Tuesday, November 1, 2016

இதற்கு என்ன தலைப்பு வைக்கலாம்? பகிரிக்கு நன்றி

ஒருவன் மிகவும் அழகான ஒரு பெண்ணை மணமுடித்தான்.  அவள் மீது அளவு கடந்த பாசத்தையும் காட்டினான்.

இவ்வாறிருக்க
ஒரு நாள் அவள் ஒரு தோல் நோய்க்கு ஆளானாள். அதனால் அவளது அழகு  படிப்படியாக குறைவடையத் தொடங்கியது.  அவ்வேளை அவளது கணவன் ஒரு பயணமொன்றை மேற்கொண்டிருந்தான்.
அவன் திரும்பி வரும் போது ஒரு விபத்துக்குள்ளாகி அவனது கண் பார்வையை இழந்தான்.

ஆனால் எவ்வித பிரச்சினையும் இன்றி  அவர்களது மண வாழ்வு தொடர்ந்தது.

நாற்கள் செல்லச் செல்ல மனைவி தனது அழகும் படிப்படியாக குறைவடைந்து செல்வதை உணர்ந்தாள். ஆனால் குருடனான கணவனுக்கோ இது ஒன்றும் தெரியாது. இருவரும் அவர்களிருவரினதும் அன்பில் எவ்வித வேறுபாடும் மாற்றமும் காட்டாது வாழ்ந்தனர்.

அவன் அவளை அதிகமாக நேசித்தான் அவளுடன் அன்பாக நடந்து கொண்டான். அவளும் அவனுடன் அவ்வாறு தான் இருந்தாள்.
அப்படியிருக்க ஒரு நாள் அவள் இறந்துவிட்டாள்.
அவளது மரணம் அவனை மிகவும் வேதனைப்படுத்தியது.

தன் அன்பு மனைவியின் இறுதி கிரிகைகளை நிறைவேற்றி அவளை அடக்கம் செய்த பின் அவன் தனி மனிதனாக அவ்விடத்தை விட்டு வீடு திரும்பினான்.

அவன் திரும்பி வரும் போது அவனுக்கு பின்னாலிருந்து ஒரு மனிதர்   அவனை அழைத்து
"எவ்வாறு நீ தனியே நடந்து செல்கிறாய்? இது வரைக்காலமும் நீ உன் மனைவியின் உதவியுடன் அல்லவா நடந்தாய்?
எனக் கேட்டான்.

அதற்கு அவன்
நான் குருடன் இல்லை.  எனது மனைவி நோய் வாய்பட்டுள்ளாள் என்பதை நான் அறிந்தால் அவள் மனம் காயப்படக் கூடும் என்பதால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்தேன்.

"அவள் சிறந்ததொரு மனைவியாக இருந்தாள், அவள் பின்னடைவதற்கு ஒரு காரணமாக இருக்க பயப்பட்டேன்.
அதனால் தான் குருடன் போன்று பாசாங்கு செய்து *இதற்கு முன் எவ்வளவு பாசமாக நடந்து கொண்டேனோ அவ்வாறே இது வரையும் அவளுடன் வாழ்ந்தேன்"
எனப் பதிலளித்தான்.

🌸🌷🌷🌷🌸🌷🌷🌷🌸

எடைபோடுதலும் மதிப்பீடு செய்தலும் உறவுகளில் துயரத்தை ஏற்படுத்துகிறது.
- ஸ்ரீ  பகவான்.
இந்நாளில் விழிப்புணர்வு கிட்டட்டும்

Friday, October 21, 2016

நம் எண்ணமே தான் நமக்குச் சிறை-Thanks to Whatsup

எந்த ஒன்றினால் மனம் வருத்தப் படுகிறதோ அதில் நாம் சிறை பட்டு உள்ளோம் என்று அர்த்தம். (பணம், புகழ், அதிகாரம், உறவு தொழில் .....)

எதுவும் நமக்கு சிறை இல்லை நம் எண்ணமே தான் நமக்குச் சிறை.

ஒரு பிச்சைக்காரன் ஒரு தகரப்பெடியின் மேல் அமர்ந்து கொண்டு ரொம்ப நாளாக பிச்சை எடுக்கிறான்.

