸ்ரீ குருநாதர். போஜனத்தை முடித்துவிட்டு அடியேனும் அந்த வைதீகரும் அங்கே வந்தோம். கூட்டம் அதிகமில்லை. வைதீகரை தனக்கு முன் அமரச் சொன்னார் ஸ்ரீ ஸ்வாமிகள். நானும் ஓரமாக நின்றேன்.


சிறிது நேரம் வைதீகரையே பார்த்துக்கொண்டிருந்த ஸ்வாமிகள், வயறார சாப்பிட்டமா?  பதார்த்தமெல்லாம் ருசியாக இருந்ததா?" எனக்கேட்டார்.


வைதீகர், "ரொம்ப நன்னா இருந்தது ஸ்வாமி!" என்றதும் குருநாதர் முகத்தில் த்ருப்தி. பின், கனிவுடன் விசாரித்தார்: "நாம எந்தூர்லேந்து வர்ரோம்? பூர்வீகம்  என்னவோ?"


"பூர்வீகம் உத்தரகோசமங்கை. எங்க கொள்ளுதாத்தா காலத்துலேயே தஞ்சாவூருக்கு வந்து செட்டில் ஆயிட்டதா சொல்லுவா" என்றார் வைதீகர்.


"நம்ம நாமதேயம்?" - ஸ்வாமிகள் கேட்டார்.


"அடியேன் சீதாராம கனபாடிகள். தகப்பனார் சங்கர ராம கனபாடிகள். தாத்தா ஆத்மநாத ச்ரௌதிகள். இப்போ யாரும் இல்லே. அம்மாவும் ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி போய்ட்டா என்றார் வைதீகர்.



"வேதத்தில் நம்ம என்ன சாகை(பிரிவு)?"

"யாஜூஷம் (யஜூர் வேதம்) ஸ்வாமி"


"கனாந்தம் (வேதத்தில் 'கனம்' முடிய) அத்யயனம் ஆகியிருக்காக்கும்?"


"ஆமாம் குருநாதா"


"நமக்கு என்ன வயசு?"


"நாற்பத்தி நாலாகிறது ஸ்வாமி!"


"சந்ததி...?"


"இருபது வயசுல விவாஹத்துக்கு ஒரு பொண்ணு இருக்கா! ஆனா விவாஹம் பண்ண முடியல..."


"ஏன்"


கையில பணம்-காசு இல்லே குருநாதா. அந்த கஷ்டம் தான் என்ன ரொம்பவே வாட்டறது" என்ற சீதாராம கனபாடிகள் கேவிக் கேவி அழுதார்.


உடனே குருநாதர், "அடடா...நாம எதுக்கும் கவலைப்படவேண்டாம். எல்லாத்தையும் அந்தப் பாண்டுரங்கன் பார்த்துப்பான், என்ன?" என்று ஆறுதல்படுத்தினார்.


பிறகு, " ஆமாம், நம்ம குடும்பத்துக்குன்னு நெலபுலம் எதுவும் கிடையாதோ?..." ஸ்வாமிகள் கேட்டார்.


"எனக்குத் தெரிஞ்சு அப்படியெல்லாம் இருந்ததாத் தெரியல குருநாதா. ஆனா தாத்தா காலத்துல திருக்காட்டுப்பள்ளிலேந்து வண்டி வண்டியா நெல்வந்துண்டிருந்ததுன்னு அம்மா சொல்லுவா" என்றார் சீதாராம கனபாடிகள்.


"நாம் எங்கே வேதாத்யயனம் பண்ணினோம்?"


"காசி க்ஷேத்ரத்தில் ஒரு யஜூர் வேத பாடசாலைல குருநாதா. அப்பவே எனக்கு வைராக்யமா ஒண்ணு தோணித்து. பூரணமா அத்யயனம் பண்ணி முடிஞ்சதும், பூர்வம், அபரம்னு (சுப, அசுப காரியங்கள்) பண்ணிவைக்கப்போகாமல்...நாம கத்துண்ட வேதத்தை நெறய பேருக்கு சொல்லித் தரணும்னு தீர்மானிச்சேன். காசியை விட்டுக் கிளம்பினதும் இந்த வைராக்யம் மாறிடுத்துன்னா என்ன பண்றதுன்னு யோசிச்சு, கங்கையிலேயே....'பூர்வாபரம் பண்ணிவைக்கப் போக மாட்டேன்'னு சத்ய சங்கல்பம்  பண்ணிண்டு ஸ்நானம் பண்ணிட்டேன். ஊருக்கு வந்ததும் இதைக் கேட்டு எல்லோரும் என்னைக் கோவிச்சுண்டா. நான் கவலைப்படலே! ஆர்வத்தோடு வந்த பசங்களுக்கு சொல்லிக் கொடுத்தேன். ஊர் ஊராப் பாராயணத்துக்குப் போவேன். அப்புறமா விவாஹமாகிப் பொண்ணும் போறந்துட்டா. ரொம்ப கஷ்ட ஜீவனம். பல நாள் நீராகாரத்த மட்டும் குடிச்சுட்டு, குடும்பம் பட்டினி கெடந்திருக்கு!


கங்கையில பண்ணிண்ட சத்ய சங்கல்பத்தை மீறிடமால்னு கூட சில நேரங்கள்ல தோணும்! உடனேயே, 'சேச்சே....கங்கைல பண்ணிண்ட சத்ய சங்கல்பம் சாக்ஷாத் பார்வதி பரமேஸ்வராள்கிட்ட பண்ணிண்டதுன்னா....அதை மீறலாமோ?னு மனசை சமானப்படுத்திப்பேன். வைராக்கியமா இத்தனை வருஷம் ஒட்டிட்டேன். இப்போ பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணியாகணும்! எப்படின்னு தெரியலே...."-கண் கலங்கினார் கனபாடிகள்.


ஸ்வாமிகள் நெகிழ்ந்து போனார். சிறிது நேரம் கனபாடிகளையே பார்த்துககொண்டிருந்தர், "கனபாடிகளே! கவலையே வேண்டாம். எல்லாம் நல்லபடியாகவே நடக்கும்" என ஆசீர்வதித்துவிட்டு, அது சரி...தபோவனத்துக்கு போய்ட்டு வரும் படியா யார் சொல்லி அனுப்பினா?" என சிரித்தபடி கேட்டார்.


"தஞ்சாவூர்ல வேங்கடசுப்பையர்னு ஸ்கூல் வாத்தியார் ஒருத்தர் அவர்தான், 'ஞானானந்த தபோவனம் போய் சத்குருநாதனைப் பாருங்கோ... நிச்சயம் வழி பொறக்கும்'னார். குருநாதனே சரணாகதின்னு வந்துட்டேன்...காப்பாத்தணும்?" என்று சாஷ்டாங்கமாகக் ஸ்வாமிகளின் பாதங்களில் விழுந்தார் கனபாடிகள்.


அர்த்த புஷ்டியோடு சிரித்த ஸ்வாமிகள் "நாம இன்னிக்கு தபோவனத்துல தங்கிட்டு, நாளைக்கு ஸ்வாமி உத்தரவு கொடுத்ததும் புறப்படலாம்" என்றார். பிறகு அடியேனிடம், "நமக்கு மெட்ராஸ்ல ஒண்ணும் அவசர ஜோலி இல்லியே! நாமும் நாளைக்குபோகலாம் " என்று கூறி விட்டு எழுந்து உள்ளே சென்றார்.



மறுநாள் காலை 11.00மணி. தியான மண்டபத்துக்குள் பிரவேசித்தார் குருநாதர். அப்போது கூட்டமில்லை. அனுஷ்டானங்களை பூர்த்தி செய்துவிட்டு, சீதாராம கனபாடிகளும் அங்கு வந்துசேர்ந்தார். அனைவரும் குருநாதரை நமஸ்கரித்து எழுந்தோம்.


அந்த நேரத்தில், வாசலில் இரண்டு பெரிய கார்கள் வந்து நின்றன. அவற்றிலிருந்து இறங்கிய நான்கைந்து பேர் உள்ளே வந்து. ஸ்வாமிகளை நமஸ்கரித்தனர். புன்முறுவல் பூத்தார் குருநாதர்.


அவர்களில் ஒருவர், உடன் வந்தவர்களிடம் ஏதோ ஜாடை காட்டினார். அவ்வளவுதான்! ஆறு பெரிய சாக்கு மூட்டைகள் கார்களிலிருந்து இறக்கப்பட்டு, ஸ்வாமிகள் முன் வைக்கப்பட்டன. அவற்றை உற்று நோக்கிய ஸ்வாமிகள் "இதெல்லாம் என்ன?" என்றுகேட்டார்.


வந்தவர்களில் ஒருவர், "அரிசி ஸ்வாமி ...நல்ல கிச்சிடி சம்பா பச்சரிசி!" என்றார்.


"இதெல்லாம் எங்கே வெளஞ்சது? என்று கேட்டார் குருநாதர்.


"என்னோட வயல்லதான் ஸ்வாமி" என்று பெருமிதம் பொங்க கூறினார் அந்த ஆசாமி!


நம்மள இதுக்கு முன்னாடி பார்த்தது இல்லையே! நம்மமோட நாமதேயம்?" -கேட்டார் ஸ்வாமிகள்.  


"கிருஷ்ணமூர்த்தி! ஆச்ரமத்தில் தினமும் அன்னதானம் நடக்கறதுன்னு கேள்விப்பட்டேன். அதுக்கு கைங்கர்யமா இருக்கட்டுமேன்னுதான்..." அவர் முடிப்பதற்குள் ஸ்வாமிகள் இடைமறித்தார்.


"அதிருக்கட்டும்...எல்லா மூட்டையும் ஈர அரிசியா இருக்கும் போலிருக்கே?"


"இல்லையே ஸ்வாமி! நாலு நாள் நன்னா காய வெச்சு சுத்தம் பண்ணி எடுத்து வந்திருக்கேன்" என்று பதட்டத்துடன் கூறினார் கிருஷ்ணமூர்த்தி..இதைக் கேட்டு சிரித்த ஸ்வாமிகள் "அப்படியா! மூட்டைகளை பிரிச்சுதான் பார்ப்போமே" என்று உத்தரவு கொடுத்தார்.


மூட்டைகள் பிரிக்கப்பட்டன. தன் தங்க கையால் ஒரு பிடி அரிசியை அள்ளினார் குருநாதர். அவர் சொன்னபடியே அதில் ஈரம் கசிந்தது. எல்லா மூட்டைகளும் அவ்வாறே இருந்தன!


குருநாதர் மிகவும் சாந்தமாக, "கிருஷ்ணமூர்த்தி! இந்த ஈரக் கசிவை சாதாரண ஜலம்னு நெனச்சுட வேண்டாம். இது வேதம் விட்ட கண்ணீர்" என்றார். பிறகு "நமக்குப் பூர்வீகம் திருக்காட்டுப்பள்ளிதானே?" என்று கேட்டார்.


கிருஷ்ணமூர்த்திக்கு வியப்பு! "ஆமாம் குருநாதா? என்றார் ஆச்சரியத்துடன்.


அவரிடம் கனபாடிகளை சுட்டி காட்டிய ஸ்வாமிகள், "இதோ உட்கார்ந்திருக்காரே சீதாராம கனபாடிகள் ....இவரோட தாத்தாதான் உங்க க்ருஹத்துக்குப் பரம்ரை சாஸ்திரிகளா இருந்திருக்கார். வருஷா வருஷம் பத்து வண்டி நெல், வேத மான்யமா இவா குடும்பத்துக்குப் போயிண்டிருந்தது, உங்க தாத்தா காலத்துல சாஸ்திரத்துக்குப் புறம்பான ஒரு விவாஹம் நடைபெற வேண்டிய நிர்பந்தம் உங்க குடும்பத்துக்கு!  


அதை நடத்திவைக்கும் படி இவரோட தாத்தாவை உங்க தாத்தா கேட்க, அவர் மறுத்துட்டார். 'மான்யத்தை நிறுத்திடுவேன்'னு சொல்லி இருக்கார் உங்க தாத்தா. 'எனக்கு மானம்தான் முக்கியம்; மான்யமில்லே'னு வந்துட்டார் இவரோட தாத்தா! அன்னிலேருந்து  உபாத்யாயம் நின்னுடுத்து; மான்யமும் நின்னுடுத்து! அந்த வேதம் விட்டட கண்ணீர், சூட்சுமமா...இன்னும் அந்த குறிப்பிட்ட வயல்ல விளையிற அரிசியில இருக்குங்கறது இப்ப புரியறதா?" என்றார்.


அனைவரும் பிரமிப்புடன் அமர்ந்திருந்தோம்!

ஸ்வாமிகள் தொடர்ந்து கேட்டார்: "சரி அந்த நெலத்துக்கு ஏதாவது பேர் உண்டா?"


"வேத விருத்தி" என்றார் கிருஷ்ணமூர்த்தி.


உடனே, "இப்ப புரியறதா....அது, வேதத்தை தொழிலா வெச்சிண்டிருக்கறவாளுக்கு மான்யமா விடப்பட்ட நெலம்கிற விஷயம்?!" என்று சிரித்தார் ஸ்வாமிகள்.


கிருஷ்ணமூர்த்தி எழுந்தார். ஸ்வாமிகளை சாஷ்டாங்கமாக நமஸ்கரித்தவர், "குருதேவா..இந்த மான்ய நில விஷயம் சத்தியமா எனக்குதெரியாது. நீங்க என் கண்ணைத் திறந்துட்டேள். பணத்துக்கு கஷ்டம் இல்லை. திருச்சியில் ஜவுளி பிசினஸ் நன்னா நடக்கறது. மான்யமா விட்டுவிட்ட அந்த நிலத்தில் வெளஞ்ச அரிசியை, இதுவரைக்கும் என் பரம்பரை தான் சாப்பிட்டிருக்கு. இதுக்கு பிராயச்சித்தமா இந்த சீதாராம கனபாடிகளுக்கு ஒரு காரியம் பண்ணப்போறேன்" என்றபடியே, தன் கைப்பையைத் திறந்து செக் புத்தகத்தை எடுத்தார். சீதாராம கனபாடிகளின் இன்ஷியலைக் கேட்டுஅதைப் பூர்த்தி செய்து, குருநாதரின் திருவடிகளில் சமர்ப்பித்தார்.


அதை ஏறிட்டுப் பார்க்காமலேயே ஸ்வாமிகள் சொன்னார் "ஒண்ணரை வட்ச ருபாய்".


ஆனந்த கண்ணீர் உகுத்தார் சீதாராம கனபாடிகள்! 


அந்த ஆறு அரிசி மூட்டைகளையும் சீதாராம கனபாடிகள் இல்லத்திலேயே சேர்க்கும்படி கிருஷ்ணமூர்த்தியை பணித்துவிட்டு, அனைவரையும் ஆசீர்வதித்தபடி உள்ளே சென்றார் அந்த 'ப்ரத்யக்ஷ பாண்டுரங்கன்.'


ஸ்ரீ குருப்யோ நமஹ🙏🏻🙏🏻🙏🏻

Friday, December 12, 2025

மாண்பு மிகு வணங்கத் தகு நீதிபதிகள்


face book ல் Lilly Arul Sheela பதிவிலிருந்து


உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த #மெகர்சந்த்மகாஜன் டார்ஜிலிங் சுற்றுலா போனார். அங்கே அவர் கார் ஓட்டிச் சென்றபோது போக்குவரத்து விதியை மீறினார். 

தவறை ஏற்று அபராதம் கட்டுவதாகச் சொன்ன மகாஜன், மறுநாள் மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போய் நின்றார். 

``உங்கள் பெயர் என்ன?'' என்று மாஜிஸ்திரேட் கேட்க... ``மகாஜன்'' என்றார். 


'``என்ன வேலை பார்க்கிறீர்கள்?'' என்று கேட்டபோது, ``சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருக்கிறேன்'' என்று தயங்காமல் சொன்னார். 


உடனே அந்த மாஜிஸ்திரேட் 

``மை லார்டு'' எனப் பதறி எழுந்து மகாஜனை வணங்கினார். 


``உட்காருங்கள். உங்கள் டூட்டியைச் செய்யுங்கள்'' என்றார் மகாஜன். 


``முதல்முறை தவறு செய்கிறவர்களை விடுதலை செய்யும் அதிகாரம் எனக்கு உண்டு. 

அதனால், உங்களை விடுவிக்கிறேன்'' என்றார் அந்த மாஜிஸ்திரேட். 

மகாஜன் வெளியில் வந்தார்!

மெகர் சந்த் மகாஜன்


* சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த #டிசத்தியதேவ் ஒரு நாள்கூட விடுமுறை எடுத்ததே இல்லை. 

அவர் மகனுக்கு வீட்டில் வைத்துத்தான் பதிவுத் திருமணம் நடத்தப்பட்டது. அந்தத் திருமணத்துக்காக வந்த, சக நீதிபதிகள் எல்லாம் அரை நாள் விடுமுறை போட்டுவிட்டு வந்தார்கள். ஆனால், சத்தியதேவ் தன் மகனின் திருமணம் முடிந்த கையோடு கோர்ட்டுக்குக் கிளம்பிப் போனார்.


அவருக்குத் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு வாய்க்கவில்லை. 

தலைமை நீதிபதி 6 வாரத்துக்கு மேல் விடுமுறை எடுத்தால்

 `பொறுப்பு தலைமை நீதிபதி’ நியமிக்கப்படுவது வழக்கம். 

அப்போது தலைமை நீதிபதியாக இருந்த ஆனந்த், பொறுப்பு தலைமை நீதிபதியாக சத்தியதேவ் சில காலம் இருக்க வேண்டும் என்பதற்காகவே 

6 வாரம் விடுமுறை எடுத்தார். 


அந்த அளவுக்கு மதிக்கப்பட்டவர் சத்தியதேவ்!


* #குருபிரசன்னசிங். 

மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர்.

 ``பள்ளி ஆவணத்தில் சொல்லப்பட்ட வயதுக்கும் உண்மையான வயதுக்கும் வித்தியாசம் இருக்கிறது. உண்மையான வயது அடிப்படையில் எனக்கு ரிட்டையர்மென்ட் தேதி வந்துவிட்டது. 

அதனால், ஓய்வு பெறுகிறேன்'' எனச் சொல்லிக் கிளம்பிவிட்டார். 


குரு பிரசன்ன சிங் உண்மையை மறைத்திருந்தால் கூடுதலாக ஒன்றரை ஆண்டு இருந்து, 

பிறகு உச்சநீதிமன்ற நீதிபதியாகி இருப்பார். மனசாட்சிக்குப் பயந்து நேர்மையோடு நடந்துகொண்ட புண்ணியவான்!

* நீதிபதி #கேபிசுப்பிரமணியம் கவுண்டரின் தந்தை கே.எஸ்.பழனிசாமி கவுண்டர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். 

