Monday, May 23, 2016

கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா...?மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக

Thanks to VIKATAN

http://www.vikatan.com/news/india/64495-cleaner-of-ocean-is-tortoise-world-tortoise-day.art


கச்சத்தீவுக்கு அந்தப் பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா...?

லகின் 71 சதவிகித பரப்பை ஆக்கிரமித்து இருப்பது கடல் பரப்பு. பூமியில் உள்ள நீரில் 97% நீர் கடலில்தான் உள்ளது. இந்தியா மூன்று  பக்கங்களிலும் கடலால் சூழப்பட்ட தீபகற்பமாக திகழ்ந்து வருகிறது. இதில் அரபிக்கடல், வங்காள விரிகுடா, இலட்சத்தீவு கடல், அந்தமான் கடல், கட்ச் வளைகுடா, மன்னார் வளைகுடா, கம்பாத் வளைகுடா, மற்றும் பாக் நீரிணை ஆகிய கடல் பரப்புகள் அமைந்துள்ளன. இந்த கடல் பரப்பை சுத்தமாக வைத்திருக்கும் உயிரினங்களில் கடல் ஆமை இன்றியமையாதவை. 

உலக பெருங்கடல்களில் ஏழுவகை ஆமைச் சிற்றினங்கள் உள்ளன. இவற்றுள் இந்திய பெருங்கடல் பகுதியில் மட்டும் பச்சை ஆமை, சித்தாமை, அலுங்காமை, தோணி ஆமை, பெருந்தலை ஆமை என ஐவகை ஆமைகள் உள்ளன. காலம் முழுவதும் கடல் நீரிலேயே வசிக்கக் கூடிய ஆமைகள் இனப்பெருக்க காலத்தின்போது மட்டும் கரை பகுதிகளில் வந்து முட்டையிட்டு செல்லுகின்றன. அதிலும் குறிப்பாக உலகெங்கிலும் உள்ள வெப்ப மண்டல மற்றும் துணை வெப்ப மண்டல கடற்கரை பகுதிகளையே முட்டையிட ஆமைகள் தேர்ந்தெடுக்கின்றன. 

தமிழகத்தை பொறுத்தமட்டில் கன்னியாகுமரிக்கும், திருச்செந்தூருக்கும் இடைப்பட்ட கடற்கரை பகுதிகளிலும், தனுஷ்கோடி மற்றும் மன்னார் வளைகுடாவில் உள்ள 21 தீவு பகுதிகளிலும் ஆமைகள் முட்டையிட்டு குஞ்சு பொறிக்கின்றன. இவ்வாறு பிறக்கும் ஆமை குஞ்சுகள் தாம் பிறந்த இடத்தின் நிலவியல் அமைப்பு, காந்தபுலம், தோற்றம், நறுமணம் ஆகியவற்றை தங்கள் உணர்வில் பதிந்து கொண்டு வளர்ச்சி அடைந்த பின் குஞ்சு பொறிக்க இந்த இடத்தினையே தேர்வு செய்யும் வினோத பழக்கம் கொண்டவை.