ஒரு நாள் அவன் இறந்து விடுகிறான்.

அப்போ முனிசிபாலிட்டி ஆட்கள் வந்து அவனை தூக்கி செல்லும் போது அவன் அமர்ந்திருந்த பெட்டியை திறந்து பார்கிறார்கள்.

அதில் விலை உயர்ந்த ஆபரணங்கள் இருப்பதாய் கண்டு வியந்து போனார்கள்.

இது தெரியாமல் அவன் வாழ்க்கை முழுவதும் பிச்சை எடுத்தான்.

 இது தான் தொழிலில் சிறை.

அவனுடைய தொழில் அவனை அடுத்த கட்டத்திற்கு நகரவிடாமல், சிந்திக்க முடியாமல் செய்துவிட்டது

இன்னொரு மனிதர் நிறைய பணம் சேர்த்து வீட்டுக்கு கீழ் பாதாளம் அமைத்து அதில் சேர்த்து வைத்திருந்தார்.

ஆனால் அவர் ஒரு நாள் கூட அதை சரி பார்கவே இல்லை.

இதை எப்படியோ தெரிந்து கொண்ட வீட்டின் வேலை ஆள் அந்த அறையின் அடுத்தப் பக்கத்தை ஓட்டை போட்டு எடுத்து செல்கிறார்.

அது இவருக்கு தெரியாமலேயே பணம் பத்திராமாக இருப்பதாக மகிழ்ச்சியாக  இருக்கிறார்.

எப்படி இருக்கிறது பாருங்கள் மனிதனின் மனம்.

ஒருவன் இருப்பது தெரியாமல் பிச்சை எடுக்கிறான்.

மற்றொருவன் இல்லாததை இருப்பதாக நினைத்து கொண்டு வாழ்கிறான்.

இப்படித் தான் அனைவரும் ஒவ்வொரு விதத்தில் இருப்பதை இல்லை என்றும், இல்லாததை இருப்பதாகவும் நினைத்து வாழும் கலையை தெரிந்து கொள்ளாமலே வாழ்வின் பயணம் முடிந்து போகும் நிலையும் நிலவுகிறது.

இதுவும் மாயையே

இருப்பது ஆன்மாவில் நிலை கொண்டுள்ள ஆனந்தம் என்னும் இறைநிலை.  அந்த ஆனந்தம் நம்மிடம் இல்லை என்று வெளியே தேடி அலைகிறோம்.

இல்லாதது "நான்" என்ற மாயை.  அதை இருப்பதாக பாவித்து இன்னலுக்கு ஆட்பட்டு அழிந்து போகிறோம்.

இது நன்றி சொல்லும் நேரம்

வீடு வீடாக பொருட்களை விநியோகிக்கும் அந்த சிறுவனுக்கு ரொம்ப பசித்தது. எதையாவது வாங்கி சாப்பிடலாம் என்றால் கையில் பணமே இல்லை. அருகில் இருந்த வீட்டில் ஏதாவது சாப்பிட கேட்கலாம் என்று நினைத்தான்.

அந்த வீட்டின் கதவைத் தட்டினான். ஒரு பெண் கதவைத் திறந்தாள். ஏதாவது கேட்கலாம் என்று நினைத்தான். ஆனால் கூச்சம். கேட்க மனம்வரவில்லை.

“கொ… கொஞ்சம் தண்ணி கிடைக்குமா குடிக்க?” தயக்கத்துடன் கேட்கிறான்.

அவள் சிறுவனின் கண்களில் இருந்த பசியை கவனிக்கிறாள். உள்ளே சென்றவள், ஒரு கப் பாலை கொண்டு வந்து கொடுத்தாள்.

பாலைக் குடித்து பசியாறிய சிறுவன் கேட்டான்… “நான் எவ்வளவு கடன்பட்டிருக்கிறேன்?”

“கடனா… அப்படி ஒன்றும் இல்லை. அன்பான செயலுக்கு விலை எதுவும் இல்லை என்று என் அம்மா சொல்லியிருக்கிறார்.” அவள் சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“ரொம்ப நன்றி…” சிறுவன் புன்னகையுடன் கடந்து சென்றான்.

