ஒருநாள்உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
வயிறு படுத்தும் பாடு தாங்கமுடியலை ன்னு ஒருபுலவர் புலம்புகிறார் பாருங்கோ.........................புலவர் சாப்பாட்டுக்கே வழியில்ல்லாத வறுமையில் வாடுகிறார்.அன்று அவருக்கு ஒருவீட்டிலும் அன்னம் போடுவாரில்லை.அவர்தம் வயிற்றிடம் சொல்கிறார் இன்றொருநாள் மட்டும் பசியைப் பொறுத்துக்கொள் என்று.ஆனால் வயிறு பசிதாங்க முடியாமல் கூவிக்கொண்டே இருக்கிறது.எப்படியோ அன்றையப் பொழுதை கழித்துவிட்டார் புலவர்.மறுநாள் ஒரு கல்யாணவீட்டில் அவருக்கு விருந்தே கிடைத்தது.இப்போவும் புலவர் தம்வயிற்றிடம் சொல்றார் நல்ல சுவையான விருந்து கிடைச்சிருக்கு .சாக்குப்பையை குலுக்கி கொள்வது போல நீயும் குலுக்கிக்கொள் நாளைக்கு இவ்ளோ ஆகாரம் கிடைக்காது நிறைய கொள்ளுமாறு குலுக்கிக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொள் ன்னு சொன்னாலும் வயிறு கொஞ்ச உணவிலேயே நிரம்பி ஏப்பம்விட்டு எதிர்கழித்து தன் இயலாமையைக் காட்டிவிட்டது.இந்ததன் அனுபவத்தை ஒரு வெண்பாவில் வடிக்கிறார் புலவர்
ஒருநாள்உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.
No comments:
Post a Comment