சென்னை சென்ட்ரல் அருகே அவர் ஓட்டி வந்த கார் சிக்னலைத் தாண்டி வந்துவிட்டது. 

அந்தக் காரை மடக்கி அருகில் இருந்த நடமாடும் நீதிமன்றத்தில் பழனிசாமியை நிறுத்தினார்கள். 


இவரைப் பார்த்ததும் மாஜிஸ்திரேட் அரண்டு போனார். ``அபராதம் கட்டத் தேவையில்லை'' என மாஜிஸ்திரேட் சொல்லியும் 

பத்து ரூபாய் அபராதத்தைக் கட்டிவிட்டுத்தான் போனார் நீதிபதி பழனிசாமி.


* மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒரு நீதிபதியின் தியாகம் இது! 


ஒரு வழக்குக்குத் தீர்ப்பு தேதி குறித்துவிட்டார் அந்த நீதிபதி. 

அன்றைய தினம் கோர்ட்டுக்கு வந்த நீதிபதியின் முன் இரு தரப்பு வழக்கறிஞர்களும் தயாராக நின்று கொண்டிருந்தார்கள். `


`என்ன விவரம்?'' என்று அவர் கேட்க... ``இன்று எங்களது வழக்குக்குத் தீர்ப்புச் சொல்வதாகச் சொல்லி இருந்தீர்கள்'' என்று 

வழக்கறிஞர்கள் சொன்னார்கள். 


உடனே கேஸ் கட்டை எடுத்துப் பார்த்தவர். ``இதோ வருகிறேன்'' எனச் சொல்லி அறைக்குப் போனார். தன் மறதிக்கான தண்டனையாக, 

ராஜினாமா கடிதத்தை எழுதித் தந்துவிட்டு வீட்டுக்குப் போய்விட்டார்.


* சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்தவர் #சுப்பிரமணியஐயர். 

அவர் முன்பு வழக்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அந்த வழக்கின் ஆவணங்களை அவரிடம் நீட்டியபோது அதைப் படிக்கச் சிரமப்பட்டார் 

சுப்பிரமணிய ஐயர். 

இன்னொரு கண்ணாடியை மாற்றிப் போட்டுப் படிக்க முயன்றும் முடியவில்லை. 

பெஞ்ச் கிளார்க்கிடம் கொடுத்துப் படிக்கச் சொன்னார். படித்துக் காட்டப்பட்டது. வழக்கறிஞரும் அதைப் படித்தார். 


என்ன நினைத்தாரோ உடனே சேம்பருக்குப் போன சுப்பிரமணிய ஐயர், 

ஆளுநருக்குத் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பிவிட்டு வீட்டுக்குக் கிளம்பிவிட்டார். ஆம். `கண் பார்வை மங்கிய பிறகு பணியில் இருப்பதில் அர்த்தம் இல்லை’ எனப் பதவியை உதறியவர் சுப்பிரமணிய ஐயர்.


- இப்படி தியாக வாழ்க்கை வாழ்ந்த நீதிமான்கள் நிறைய பேர் நீதித்துறையில் நிரம்பியிருக்கிறார்கள். 


அன்றும் இருந்தார்கள். 

இன்றும் இருக்கிறார்கள்.     

ஜனாதிபதிக்கே பதவிப் பிரமாணம் செய்து வைக்க வேண்டிய பதவி... நீதிபதி.


Shasi Sulai அவர்களின் மீள் பதிவு...

Tuesday, June 24, 2025

மொபைல் ஆரம்பகாலம் நினைவுகள்

 Facebook : sathyamoorthy Ramanujam எழுதியது


டெல்லியில் இருந்தபோது, மொபைல் ஃபோன் வந்த புதிது. இந்தியா முழுக்க சர்கிள் - சர்கிள் என பிரித்து, மாநகரத்துக்கு ரெண்டு ஆபரேட்டர், மாநகரம் தாண்டி மாநில மொஃபஸலுக்கு ரெண்டு ஆபரேட்டர் என்று மொபைல் சர்வீஸ் நிறுவனங்கள்.  


டெல்லியில் ஏர்டெல், ஏர்செல் இருந்தன. என் முதல் மொபைல் ஏர்டெல்லிடம் இருந்து. 1994 - 95 என்று நினைக்கிறேன்.  ஆஃபரில் ஃபிலிப்ஸ் கம்பெனி  மொபைல். அன்றைய தேதியில் அதன் விலை ரூ.17000/-


ஒரு நிமிஷத்துக்கு incoming ரூ.8, outgoing ரூ.16.  கால் நிமிடம் பேசினாலும் முழுதாக கணக்கில் எடுத்துக் கொள்வார்கள்.   என் ப்ளானில் 100 நிமிடங்கள் ஃப்ரீ என்று இருந்தது என்று ஞாபகம்.


அந்த மொபைல் ரொம்ப நாள் உழைத்தது.  அப்போது அது ஒரு அரை அடி உயரம் இருக்கும்.  


அந்த சமயத்தில், பட்டன் மொபைல் ஆனாலும் சிறியதாக வைத்திருந்தால்தான் பெரிய ஆள். 


ஷர்ட் பாக்கெட்டில் வைத்தால் அதன் கொம்பு நுனி மட்டும் வெளியே தெரியும்.  என்னோட பாஸ் அதை வைத்திருந்தார்.


எரிக்ஸன் மொபைல். அதன் விளம்பரம் ஒன்று டிவியில் வரும், அதன் சிறுமையின் பெருமையைக் காட்ட என.


ஒரு ரெஸ்டாரன்டில் ஒரு அழகிய பெண் கன்னத்தில் கை வைத்துக் கொண்டு சிரித்து பேசிக் கொண்டிருப்பாள். எதிரே யாரும் இருக்கமாட்டார்.  தூரத்தில் ஒரு நடுத்தர வயது மனிதர் அமர்ந்திருப்பார். அவருக்கு இந்தப் பெண் இவருடன  பேசுவது போல இருக்கும். எழுந்து இந்தப் பெண்ணருகில் ஜொள்ளராக வருவார். சரியாக அந்த சமயத்தில் அந்தப் பெண் கன்னத்தில் இருந்து கையை எடுக்க, அவள் கையடக்கமாக எரிக்ஸன  மொபைல் இருக்கும். 


அந்த ஃபோன் வாங்க வேண்டும் என்று எனக்கு ஆசை. ஆனால் விலை அதிகம் என்பதால் நெருங்க முடியவில்லை.  பின்னர் மோட்டோரோலா, நோகியா என்று புது மாடல்கள் வாங்கியிருக்கிறேன். பெரிய ஃபீச்சரெல்லாம் இருக்காது. அதிக நேரம் பேட்டரி, நிறைய நம்பர் ஸ்டோர் செய்யலாம் என்று இருக்கும்.


படத்தில் இருப்பது அந்த ஃபோன்களில் ஒன்று.


அந்த காலத்துல இது லேட்டஸ்ட் மொபைல்.


கருங்கல் மாதிரி அதோட பேட்டரி. 


பக்கத்துல முழு விசிட்டிங் கார்ட் போல சிம். அந்த வி.கார்ட் சிம் நுழைக்க அந்த மோட்டோரோலா ஃபோன்ல ஸ்லாட் இருந்தது.

 

ஒரு நிமிஷம் பேச ரூ.16 சார்ஜ் என்பதால், ஃபோன் பெருமைக்குதான். மிஸ்ட் காலிலேயே காலம் தள்ளுவோம்.  


ஒத்தனும் ஃபோன் பண்ணமாட்டான். 


அதாலயே, ஒரு முறை சார்ஜ் போட்டால் ஒரு வாரம் வரும். 


இந்த ஃபோன் கால்ல விழுந்தா ஃபோன் ஒடையாது. கால் ஒடையும்.


நான் உபயோகித்து அப்புறம் ரொம்ப நாள் என்னுடைய அப்பா அதை உபயோகித்தார்.  இன்னும் பத்திரமாக பீரோவில் இருக்கிறது.


யாராவது பீரியட் படம் எடுத்தால் நல்ல விலைக்கு விற்கலாம் என்று இருக்கிறேன்.

Saturday, October 26, 2024

அட்ரஸ் அட்ராசிட்டி

 நன்றி: https://www.facebook.com/mahadevanchandrasekaran.c.9?mibextid=ZbWKwL

பல வருசமா மார்கெட்டிங் வேலைல இருந்ததால அட்ரஸ் சொல்றது, கண்டுபிடிக்கறது ரெண்டுமே நல்லாவே வரும். இப்ப கூகிள் மேம் இருக்கறதால எல்லாருக்குமே ஈசியா இருக்கு. ஆனா சில வருசங்களுக்கு முன்னால அந்த மாதிரி இல்ல. 


ஒரு கஸ்டமரை போய் பார்க்கனும். போன் பண்ணுவோம், ஒரு மெயின் ஏரியா வந்துட்டு கூப்பிடுங்கனு சொல்லிருப்பாரு. அதை நம்பிட்டு கிளம்பிடுவோம். அங்க போய்ட்டு கூப்ட்டா, "சார் நீங்க என்ன பண்றிங்க, அங்கிருந்து அப்படியே நேரா வாங்கனு சொல்லுவான்" 


அந்த ரோட்டுல நின்னு சுத்தி பார்த்தா நாலு ரோடு இருக்கும். இதுல ரோடுனு சொல்லவே மாட்டாங்க. 

"சார் நால் ரோடு இருக்கு சார், எந்த ரோட்ல வரனும். "


சார் நீங்க இருக்கற இடத்துக்கு நேர் எதிரான ரோட்ல வாங்க சார்.னு சொல்லுவானே தவிர எந்த ரோடுனு கடைசி வரைக்கும் சொல்ல மாட்டாங்க. 


இன்னும் சிலரு மேக்க போற ரோட்ல வந்தீங்கன்னா, அரை பர்லாங்ல வடக்கு பக்கமா ஒரு மண் ரோடு வரும்ங்க, அதுல நேரா வாங்கனு சொல்லுவாங்க. 


நமக்கு நல்ல நாள்ளேயே திசை தெரியாது. இதுல எங்க போய் கிழக்கும், மேற்கும். 


ஒரு சில சமயம் கஸ்டமர் சொன்ன இடத்துக்கு போய்ருவோம். ஆனா அவன் சொன்ன அடையாளம் எதையுமே கண்டுபிடிக்க முடியாது. மளிகை கடை இருக்கும், போன் பூத் இருக்கும், பேக்கரி இருக்கும், ஆனா அந்த பக்கி இது எதையும் சொல்லாது. "சார் ஒரு பொறிக்கடை இருக்கும் பாருங்க," னு சொல்லுவாங்க. ஆனா அதை மட்டும் நம்மளால கண்டுபிடிக்கவே முடியாது. கடைசில பார்த்தா அது ஒரு ஓரமா சந்துக்குள்ள இருக்கும். நாம போன நேரம் மத்தியான சாப்பாட்டுக்கு கடையை பூட்டிருப்பாங்க. 


"சார் இந்த இடத்துக்கு வந்துட்டு என் பேரை சொல்லுங்க, அவங்களே என் வீட்டுக்கு கூட்டிட்டு வந்து விட்ருவாங்கனு" கெத்தா சொல்லிட்டு போவாரு. சரினு அங்க போய் அந்த கஸ்டமர் பேர் சொன்னா யாருக்கும் தெரியாது. சுத்தி சுத்தி யார்கிட்ட கேட்டாலும் அவங்களுக்குள்ள பேசிப்பாங்களே ஒழிய நமக்கு பதிலே சொல்ல மாட்டாங்க. அப்புறமா ஒருத்தன் வந்து "அட நம்ம குட்டான் தான் இது, அவன் பேரு தான் ஜெகந்நாதன்னு சொல்லிட்டு போவான். அப்புறமா ஊருக்குள்ள நம்ம ஒரிஜினல் பேரு யாருக்கும் தெரியாது சார்னு இளிச்சிட்டே சொல்லுவாங்க. நமக்கு பத்திட்டு வரும். 


ஆனா ஒரு சிலர் கன் மாதிரி வழி சொல்லுவாங்க. "அந்த ஹாஸ்பிட்டல்ல இருந்து ரைட் திரும்புங்க, மூணு ஸ்பீட் பிரேக்கரை தாண்டுங்க, அடுத்து லெப்ட் சைடு ஒரு மளிகை கடை வரும். அதை தாண்டின உடனே பாருங்க ஒரு ரைட் வரும். அதுலேர்ந்து கணக்கு வைங்க, அஞ்சாவது ரைட்டு திரும்புங்க. உள்ள வந்தீங்கன்னா, ரெண்டாவது லெப்ட், மூணாவது வீடு, கருப்பு கலர் கேட் இருக்கும் பாருங்க சார்னு சொல்லுவாங்க." அவங்க வீட்டு முன்னால போய் நிக்கலாம். அவ்வளவு கரெக்டா இருக்கும். 


சில பேர் நாம வழி சொன்னாலும் சரியா வரமாட்டாங்க. ஒரு ஏரியாக்கு வந்துட்டு கூப்பிடுவாங்க. அங்கிருக்கற பெரிய பெரிய லேண்ட்மார்க் சொல்லுவோம், எதுவுமே இல்லைனு சொல்லுவான். கடைசில பார்த்தா நாம சொன்ன இடத்துக்கு வந்துருக்கவே மாட்டாங்க. 


இப்ப கூகிள் ஆண்டவர் துணை இருக்கறதால எல்லா இடத்துக்கும் அவரே வழி காட்டறாரு. 


திரைப்படங்களில் எத்தனையோ அட்ரஸ் கேட்கும் காட்சிகள் வந்தாலும் துள்ளாத மனமும் துள்ளும் படத்தில் இடம்பெற்ற இந்த சீனை மறக்க முடியாது. "கும்ப்டுக்கடா கழித" என்று பாலு சொல்ல, பக்தி சிரத்தையாக மனோகரும் கும்பிடுவார். 


வழி சொல்றது கூட ஒரு கலை தான்.


மீள் பதிவு

Monday, September 25, 2023

கோரஸ் பாடும் பெண் கொடுத்த ஐடியா

 Reproduction from Face book

Thanks to mahalingam lingam


#இளையராஜா

------------------------------

கோரஸ் பாடும் பெண் கொடுத்த ஐடியா


கையில் காசில்லாமல் 8 கிமீ கால்நடையாக நடந்த இளையராஜா


வாழ்க்கையில் உயர்வு என்ற விஷயம் யார் மூலம் எப்போது கிடைக்கும் என்றெல்லாம் நாம் கணிக்க முடியாது. இதற்கு இசைஞானி இளையராஜா வாழக்கையையே உதாரணமாகக் கூறலாம். இன்றைக்கு நாம் அண்ணாந்து பார்க்கக்கூடிய இடத்தில் இருக்கும் இளையராஜாவிற்கு ஆரம்பக்காலத்தில் சரியான பாதையைக் காட்டியவர் கோரஸ் பாடக்கூடிய கமலா என்ற பெண்தான்.


இளையராஜா, அவரது அண்ணன் ஆர்.டி.பாஸ்கர், அவரது தம்பி கங்கை அமரன் மூவரும் சினிமாவில் இசையமைக்க வேண்டும் என்பதற்காக பண்ணைபுரத்தில் இருந்து சென்னைக்கு வந்தனர். சினிமா வாய்ப்பு கிடைப்பதற்கு முன்பு நாடகங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்தனர். அந்த வகையில், ஓ.ஏ.கே. தேவர் தயாரித்த ஒரு நாடகத்திற்கு மூவரும் இசையமைக்கின்றனர். அந்த நாடகத்திற்காக பாட வந்தவர்தான் கமலா. அவர் பாடகி என்பதால் வந்தவுடனேயே இவர்களது இசைத்திறமை மற்றும் இசைக்கருவிகளை கையாளும் விதத்தைப் பார்த்து அசந்துவிட்டார். உடனே, இளையராஜவை அழைத்து ஏதும் படங்களுக்கு இசையமைத்துள்ளீர்களா என்று கேட்கிறார். சினிமாக்கு இசையமைக்க வேண்டும் என்பதற்காகத்தான் ஊரில் இருந்து கிளம்பி வந்தோம், இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்று இளையராஜா கூறுகிறார்.


இந்தக் கமலா எச்.எம்.வி நிறுவனம் உருவாக்கும் தனிப்பாடல்களிலும் பாடுவார். இசை உலகத்தில் அவரது பெயரே எச்.எம்.வி. கமலாதான். கர்நாடக சங்கீதம், மேற்கத்திய இசையெல்லாம் தெரியுமா என்று கமலா இளையராஜாவிடம் கேட்க, அவர் தெரியாது எனக் கூறுகிறார். மேலும், எங்களுக்கு அதைக் கற்றுக்கொள்ள வாய்ப்பு அமையவில்லை. உங்களுக்குத் தெரிந்த ஆட்கள் இருந்தால் சொல்லுங்கள், நாங்கள் கற்றுக்கொள்கிறோம் என்கிறார்.


நிறைய மேடைகளில் தன்ராஜ் மாஸ்டரை தன்னுடைய குரு என்று இளையராஜா கூறுவார். அந்த தன்ராஜ் மாஸ்டரை இளையராஜாவிற்கு பரிந்துரைத்தவர் எச்.எம்.வி. கமலாதான். கமலாவின் பரிந்துரையைத் தொடர்ந்து, தன்ராஜ் மாஸ்டரிடம் சென்று இசை கற்க ஆரம்பித்தார் இளையராஜா. அங்குதான் கர்நாடக இசை, மேற்கத்திய இசையை அவர் கற்றார். சில நாட்களில் கையில் காசில்லை என்றால் வடபழனியில் இருந்து மைலாப்பூருக்கு 8 கிமீ கால்நடையாகவே நடந்து செல்வாராம். அவரிடம் இசை கற்க ஆரம்பித்த கொஞ்ச நாட்களிலேயே மிகப்பெரிய ஜீனியஸிடம் நாம் இசை கற்கிறோம் என்பது இளையராஜாவிற்கு தெரிந்துவிட்டது.