ஆண்டுகள் கழிந்தன. கஷ்டப்பட்டு முட்டி மோதி படிப்பை முடித்த அந்த சிறுவன் மருத்துவம் படித்து அந்த நகரிலேயே மிகப் பெரிய டாக்டர் ஆனான்.அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கோ ஒரு கொடிய நோய் வந்தது.

அவர் பணியாற்றிய மருத்துவமனையிலேயே அவளும் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அந்த டாக்டரிடமே அவளுடைய பரிசோதனையும் வந்தது. மெடிக்கல் ரிப்போர்ட்டில் அந்த பெண்ணின் ஊர் பெயரை பார்த்ததும் அவருக்குள் ஒரு சின்ன மின்னல். விரைவாக வார்டுக்கு போய் அந்த பெண்ணை பார்த்தார். அவள் தான். தனது பசியாற்றிய அந்த தாயுள்ளம் தான்.

அன்று முதல் தனது அத்துனை உழைப்பையும் கவனத்தையும் செலுத்தி அந்த பெண்ணுக்கு சிகிச்சை அளித்தார். நீண்ட சிகிச்சைக்கு பின்னர் அவள் குணமானாள். பல லட்சங்கள் செலவானது. மருத்துவமனை அந்த பெண்ணுக்கு ஒரு நீண்ட பில்லை அனுப்பியது. இதை எப்படி கட்டப்போகிறோமோ என்று பதட்டத்துடன் அதை பிரித்தவள் திகைத்துப் போனாள்.

அந்த பில்லின் கடைசியில் கையால் எழுதப்பட்டிருந்தது.

“இந்த பில்லை நீங்கள் செலுத்தவேண்டியதில்லை. ஒரு கப் பாலில் உங்கள் கடன் முழுதும் தீர்க்கப்பட்டுவிட்டது. இது நன்றி சொல்லும் நேரம்!”

அவளுக்கு கண்கள் பனித்தன.

அந்த சிறுவன் வேறு யாருமல்ல… அமெரிக்காவின் மிகப் பிரபல மருத்துவராக விளங்கிய DR. HOWARD KELLY (1858-1943) தான்.

நான் என்னன்னெவோ சொல்ல நினைச்சேன் முடிவுல. ஆனா கீழே பாருங்க அத்தனையையும் நம்ம வள்ளுவர் ரெண்டே வரியில சொல்லிட்டார்.

அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி. (குறள் 226)

பொருள் : வறியவர்களின் பசியைப் போக்குங்கள். அது தான் செல்வம் பெற்ற ஒருவன் அது பிற்காலத்துக்கு தனக்கு உதவுமாறு சேர்த்து வைக்கும் இடமாகும்.

பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதை-Thanks to Whatup

மனசை தொட்ட பதிவு. ..!
இரண்டு மன்னர்களுக்குள் சண்டை. தோற்றவனிடம் வென்றவன் சொன்னான்.
”நான் கேட்கும் கேள்விக்கு சரியான பதிலைச் சொன்னால் உன் நாடு உனக்கே”.
°•○●
கேள்வி : ஒரு பெண் தன் ஆழ்மனதில் என்ன நினைக்கிறாள்?
(வென்ற மன்னனின் காதலி அவனிடம் இக்கேள்வியைக் கேட்டு விட்டு விடை சாென்னால் தான் நமக்கு திருமணம் என்று சாெல்லியிருந்தாள்).
°•○●
தோற்ற மன்னன் பலரிடம் கேட்டான்.விடை கிடைக்கவில்லை.கடைசியாக சிலர் சொன்னதால் ஒரு சூனியக்காரக் கிழவியிடம் சென்று கேட்டான்.
அவள் சொன்னாள்
விடை சொல்கிறேன். அதனால் அவனுக்கு திருமணம் ஆகும்; உனக்கு நாடு கிடைக்கும்.ஆனால் எனக்கு என்ன கிடைக்கும்?
அவன் சொன்னான், "என்ன கேட்டாலும் தருகிறேன்”
சூனியக்கார கிழவி விடையைச் சொன்னாள்,
♡♡♡ "தன் சம்பந்தப்பட்ட முடிவுகளைத் தானே எடுக்க வேண்டும் என்பதே ஒரு பெண்ணின் ஆழ்மனது எண்ணம்”.
°•○●
இப்பதிலை அவன் ஜெயித்த மன்னனிடம் சொல்ல, அவன் தன் காதலியிடம் சொல்ல, அவர்கள் திருமணம் நடந்தது. இவனுக்கு நாடும் கிடைத்தது.
அவன் சூனியக்கார கிழவியிடம் வந்தான்.வேண்டியதைக் கேள் என்றான்.
அவள் கேட்டாள்
"நீ என்னைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும்”
கொடுத்த வாக்கைக் காப்பாற்ற அவன் ஒப்புக் கொண்டான்.
உடனே கிழவி ஒரு அழகிய தேவதையாக மாறிக் காட்சி அளித்தாள்.
அவள் சொன்னாள்,
"நாம் வீட்டில் தனியாக இருக்கும் போது நான் கிழவியாக இருந்தால், உன்னுடன் வெளியே வரும்போது தேவதையாக இருப்பேன்;
ஆனால் நான் வெளியே உன்னுடன் வரும் பாேது கிழவியாக இருந்தால் வீட்டில் உன்னுடன் அழகிய தேவதையாக இருப்பேன்.
இதில் எது உன் விருப்பம்?” என்றாள்.
அவன் சற்றும் யோசிக்காமல் சொன்னான் "இது உன் சம்பந்தப்பட்ட விஷயம்; முடிவு நீ தான் எடுக்க வேண்டும்” என்று,
அவள் சொன்னாள், "முடிவை என்னிடம் விட்டு விட்டதால் நான் எப்போதும் அழகிய தேவதையாக இருக்கத் தீர்மானித்து விட்டேன்.!” என்றாள்.
°•○●
ஆம்!
பெண் அவள் சம்பந்தப்பட்ட முடிவுகளை அவளே எடுக்கும்போது தேவதையாக இருக்கிறாள். முடிவுகள் அவள் மீது திணிக்கப்படும் போது சூனியக்காரக் கிழவியாகி விடுகிறாள்.
அனைவரும் புரிந்து செயல்படுங்கள்!!!***

வரம் எதுவும் வேண்டாம் - Thanks to Whatsup

சிவனிடம் வரம் வேண்டாம் என்ற  முனிவர்.
படித்ததில் பிடித்தது.

முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர்.

மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.

“பார்த்தேன்” என்றார் பரமன்.

பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும்
வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.

வணக்கம், முனிவரே! என
வணங்கினர் அம்மையும் அப்பனும்.

முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.

சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் 'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.

அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,முனிவர் சிரித்தார்.

வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது
வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.

இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.

அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.

முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.

'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.

நீதி!
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர் களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.

கடவுள் தூங்குவதும் இல்லை.. துயரப்படுத்துபவரும் இல்லை..Thanks to Whatup

இந்த மான் கதை என்னைக் கவர்ந்தது

ஒரு கருவுற்ற மான் தன் மகவை ஈயும் ஒரு நிலை..

அது ஒரு அடர்ந்த புல் வெளியை கண்டது,
அதன் அருகே ஒரு பொங்கும் ஆறு.
இதுவே சரியான இடம் என்று அது சென்றது அங்கு.

அப்போது கருமேகங்கள் சூழ்ந்தன.

மின்னலும் இடியும் இசையாட்சி செய்ய ஆரம்பித்தன.

மான் தன் இடப்பக்கம் பார்த்தது..
அங்கே ஒரு வேடன் தன் அம்பை மானை நோக்கி குறி பார்த்து நின்று கொண்டிருந்தான்.
மானின் வலப்பக்கமோ பசியுடனான ஒரு புலி மானை நோக்கி வந்து கொண்டிருந்தது.

ஒரு கருவுற்ற மான் பாவம் என்ன செய்யும்? அதற்கு வலியும் வந்து விட்டது.மேலும் காட்டு தீயும் எரிய ஆரம்பித்து விட்டது.
என்ன நடக்கும்.?
மான் பிழைக்குமா?
மகவை ஈனுமா?

மகவும் பிழைக்குமா?

இல்லை காட்டு தீ எல்லாவற்றையும் அழித்து விடுமா?