சாதுவான குணம் கொண்ட ஆமைகள் சுமார் 300 ஆண்டுகள் வரை உயிர் வாழ கூடியவை. இவை கடல் பாசிகள், சிறு மீன் குஞ்சுகளை உணவாக உட்கொள்கின்றன. கடல் ஆமைகள் தங்கள் சுவாசத்தின் போது கடல் நீரை மாசு படுத்தாமல் சுத்திகரித்து வெளியேற்றும் தன்மை கொண்டவை ஆகும். இதனால் ஆமைகளை ‘கடல் சுத்திகரிப்பான்’ என மீனவர்கள் அழைக்கின்றனர். ஆமைக்கு ‘கச்சபம்’ என்ற பெயரும் உண்டு. இதனால்தான் சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஆமைகளின் புகழிடமாக கச்சத் தீவு இருந்து வந்தது. இதனால்தான் இந்த தீவு ‘கச்சத் தீவு’ என்று அழைக்கப்படுகிறது.
கடல் நீரை இயற்கையாகவே சுத்திகரித்து தரும் ஆமைகளின் உயிருக்கு தற்போது பல வகைகளிலும் ஆபத்துகள் நேர்ந்து வருகிறது. முட்டையிடும் பருவ காலங்களின் போது கரையை நோக்கி வரும் ஆமைகள் இழுவலையில் சிக்கி உயிரிழப்பதும், கடலில் தூக்கி எரியப்படும் கழிவு பொருட்களாலும், இனப்பெருக்க பகுதிகளில் மேற்கொள்ளப்படும் திட்டமிடபடாத பணிகளாலும் ஆமைகள் அழிந்து வருகின்றன. இந்த அழிவில் இருந்து ஆமைகளை காக்கவே மே -23 -ம் தேதி உலக ஆமைகள் தினமாக கடந்த 2000-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது.

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாநிலத்தில் உள்ள ஆமைகள் மீட்புக் குழுவினர் ஆமைகள் குறித்த விழிப்புணர்வுகளை பொதுமக்களிடையே இந்த நாளில் இருந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இயற்கையின் படைப்பில் உருவான கடல் ஆமைகள் மனிதர்களின் வாழ்க்கையின் ஆதாரமாக திகழும் கடலை காத்து வருகின்றன. நாமோ அந்த ஆமைகளின் உயிரை காக்க முடியாவிட்டாலும் அவற்றின் அழிவுக்கு துணை போகாமல் இருக்க வேண்டும் என்பதே ஆமைகள் ஆதரவு அமைப்பினரின் கோரிக்கையாக உள்ளது.

- இரா.மோகன்
படங்கள்: உ.பாண்
டி

Sunday, May 15, 2016

ஒருநாள்உணவை ஒழியென்றால் ஒழியாய்


ஒருநாள்உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.


வயிறு படுத்தும் பாடு தாங்கமுடியலை ன்னு ஒருபுலவர் புலம்புகிறார் பாருங்கோ.........................புலவர் சாப்பாட்டுக்கே வழியில்ல்லாத வறுமையில் வாடுகிறார்.அன்று அவருக்கு ஒருவீட்டிலும் அன்னம் போடுவாரில்லை.அவர்தம் வயிற்றிடம் சொல்கிறார் இன்றொருநாள் மட்டும் பசியைப் பொறுத்துக்கொள் என்று.ஆனால் வயிறு பசிதாங்க முடியாமல் கூவிக்கொண்டே இருக்கிறது.எப்படியோ அன்றையப் பொழுதை கழித்துவிட்டார் புலவர்.மறுநாள் ஒரு கல்யாணவீட்டில் அவருக்கு விருந்தே கிடைத்தது.இப்போவும் புலவர் தம்வயிற்றிடம் சொல்றார் நல்ல சுவையான விருந்து கிடைச்சிருக்கு .சாக்குப்பையை குலுக்கி கொள்வது போல நீயும் குலுக்கிக்கொள் நாளைக்கு இவ்ளோ ஆகாரம் கிடைக்காது நிறைய கொள்ளுமாறு குலுக்கிக்கொண்டு வயிற்றை நிரப்பிக்கொள் ன்னு சொன்னாலும் வயிறு கொஞ்ச உணவிலேயே நிரம்பி ஏப்பம்விட்டு எதிர்கழித்து தன் இயலாமையைக் காட்டிவிட்டது.இந்ததன் அனுபவத்தை ஒரு வெண்பாவில் வடிக்கிறார் புலவர்

ஒருநாள்உணவை ஒழியென்றால் ஒழியாய்
இருநாளைக்கு ஏலென்றால் ஏலாய்-ஒருநாளும்
என்னோவு அறியாய் இடும்பைகூர் என்வயிறே
உன்னோடு வாழ்தல் அரிது.