தூக்கத்தில் எழுப்பி கேட்டால்கூட இப்போது இசை நோட்ஸ் கொடுப்பார் இளையராஜா. ஆனால், தன்ராஜ் மாஸ்டரை சந்திக்கும்வரை இளையராஜாவிற்கு இசை நோட்ஸ் எழுதவே தெரியாதாம். ஒருநாள் ஜி.கே.வெங்கடேஷ் என்று ஒரு இசையமைப்பாளர் இசையமைக்கும் படத்திற்கு இசைக்கருவிகள் வாசிக்க தன்ராஜ் மாஸ்டர் செல்கிறார். அப்போது இளையராஜாவையும் உடன் அழைத்துச்செல்கிறார். அன்று பணிகள் முடிந்த பிறகு தன்னுடைய மாணவனை உதவியாளராகச் சேர்த்துக்கொள்ளும்படி பரிந்துரை செய்கிறார். அதன் பிறகு, ஜி.கே.வெங்கடேஷிடன் உதவியாளராக பொன்னுக்கு தங்க மனசு படத்தில் இளையராஜா வேலை செய்கிறார். அதன் பிறகு, அந்தப் படத்தை இயக்கிய தேவராஜ் மோகனின் அடுத்த படமான அன்னக்கிளி மூலமாக இளையராஜா இசையமைப்பாளராக அறிமுகமானார். பஞ்சு அருணாச்சலம்தான் அந்த வாய்ப்பை அவருக்கு வழங்கினார். கமலா மூலமாக தன்ராஜ் மாஸ்டரின் அறிமுகம், அவர் மூலமாக ஜி.கே.வெங்கடேஷின் அறிமுகம், அவர் மூலமாக தேவராஜ் மோகன் அறிமுகம், அவர் மூலமாக பஞ்சு அருணாச்சலம் அறிமுகம், அவர் மூலமாக பட வாய்ப்பு, அதன் மூலம்தான் மாபெரும் இசையமைப்பாளராக இளையராஜா அறிமுகமானார்.


இன்று இசை தேவதை போற்றும் ஞானி

Monday, August 28, 2023

யார் கடவுள் புரிகிறதா.

 யார் கடவுள் ?👇


இன்று வேலைக்காரியும் வரல. சமையற்காரியும் லீவு. எனக்கோ சமைக்க அலுப்பு. ஸ்விக்கில ஆர்டர் பண்ற மூடும் இல்ல.


வெளியே போனால் என்ன ? 


கொஞ்சம் பழைய மாடல். ஸ்கூட்டரை ஸ்டார்ட் பண்ண  உதைத்தேன்‌. சில நாட்கள் எடுக்கல என என் மேல் அதற்கு கோபம் போல... எனது உதை...

பயனற்று போனது...


ஒரு நல்ல டிபன் சாப்பிட 

வேண்டும் என்றால் சிறிது தூரம் நடக்க வேண்டும்... 


சின்னதாக ஒரு உரத்த சிந்தனை.... பிறகு...

ஹோட்டலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்...👨🏼‍🦯


இன்று ஏன் எனக்கு  இப்படியெல்லாம்  நடக்க வேண்டும்?


வீட்டில குடை இருந்தும், இப்போது மழை வராது என்று நானே முடிவு செய்து ஹோட்டலுக்குப் போகலாம் என்று ஏன் தோன்றியது?


இரவு 8  மணிக்கு ...

ஓட்டலுக்கு போனவன், அங்கேயே சாப்பிட்டுவிட்டு வந்திருக்கலாம்.

சாப்பிடும் நேரத்தில் மழை வந்திருந்தால், கொஞ்ச நேரம் அங்கேயே நின்று விட்டு வந்திருக்கலாம். 


அதையும் செய்யாமல் ஏன் பார்சல் கட்டிக்கொண்டு, தண்ணீர் பாட்டிலும் வாங்கிக்கொண்டு உடனே கிளம்ப வேண்டும் .


எல்லாம் ஏன் இன்று இப்படி ஏடா கூடாமாக நடக்கிறது . 


இப்படி வரும் வழியில், கொட்டும் அடை மழையில், ஒதுங்க இடம் கிடைக்காமல் அலைவதற்கா?


கொஞ்ச நேரம் நடந்து, ஓடி தேடியதில் கடைசியாக சின்னதாக பிவிசி சீட் போட்ட பஸ் ஸ்டாப் போல் ஒரு இடம் தென்பட்டது.  


அருகில் சென்றதும் தான் தெரிந்தது....


அது அந்த வீட்டின் மதில் சுவர் அருகில் பதிக்கப் பட்ட கிருஷ்ணர் சிலைக்கு மேல் வைக்கப்பட்ட ஒரு சிறிய தடுப்பு என்று..


4x4 சதுர அடியில் ஒரு சிறு கிருஷ்ணர் சிலை.... அதற்கு ஒரு கம்பிக் கதவு போட்டு பூட்டப்பட்டிருந்தது. 


கிருஷ்ணருக்கு துணையாக அந்த சிறிய தடுப்பில் இப்போது நானும்.... 


இங்கே மழைக்கு ஒதுங்கி நின்ற போது....


என் மனதில் தோன்றியவைகளைத் தான்,

நான் இப்போது உங்களிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். 


உலகையெல்லாம் காக்கும் ரட்சகன் நீ...

உன் சிலையை காப்பாற்றிக் கொள்ள உன்னால் முடியாது என்று நினைத்து மனிதன் போட்டிருக்கும் இந்தக் கம்பிக் கதவை பார்க்கும்போது உனக்கு சிரிப்பு வரவில்லையா? என்று நினைத்துக் கொண்டு அங்கிருக்கும் கிருஷ்ணருடன் மனதில் பேச ஆரம்பித்தேன். 


உனக்குள்ளே இவ்வுலகம்...

ஆனால்...

நீயோ இந்த கம்பி கதவுக்கு உள்ளே... 


*எல்லாவற்றுக்கும் ஒரு காரணம் இருக்கப்பா... 


என்று என் குருஜி சொன்னது என் நினைவுக்கு வந்தாலும் , என் கேள்விகள் மட்டும் நிற்கவில்லை. 


கம்பிக்குள் சிறை  வைக்கப்பட்ட  நீ,யாருக்கு உதவப் போகிறாய்? 


நீயே சரணமென்று வேண்டுபவர்களுக்கு இந்த சிறையைத் தாண்டி எந்த ரூபத்தில் உதவ போகிறாய்? 


சரி...யாரைப் பற்றியோ நான் ஏன் பேச வேண்டும்.


என்னைப் பற்றி பேசுகிறேன்.

இப்படி வந்து சிக்கிக் கொண்டேனே எனக்கு எந்த ரூபத்தில் வந்து உதவப் போகிறாய்?


இந்தக்  கேள்விகள் எல்லாம் என்னுள் எழச் செய்து என்னை விரக்தி அடையச் செய்யும் உன் உள்நோக்கம் தான் என்ன?


என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த நான் ஒரு கணம் ஏதோ ஒரு குரல் கேட்டு திரும்பிப் பார்த்தேன்.


அந்த மதில் சுவரின் மூலையில்....

பழைய துணி மூட்டை போல் ஏதோ கிடக்க அதைச் சற்று உற்றுப் பார்த்தேன். 


அது  துணி மூட்டை அல்ல ஒரு மூதாட்டி.


பூச்சி... புழு... (சில நேரங்களில் பாம்புகள் கூட) என்று வரையறையே இல்லாமல் எல்லா ஊர்வனமும்... சரமாரியாக  வந்து போகும் இடத்தில் ஒரு கிழிந்த அழுக்குத்துணியை மட்டும் சுற்றிக்கொண்டு இங்கு வந்து அடைக்கலம் புகுந்து இருக்கிறாள்.


யாரைப் பெற்ற தாயோ...


ஆதரிக்க ஆளில்லாமல் இங்கே  அடைக்கலம் வந்து இருக்கிறார் ...


அவர் ஏதோ  முனகுவது  போல் இருந்தது.


உற்றுக் கேட்டதில் என்னிடம் தான் பேசிக்கொண்டு இருக்கிறார் என்று தெரிந்தது. 


என்னமா வேணும்?

பணிவுடன் நான். 


ஐயா.. சாப்பிட ஏதாவது இருந்தால் கொடுங்கய்யா


அந்த மூதாட்டியின் முனகலின் அர்த்தம் எனக்கு புரிந்தது. 


அத்தனை கேள்விகள் பொங்கி எழுந்த என் மனதில் இப்பொழுது ஒரே ஒரு கேள்வி மட்டும் தான் மிஞ்சி நின்றது. 


இந்த  மழையில்...

இந்த இரவில் ...

ஒரு இளைஞன் (நான் என்னையே சொல்லிக்கிட்டேன் ) நானே இவ்வளவு  தூரம் நடந்து வந்து சாப்பிட சலித்துக் கொள்ளும்போது... 


இந்த மூதாட்டி என்ன செய்வார்? என்ற ஒரே ஒரு கேள்வி. 


இந்தாங்கம்மா.. தோசை இருக்கு சாப்பிடுங்க.... தண்ணி பாட்டில் கூட இருக்கு...


நடுங்கி ஒடுங்கின அந்த மூதாட்டியின் கையில் ஓட்டலில் வாங்கிய பார்சலை குனிந்து கொடுத்தேன். 


*கிருஷ்ணா  நல்லாருப்பா* 


என்னை ஆசிர்வதிப்பது போல் கையை உயர்த்தி தலையில் கைவைத்து கூறினாள். 


என்னை ஏன் பாட்டி கிருஷ்ணா என்று அழைத்தாள் ...


*அவள் கிருஷ்ணரிடத்தில் உணவை கேட்டிருப்பால் போலும்... ஆதலால் யார் கொடுத்தாலும் கொடுப்பவன் கிருஷ்ணன் தான் என்ற நம்பிக்கை போலும் அவளுக்கு என்று என்னை நானே சமாதானப் படுத்திக்கொண்டேன்..


இப்போது எனக்குள் திடீரென்று ஒரு பொறி தட்டியது...


எனக்கு எந்த ரூபத்தில் வந்து நீ உதவி செய்யப் போகிறாய் என்று  நான் உன்னை கேட்டேன்...


இப்பொழுது புரிகிறது... 


உதவி தேவைப்பட்டது எனக்கல்ல...

அந்த மூதாட்டிக்கு என்று... 


உதவியதும் நான் அல்ல...

 *என் ரூபத்தில் நீ* என்று... 


இப்போது கிருஷ்ணரை பார்க்கிறேன்... 


*இத் தருணத்தில் மூதாட்டிக்கு  நீ தான் நான்....*

*கம்பிக்குள் இருக்கிற நான் .*.


*கம்பிக்கு வெளிய இருக்கிற உன்னை வைத்து பாட்டிக்கு எப்படி உணவை வர வைத்தேன் பார்த்தாயா* என்று அவர் கேட்பது போல் இருந்தது..


*யார் கடவுள் புரிகிறதா...*

🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Tuesday, August 22, 2023

சுந்தர பாஹூ ஸ்தவம் என்கின்ற நூலை இயற்றினார் கூரத்தாழ்வான்

 ஸ்ரீமதே ராமாநுஜாய நம :


அழகரின் அற்புத லீலைகள்.....!!!


கூரத்தாழ்வான் கண்களை இழந்தார். அன்றைக்கு இருந்த அரசியல் நிலையால், இராமானுஜர் சோழதேசத்தில் இருக்க முடியாமல், மேல்நாடு என்று சொல்லப்படும் திரு நாராயணபுரம் சென்றார். கூரத்தாழ்வான் திருவரங்கத்தில் இருக்கப் பிடிக்காமல், திருமாலிருஞ்சோலைக்கு வந்தார். திருக்கோட்டியூரிலிருந்து பல யாதவர்களை அழைத்துக்கொண்டு சென்று நந்தவனம் ஏற்படுத்தி புஷ்ப கைங்கர்யங்களைச் செய்து கொண்டிருந்தார்.

அது ஒரு மார்கழி மாதம். தினசரி திருப்பாவை நடக்கும். ஐந்தாவது பாட்டு ‘‘மாயனை மன்னு வடமதுரை”. எம்பெருமான் ஆயர்குலத்தில் வந்து அவதரித்த சீர்மையும், எளிய ஆயர்குல பிள்ளைகளோடு கலந்து பழகிய எளிமையும், ஆழ்வார் மனதில் படம் போல் ஓடிக்கொண்டிருந்தது. கூரத்தாழ்வான் திரும்பத் திரும்ப “மாயனை, மன்னு வட மதுரை மைந்தனை” என்று சொல்லிக்கொண்டே இருந்தார்.”

 இதென்ன இந்தத் திருப்பாவை, இன்று நம்மை இப்படிப் பாடாய்ப்படுத்துகிறது...ஓ....அதனால்தான் நம்முடைய ஆசாரியன் இராமானுஜர், திருப்பாவையின் சுவையிலேயே மூழ்கியதால், அதையே வாழ்வின் ஒளியாகக் கொண்டதால், அதிலேயே மூழ்கிக் கிடந்ததால், ‘‘திருப்பாவை ஜீயர்” என்று அழைக்கப்பட்டாரோ... உண்மைதான்..திருப்பாவை எப்பேர்ப்பட்ட வரையும் கரைத்துக்  கொண்டு வந்து சேர்த்து விடும். சரி...சற்று கரையேறுவோம் என்று திருவாய்மொழியை நினைத்தார். ஆனால், அவருக்கு நினைவுக்கு வந்த பாசுரம், மற்றொரு பள்ளம்.


பத்துடை அடியவர்க்கு எளியவன்

பிறர்களுக்கு அரிய

வித்தகன் மலர் மகள் விரும்பும் நம்

அரும் பெறல் அடிகள்

மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை ஆப்புண்டு

எத்திறம்! உரலினோடு இணைந்து இருந்து ஏங்கிய எளிவேஇந்தப் பாசுரத்தில் அல்லவா நம்மாழ்வார் 18 மாதம் மோகித்து, மூச்சு பேச்சில்லாமல் கிடந்தார். “வேண்டாம்…வேண்டாம்… இதற்கு திருப்பாவையே பரவாயில்லை. என்று நினைத்துக்கொண்டு, அதே சிந்தனையில் தன் குடிலுக்குத் திரும்பினார். பூக்கூடையை ஒரு ஓரத்தில் வைத்துவிட்டு அப்படியே அமர்ந்தார். மறுபடி மறுபடி ‘‘மாயனை மன்னு வடமதுரை” என்கின்ற பாசுரம் மனதைச் சுற்றிச்சுற்றி வந்து அழுத்தியது. ஏதோ இழந்தது போல நெஞ்சு தவித்தது.


ஏக்கம் பிறந்தது. கண்களில் கண்ணீர் சுரந்தது. இதே சமயம் திருமாலிருஞ்சோலை அழகர் கருவறையில் ஒரு காட்சி. அழகர் ஆனந்தமாக பட்டாடை உடுத்திக் கொண்டு அற்புத தேஜஸ்ஸோடு சேவை தந்து கொண்டிருந்தார். எதிரே அருமையான நிவேதனங்கள். நெய் மணக்கும் அக்கார அடிசில் என்ன... வெண்ணெய் என்ன... மணக்கும் புளியோதரை என்ன... அவருக்கே

உரித்தான தோசை என்ன!

அருமையான ராகத்தில் பட்டர், சகஸ்ரநாம அர்ச்சனை செய்துகொண்டு இருந்தார். இதோ ஆரத்தி நடக்க இருக்கிறது. ஆனால், அழகர் மனதில் ஒரு காட்சி.

அட...இதென்ன இந்த கூரத்தாழ்வான் தன் குடிசையில் உட்கார்ந்து அழுது கொண்டிருக்கிறார். இப்பொழுது தானே நமக்கு மாலை சமர்ப்பித்துவிட்டுச் சென்றார். இப்பொழுது என்ன அழுகை? என்ன வருத்தம் அவருக்கு? அழகருக்கு மனம் கொள்ளவில்லை. என் பக்தன்... என் குழந்தை... என் உயிர்... (மச் சித்தா; மத் கத பிராணா;)


நம்மையே நம்பி வந்த அவருடைய வருத்தத்தை உடனே தீர்க்க வேண்டும் என்று துடித்தார். பூஜையில், அவர் மனம் லயிக்கவில்லை. அயோத்தியில் யாரோ ஒருவர் வீட்டில் துக்கம் நடந்தால், அது தன் வீட்டில் நடந்ததாக ராமன் நினைப்பானாமே. உடனே தீர்க்கத் துடிப்பானாமே. உடனே கூரத்தாழ்வான் வருத்தத்தின் காரணம் அறிய வேண்டும்.அடுத்த நிமிடம் ஒரு முதியவராக வேடம் கொண்டார். கூரத்தாழ்வான் குடில் நோக்கிச் சென்றார்.

யாரோ முதியவர் நம்மைத்தேடி வருகிறார். இத்தனை நாளாக நம்மைத் தேடி யாரும் இங்கு வந்தது இல்லையே... ஓ... அழகர் சேவைக்கு வந்திருப்பார் போலும். சிரமப்பரிகாரம் செய்து கொள்ள இந்த குடிலுக்கு வந்து விட்டார். “சரி... இன்று ஒரு அதிதி வந்துவிட்டார்...கவனிப்போம்” என்று அவருக்கு ஒரு ஆசனத்தை இட்டார். ‘‘வாருங்கள் வாருங்கள்” என வரவேற்றார். முதியவர், சுற்றி வளைக்காமல் கூரத்தாழ்வானைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ‘‘உம்மைப் பார்த்தால் பரம சாது போல் தெரிகிறது. எல்லா சாஸ்திரங் களிலும் கரை கண்டவராக உமது முகம் வித்வத் தேஜஸோடு தெரிகிறது. ஆயினும், இன்றைய தினம் நீர் துக்கப்படக் காரணம் என்ன?” என்று கேட்டதும் கூரத்தாழ்வான் பதில் சொன்னார்.


‘‘அதை தெரிந்து கொண்டு நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? ஏதோ என்னுடைய விசாரம். நான் அழுகிறேன். நீங்கள் வந்ததற்கு அழகரை சேவித்துவிட்டுச் செல்லுங்கள்”.  ‘‘அதென்ன அப்படிச் சொல்லி விட்டீர்? உன்னுடைய அழுகையின் காரணத்தை தெரிந்து கொள்ளாமல் நான் போகமாட்டேன்” ‘‘சுவாமி... உமக்கு வயது அதிகமாகிவிட்டது. இதில் என் கஷ்டத்தை தெரிந்து கொண்டு என்ன செய்யப் போகிறீர்?” ‘‘உன்னுடைய துன்பத்தை நீக்குவதற்கு முயற்சி செய்யப் போகிறேன்”.

கூரத்தாழ்வான் விரக்தியாகச் சிரித்தார்.‘‘பெரியவரே, என் துன்பம் என்னோடு இருக்கட்டும். ஏன் மேலே மேலே பேசிக் கொண்டு போக வேண்டும்? என் துன்பத்தை நீக்குவதற்கு உம்மால் முடியாது?” ‘‘சரி நீர் சொல்ல வேண்டாம்.

உம்முடைய துன்பத்தை யூகிக்கிறேன்”

‘‘என்னுடைய துன்பத்தை யூகிக்க

முடியுமா?”

‘‘ஏன் யூகிக்க முடியாது?”

‘‘சரி சொல்லுங்கள்”.