வேடனின் அம்புக்கு இரையாகுமா?

புலியின் பசிக்கு புசியாகுமா?

மான், தீ ஒரு புறமும், பொங்கும் காட்டாறு மறு புறமும், மற்ற இருவரும் எதிர் புறமும்..
மான் என்ன செய்யும்?

மான் தன் கவனம் முழுதும், தன் மகவை ஈவதிலேயே செலுத்தியது..
* ஒரு உயிரை விதைப்பதிலேயே தன் கவனம் இருக்க, மற்ற சூழல் அதன் கண்களில் இல்லை.

அப்போது நடந்த நிகழ்வுகள்.......

மின்னல் தாக்கியதால் வேடன் கண் இழந்தான்.
எய்தப்பட்ட அம்பு புலியை தாக்கி அது இறக்கிறது
தீவிர மழை காட்டு தீயை அழித்து விடுகிறது..

அந்த மான் அழகான குட்டி மானை பெற்றெடுக்கிறது

நம் வாழ்விலும் இப்படிபட்ட சந்தர்ப்பங்கள் நிறைய வந்திருக்கிறது..
 வரும்..அச்சூழலில் பல எதிர்மறை சிந்தனைகள் நம்மை சுற்றி நின்று அச்சுறுத்தும்..
சில எண்ணங்களின் பலம் நம்மை வீழ்த்தி அவை வெற்றி பெற்று நம்மை வெற்றிடமாக்கும்...

நாம் இம்மானிடம் இருந்து மானிடம் கற்றுக்கொள்வோம்..
அந்த மானின் முக்கியத்துவம் முழுதும், மகவை பெற்றிடுவதிலேயே இருந்தது..மற்ற எதுவும் அதன் கை வசம் இல்லை..மற்றவற்றிற்கு அது கவனம் கொடுத்து இருந்தால் மகவும் மானும் மடிந்து இருக்கும்.

இப்போது உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள்..

எதில் என் கவனம்?
எதில் என் நம்பிக்கையும் முயற்ச்சியும் இருக்க வேண்டும்?

வாழ்வின் ஒரு பெரும் புயலில், எதில் கவனம் செலுத்த வேண்டுமோ அதில் செலுத்தி மற்றதை இறைவனிடம் விட்டு விடுங்கள்..
அவர் எப்போதும் எதிலும் நம்மை வருத்த செய்ய மாட்டார்.

கடவுள் தூங்குவதும் இல்லை..
துயரப்படுத்துபவரும் இல்லை..
உன் செயலில் நீ கவனம் செலுத்து..
மற்றவை நடந்தே தீரும்...

நன்றி

🙏🏻வாழ்க வளமுடன்🙏🏻
🙏🏻வாழ் நாளெல்லாம் 🙏🏻
💐💐💐💐🌺🌸🌸

வார்த்தையின் சக்தி-Thanks to Whastup

வார்த்தையின் சக்தி

ஒருவர் வெகுநாட்களாக கொடிய நோயால் பாதிக்கப்பட்டு அவதியுற்று வந்தார். ஒரு நாள் அவரைப் பார்க்க, சமய குரு ஒருவர் அவர் வீட்டிற்கு வந்தார். வாடிய உடலோடு, மனமும் சோர்வுற்ற நிலையில் இருந்தார் அந்த நோயுற்றிருந்த நபர். இதைப் பார்த்த சமய குரு, " நாம் அனைவரும் இவருக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வோம்" என கூறி மனமுருகி அவருக்காக வேண்டிக் கொண்டார். அங்கிருந்த அவரது நண்பர்களும், உறவினர்களும் அவரோடு இணைந்து கடவுளை வேண்டத் தொடங்கினார்கள்.

பிறகு அந்த சமய குரு, "இறைவனின் அருளால், நிச்சயம் உங்களுக்கு நோய் குணமாகி விடும். இத்தனை பேரும் உங்கள் நோய் குணமாக வேண்டி இருக்கிறார்கள். உங்களுக்கு உடல் நிலை சரியாகி விடும்" எனக் கூறினார்.

