http://thirattu.blogspot.in/
நாலு கோடி பாடல்
பொருள் : நாக்கோடாமை -- வாக்கு தவறாமை
நாலு கோடி பாடல்
சோழ மன்னன் தனது புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான். புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.
மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
மிதியாமை கோடி பெறும்; உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில் உண்ணாமை கோடி பெறும்; கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுதல் கோடி பெறும்; கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக் கோடாமை கோடி பெறும். |
பொருள் : நாக்கோடாமை -- வாக்கு தவறாமை
No comments:
Post a Comment