‘‘இவ்வளவு பேர் இந்த அழகனை சேவித்துக் கொண்டு இருக்கிறார்கள். இவரை சேவிப்பதற்கு கண்ணில்லை என்று நீர் வருந்துகிறீர். அதுதானே?”

‘‘எதைப் பார்க்கக் கூடாதோ அதை பார்க்காமல் இருப்பதற்காகத்தான் இந்த கண் போனது. நான் எப்பொழுதுமே எம்பெருமானை மனதிலே தியானிப்பவன். அதனால் எனக்கு இந்தப் புறக்கண் இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. அது தேவையில்லாத விஷயத்தை எல்லாம் இந்த கர்ம உலகத்தில் பார்க்க வைக்கும். அழகர் என் நெஞ்சிலே இருக்கின்றார். ஆகையினால் எனக்கு புறக்கண் வேண்டிய அவசியமில்லை. அதனால் அதை இழந்ததற்கான வருத்தமும் எனக்கு இல்லை” என்று அதிரடித்தார்  கூரத்தாழ்வான்.


‘‘கண்ணிழந்த வருத்தம் உமக்கு இல்லையா?”

‘‘இல்லை” ‘‘சரி ஒருவேளை உன்னுடைய வருத்தத்திற்கு காரணம் இப்படி இருக்குமா?”

‘‘எப்படி?”

‘‘அரங்கனின் அடிவாரத்தில் கிடந்தவர்கள் நீங்கள். அங்கே அரசாங்க எதிர்ப்புக்கு அஞ்சி இங்கே வந்து இருக்கும்படியாகிவிட்டதே, நாம் எப்பொழுது அரங்கனை சென்று சேவிப்பது என்கின்ற வருத்தமா?” ‘‘அதுவும் இல்லை. என்னுடைய ஆசாரியன் ராமானுஜர் அரங்கனை சேவிக்க முடியாத நிலை இருக்கும் பொழுது, நான்மட்டும் அரங்கனை சேவிப்பதால் எனக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது? ராமானுஜரை அங்கே இருந்து பிரிய அரங்கன் மனம் ஒப்பி விட்டான்.

என்னுடைய ஆசாரியனை பிரித்த அரங்கனை நான் சேவிப்பதை விட சேவிக்காமல் இருப்பது தான் நல்லது. அதனால், அரங்கனை சேவிக்காத வருத்தம் எனக்கு கொஞ்சமும் இல்லை” இதனை கேட்ட பெரியவருக்கு கோபம் வந்துவிட்டது.‘‘இதோபார். உனக்கு உதவி செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் நான் வந்தேன். என்னால் உன்னுடைய வருத்தத்தைத் தீர்க்க முடியும்? எந்த வருத்தமாக இருந்தாலும் என்னால் போக்க முடியும்.”மீண்டும் கூரத்தாழ்வான் சிரித்து விட்டார்.

‘‘உம்மால் போக்க முடியாது என்று சத்தியம் செய்கின்றேன். பிறகு “என்னால் வருத்தத்தைத் தீர்க்க முடியும்” என்று திரும்பத் திரும்ப சொல்வதில் என்ன பொருள் இருக்கிறது? நீங்கள் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான். ‘‘நான் யார் தெரியுமா? நான் யார் என்று தெரிந்தால், நீ போகச் சொல்ல மாட்டாய். நான் யார் என்று தெரிந்து விட்டால், என்னால் உன்னுடைய துன்பத்தைப் போக்க முடியும் என்பதையும் தெரிந்து கொண்டு நீ பதில் சொல்வாய்” என மிகுந்த கோபம் வந்தது அந்த பெரியவருக்கு. ‘‘சுவாமி...நீர் யாராக இருந்தாலும் சரி, உம்மால் என்னுடைய துன்பத்தை போக்க முடியாது. அதற்கான வாய்ப்பே இல்லை. நீர் போகலாம்” என்றார் கூரத்தாழ்வான் ‘‘என்னை யார் என்று தெரிந்து கொண்டு போகச் சொல்கிறாயா?”


‘ஆம்...தெரிந்துகொண்டுதான் போகச் சொல்லுகிறேன்”.

‘‘ நான் யார் என்று சொல். என்னுடைய பெயரைச் சொல்.”

‘‘நீர்தான் அந்த திருமாலிருஞ்சோலை அழகன். சுந்தர பாஹூ. சுந்தரத் தோளுடையான்” என்று கம்பீரமாக கூரத்தாழ்வான் சொன்னார். ‘‘எம்மை எப்படி தெரிந்து கொண்டீர்?”‘‘நாற்றத் துழாய் முடி நாரயணனை” தெரிந்து கொள்ளவா முடியாது? காலையில், திருப்பாவை ஐந்தாம் பாசுரம். அடியேன் திருமாலையைச் சமர்ப்பித்துவிட்டு நின்ற பொழுது, தேவரீர் சூடிய மாலையின் மணம் அறிந்து கொண்டேன். அதே மணம் தான் இப்பொழுதும் இங்கே இருக்கிறது. அப்படியானால், வந்தது யார் என்று தெரிந்து கொள்வதில் என்ன சிக்கல் இருக்க முடியும்?” என பொன்சிரிப்போடு கூரத்தாழ்வான் சொன்னார்.

‘‘சரி, நான் யார் என்பதை தெரிந்து கொண்டு விட்டாய் அல்லவா. நான் சர்வசக்தன் அல்லவா! இப்பொழுது சொல், உனக்கு என்ன குறை? ஏன் அழ வேண்டும்? என்ன வருத்தம்?”


‘‘திருமாலிருஞ் சோலைப் பெருமானே! இந்த அடியவனைத் தேடி தேவரீர் வந்தது குறித்து மகிழ்ச்சி. அது போதும். என்னுடைய வருத்தம் குறித்து தேவரீர்

கவலைப்பட வேண்டாம்.”

‘‘ இல்லை, சொல்.”

‘‘வருத்தத்தை நீக்க உம்மால் முடியாது. நீர் தேவாதிதேவனாக இருந்தாலும்...”

‘‘என்ன இந்த ஒரு விஷயத்தை செய்ய நமக்கு சக்தி இல்லையா?”

‘‘ஆம்”.

‘‘ காரணம்?”

‘‘நீர்தான் காரணம். நீர் கொடுத்த வாக்கு தான் காரணம்.”

‘‘முதலில் உன்னுடைய துயரத்தைச் சொல்”.

‘‘விட மாட்டீர் போலிருக்கிறதே. சரி சொல்கிறேன். நீர் ஆயர்குலத்து அணி விளக்காகத் தோன்றினீர் அல்லவா”.

‘‘ஆமாம் கண்ணனாக தோன்றினோம்”.

‘‘அப்பொழுது உம்மோடு எத்தனை எத்தனை ஆயர்குல பிள்ளைகள்

விளையாடினார்கள்?”

‘‘ஆமாம்…

 “தன்னேராயிரம் பிள்ளைகளோடு

தளர் நடை இட்டு... 

அன்னே உன்னை அறிந்து கொண்டேன்

என்று  பெரியாழ்வார் தான் இதையெல்லாம் பிள்ளைத் தமிழாகப் பாடியிருக்கிறாரே”.


‘‘அதைக் கேட்கும் பொழுதுதான் அடியேனுக்கு அந்த ஏக்கம் வந்தது. தாங்கள் அவதரித்த போது, ஒரு பிறவி வாய்க்கப் பெற வில்லையே என்கிற வருத்தம் தான் அடியேனை துன்புறுத்துகிறது. அப்படி பிறந்திருந்தால், ஆழ்வார் சொன்னதையெல்லாம் நேரில் அனுபவித்திருக்கலாமே என்கிற ஏக்கம் தான் காரணம்”.‘‘இவ்வளவுதானே, உன்னுடைய ஏக்கத்தை நிறைவேற்றி வைப்போம். உனக்கு வேண்டியது ஆயர்குல பிறவி. கொடுத்து மகிழ்விப்போம்.” என்று மகிழ்ச்சியோடு அழகர் சொன்னார். ‘‘தேவரீரால் முடியாது” என்று பலத்த சிரிப்புடன் கூரத்தாழ்வான் சொன்னார்.

‘‘ஏன் முடியாது? நான் சர்வ சக்தன்”.

‘‘அதனால்தான் சொல்லுகின்றேன். அடியேன் ராமானுஜர் சீடன். ராமானுஜருக்கு யாரெல்லாம் சீடர்களோ அவர்களுக்கு மறு ஜென்மம் கிடையாது என்று நீர் தானே வாக்கு தந்தீர். “புனர் ஜென்ம ந வித்யதே ந

ச புனர் ஆவர்த்ததே ந

சபுனர் ஆவர்த்ததே” என்பது தானே உண்மை. சத்தியம். உம்மாலும் மீற முடியாத சத்தியம். பிறவி இல்லாத ஒருவரை எப்படி மறுபடியும் பிறக்க வைப்பீர்? எனவே ராமானுஜர் அடியாராய் ஆனபிறகு நான் நினைத்தாலும் பிறக்க முடியாது. நீர் நினைத்தாலும் பிறக்க வைக்க முடியாது. அப்படி இருக்கும் பொழுது, ஒரு பிறவி எடுத்து, ஆயர் குலத்தில் பிறக்க வேண்டும் என்கின்ற அடியேன் எண்ணத்தை, ஆசையை, எப்படி உம்மால் நிறைவேற்ற முடியும்?” என கூரத்தாழ்வான் சொன்னதும், அழகர் வாய் பேச முடியாமல் மௌனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார்.


“அதனால்தான் சொன்னேன். அந்த எம்பெருமான் ஆனாலும் அடியேன் துக்கத்தைப் போக்க முடியாது.

நாமே தான் கொஞ்சம் கொஞ்சமாக ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டும்” என்று கூரத்தாழ்வான் சொன்னதும், அழகரின் முகத்தைப் பார்க்க வேண்டுமே.‘‘ஆழ்வான்.. உம்மிடம் நாம் தோற்றோம். நீர் சொன்ன வார்த்தை சத்திய வார்த்தை” என்று சொல்லி  விட்டு அழகர் அங்கிருந்து தன்னுடைய ஆஸ்தானத்துக்கு சென்றார். இந்த அழகரின் அழகின் மீது தான் 132 பாடல்களால் சுந்தர பாஹூ ஸ்தவம் என்கின்ற நூலை இயற்றினார் கூரத்தாழ்வான். இப்படி எண்ணற்ற திருவிளையாடல்களை திருமாலிருஞ்சோலை சுந்தரராஜன் நடத்தி இருக்கின்றான். நம்முடைய மனமும் அவரிடத்தில் ஈடுபட்டால் நம்மையும் அவன் ஆட் கொள்வான்.


ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்

Friday, March 31, 2023

சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்

 நன்றி: வாட்சப்


ஒரு ராஜா ஒரு கோவிலில் தன் குழந்தையின் பிறந்த நாளை முன்னிட்டு அன்னதானம் செய்துகொண்டிருந்தான். அப்போது ஒரு பரம ஏழை வந்து வரிசையில் நின்றான். 🍂🛐🍂 


அவனை பார்த்த மற்றவர்கள் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றான். 

நேரம் போய்க்கொண்டே இருந்தது. 

இவன் தள்ளி நின்றதால் இவனுக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றார்கள். 


இவன் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் கூட நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்?  எவ்வளவு இழிசொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தோமோ? இப்படி தவிக்கிறோமே? என்று தன் விதியை நொந்துகொண்டான். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல 'அப்பனே ஆண்டவா...என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்' என்று கோபுரத்தை பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொல்லி, கோவில் அருகே உள்ள குளத்தங்கரையில்  சோர்வாக அமர்ந்தான்.


ராஜா அன்னதானம் கொடுத்து முடித்து, அந்த படித்துறையில் காலாற நடந்து வந்தார். "என்னப்பா...சாப்பிட்டாயா?" என்று ஒரு பத்தடி தூரத்திலிருந்து குளத்தில் தன் முகத்ததை பார்த்துக் கொண்டிருந்த அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது ராஜா என்று தெரியாமல் "ஊரே சாப்பிட்டது..என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா" என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரை பார்த்தபடியே பதில் சொன்னான் அந்த ஏழை.


அவன் சொன்ன பதில் ராஜாவின் மனதை உருக்கியது. என் முதல் குழந்தை பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே அன்னதானம் ஏற்பாடு செய்தோம்? 

ஒரு அப்பாவி ஏழை இப்படி விடு பட்டுள்ளானே என்று அவன் அருகில் சென்று அவன் தோளில் கை வைத்து 'மன்னித்துவிடப்பா... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?" என்று கேட்க.


குளத்து நீரில் தலையில் கிரீடம், காதில் குண்டலம், நெற்றியில் திருநீர், முகத்தில் வாஞ்சை என்று ராஜா தெரிய திடுக்கிட்டு எழுந்தான். 'ராஜா...


நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்...🗣 


மன்னிக்க வேண்டுகிறேன்' என்று பதறினான். இவனின் பண்பை பார்த்த ராஜா சத்தமாக சிரித்தார். 'வா...


இன்று நீ என்னோடும் குழந்தை ராணியோடும் விருந்து உண்ணப்போகிறாய்' என்று அவனை பேசவிடாமல் எழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார். 'போய் குளித்துவிட்டு வா' என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவனுக்கு கொடுத்தார். 


குளித்து, புத்தாடை அணிந்தது வந்தான். அறுசுவை விருந்து கொடுத்தார். சாப்பிட்டு முடித்து அவன் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளை கொடுத்த்தார் 'இன்றிலிருந்து நீ ஏழை இல்லை...


இந்த பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்" என்று வாழ்த்தினார்.


அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாக கண்ணீர் கொட்டியது. 'ஏனப்பா அழுகிறாய்?' என்று ராஜா கேட்க. "நான் இதுநாள் வரை  பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் ராஜா...இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்" என்று சொன்னான். ராஜா ஏன் அப்படிச் சொல்கிறாய் என்று கேட்க,


 "வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தை பார்த்து என்னை  ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று ஆண்டவனிடம் கேட்டேன்...கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டான்...


 *கடவுளிடம் கேட்டால் நாம் கேட்டதைவிட இன்னும் பல மடங்கு தருவான்* என்று இன்றுவரை புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்" என்று சொல்லி அழுதான்....🗣 


 *நமக்கு ஒன்று கிடைக்கவில்லை என்றால் சராசரியைவிட மிகச் சிறந்த ஒன்றை நமக்காக கடவுள் தரப்போகிறார் என்று நம்புங்கள்......*

சனி நினைத்தால் எவராலும் தடுக்க இயலாது

 Thanks to what's app. எழுத்து நடையும்  கதாபாத்திரங்களும் ஒரு ஆட்சேபனை  இருந்தாலும் கருத்து முக்கியம். மேலே படியுங்கள்


ஒருதடவை பார்வதி W/o சிவபெருமான்  அழகா  ஒரு மாளிகை  கட்டினாங்க.... அதோட கிரஹபிரவேசத்துக்கு ஒரு ஜோசியர்கிட்ட  நாள் குறிக்க சொன்னாங்க... அந்த மாளிகை கட்ட  கடக்கால் போட்ட நாளை  ஆராய்ஞ்ச அந்த ஜோசியர் சொன்னார்..." நீங்க  இந்த மாளிகைய கட்ட கடைக்கால் போட்ட  நேரம் சனி உச்சத்துல  இருந்த நேரம்.. அதனால  நீங்க என்னதான் அக்னி கம்பியும், அல்ட்ராடெக் சிமெண்டும் போட்டு கட்டி இருந்தாலும்  இந்த  மாளிகை நிலைக்காது... அதனால  நீங்களே  இடிச்சுடுங்க"


இத கேட்ட பார்வதி  செம்ம கடுப்ப்பாயிட்டாங்க.... லோகத்துக்கே பெரிய சாமியோட  பொண்டாட்டி நான்.... பிசாத்து சனி  என்னோட மாளிகைய  இடிக்கிறதா.... நெவெர்... அப்படின்னு  பொங்கல் வச்சாங்க....  


புருஷன  கூப்பிட்டு.... "யோவ்..... நீ  இப்போவே  அந்த சனிய பார்த்து..... இன்னமாதிரி  எம்பொண்டாட்டி  ஒரு  பங்களா  கட்டி இருக்கா.... அதுல  நீ என்னவோ வேலை காட்ட  போறியாம்... அதெல்லாம்  வேண்டாம்"ன்னு  சொல்லிட்டு  வா" ன்னாங்க..


உடனே  சிவன் சொன்னார்...  புரிஞ்சுக்கோ  பாரு..... நான் பெரிய சாமியா  இருந்தாலும்... மத்தவங்க வேலைல குறுக்கிட்றது இல்ல.... தவிர... சனி  எப்போவுமே  பெர்பெக்ட்....  நானே சொன்னா  கூட  அவன்  மாத்தமாட்டான் ன்னு  சொன்னார்...


புருஷன் சொன்னத   எந்த பொண்டாட்டிதான் கேட்டிருக்கா.... நம்ம சிவன் பொண்டாட்டி மட்டும் கேட்க??


சோ.....  சிவன  பட்னி போட்டுட்டா.... வேற வழி இல்லாம  சனிய பார்க்கலாம்னு  கிளம்பிட்டார்... ஆனா, போறதுக்கு  முன்னாடி  பாருவ  கூப்பிட்டு..... "இதோ  பார்  பாரு....  உடனே  நீ ஒரு  பொக்லைன்  ரெடி பண்ணி  வை......நான் போய் சனிகிட்ட பேசி  பார்க்கிறேன்.... அவன் ஒத்துகிட்டா  ஒன்னும் பிரச்சினை  இல்ல... இன்கேஸ்  அவன் ஒத்துக்கலன்னா.... நான்  அங்க  இருந்து  என்னோட  உடுக்கைய  அடிக்கிறேன்.....   நீ உடனே  பொக்லைன்  வச்சு  மாளிகைய  இடிச்சுடு.... யாரும்  கேட்டா  , எனக்கு டிசைன் புடிக்கல.... வேற  கட்ட போறேன்னு  கெத்தா  சொல்லிடு..."ன்னு சொன்னார்...


சரின்னு  பார்வதியும் ஒத்துகிட்டாங்க....


சிவன் சனிகிட்ட  போய் " உன்கிட்ட  கேக்க  ஒரு  மாதிரியாத்தான்  இருக்கு.... ஆனா  வேற  வழி  இல்ல....... இந்த பார்வதி  பெரிய  பிரச்சினை பண்றா... நாலுநாளா   உலை கூட  வைக்கல.....  உன்னால  அந்த  பில்டிங்க்கு  ஏதும் பிரச்சினை வராம  பார்த்துக்க...." என்றார்...