அந்த கூட்டத்தில் நாத்திகன் ஒருவன் இருந்தான். போதகர் சொன்னதைக் கேட்டதும் நக்கலாய் அவன் சிரிக்கத் தொடங்கினான்.

"வெறும் வார்த்தைகள் போய் அவனைக் குணப்படுத்துமா? அல்லது வெறும் சொற்கள் மாற்றத்தை ஏற்படுத்துமா?" என கூறி சிரித்தான்.

அதற்கு அந்த சமய குரு, "இந்தக் கூட்டத்திலேயே மிகப் பெரிய முட்டாள், மூடன், மூர்க்கன் நீங்கள் தான்" என சொன்னார்.

இதைக் கேட்டதும் அவன், "நீங்கள் கூறியதற்கு உடனே மன்னிப்பு கேளுங்கள். இல்லையே உங்களை அடித்து விடுவேன்" என்றபடி அடிக்கப் பாய்ந்தான்.

பதற்றமே இல்லாத அந்த சமய குரு, "முட்டாள், மூடன், மூர்க்கன் என்பது வெறும் சொற்கள் தானே, அவை உங்களை இப்படி மாற்றி விட்டதே, எப்படி? இந்தச் சொற்கள் உங்களை எப்படி தூண்ட முடிகிறதோ, அதே போல தான் நல்ல சொற்களால் பல மாற்றங்களை ஏற்படுத்த முடியும்" என்றார். இதைக் கேட்ட அவன் வெட்கித் தலை குணிந்தான்.

நம் எண்ணங்களுக்கும், வார்த்தைகளுக்கும் சக்தி உள்ளது என்பதை வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஆனால், பல நூறு வருடங்களுக்கு முன்பே, 'நல்லதையே நினை. நல்லதையே பேசு' என அழகாக நம் முன்னோர்கள், சொல்லி விட்டனர்.

Thursday, October 13, 2016

கடவுள் நம்பிக்கை!-Thanks to Whatsup

கடவுள் நம்பிக்கை!
*********

அது ஒரு சின்ன கிராமம்.

அந்த கிராமத்திலே ஒரு  கிருஷ்ணன் கோவில்.

அந்த கோவிலில் திருவிழா.

அந்த கிராமத்து மக்கள் எல்லாம் அங்கே கூடி இருந்தாங்க.  ஒரு கதை சொல்லற பாகவதர் கிருஷ்ணனின் அருமை பெருமையெல்லாம் கதையா சொல்லி கிட்டு இருந்தார்.

இந்த சமயம் பார்த்து ஒரு திருடன் ஊருக்குள்ள திருட வந்தான்.  இந்த ஊர்ல உள்ள அத்தனை பேரும்,  கோவில்ல இருக்காங்க.  நமக்கு நல்ல வேட்டைதான்.  வீட்டுக்கு வீடு புகுந்து கண்ணுல அகப்பட்டதை சுருட்ட வேண்டியதுதான் அப்படின்னு திட்டம் போட்டு வீடு வீடா புகுந்தான்.

அவன் கெட்ட நேரம் ஒரு வீட்டுல கூட,  உருப்படியா ஒன்னும் இல்லை.  என்னடா இது.......... இந்த ஊர்ல எல்லா  பயலும் பிச்சைகாரனா இருப்பான் போலிருக்கே.  அப்படின்னு யோசிச்சு கிட்டே கோவில் பக்கம் வந்தான்.

அங்கே யாராவது ஒரு ஏமாளி பய சிக்காமலா போய்டுவான் என்பது அவன் எண்ணம்.

பாகவதர் சுவாரஸ்யமா கிருஷ்ணன் கதையை சொல்லி கிட்டு இருந்தார்.

குழல் ஊதும் கிருஷ்ணன் இருக்கானே.... கொள்ளை அழகு.  அவன் கழுத்துல  தங்க மாலை போட்டு இருப்பான்.  இடுப்புல பட்டையா ஒட்டியாணம் மாதிரி வைரம் பதிச்ச பெல்ட் போட்டு இருப்பான்.

காதுல வைர கடுக்கன்.  கையில தங்க காப்பு.  கால்ல முத்து பதிச்ச தண்டை.  அட அட அட .... அப்படியே கண்ணனை பார்க்க கண் கோடி வேண்டும்.

