ஒரு முக நூல் பதிவில் நண்பர் ஒருவர் திதிகளின் வரிசையை பற்றி பேசினார். அவரது பதிவில் சப்தமி என்பதற்கு விளக்கம் கொடுக்க முயன்றார். அதனால் தூண்டப்பட்ட நான் கீழ் கண்ட ஏழு விஷயங்களை தொகுத்துள்ளேன்.
1) சப்தகிரி (திருப்பதியில் உள்ள ஏழுமலைகள் சேஷாத்ரி (சேஷ மலை)நீலாத்ரி (நீல மலை)கருடாத்ரி (கருட மலை)அஞ்சனாத்ரி (அஞ்சன மலை)விருஷபாத்ரி (விருஷப மலை)நாராயணாத்ரி (நாராயண மலை)வெங்கடாத்ரி (வேங்கட மலை) ),
2) சப்தஸ்வரம் (சரிகமபதநி )
3) சப்தநாடி (இடகலை, பிங்கலை' சுழுமுனை, சிங்குவை, புருடன், காந்தாரி, அத்தி),
4) சப்த ரிஷிகள் (கஸ்யப, அத்திரி, பரத்வாஜ, விஸ்வாமிதர, ஜமதக்னி, கௌதம , வசிஷ்ட )
5) சப்த கன்னியர் (பிராம்மி, மாகேசுவரி, கவுமாரி, நாராயணி, வராகி, இந்திராணி, சாமுண்டி (காளி) )
6) சப்த வாஹன (சூரியனின் ஏழு குதிரைகள் (காயத்ரி, பிரஹதி, உஷ்ணிக், ஜகதி, த்ரிஷ்டுப், அனுஷ்டுப் மற்றும் பக்தி)
7) திருமண சடங்கில் சப்தபதி (ஏழு வாக்குறுதி ஏழு அடிகள் எடுத்து வைப்பது)
தொகுப்பு: ரமணன் சேஷாத்ரி மதுரை
நீங்கள் சொன்னது ஏழேழு ஜென்மத்திற்கு மறக்காது.
ReplyDelete