உடனே  சனி...."அய்யனே... இதுக்கு  நீங்க  நேர்ல  வரணுமா... ஒரு போன் பண்ணி  இருக்கலாமே..."ன்னு சொல்லிட்டு.....  "நீங்களே  சொன்னப்புறம்  நான் எப்படிய்யா  மறுக்க  முடியும்....  சரி.... நான் ஒன்னும்  பண்ணல.... ஆனா  எனக்கொரு  ஆசை.... அத  நீங்கதான்  நிறைவேத்தனும்.."ன்னு கேட்டார்...


சனி  ஒத்துகிட்ட  சந்தோஷத்துல  சிவனும்..."சொல்லு.. சொல்லு.... நம்ம  புள்ள  நீ.... உனக்கு  செய்யாம  வேற  யாருக்கு  செய்ய போறேன்" ன்னு வாக்கு கொடுத்துட்டார்...


"உங்க  உக்கிர தாண்டவத்த  பார்த்து  ரொம்ப  காலமாச்சு.... எனக்காக  ஒருதடவை  ஆடிக்காட்ட  முடியுமா "- சனி


"அதுக்கென்ன.... பேஷா  ஆடிடலாம்" ன்னு  சிவன்  ஆட  ஆரம்பிச்சார்.... சிவன்  ஆட  ஆட... உடுக்கை  தன்னால  குலுங்கியது.....  உடுக்கை சத்தம் கேட்டதும்... பார்வதி... "ஆஹா.... இந்த  சனிப்பய  ஒத்துக்கல  போல..... எங்கயாச்சும்  சிக்காமையா  போய்டுவான்....  அப்போ  இருக்கு  அவனுக்கு..." என்று  கருவிக்கொண்டே, பொக்லைன் டிரைவர  கூப்பிட்டு  நீ உடனே  அந்த  பில்டிங்க  உடைச்சுடு...ன்னு  ஆர்டர்  போட்டாங்க...


சிவன்  திரும்பி வந்து  பார்த்தா... பில்டிங்  தரைமட்டமா  கெடக்கு..... "ஏன்  பாரு  ... நான் சொன்னதும் தான்  சனி  ஒத்துகிட்டானே.... பின்ன  ஏன்  இடிச்ச...."


"நீங்கதானே  சொன்னீங்க... உடுக்கை சத்தம் கேட்டா  இடிக்க சொல்லி.."ன்னா  பாரு...


ஆக... சனி  நினைச்சுட்டா  யார் தடுத்தாலும்  அவன் நினைச்சத  சாதிச்சுடுவான்...

.....

Wednesday, December 7, 2022

ஒரு ரூபாய்க்கு இறைவன்

Thanks to WhatsApp 

 எட்டு வயது சிறுவன் கடைவீதியில் உள்ள கடைக்காரரிடம் ஒரு ரூபாய் நாணயத்தை காட்டி உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு கிடைப்பாரா என்று கேட்டான் சிறுவனின் கையில் இருந்த நாணயத்தை தட்டிவிட்ட கடைக்காரர் சிறுவனை அங்கிருந்து துரத்திவிட்டார் சிறுவனும் அந்த நாணயத்தை எடுத்துக் கொண்டு ஒவ்வொரு கடையாக சென்று ஒரு ரூபாய்க்கு இறைவனை வேண்டுமென்று கேட்டுள்ளான் பல கடைக்காரர்கள் அவனை விரட்டி விட்டாலும் மனம் தளராத சிறுவன் அங்கிருந்த ஒரு பெரிய கடைக்கு சென்று  கடை உரிமையாளரிடம் உங்கள் கடையில் இறைவன் இருந்தால் ஒரு ரூபாய்க்கு வேண்டுமென்று கேட்டு உள்ளான் அதற்கு கடைக்காரர் ஒரு ரூபாய்க்கு இறைவனை வாங்கிவிட்டு அந்த இறைவனை வைத்து என்ன செய்யப் போகிறாய் என்று கேட்டுள்ளார் அதற்கு சிறுவன் எனக்கு எல்லாமே என் தாய் தான் சாப்பாடு ஊட்டுவது முதல் தாலாட்டு பாடி என்னை தூங்க வைப்பது வரை என் தாய் தான் தற்போது அவர் உடல் நலம் இல்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மருத்துவர்கள் உன் தாயை இறைவன் தான் காப்பாற்றுவார் என்று கூறி விட்டனர் அதனால்தான் என்னிடம் உள்ள ஒரு ரூபாய்க்கு இறைவன் கிடைப்பாரா என்று தேடிக் கொண்டிருக்கிறேன் என்று கூறினான் அதற்கு அந்த கடைக்காரர் உனக்கு ஒரு ரூபாய்க்கு இறைவனைத் தானே வேண்டும் நான் தருகிறேன் என்று கூறி அவனை உள்ளே அழைத்து அவனிடம் ஒரு சிறிய பாத்திரத்தில் சுத்தமான தண்ணீர் கொடுத்தார் இதைக் கொண்டு போய் உன் தாயிடம் குடிப்பதற்கு கொடு உன் தாய் குணமாவார் என்று கூறி அனுப்பி வைத்தார் மறுநாள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாயை சிறப்பு மருத்துவர்கள் வந்து அறுவை சிகிச்சை செய்தனர் சிறுவனின் தாய்க்கு உயர்தர சிகிச்சைகள் அளிக்கப்பட்டது தாயும் உயிர் பிழைத்தார் அவரிடம் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் சிகிச்சைக்காகன பில் காட்டினார்கள் தனக்கு சிகிச்சை செய்த செலவுத் தொகையை கண்ட அந்த ஏழைத்தாய்  அதிர்ந்து போனார் ஆனால் மருத்துவர்கள் அந்த ஏழை தாயிடம் கவலை படாதீர்கள் உங்கள் சிகிச்சைக்கான அனைத்து தொகையும் ஒருவர் மருத்துவமனையில் செலுத்தி விட்டார் அவரே உங்களிடம் கொடுக்க சொல்லி ஒரு கடிதத்தையும் கொடுத்துள்ளார் என்று கூறி அந்த கடிதத்தை தாயிடம் கொடுத்தனர் அதை வாங்கி படித்தார் தாய் அதில் நீங்கள் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு அல்ல நான் ஒரு நிமித்தம் (கருவி) மட்டுமே


ஆனால் ஒரு ரூபாய்க்கு இறைவன் வேண்டுமென்று கடை வீதியில் நம்பிக்கையோடு அலைந்த உங்கள் அப்பாவி மகனுக்கு தான் நன்றி கூற வேண்டும் என்று கூறியிருந்தார்.


மனதில் நம்பிக்கை இருந்தால் ஒரு ரூபாய்க்கு கூட இறைவன் கிடைப்பார்...

Wednesday, November 16, 2022

சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்

 Received from a friend


ஒரு பய..அவனுக்கு ஒரு பயங்கரமான பிரச்சினைங்க. நெட் ல தேடிப்பிடிச்சு ஒரு நல்ல சைக்கிரியாட்ரிஸ்ட் கிட்டே போனான். சொன்னான்.


டாக்டர் ஐயா, எனக்கு டெய்லி நைட் படுக்கறப்ப, கட்டிலுக்குக் கீழே ஒரு ஆள் படுத்திருக்கிற மாதிரி தோணும். எட்டிப் பார்த்தா அப்படி யாரும் இல்லே. பயத்துல தூங்கவே முடியறதில்லே..


டாக்டரு சொன்னாரு..


தம்பி, சரி பண்ணிடலாம். வாரம் ஒரு தபா வீதம் அஞ்சு செஷன்ஸு என்கிட்டே வாங்க.  சரி பண்ணிடலாம்!


ரொம்பத் தேங்ஸ் டாக்டர். எவ்வளவு பீஸு?


ஓரு செஷன்க்கு 2000₹ தான். தம்பி, நான் ஒரிஜினலா கோயம்பத்தூர் பக்கம்தான். மாமியார் ஊருதான் திருச்சி.  நீ வேற மதுரை உன் ஊருன்னு சொல்றே. எனக்கு மதுர ரொம்பப் புடிக்கும். அதனாலதான் 2000₹  சொல்றேன். இல்லாட்டி வழக்கமா 2500₹ .


ஓ அப்டீங்களா? சரிங்க டாக்டர் ஐயா. வர்றேன்.


ஆனா பாருங்க.. அப்புறம் அவன் வரவே இல்லே.


ஒரு ரெண்டு மாசம் கழிச்சு ஒரு ப்ளாட்பாரக் கடையில ப்ரஞ்சு ப்ரைஸ், காப்பி சாப்பிடப் போனப்ப டாக்டரு அவனைப் பாக்கறாரு.


அடடே என்னா தம்பி, அப்புறம் வரவே இல்லே?


அதுவா டாக்டர் ஐயா. அந்தப் பிராப்ளம் சரியாயிடுச்சு.


ஓ! எப்புடீ?


நம்ம திருநெல்வேலி அண்ணாச்சி ஒருத்தரு ஒரு ஐடியா சொன்னாரு. பிரச்சினை போயிடுச்சு. பணமும் லாபம்.


டாக்டருக்கு தலை லேசா சுத்துற மாதிரி இருந்துச்சு.


என்னா தம்பி சொல்றீங்க? வெவரமா சொல்லுங்க!


அது ஒண்ணுமில்லீங்க.  அண்ணாச்சி கிட்டே அந்தப் பிராப்ளம் பத்தி சொன்னேன். அவரு சொன்னாரு, கட்டிலை வித்துடு. ஒரு பாய் வாங்கி தரைலே விரிச்சுப் படுத்துக்க ன்னாரு.  அப்புடியே கட்டிலை 2000 ₹க்கு வித்துட்டு 200₹க்கு பாய் வாங்கிட்டேன்.  இப்ப பாய்லதான் படுக்கிறேன். அந்த பயமெல்லாம் வர்றதில்லே..


😄


*சிம்பிளா யோசிச்சா தான் பல பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும்.*

Thursday, October 27, 2022

நாலாயிர திவ்யப்பிரபந்தம்* *தொகுக்கப்பட்ட வரலாறு

Thanks 🙏 to WhatsApp 😊 forwarded by Sridhar from Sriramgam

நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட (மீட்டுருவாக்கப்பட்ட) வரலாறு


திருமங்கையாழ்வார்   காலத்திற்குப்பின் பல காரணங்களால் ஆழ்வார்கள் பாசுரங்களை பாராயணம் செய்வதை மக்கள் கைவிட்டு விட்டார்கள். இவ்வுலகில் 4000 ஆண்டுகள்    ஆழ்வார்கள்  பாசுரங்கள்  வழக்கொழிந்துபோயின. 

 

4000 ஆண்டுகளுக்குப்பிறகு சிதம்பரத்திற்கு அருகிலுள்ள காட்டுமன்னார்கோயில் என்றழைக்கப்படும் காட்டுமன்னார்குடியில் நாதமுனிகள் என்னும் வைணவர் அவதரித்தார்.


அவர் அப்பதியின் ராஜகோபாலன் மீது ஆழ்ந்த பக்திகொண்டு அப்பெருமானுக்கான கோயில் கைங்கர்யங்களை மிகுந்த ஈடுபாட்டுடன் செய்துவந்தார். 


  அவர் ஓர்நாள் திருக்குடந்தை என்னும் கும்பகோணம் சாரங்கபாணிப் பெருமாள் கோயிலுக்குச்சென்று மூலவர் ஆராவமுதப்பெருமாளை சேவித்துக்கொண்டிருந்தார்.


அப்போது தென் தமிழ்நாட்டிலிருந்து யாத்திரை வந்திருந்த சில வைணவர்கள் 


*ஆராவமுதே ! அடியேன் உடலம் நின்பால் அன்பாயே*


*நீராயலைந்து கரைய உருக்குகின்ற நெடுமாலே*


*சீரார்செந்நெல் கவரிவீசும் செழுநீர்த் திருக்குடந்தை*


*ஏரார்கோலம் திகழக்கிடந்தாய் கண்டேன் எம்மானே.*


எனத்துவங்கி நம்மாழ்வார் திருக்குடந்தை ஆராவமுதன் மீது அருளிச்செய்த  பாசுரங்கள் பதினொன்றையும் இனிய இசையில்பாடி வழிபட்டுக்கொண்டிருந்தார்கள்.


அவ்வடியார்கள் பாடிய

*உழலை என்பின் பேய்ச்சி முலையூடு அவளை உயிர் உண்டான்*


*கழல்கள் அவையேச் சரணாக்கொண்ட குருகூர்ச் சடகோபன்*


*குழலின் மலியச்சொன்ன ஓராயிரத்துள் இப்பத்தும்*


*மழலை தீரவல்லார் காமர்மானேய் நோக்கியர்க்கே.*


 என்னும் 11 ஆம் பாசுரம் நாதமுனிகளின் கவனத்தை ஈர்த்தது.   


அவர் அவ்வடியார்களிடத்தில்

*ஓராயிரத்துள் இப்பத்தும்* என்றால் "இதுபோன்ற இனிய பாசுரங்கள் ஆயிரம் உள்ளனவோ ? அவற்றை நீவிர் அறிவீரோ ?" என வினவினார்.


அதற்கு அவ்வடியார்கள்

 "சுவாமி !

இப்பதினோறு பாசுரங்களே யாம் அறிவோம்." இவை நம்மாழ்வார் அருளிய பாசுரங்கள்.  நாங்கள் நம்மாழ்வாரின் சீடரான மதுரகவியாழ்வாரின் மரபில் வந்தவர்கள். எங்கள் பரம்பரையில் இப்பதினோறு பாசுரங்கள்

மட்டுமே செவிவழியாக  போதிக்கப்பட்டுவருகின்றன. இதனை எங்களுக்குக் கற்பித்த பராங்குசதாசர் என்பவர் தற்போது திருக்குருகூர் என்னும் ஆழ்வார் திருநகரியில் வாழ்ந்துவருகிறார். அவரை தாங்கள் அனுகினால் தங்கள் சந்தேகம் தீரவாய்ப்புள்ளது" என்று கூறினார்கள். 


நாதமுனிகள் 1000 பாசுரங்களையும் அறியும் ஆர்வமுடன் ஆழ்வார் திருநகரி சென்று பராங்குசதாசரைச் சந்தித்தார். அவரைப் பணிவுடன் வணங்கி தம் விருப்பத்தைத் தெரிவித்தார்.


பராங்குசதாசர் " அன்பரே ! நம்மாழ்வாரின் 1000 பாடல்களையும் அறியும் உம் ஆர்வத்தை யாம் பாராட்டுகிறோம். ஆனால் எமக்கே பதினோறு பாசுரங்கள்தான் தெரியும். நம்மாழ்வார் ஒருவரே 1000 பாசுரங்களையும் கூறமுடியும். அவர் பரமபதம் சென்று (உயிர் துறந்து) பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் ஆகின்றன. என்ன செய்ய ? எம் மூதாதையரான மதுரகவியாழ்வார் தம் குருவான நம்மாழ்வாரையை இறைவனாக பாவித்து *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  எனத்துவங்கி பதினோரு பாசுரங்கள் அருளிச்செய்துள்ளார். அவற்றை நான் உமக்கு உபதேசிக்கிறேன். அவற்றை நீர் நம்மாழ்வார் வாழ்ந்த புளியமரத்தடியில் அமர்ந்து இசைத்தால்  ஒரு வேளை நம்மாழ்வார்  பரமபதத்தினின்றும் மீண்டுவந்து உமக்கு 1000 பாசுரங்களையும் உபதேசிக்க வாய்ப்புள்ளது." என்று கூறி *கண்ணிநுண் சிறுத்தாம்பு* துவங்கி 11 பாசுரங்களையும் நாதமுனிகளுக்கு உபதேசித்தார்.


நாதமுனிகள் புளியமரத்தடியில் அமர்ந்து, நம்மாழ்வாரை மனதிலிருத்தி அப்பதினோரு பாசுரங்களை இடைவிடாது மீண்டும் மீண்டும் பாடிக்கொண்டேயிருந்தார். 10,000 மாவது முறை பாடிமுடித்ததும் நம்மாழ்வார் அவர் முன் தோன்றினார். நம்மாழ்வார் குருவாக புளியமரத்தடியில் அமர்ந்து நாதமுனிகளுக்கு திருவாய்மொழி 1102 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். நாதமுனிகள் மிக்க மகழ்ச்சி அடைந்து நம்மாழ்வாரை வீழ்ந்து வணங்கி விடைபெற எத்தனித்தார். நம்மாழ்வார் "ஆயிரம் போதுமோ ? மற்ற ஆழ்வார்கள் அருளிச்செய்த மேலும் 3000 பாசுரங்கள் வேண்டாவோ ?" என்றார். இன்ப அதிர்ச்சி அடைந்த நாதமுனிகள் அவற்றையும் உபதேசித்தருளுமாறு வேண்டினார். நம்மாழ்வாரும் மேலும் 3000 பாசுரங்களையும் உபதேசித்தருளினார். 


நாதமுனிகள் பேரானந்தமடைந்தார்.

நம்மாழ்வார் சந்தேகமிருப்பின் நாளை வாரும் என்றார்.

மறுநாள் நாதமுனிகள் மீண்டும் புளியமரத்தடிக்குச்சென்றார். அங்கே முன்னதாகவே  நம்மாழ்வார் வந்து  வீற்றிருந்தார். 


" சுவாமி ! *பொலிக பொலிக பொலிக போயிற்று வல்லுயிர்ச் சாபம்*


*நலியும் நரகமும் நைந்த நமனுக்கு இங்கு யாதொன்றுமில்லை*


*கலியும்கெடும் கண்டுகொண்மின்*"

என்று கூறியுள்ளீர்களே, எப்படி எமனுக்கு வேலையில்லாமல் போகும் ?" என்று கேட்டார் நாதமுனிகள்.


உடனே நம்மாழ்வார்  தம் பையிலிருந்து ஓர் விக்கிரகத்தை எடுத்து நாதமுனிகளிடம் கொடுத்து, " இவர் பெயர் இராமானுஜர். இவர் பிற்காலத்தில் இவ்வுலகில் அவதரித்து வைணவ சம்பிரதாயத்தை  நிலைநாட்டுவார். அப்போது மக்கள்  அனைவரும் இவரைப்பின்பற்றி அறவழி நடப்பார்கள். எனவே எமனுக்கு வேலையில்லாமல் போகும்" எனக்கூறினார். மேலும் "இவ்விக்கிரகத்திலுள்ள   உத்தமரை தேடிக்கண்டுபிடித்து வைணவ ஆச்சார்யராகச் செய்யவேண்டியது உமது கடமையாகும்" என்றும் கட்டளையிட்டு மறைந்துபோனார் (மீண்டும் பரமபதம் சென்றார்).


நாதமுனிகள் 4000 பாசுரங்களைப்பெற்ற மகிழ்ச்சியோடும், பவிசாச்சார்ய விக்கிரகத்தைப்பெற்று (நம்மாழ்வார் அளித்த விக்கிரகம். இது தற்போது ஆழ்வார் திருநகரியில் உள்ளது) வைணவத்தைச் சிறப்பிக்கும் கடமை உணர்வோடும் காட்டுமன்னார்கோயில் வந்து சேர்ந்தார்.


4000 பாசுரங்களையும் ஓலைச்சுவடியில் பதிவேற்றினார். அவற்றிற்கு *நாலாயிர திவ்யப்பிரபந்தம்* எனப்பெயர் சூட்டினார். முதலாமாயிரம், இரண்டாமாயிரம், மூன்றாமாயிரம் மற்றும் நாலாமாயிரம் என நான்கு தொகுதிகளாகப்பிரித்தார். 


*முதலாமாயிரம்*


1.பெரியாழ்வார் - திருப்பல்லாண்டு : 12 பாசுரங்கள்

2.பெரியாழ்வார் - பெரியாழ்வார் திருமொழி : 461 பாசுரங்கள் 

3.ஆண்டாள் - திருப்பாவை : 30 பாசுரங்கள் 

4.ஆண்டாள் - நாச்சியார் திருமொழி : 143 பாசுரங்கள் 

5.குலசேகராழ்வார் - பெருமாள் திருமொழி : 105 பாசுரங்கள் 

6.திருமழிசையாழ்வார் - திருச்சந்த விருத்தம் : 120 பாசுரங்கள் 

7.தொண்டரடிப்பொடியாழ்வார் - திருமாலை 45 பாசுரங்கள் 

8.தொண்டரடிப்பொடியாழ்வார்  - திருப்பள்ளியெழுச்சி : 10 பாசுரங்கள் 

9.திருப்பாணாழ்வார் - அமலனாதிபிரான் 10 பாசுரங்கள் 

10.மதுரகவியாழ்வார் - கண்ணிநுண் சிறுத்தாம்பு : 11 பாசுரங்கள் 


முதலாமாயிரம் மொத்தம்  947 பாசுரங்கள். 


*இரண்டாமாயிரம்*


1.திருமங்கையாழ்வார் - பெரியதிருமொழி : 1084 பாசுரங்கள் 

2.திருமங்கையாழ்வார் - திருக்குறுந்தாண்டகம் : 20 பாசுரங்கள் 

3.திருமங்கையாழ்வார் - திருநெடுந்தாண்டகம் : 30 பாசுரங்கள் 


இரண்டாமாயிரம் மொத்தம் 1134 பாசுரங்கள்.


*மூன்றாமாயிரம்*


1.பொய்கையாழ்வார் - முதல் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

2.பூதத்தாழ்வார் - இரண்டாம் திருவந்தாதி :  100 பாசுரங்கள் 

3.பேயாழ்வார் - மூன்றாம் திருவந்தாதி : 100 பாசுரங்கள் 

4.திருமழிசையாழ்வார் - நான்முகன் திருவந்தாதி : 96 பாசுரங்கள் 

5.நம்மாழ்வார் - திருவிருத்தம் : 100 பாசுரங்கள் 

6.நம்மாழ்வார் - திருவாசிரியம் : 7 பாசுரங்கள் 

7.நம்மாழ்வார் - பெரிய திருவந்தாதி  : 87 பாசுரங்கள் 

8.திருமங்கையாழ்வார் - திருவெழுக்கூற்றிருக்கை  : 1 பாசுரம்

9.திருமங்கையாழ்வார் - சிறிய திருமடல் : 40 பாசுரங்கள்

10. திருமங்கையாழ்வார் - பெரிய திருமடல்  : 78 பாசுரங்கள் 


மூன்றாமாயிரம் மொத்தம் 709 பாசுரங்கள் 


*நாலாமாயிரம்*


நம்மாழ்வார் - திருவாய்மொழி : 1102 பாசுரங்கள் 


நாலாமாயிரம் மொத்தம் 1102 பாசுரங்கள்


முதலாமாயிரம்     :   947 பாசுரங்கள் 

இரண்டாமாயிரம் :1134 பாசுரங்கள் 

மூன்றாமாயிரம்    :    709 பாசுரங்கள் 

நாலாமாயிரம்        :1102 பாசுரங்கள் 

                                   _________

மொத்தம்                 :3892 பாசுரங்கள்            _________


இவ்வாறு நாதமுனிகள் தொகுத்தளித்த நாலாயிர திவ்யப்பிரபந்தமே இப்போது நாம் பாராயணம் செய்யும் நூலாகும்.


தற்போது மூன்றாமாயிரத்தில் இடம்பெற்றுள்ள   இராமானுச நூற்றந்தாதி 108 பாசுரங்கள்  இராமானுஜர் காலத்திற்குப்பின் சேர்க்கப்பட்டவை.


வழக்கத்தில் இல்லாமலிருந்த நாலாயிர திவ்யப்பிரபந்த்தை மீட்டு நமக்களித்த ஸ்ரீமந் நாதமுனிகள் வைணவ குருபரம்பரையின் முதல் ஆச்சார்யராகப் போற்றப்படுகிறார்.


இவர் நாலாயிர திவ்யப்பிரபந்தம் உலகெங்கும் பரவவேண்டும் என விரும்பினார். எனவே தம் தமக்கை மகன்களான கீழையகத்தாண்டான், மேலையகத்தாண்டான் ஆகிய இருவரையும் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தை இசையமைத்து பாடி பாமர மக்களிடையே பரப்புமாறு கட்டளையிட்டார்.


அவர்களிருவரும் சிறந்த இசை வல்லுனர்கள் ஆதலால் நாலாயிர திவ்யப்பிரபந்தத்தைப் பண்ணோடு பாடும் பணியைச் செவ்வனே செய்தார்கள். 


இவர்கள் ஊர்தோறும் சென்று திருமால் கோயில்களில் பண்ணொடும் பாசுரங்களைப்பாடிப் பரப்பிய தொண்டு அரையர்சேவை என்றழைக்கப்பட்டது. 


இவர்கள் மரபின்வழி வந்தவர்களே இந்நாளில் அரையர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள்.


இப்போதும் திருவரங்கம், திருவில்லிப்புத்தூர், திருவானமாமலை,திருக்குறுங்குடி, ஆழ்வார் திருநகரி ஆகிய ஊர்களிலுள்ள பெருமாள் கோயில்களில் அரையர்கள் மார்கழிமாதம் முழுவதும் அரையர்சேவை நிகழ்ச்சிகளை நடத்துகிறார்கள்.


திவ்யப்பிரபந்தத்தை முதன் முதலில் அருளிச்செய்தவர் பொய்கையாழ்வார் ஆவார். அவர் அருளிய முதல் பாசுரம் 

*வையம் தகளியா வார்கடலே நெய்யாக*


*வெய்ய கதிரோன் விளக்காக செய்ய*


*சுடாராழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை*


*இடாழி நீங்குகவே என்று.*

திவ்யப்பிரபந்தம் முதன் முதலில் தோன்றிய ஊர்  திருக்கோவலுராகும். 


ஆனால் ஸ்ரீமந் நாதமுனிகள் திவ்யப்பிரபந்தத்தைத் தொகுக்கும்போது 

முதன் முதலில் எல்லாம் வல்ல எம்பெருமானாகிய ஸ்ரீமந் நாராயணனை வாழ்த்தித் துவங்குமாறு திவ்யப்பிரபந்தம் அமைய வேண்டும் என விரும்பினார். எனவே


*பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு பலகோடி நூறாயிரம்*


*மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா உன் சேவடி செவ்வித்திருக்காப்பு*


எனத்துவங்கும் ஆழ்வார்கள் வரிசையில்  எட்டாவது வைணவ அடியாராக அவதரித்த  பெரியாழ்வார் அருளிச்செய்த 12 பாசுரங்களை திவ்யப்பிரபந்தத்தின் முகப்புப் பகுதியாக வைத்து, அதற்குத் *திருப்பல்லாண்டு* எனவும் பெயர் சூட்டினார். 


நம்மாழ்வாரிடமிருந்து ஆழ்வார்கள் பாசுரங்கள் நாலாயிரத்தையும் பெறுதற்குக் காரணமாக இருந்த மதுரகவியாழ்வார் அருளிச்செய்த 11 பாசுரங்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் பொருட்டு அவற்றை முதலாமாயிரத்தின் கடைசிப்பகுதியாக அமைத்து அப்பகுதிக்குக்  *கண்ணிநுண் சிறுத்தாம்பு*  என்றே பெயரிட்டார். 


இதுவே நாலாயிர திவ்யப்பிரபந்தம் தொகுக்கப்பட்ட வரலாறாகும்.


ஸ்ரீ வைணவ குருபரம்பரையை நிலைநாட்டிய ஸ்ரீமந் நாதமுனிகளுக்குப் பல சீடர்கள் இருந்தார்கள். அவர்களுள் உய்யக்கொண்டான், குருகைக்காவலப்பன் ஆகியோர் முதன்மையான சீடர்கள் ஆவார்கள்.

உய்யக்கொண்டான் பக்தி மார்கத்தையும், குருகைக்காவலப்பன் யோக மார்கத்தையும், தம் குருநாதரிடம் கசடறக் கற்றார்கள்.


பாமரர்களை உய்விக்கச் சிறந்த நெறி பக்தி மார்க்கமே என உணர்ந்த ஸ்ரீமந் நாதமுனிகள், தமக்குப்பின் உய்யககொண்டாரை ஆச்சார்யராக நியமித்து அவரிடம் நம்மாழ்வார் அளித்த பவிதாச்சார்ய விக்கிரகத்தைக் கொடுத்து இராமானுஜரை கண்டறியச்சொன்னார்.


உய்யக்கொண்டாரிடமிருந்த அவ்விக்கிரகம் மணக்கால்நம்பி மூலமாக ஆளவந்தாரை வந்தடைந்தது. ஆளவந்தார் காஞ்சிபுரம் வரதாஜப்பெருமாள் கோயிலுக்கு யாத்திரை சென்றார். அங்கு திருக்கச்சி நம்பிகள் என்னும் அடியவர் மூலமாக இளையாழ்வான் என்னும் பெயர்கொண்ட ஒளிபொருந்திய தோற்றத்துடன் கூடிய வைணவ இளைஞன் ஒருவனைக்கண்டார். அவ்விளைஞனே தம்மிடமிருக்கும் விக்கிரகத்திலுள்ள எதிர்கால ஆச்சார்யர் என அடையாளம் கண்டார். தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு  நிறைவேறப்போவதை எண்ணி மிக்க மகிழ்ச்சியடைந்தார்.


தம் அனுக்கச்சீடரான பெரியநம்பிகளை, இளையாழ்வானை காஞ்சியிலிருந்து ஸ்ரீரங்கம் அழைத்துவரப்பணித்தார். அவர்கள் ஸ்ரீரங்கம் வருவதற்குள் ஆளவந்தார் (இவ்வுலக வாழ்வை நீத்தார்) பரமபதம் அடைந்தார்.


பின்னாளில் பெரிய நம்பிகளின் பெருமுயற்சியால் இளையாழ்வான் சந்நியாசம் ஏற்று இராமானுஜர் என்னும் திருநாமத்துடன் ஸ்ரீரங்கம் ஜுயராகப் பொறுப்பேற்றார். வைணவத்திற்குப் பெருந்தொண்டாற்றினார்.


இவ்வாறாக ஸ்ரீமந் நாதமுனிகள் மறைந்து ஏறத்தாழ  400 ஆண்டுகளுக்குப்பிறகு  இராமானுஜர் ஆச்சார்யா பீடத்தை அலங்கரித்தார். 27.10.22.

Saturday, September 3, 2022

கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன

 மன்னனைக் காத்த பருந்து.


ஜெங்கிஸ்கான் என்ற மன்னன் செல்லப் பிராணியாக ஒரு பருந்தை வளர்த்து வந்தான். ஜெங்கிஸ்கான் எங்கே சென்றாலும் அந்தப் பருந்தையும் அழைத்துச் செல்வான். பருந்தும் அவனுடனேயே எல்லா நாடுகளுக்கும் பயணப்பட்டது.  

மன்னனின் பருந்து என்பதால் சுற்றியிருந்தவர்கள் பருந்தை மரியாதையுடன் பார்த்துக் கொண்டார்கள். அரண்மனையில் ராஜ போக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தது அந்தப் பருந்து.


ஒரு நாள் ஜெங்கிஸ்கான் தன் நண்பர்களுடன் வேட்டைக்குப் புறப்பட்டான். நண்பர்கள் அனைவரும் கத்தி, ஈட்டி, வில் அம்பு என்று பலவகையான ஆயுதங்களை ஏந்தி வந்தார்கள்.  

ஜெங்கிஸ்கான் தன் செல்லப் பருந்தை மட்டுமே கொண்டு வந்தான்.


"என் பருந்து நூறு வாட்களுக்குச் சமம்'' என்று நண்பர்களிடம் கர்வத்துடன் சொன்னான்.


அவன் குதிரையில் பயணித்தபோது பருந்து கம்பீரமாக அவன் முன்னால், குதிரை மேல் அமர்ந்து வந்தது.


பருந்தின் தலை மேல் வெள்ளியால் செய்த அழகான குல்லா ஒன்றைப் போட்டிருந்தான் ஜெங்கிஸ்கான், தன் அடையாளத்துக்காக...!


அந்தக் குல்லா தலையில் இருக்கும் வரை பருந்து அவனை விட்டு விலகிச் செல்லாது. அவனுக்கு ஏதாவது தேவை என்றால், அந்த வெள்ளிக் குல்லாவைக் கையில் எடுத்துக் கொண்டு பருந்தின் காதில் ஆணையிடுவான்  

பருந்தும் பறந்து சென்று அவனது ஆணையை நிறைவேற்றி வைக்கும்.


அன்று வேட்டையாட விலங்குகள் எங்கேயிருக்கின்றன என்று தெரியவில்லை. ஜெங்கிஸ்கான் தன் பருந்தின் தலையில் இருந்த வெள்ளிக்குல்லாவைக் கழற்றி அதன் காதில் ஏதோ சொன்னான்.  

பருந்து பறந்து சென்று விலங்குகள் இருக்கும் இடத்தைக் காண்பித்தது.  

ஜெங்கிஸ்கானும் நண்பர்களும் களைத்து போகும்வரை வேட்டையாடினார்கள்.


விலங்குகளைத் தேடிக் கொண்டு ஓடியதில் ஒரு கட்டத்தில் ஜெங்கிஸ்கான், தன் நண்பர்களிடமிருந்து விலகி வந்துவிட்டான். மேலே பறந்தபடி வேட்டைக்கு உதவி செய்து கொண்டிருந்த பருந்து மட்டுமே அவனுடன் இருந்தது. ஜெங்கிஸ்கானுக்கு கடுமையான தாகம் எடுத்தது.


நீரைத் தேடி அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஒரு இடத்தில் பாறையில் இருந்து நீர் வழிந்து கொண்டிருந்தது.  

அவன் நீரைப் பருகும் நேரத்தில் பருந்து பறந்து வந்து அந்தத் தண்ணீரைத் தட்டிவிட்டது.


தாகத்தில் தவித்துக் கொண்டிருந்த மன்னனுக்கு முதலில் பருந்தின் செயல் வியப்பாகத்தான் இருந்தது.  

தன் கையில் அமர்ந்திருந்த  பருந்தை மென்மையாகத் தடவிக் கொடுத்துவிட்டு மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.  

குல்லாவில் நீர் நிரம்பி மன்னன் பருகும் சமயத்தில் பருந்து பறந்து வந்து மீண்டும் தண்ணீரைத் தட்டிவிட்டது.


இப்போது மன்னனுக்குக் கடுங்கோபம்..


"இதே செயலை என் அமைச்சர் யாராவது செய்திருந்தால் அவரது தலையைக் கொய்திருப்பேன். நீ என் செல்லப் பிராணி என்பதால் உன்னை மன்னித்து விடுகிறேன்.  

இனி ஒரு முறை இப்படிச் செய்தால் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை'' என்று கடிந்தபடி ,ஜெங்கிஸ்கான் தன் போர் வாளை உறையிலிருந்து எடுத்து கையில் பிடித்துக் கொண்டான். ஓரக்கண்ணால் பார்த்தபடி மீண்டும் தண்ணீரைப் பிடித்தான்.


"இந்த முறை தண்ணீரைத் தட்டிவிட்டு விளையாடினாயோ, நீ செத்தாய்..' என்று மனதிற்குள் கறுவிக் கொண்டான்.  

பருந்தைப் பார்த்தபடி நீரைக் குடிக்கப் போனான் மன்னன். அது மன்னனை நோக்கிப் பறந்து வந்தது. வாளை வீசினான் அந்தக் கொடுங்கோலன்.


பருந்து வெட்டுண்டது, என்றாலும் அந்த உயிர் துறக்கும் வேளையிலும், மன்னன் கையில் இருந்த நீரின் மேல் விழுந்து அதைக் குடிக்காமல் செய்து விட்டது.


பருந்து இறந்துவிட்டது. மன்னனின் கோபம் அடங்கவில்லை. தாகம் அதைவிட அதிகமாக இருந்தது. நீரின் வரத்து படிப்படியாகக் குறைந்து முற்றிலுமாக நின்று விட்டது.


இந்த நீர் எங்கிருந்து வருகிறது என்று கண்டுபிடித்து அங்கே போய் தாகசாந்தி செய்து கொள்ளலாம் என்று புறப்பட்டான்.  

பாறையில் சிரமப்பட்டு ஏறிப் பார்த்தான். அங்கே ஒரு இடத்தில் நிறைய நீர் தேங்கி  

இருந்தது.


அதிலிருந்துதான் நீர் கசிந்து கொண்டிருந்தது என்பதைத் தெரிந்து கொண்டான்.  

தேங்கியிருக்கும் அந்த நீரைக் கையால் அள்ளி அருந்தலாம் என்று நினைத்துக் கீழே குனிந்தான்.


அந்த நீர்த் தேக்கத்தில் கொடிய விஷமுள்ள கருநாகம் ஒன்று செத்துக் கிடந்தது. அந்த நீரிலேயே அது பல நாட்களாகக் கிடந்திருக்க வேண்டும்.


மன்னன் அந்த நீரை அருந்தியிருந்தால், சந்தேகமில்லாமல் உடனே செத்திருப்பான்.  

அதனால்தான் பருந்து அவனை அந்த நீரை அருந்தவிடவில்லை.


உலகின் மிகப் பெரிய கொடுங்கோலனான ஜெங்கிஸ்கான், இறந்து கிடந்த பருந்தின் அருகில் அமர்ந்து அழுதான்.


நாடு திரும்பியதும் தனது தலைநகரத்தில் தங்கத்திலான பருந்தின் சிலை செய்து வைத்தான்.


அதன் ஒரு சிறகில் கீழ்க்கண்ட பொருள் விளக்கும் வாசகங்களை எழுதச் செய்தான்.


*கோபத்தில் செய்யப்படும் எல்லாச் செயல்களும் துயரத்தையே தருகின்றன.*


மற்றொரு சிறகில் அவன் எழுதச் சொன்ன வாசகம் இன்னும் மகத்தானது..


"உன்னுடைய உண்மையான நண்பன் உனக்குப் பிடிக்காத செயல்களைச் செய்தாலும் அதை உன் நன்மைக்காகவே செய்கிறான் செய்கிறான் என்பதை நினைவில் கொள்.."


ஜெங்கிஸ்கான் கதை இத்துடன் முடிகிறது.


ஒரு செயலை எடை போடும் போது அந்த செயலை மட்டும் பார்க்காமல் அதைச் செய்பவர் எப்படிப்பட்டவர் என்பதையும் பார்க்க வேண்டும்.


நமது பெற்றோர், நம் குரு, உண்மையான நண்பர்கள் பல சமயங்களில் நமக்குப் பிடிக்காததைச் செய்வார்கள். நம்முடைய நன்மைக்காகத்தான் அப்படிச் செய்கிறார்கள் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.


நம்மைக் கவிழ்க்க நினைப்பவர்கள் நம்மைப் புகழ்வார்கள். நமக்குப் பிடித்ததை மட்டும் செய்வார்கள்.  

ஆனால், நம்மை வீழ்த்துவது தான் அவர்கள் நோக்கம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

Wednesday, January 26, 2022

ஞான ஒளி திரைப்படம் பாடல் MSV அய்யாவின் கம்போசிங்

 Thanks to Dinamalar - Vaaramalar - Thinnai 2013 year


நடிகர் திலகம் நடித்த, "ஞான ஒளி' படத்தில் இடம்பெற்ற, "தேவனே என்னைப் பாருங்கள் - என் பாவங்கள் தம்மை வாங்கிக் கொள்ளுங்கள்...' என்ற பாடலை மறக்க முடியுமா? எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைத்த இந்த பாடலின் நடுவே...

"ஓ... மைலார்ட்... பார்டன் மீ... உங்கள் மந்தையில் இருந்து இரண்டு ஆடுகள் வேறு வேறு பாதையில் போய் விட்டன...

இரண்டும் சந்தித்த போது பேச முடியவில்லையே...' என்று, உணர்வுப்பூர்வமாக வசனங்கள் இடம் பெற்றிருந்தன.

டி.எம்.எஸ்., பாடிய அந்த பாடலில் வரும் மேற்படி வசனங்களை மட்டும், நடிகர் திலகத்தையே பேசும்படி எம்.எஸ்.வி., வேண்டுகோள் விடுத்தார்.

"இந்த வசனங்கள், பாடலில் எந்த இடத்தில் வருகின்றன என்பதை, பாடிக் காட்டுங்கள்...' என்று எம்.எஸ்.விஸ்வநாதனிடம் சிவாஜி கேட்க, உடனே எம்.எஸ்.வி.,

"ஆயிரம் நன்மை தீமைகள் நாங்கள் செய்கின்றோம்... நீங்கள் அறிவீர்... மன்னித்தருள்வீர்...' என்று பாடிக் காட்டி...

"இந்த இடத்தில் தான் தாங்கள்... அந்த, வசனத்தை பேச வேண்டும்...' என்றார்.

"இவ்வளவு உச்ச ஸ்தாயியில் கொண்டு போய் பாடலை நிறுத்தி இருக்கிறீர்களே... அதற்கு ஈடுகொடுத்து என்னால் பேச முடியாது என்றே நினைக்கிறேன். வேறு பொருத்தமானவரை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வையுங்கள்...' என்றார் சிவாஜி.

வயலின் வாத்தியக் கலைஞரும், தம் உதவியாளருமான ஜோசப் கிருஷ்ணாவை அழைத்து, அந்த வசனங்களைப் பேச வைத்தார் எம்.எஸ்.விஸ்வநாதன்.

ஆனால், அவரது குரல் அந்த பாடலின் வீச்சுக்குப் பொருந்தி வரவில்லை.

"பலகுரல் வித்தகர்' சதன் என்பவரைக் கூப்பிட்டு, இதே வசனத்தைப் பேச வைத்தார்.

ஆனால், அதுவும் பாடலின் போக்கோடு ஒன்றிப் போகாமல் தனித்து நின்றது. நடப்பதை எல்லாம் தூரத்தில் அமர்ந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த இயக்குனர் கிருஷ்ணன் - பஞ்சு, எம்.எஸ்.வியை அழைத்து, "பாடலைப் பாடிய டி.எம்.எஸ்சையே அந்த வசனங்களையும் பேச வைத்துப் பார்க்கலாமே...' என்றார்.

எம்.எஸ்.வி., - டி.எம்.எஸ்., சிடம் அந்த வசனங்களைக் கொடுத்துப் பேசுமாறு வேண்டினார்.

டி.எம்.எஸ்., உடனே நடிகர் திலகத்தின் அருகில் சென்றார். அந்த வசனங்களை நடிகர் திலகத்திடம் கொடுத்தார்.

"உங்கள் சிம்மக்குரலில்... அந்த வசனங்களை, ஒரு தடவை எனக்கு பேசிக் காட்டுங்கள் அய்யா...' என்றார்.

நடிகர் திலகம், அந்த வசனங்களை தம் பாணியில் டி.எம்.எஸ்சிடம் பேசிக் காட்டினார்.

அந்த வசனங்களைப் பேசிய போது, நடிகர் திலகத்தின் குரலில் இருந்த பாவங்களையும், ஏற்ற இறக்கங்களையும் உணர்வுக் குமிழிகளையும், உன்னதங்களையும் அப்படியே தம் மனதில் உள் வாங்கிக் கொண்டார் டி.எம்.எஸ்.,

"நான் தயார்... ஒலிப்பதிவை ஆரம்பிக்கலாமா?' என்று டி.எம்.எஸ்., சொன்னதும்... எம்.எஸ்.வி., கையசைத்தார்.

ஏக்கமும், விரக்தியும் தேவ விசுவாசமும் கொண்ட ஒரு பக்தனின், "ஞானத் தேடல்' விளங்கும் விதமாக, உணர்ச்சிப் பிழம்பாக மாறி, அந்த வசனத்தைப் பேசினார் டி.எம்.எஸ்.,

"அருமை டி.எம்.எஸ்., அற்புதம்...' என்று பாராட்டினார் சிவாஜி.

Saturday, November 13, 2021

விதவைன்னா என்ன அர்த்தம்? நிராதரவான பெண் என்பதுதானே? நான் ஒரு நிராதரவான பெண்தான்"

 கணவர் உயிரோடு இருக்கும்போது விதவை பென்ஷன் வாங்கியதோடு அதற்கு நியாயம் கேட்ட பெண்!

Thanks to whatsapp

தலைசிறந்த இயக்குனரும்,  ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஞான  ராஜசேகரன்  தனக்கு நேர்ந்த அனுபவங்களைப் புத்தகமாக எழுதி வருகிறார்.. அதில் இருந்து சில பகுதிகளை முக நூலிலும் தந்து வருகிறார். சமீபத்திய பதிவு இது...


தமிழ்நாட்டு மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் கேரள மக்கள் அரசாங்கத்தை அணுகுவதற்கும் மிகப் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கேரளாவில் பாமர மக்களுக்கு இருக்கின்ற பொது அறிவு நம்மை வியப்பில் ஆழ்த்தி விடும். 


நான் 1985 இல் பாலா சப் கலெக்டராக இருந்தபோது ஒருநாள் ஒருவர் என்னை அவசரமாகப் பார்க்க வேண்டுமென்று என் ஆபீசுக்கு வந்திருந்தார். நான் அவரை உள்ளே வரச் சொன்னேன். 


'என்ன விஷயம்?' என்று கேட்டேன். அவர் பதற்றத்தோடு விவரித்தார். "நான் தலையோலப்பறம்பு கிராமத்தில் இருந்து வருகிறேன். அங்கே ஒரு மிகப்பெரிய தவறு நடந்திருக்கிறது. அந்த ஊரில் விதவையே ஆகாத ஒரு பெண்ணுக்கு விதவைப்பென்ஷன் சாங்ஷன்  செய்யப்பட்டிருக்கிறது. அந்தப் பெண்ணோட பேரு தங்கம்மா" இப்படி அவர் சொன்னதும், நான் கேட்டேன் "நீங்க யாரு? உங்களுக்கு இந்த விஷயம் எப்படித் தெரியும்?" என்று.


அவர் மிகவும் சாதாரணமாகச் சொன்னார் "அந்தத் தங்கம்மாவின் கணவரே நான்தான்" என்று. எனக்குத் தூக்கி வாரிப் போட்டது.


கணவர் உயிரோடு இருக்கும்போது அவர் இறந்து விட்டார் என்று பொய் சொல்லி ஒரு பெண் விதவை பென்ஷன் வாங்குவது அரசாங்கத்தை ஏமாற்றும் வேலை இல்லையா? இது ,ஒரு சமூக நலத் திட்டத்தைக் கேலிப் பொருளாக்குவது இல்லையா? உடனே தாசில்தாரை வரவழைத்தேன். 


அவர்தான் விதவைப் பென்ஷன் சாங்ஷன் செய்த அதிகாரி. அவரும் பதறிப் போய் விட்டார். தலையோலப் பறம்பு வில்லேஜ் ஆபீசரின் விசாரணை ரிப்போர்ட்டின் அடிப்படையில்தான் சாங்ஷன் செய்ததாக அவர் சொன்னார். 


தவறாக ரிப்போர்ட் கொடுத்த வில்லேஜ் ஆபீசரை உடனே சஸ்பெண்ட் செய்ய ஆணை பிறப்பித்தேன். ஒரு குறிப்பிட்ட தேதியில் புகார் செய்த கணவர், தங்கம்மா ,வில்லேஜ் ஆபீசர், தாசில்தார் அனைவரையும் வரச் சொன்னேன்.


அந்தத் தேதியும் வந்தது .சம்பந்தப்பட்ட எல்லோரும் வந்திருந்தார்கள். அந்த தங்கமாவும் வந்திருந்தாள். குட்டு வெளிப்பட்டு விட்டதே என்ற குற்ற உணர்வோடு தொங்கிய முகத்துடன் வருவாள் என்று எதிர்பார்த்த எனக்கு அவள் தைரியமாக என் முன் வந்து நின்றது ஆச்சரியத்தைத் தந்தது.


தங்கம்மாவின் மீதுள்ள குற்றச்சாட்டின் அடிப்படையே   புகார் கொடுத்தவர் அவள் கணவரா? இல்லையா ?என்பதுதான். அதை முதலில் அறியவேண்டும் என்று தீர்மானித்த நான், அந்தப் பெண்மணியிடம் கேட்டேன் "இவர் உன் கணவர்தானே ?'' தங்கம்மா எந்த தயக்கமும் இல்லாமல் பதில் சொன்னாள் " ஆமாம்" .


நான் சற்று உணர்ச்சிவசப்பட்டுப் பேசத்தொடங்கினேன்."ஏம்மா நான் தமிழ்நாட்டில் இருந்து .வந்திருக்கிறேன் . எங்கள் கிராமத்தில் பெண்களிடம் அவர்களது புருஷன் பெயரைக் கேட்டால் நேரடியாகப்பதில் சொல்ல மாட்டார்கள். புருஷன் பெயர் முருகன் என்றால் ஜாடை மாடையாக  மயில் மேல இருக்கிறவர்னு சொல்வாங்க.அப்படிப்பட்ட ஊரில் இருந்து நான் வருகிறேன் .புருஷன் உயிரோடு இருக்கும் போது வெறும் 75 ரூபாய் கிடைக்கிறதுக்காக அவர் செத்துவிட்டார் என்று சொல்வதற்கு எப்படிம்மா மனசு வந்தது ?முதல்ல அதை எனக்கு விளக்குங்க!" உருக்கமாக நான் கேட்டேன் .


தங்கம்மா யாதொரு கலக்கமும் இன்றி என்னைக் கேட்டாள் "அரசாங்கம் ஏன் இந்த விதவைப் பென்ஷன் கொடுக்கிறது? விதவைன்னா  என்ன அர்த்தம்? நிராதரவான பெண் என்பதுதானே? நான் ஒரு நிராதரவான பெண்தான்" என்று சொல்லிச் சற்று நிறுத்திவிட்டு மேலும் தொடர்ந்தாள். 


"எப்படின்னு கேட்கிறீங்களா? இந்த ஆள் என்னை விட்டுவிட்டுப் போயி எட்டு வருஷம் ஆகுது கோழிக்கோட்டில் ஒரு பெண் கூட எட்டு வருஷமாக இந்தாள் வாழ்ந்து கொண்டிருக்கிறார் எங்கள் ஊருக்கு வருவது கிடையாது. என் குழந்தைகளைப் பார்க்கிறது கிடையாது அதனால என்னைப் பொறுத்தவரையில் இந்த ஆளு செத்துப் போனவன் தானே?  நான் நிராதரவான பெண்தானே? சொல்லுங்க சார் சொல்லுங்க" தங்கம்மாவின் கேள்விகள் ஒவ்வொன்றும் ஆணித்தரமாக வெளிவந்தன.


புகார் கொடுத்த ஆள் அப்போது நெளிவதை  நான் கண்டேன். அதற்குப் பிறகு தங்கம்மாள் ஒரு கேள்வி கேட்டாள், என்னை நேரடியாகப் பார்த்து," உங்கள் சட்டம் என்ன சொல்லுது? ஒருவன்  ஏழு வருஷம் காணாமல் போனால்அவனை செத்தவனாகக் கருதலாம்னு சொல்லுது .இல்லையா? அதனால சட்டப் பிரகாரம் இவன் எனக்குச் செத்துப் போனவன்தான்.நான் விதவை தான் சார்" என்று பேசி முடித்தாள்.


எனக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. ஒருவன் ஏழு வருஷம் காணாமல் போனால் அவனைச் செத்தவனாகச் கருதலாம் என்று எவிடென்ஸ் ஆக்ட்  சொல்கிறது .அந்த சட்ட விதிகள் எல்லாம் தங்கம்மாவை எப்படியோ சென்றடைந்து இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலாவது இப்படி ஒரு சாமானியப் பெண்மணி சட்டவிதிகளைச் சொல்லி புருஷன் உயிரோடு இருக்கும் போதே அவன் செத்ததற்குச் சமம் என்று வாதிட்டு இருக்க முடியுமா ?


தங்கம்மாவின் வாதம் எனக்கு நியாயமாகப் பட்டது. ஆனால் அப்போதுள்ள பென்ஷன் விதிகளின்படி நான் தீர்ப்பு எழுதினால் அது தங்கம்மாவுக்குச் சாதகமாக அமையாது. அவளது விதவை பென்ஷனை நான் ரத்து செய்தாக வேண்டும்.

அது மனிதாபிமானத்துக்கு எதிராக இருக்கும் என்று நான் உணர்ந்தேன். எனவே பென்ஷன் விதிகளில் மாற்றம் செய்ய அரசாங்கத்துக்கு ஒரு கடிதம் எழுதினால் என்ன என்று தோன்றியது.


தங்கம்மாவின் சூழ்நிலையை விவரித்து விட்டு "இவரைப் போன்ற பெண்களுக்கு ஆதரவு கொடுத்தால் தான் விதவைப் பென்ஷன் ஏற்படுத்தியதன் உண்மையான பலன் கிடைக்கும். அதற்கு விதவைப் பென்ஷனுக்கான விதிமுறைகளில் சில மாற்றங்கள் செய்ய வேண்டும். யாரெல்லாம் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்கிற விதிமுறைகளில் ஒரு பெண்ணின் கணவன் ஏழு வருடங்களுக்கு மேல் காணாமல் போயிருந்தால் அந்தப் பெண்ணும் விதவையாகக் கருதப்பட வேண்டும் என்பதையும் சேர்த்து தங்கம்மாவைப் போன்ற நிராதரவான பெண்களுக்கும் விதவைப்பென்ஷன் அனுமதிக்கப்பட வேண்டும்" என்று அரசாங்கத்திற்கு கடிதம் எழுதினேன்.


கேரள அரசாங்கத்தின் சிறப்பு என்னவென்றால் இதுபோன்ற மனிதாபிமான விஷயங்களில் அனுகூலமான முடிவுகளை உடனுக்குடன் எடுப்பதுதான். என் கோரிக்கை ஏற்கப்பட்டு விதவைப் பென்ஷன் விதிமுறைகளில் மாற்றத்தை அரசாங்கம் அறிவித்தது.


அரசாங்கம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வந்ததால் தங்கம்மாவுக்கு பென்ஷன் தொடர்ந்து அளிக்கப்பட்டது. எதிர்காலத்தில் தங்கம்மா போன்று நிராதரவான  நிலைக்குத் தள்ளப்படும் பெண்களுக்கும் விதவை பென்ஷன் உறுதி செய்யப்பட்டதுதான் எனக்கு மனநிறைவைத் தந்தது.


அதிகாரியாகப் பணிபுரியும் போது நம் முயற்சியால் ஆதரவற்றவர்களுக்கு ஏதேனும் நன்மை கிடைக்குமானால் அதை விட நமக்கு மகிழ்ச்சி அளிப்பது  வேறு இருக்க முடியாது. கண்ணகி தன் கணவன் கோவலன் கொல்லப்பட்ட போது கையில் சிலம்புடன் வந்து பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டாள்.


தலையோலப் பறம்பு தங்கம்மா கணவன் உயிரோடு இருக்கும்போதே அவனைச் இறந்தவனாக ஏன் கருதக் கூடாது என்று அரசாங்கத்திடம் நீதி கேட்டாள். அந்த தலையோலப் பறம்பு தங்கம்மாவை என்னால் என்றைக்குமே மறக்க முடியாது!


படித்ததில் பிடித்தது

Friday, June 18, 2021

உயர் திரு கக்கன் - கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது இந்த பெயர்

 #கக்கன்


 "உயர் திரு கக்கன் பிறந்த தினம்" இன்று....


தமிழக அரசியல் வரலாற்றில் உயர் திரு கக்கன் போன்ற நேர்மை நாணயத்திற்க்கு உதாரணமான அமைச்சரை பார்ப்பது கடினம்....


கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் வைகை அணை கட்டப்பட்டது. மதுரை வேளாண்மைக் கல்லூரியைக் கொண்டு வந்தார். விவசாயிகளுக்குத் தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப் பட்டோர் நலத்துறையின் கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப் பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப் படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான அரசு பணிகள் உயர் திரு கக்கன் அவர்களே ஆரம்பிக்கபட்டது...


கக்கன் நாடாளுமன்ற உறுப்பினாராக இருந்த போதும், தன் மனைவி சொர்ணம் தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமை மிக்க, அமைச்சராக அவர் வலம் வந்தபோது தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில் தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன், அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார். 


கக்கனின் தந்தையார் கோயில் அர்ச்சகராக இருந்த காரணத்தினால், கக்கன் அதிக சமயப்பற்றுள்ளவராக திகழ்ந்தார். 


ராமசாமி தனது சுயமரியாதை எனும் ஏமாற்று இயக்கத்தின் சார்பில் இந்துக்களின் கடவுளான ராமரை உருவபடம் அவமதிக்கும் போராட்டத்தை அறிவித்தபொழுது, கக்கன் அதற்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்தார். இது ஒரு சமூக விரோதச் செயல் என்றும், சுதந்திரத்திற்காக பாடுபட்ட காந்தியின் நம்பிக்கைக்குரிய கடவுளை அவமதிப்பதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார்.... 


கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர். அவர்  இந்து இயக்கங்களின் தீவிர ஆதரவாளார் என்பது கூடுதல் தகவல் ...


இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962-ஆம் ஆண்டு தேர்தலில் தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சிக்குரியது. அதன்பிறகு தீவிர அரசியலிலிருந்து ஓய்வு பெற்றார். 


விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்கு தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்கு தந்துவிட்ட அவர்  வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் ஒருவராகப் பேருந்தில் பயணித்தார். 


மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்க வந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனைபோய்ப் பார்த்தவர் அதிர்ந்து போனார். உடம்பில் ஒரு துண்டு மட்டும் போர்த்திக் கொண்டு, முக்கால் நிர்வாண நிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். 


சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘ வேண்டாம் என்று மறுத்து விட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி என்று கைகூப்பினார் கக்கன்... நினைவு திரும்பாமல் யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் மரணித்துப்போனார்.


கக்கனை அரசியலுக்கு அறிமுகம் செய்துவைத்தவர் வைத்தியநாதய்யர். அதை உயர்ந்தநிலையை அடைந்தபோதும் கக்கன் மறக்கவில்லை. 


கக்கன் காங்கிரஸ் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்தபோது 1955- ம் ஆண்டு வைத்தியநாதய்யர் இறந்தார். தகவலறிந்து உடனே மதுரை கிளம்பினார் கக்கன். அவரது உறவினர்களுடன் துக்கத்தைப் பகிர்ந்து கொண்டார். 


இறுதிச்சடங்கு செய்யும் நேரம் நெருங்கியது. வைத்தியநாதய்யரின் குழந்தைகளோடு கக்கனும் மொட்டையடித்து கொள்ளி வைக்க தயாரானார். இதனைக்கண்ட ஐயரின் உறவினர்கள் எதிர்த்தனர்.

 "இது முறையல்ல" என ஐயரின் பிள்ளைகளை அழைத்துப் பேசினார்கள். ஆனால் அவர்களோ, "நாங்கள் பிறப்பால் மகன்கள். கக்கன் வளர்ப்பால் மகன். அவருக்கும் உரிமை இருக்கிறது" என்றனர். 


கக்கன் "இன்று நான் போட்டிருக்கும் கதராடை, இந்த உடல், இந்த பதவி எல்லாமே ஐயர் எனக்குத் தந்தது. நான் இன்றைக்கு மனிதனாக மதிக்கப்படுவதே அவர் காட்டிய மாந்தநேயம் தான். அத்தகைய ஐயருக்கு நான் இறுதி சடங்கு செய்யவில்லையென்றால் நான் உயிரோடு இருப்பதில் அர்த்தமில்லை.." என்றார். 


இவரின் நேர்மைக்கு ஆயிரம் உதாரணங்கள் சொல்லலாம்...


அதில் ஒன்று உங்கள் பார்வைக்கு..


1968-ல நாகர்கோவில் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். தேர்தல் பொறுப்பாளர் கக்கன். தேர்தல் முடிந்து நானும் தேர்தலுக்குக் கொடுத்த பணத்தை கணக்கு பார்த்தபோது நானூறு ரூபாய் குறைந்தது. கக்கனுக்கு தாங்கமுடியாத வருத்தம். நணபர்கள் என்னவெல்லாமோ சமாதானம் சொன்ன போதும் மனம் ஒப்பவில்லை அவருக்கு ... நண்பரை அனுப்பி அவரது மனைவி கையில் கிடந்த இரண்டு வளையல்களை வாங்கி வித்துட்டு வரச்சொன்னார். அப்போதும் நானூறு ரூபாய் தேறல்ல. வேறும் சில பொருட்களை விற்று நானூறு ரூபாய் தேத்திட்டாரு. பின்னர் சென்னைக்குப் போய் கட்சி பொருளாளரிடம் கணக்கை ஒப்படைத்து விட்டு . "கணக்கை ஒப்படைச்சிட்டேன்" என இவர் காமராசரிடம் போய் சொல்ல அவருக்கு கடுமையான கோபம் வந்தது. "யாரு உன்கிட்ட கணக்கு கேட்டா.." என சத்தம் போட்டாரு. "அது தானே முறை" என்றார் கக்கன். 

"நீங்க யாருன் எனக்குத் தெரியும் அது தான் தேர்தல் பொறுப்பை உங்கிட்ட ஒப்படைச்சேன்"ன்னாரு. அப்போது கூட மனைவி நகைகளை விற்று கணக்கை சரி செய்ததை கக்கன் சொல்லல்ல...


அது தாங்க கக்கன்" ...


பெருந்தலைவர் காமராஜர் தனது அமைச்சரவையில் 7 பேரை மட்டுமே சேர்த்து கொண்டார்…


அவர்களில் ஒருவர் கக்கன்…


இவருக்கு ஒதுக்கப்பட்ட துறைகள்…


போலீஸ்

பொதுப்பணி

விவசாயம்

சிறுபாசனம்

கால்நடை_பராமரிப்பு

உள்துறை

சிறைத்துறை

நிதி

கல்வி

தொழிலாளர்_நலம்

மற்றும்

மதுவிலக்கு…


இத்தனை துறைகளின் அமைச்சராக இருந்தவர் ..


பத்து வருடங்கள் அமைச்சராக இருக்கும் போதும், வெளியூர் சென்றால் தன் துணிகளை தானே துவைத்து கொள்வார்....


கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டி வாழ்கிற எத்தனையோ ஊழல் தலை(வர்)களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… 


‘குறை சொல்ல முடியாத மனிதர்...,

’ 


என்று தமிழக அரசியல் வரலாறு, தனது கல்வெட்டில் காலத்துக்கும் அழியாதபடி பொறித்து வைத்திருக்கிறது கக்கனின் பெயர்.....

 

Wednesday, June 16, 2021

இரு சக்கர வாகனங்கள்-அப்டினா? பைக்குனு தமிழ் ல சொல்லுப்பா.. கொஞ்சம் திரும்பி பார்க்கிறேன்

இன்னைக்கு ஒரு யு டியூப் வீடியோ பாத்தேன், பழைய வண்டிகள் 10 னு ஒருத்தர் போட்டிருந்தார், ஒடனே எல்லா வேலையையும் விட்டுபுட்டு என்னோட தூக்கத்தயும்  விட்டுபுட்டு இத எழுத ஆரம்பிச்சுட்டேன், நான் ரமணன் 

நிறைய வெளிநாட்டு கம்பெனிகள் கூட்டு முயற்சி தான் ஆரம்பத்தில் பைக் மற்றும் ஸ்கூட்டர்களை கொண்டு வந்தது. டிவிஎஸ் சுசுகி, ஹீரோ ஹோண்டா (ஹீரோ சைக்கிள் கம்பெனி), எய்ச்சர் ராஜ்தூத், கவஸாகி பஜாஜ். இதில் பைக் செக்மென்ட்டில் பெட்ரோல் மைலேஜ் புரட்சி என்றால் அது ஹீரோ ஹோண்டா தான். அந்நாளில் அது ஹோண்டா சி டி 100 என முதலில் வந்தது. லிட்டருக்கு 80 கி மீ கொடுத்ததாக சொல்லப்பட்டது

இதுல சிறப்பு என்னனா இந்தியாவோட ராயல் என்பீல்ட் எய்ச்சர்  வசம்தான் இப்போ இருக்கு 

ஹீரோ ஸ்ட்ரீட் என ஒரு பைக் போட்டார்கள். அருமையான வண்டி. அதில் கிளட்ச் இல்லாமல் வடிவமைத்தார்கள். அது ஒரு புதுமை ஆனால் அதுவே வினையாகி போச்சுது. நமக்கு கிளட்ச் பிடித்தால் தான் அது வண்டி என ஒரு நினைப்பு. தவிரவும் பெட்ரோல் டேங்க் முன்னால இருக்கனும் அதையும் அதுல மாத்தி வெச்சாங்க. வண்டி காணாமலே போச்சு

ஸ்கூட்டிக்கு முன்னர் பஜாஜ் சன்னி என ஒரு வண்டி போட்டார்கள் அதுதான் பலரை ஈர்த்து ஒரு செக்மென்ட்டின் கேம் சேஞ்சர் என வழி வகுத்தது

அந்நாளில் பலர் ஸ்கூட்டர் வாங்க காரணம் ஸ்டெப்னி எனும் உபரி சக்கரம் இருக்கு, எங்கயாவது பஞ்சர் ஆனால் உடனே மாத்திக்கலாம் அப்டின்றதுதான். பின்னாளில் வந்த கைனெடிக் ஹோண்டா ஸ்கூட்டரில் கூட இதை சேர்த்திருந்தார்கள். ஆமாம் கைனெடிக் ஹோண்டா முதலில் லாஞ்ச் ஆனதும் தோல்வி என தெரியுமா? பின்னர் ஓர் பெண்மணி அந்த வண்டியை இமய மலையில் எவரெஸ்ட்க்கு ஒட்டி சென்றதும் தான் அதற்கு ஒரு மவுசு வந்தது. நிற்க அது ஆட்டோமேட்டிக் கியர் என்பதை பலர் நம்பவே இல்லை.  என்னுடைய +2 ஆசான் தெய்வத்திரு துரைராஜ் கண்ணன் (சோலைமலை மோட்டார்ஸ் அவர்களின் மாப்பிள்ளை) முதலில் இந்த வண்டியை பள்ளிக்கு கொண்டு வந்தார்.  ஆச்சரியமாக இருந்தது) அப்பொழுது அவர்கள் அதற்கு ஏஜென்சி எடுத்திருந்தார்கள். 

YEZDI பற்றி சொன்ன நீங்கள் JAWA பற்றியும் சொல்லியிருக்க வேண்டும். YEZDI யின் அப்பா இந்த JAWA. மலை ஏறுவதற்கு மிக பொருத்தமான வண்டி. விபத்தானதாக கேள்விப்பட்டதேயில்லை. இது தவிர ESCORT RAJDOOT பற்றியும் சொல்லியிருக்க வேண்டும்

என்பீல்ட் கம்பெனியின் புல்லட், பின்னாளில் கூடுதலாக மினி புல்லட்.  இதில் ஆச்சரியம் மிக சின்ன வண்டி mofa  என்பதுவும் இவர்கள் தயாரிப்பே.  வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ் இந்த வண்டியை ஒட்டியிருப்பார்

ஸ்கூட்டரில் அந்நாளில் "எல் எம் எல் வெஸ்பா". இன்றைக்கும் வெஸ்பா புதிய ஸ்லிம் வடிவத்தில் வருகிறது. அதற்கும் முன்னர் விஜய், அப்புறம் லேம்பி  லேம்பெர்ட்டா. இதில் வெஸ்பா வாங்க பதிவு பண்ணி வருடம் முழுவதும் காத்திருந்தோர் பல. பெயர் நினைவில் இல்லை, ஒரு ஸ்கூட்டர் கம்பெனி வண்டி விற்க முன் பணம் முழுவதுமாக வாங்கி அந்த பணத்தில் கம்பெனி ஆரம்பித்து அப்பறம் உற்பத்தி செய்து விற்றார்கள் என நினைவு

டிவிஎஸ் வண்டிகளுக்கு ஒரு வரலாறு உண்டு. டிவிஎஸ் 50, டிவிஎஸ் எக்ஸல், டிவிஎஸ் சாம்ப் , IND சுசுகி, டிவிஎஸ் சுசுகி, ஷோகன், மாக்ஸ் 100 ஆர், சாமுராய், டிவிஎஸ் விக்டர், டிவிஎஸ் ஸ்கூட்டி, டிவிஎஸ் ஸ்கூட்டி இ எஸ்,

கொஞ்சம் மொபெட் பக்கமும் பார்வையை திருப்புங்க. டிவிஎஸ் 50, லூனா, ஹீரோ மெஜஸ்டிக், டிவிஎஸ் சாம்ப், ஹீரோ புக், சுவீகா 

கொஞ்சம் வருத்தம். IND சுசுகி பத்தி சொல்லல்லேயே. புன்னகை மன்னன் படத்துல கமல் வருவாரில்லையா. அப்பறமா இந்த வண்டி டிவிஎஸ் சுசுகி அப்டினு மாறினாலும் ஒரிஜினல் IND சுசுகி இன்னிக்கும் ஒரு கிரேஸ் இருக்கு. அப்புறம் நம்ம ஊரு வண்டி, அஞ்சாத நிருபர் வீரபத்திரன் வண்டி M80 பத்தியும் சொல்லணும் என்ன ஒரு அருமையான வண்டி

இப்போதைக்கு இது போதும்.. வண்டிய சைடு ஸ்டாண்டு போட்டு சைடுல விடுவோம் 

Sunday, June 13, 2021

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்

Thanks to Whats up message. 


நண்பர் ஒருவர்  தனது இன்னொரு நண்பரை விருந்துக்கு அழைத்து தடபுடலாக விருந்து அளித்தார்.

விருந்து முடிந்ததும் தாம்பூலமும் அளித்தார்.


பின்  விருந்து உண்டவரிடம்   "தளிகை( சமையல் ) எப்படி இருந்தது "

என்று கேட்டார்.


அதற்கு  அவர்  சிரித்துக் கொண்டே


" கண்ணமுது  கோவில் ,

கறியமுது  விண்ணகர் ,

அன்னமுது  வில்லிப் புத்தூர் 

ஆனதே ,

எண்ணும் சாற்றமுது  மல்லை ,

குழம்புமது  குருகூர் ,

பருப்பதனில்  திருமலையே  , பார் "


என்றார்.


உடனே நமது நண்பர் 

 "ஆஹா நம் வீட்டுச் சமையல் திவ்ய தேசங்களுக்கு ஒப்பாக அருமையாக

இருக்கிறது என்று கூறி விட்டாரே  "என்று

மிக மகிழ்ச்சி அடைந்தார்.


இருந்தாலும் அந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறிய விரும்பிய அவர்

இன்னொரு வைணவ நண்பரிடம் கேட்டார்.


இதோ அந்த வைணவ நண்பர் கூறிய

பொருள்.


கண்ணமுது என்றால் பாயசம்.

ஸ்ரீரங்கம்  கோவிலில்  பாயசம் மண்சட்டியில்தான் வைப்பார்களாம்.

அதனால்  அடியில் சற்று அடிப் பிடித்து

இருக்குமாம். அது போல் நண்பர் வீட்டுப் பாயசமும் சற்று அடிப் பிடித்து  

இருந்ததாம்.


கறியமுது  என்றால் காய்கறிகள்.

விண்ணகரில் இருப்பவன்  உப்பிலியப்பன். அவனுக்கு நைவேத்தியம் எல்லாமே  உப்பில்லாப் பண்டம்தான்.

அதாவது கறியமுதில் உப்பில்லை

என்பதே கறியமுது விண்ணகர்.


அன்னமது வில்லிப் புத்தூர்.

ஸ்ரீ வில்லிப் புத்தூர் கோவிலில் அன்னம் குழைந்திருக்குமாம்.

அது போல் நண்பர் வீட்டு சாதம் குழைந்துள்ளது.


சாற்றமுது மல்லை.

மல்லை  என்றால் கடல்.

கடல் நீர் உப்பு.

இங்கும்  சாற்றமுது ( ரசம் .நீராகத்தானே இருக்கும் ).அதில்  உப்பு அதிகம்.


குழம்பது குருகூர்.

குருகூர்  என்றாலே  புளி.

அதாவது குழம்பில் புளி அதிகம்.


பருப்பதில் திருமலை.

திருமலை எங்கும் கல்தான்.

இங்கும் பருப்பு முழுதும் கல்.


பாடல்  எப்படி ?

குறை சொல்வதையும் எவ்வளவு அழகாக

கேட்பவர் மனம் நோகாமல் சொல்கிறார் பாருங்கள்.இதுதான் அக்கால மரபு.

இதைப் படித்ததும் எனக்கு மிகப் பிடித்தது.இதோ பகிர்ந்தேன் உங்களிடம்.

Tuesday, May 18, 2021

இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட

 அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே

மாமன் அடித்தாரோ மல்லிப்பூ செண்டாலே

மறந்து போச்சு இந்த பாட்டு – இல்லை

மறைந்து போச்சு நம்ம தாலாட்டு


அத்தை என்று சொன்னேன் நான்

அழகு மகளுக்கு புரியவில்லை

மாமன் என்று சொன்னேன் – நல்ல

மகனுக்கும் தெரியவில்லை – உறவை


என்ன சொல்லி புரிய வைப்பேன்

எப்படி நான் கற்க வைப்பேன்

இன்றைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை

எப்படி நான் எடுத்துரைப்பேன்.


இரண்டு பெற்றால் சுமை என்று

இந்நாளின் இடர்நிறை பொருளியலை

இயல்பாக புரிந்து கொண்ட பெற்றோர்

பெற்றது ஒன்றுமட்டும் – எனக்கு மட்டுமல்ல

என் மனைவியின் நிலையிதுவே


இத்தகைய சூழ்நிலையில் இல்லாத உறவுதனை

என்ன சொல்லி புரிய வைப்பேன்


கூட்டு குடும்பம் என்பது போய்

கூட்டில் குடும்பம் என சுருங்கி

கூடி வாழ யாரும் இன்றி

தனி குடும்பம் ஆகி போச்சு


அக்கம் பக்கம் எல்லாம் அன்று

அக்கா அண்ணா என்று இருந்த

அழகான காலம் போய் – இன்று

ஆண்டி அங்கிள் ஆயாச்சு


அம்மா அப்பா என்பது போய்

டாடி மம்மி ஆகி இப்போ

டாட் மம் என சுருங்கி

வேற்றுலகம் ஆயாச்சு – ஆம்


இழந்தது நம் தாலாட்டு மட்டுமல்ல

உறவும் நட்பும் கலாச்சாரமும் கூட

11.5.2014 written by S.Ramanan