இப்படி... கண்ணன் அழகை வர்ணிச்சார் பாகவதர்.   இதை கேட்டான் திருடன்.  அவனுக்கு கண்ணன் யாருன்னு எல்லாம் தெரியாது.  அவனுக்கு தெரிஞ்சது  எல்லாம் திருட்டு வேலை மட்டும்தான்.

அடடா...  அந்த பாகவதர் யாரோ ஒரு பணக்கார வீட்டு பையனை பற்றி சொல்றார்.  அவன் யார் வீட்டு பையன்னு கேட்டு,  நம் கை வரிசையை கட்ட வேண்டியதுதான்.  அப்படின்னு கதை முடியுற வரை காத்திருந்தான்.

கதை முடிஞ்சுது.. ஊர் மக்கள் எல்லாம் போன பிறகு,  மெல்ல பாகவதர் பக்கம் வந்தான் திருடன்.

ரொம்ப நேரமா ... ஒரு பையனை பற்றி சொன்னிங்களே அவன் யார்.  எங்கே இருப்பான்.  உடனே சொல்லு.  இல்லை உன்னை இந்த கத்தியாலேயே குத்தி கொன்னுடுவேன் அப்படின்னு மிரட்டினான்.

பாகவதருக்கு கை கால் எல்லாம் வெட வெடன்னு ஆரம்பிசுடிச்சு.  கடவுளே இது என்ன சோதனை.   நான் அந்த மாய கண்ணனை பற்றி அல்லவா கதை சொன்னேன்.  இந்த முட்டாள் திருடன் அதை உண்மைன்னு நம்பி வந்து கேட்கிறானே.

அப்படின்னு யோசித்தவர்...  அவனிடம் தப்பிக்க.... அதோ தெரியுதே சோலை,  அந்த சோலை பக்கம் தான் அந்த கண்ணன் விளையாட வருவான்.  போய் பிடிச்சுகோன்னு சொல்லி அப்போதைக்கு தப்பிச்சுட்டார்.

திருடனை பொறுத்தவரை பாகவதர் சொன்னது உண்மைன்னு நம்பினான்.  கண்ணன் வருவான் அப்படின்னு சோலைல போய் ஒளிஞ்சு இருந்தான்.

அவன் நினைவு எல்லாம்... கண்ணன் எப்போ வருவான்... கண்ணன் எப்போ வருவான் என்பதாகவே இருந்தது.

உண்மையா பாகவதர் சொன்ன மாதிரி கண்ணன் வந்தான்.  பாகவதர் சொன்ன மாதிரி நகை எல்லாம் போட்டு இருக்கானான்னு திருடன் பார்த்தான்.

உண்மைதான்...  அவர் சொன்ன அத்தனை நகையும் கண்ணன் போட்டு இருந்தான்.

மெல்ல சின்ன கண்ணன் பக்கம் போய்... அடேய் தம்பி... உன் நகை எல்லாம் அழகா இருக்கு.  அதை எனக்கு தருவியான்னு கேட்டான்.  கண்ணன் உடனே எல்லாத்தையும் கழட்டி கொடுத்துட்டான்.

நல்ல பையன்னு சொல்லிட்டு திருடன் நகையை எல்லாம் ஒரு மூட்டையா கட்டி எடுத்து கிட்டு பாகவதரை தேடி வந்தான்.

தன் வீட்டு வாசலில் இருந்த பாகவதர் தூரத்தில் வரும் திருடனை பார்த்துட்டார்.

அவருக்கு மறுபடியும் கை கால் எல்லாம் ஆட அரம்பிசுடிச்சு.  திருடன் போய் சோலைல பார்த்திருப்பான்.  கண்ணன் வந்திருக்க மாட்டான்.  அந்த கோபத்தோட வருவான்.  இவன் கிட்டே இருந்து எப்படி தப்பிக்கிறது... அவனும் நம்மளை பார்த்துட்டான் .. அப்படின்னு யோசிக்கும் போது,  திருடன் பக்கத்துல வந்து ரொம்ப நன்றி...  ரொம்ப நாளைக்கு பிறகு நல்ல வேட்டைன்னு சொன்னான்.

பாகவதருக்கு பயம் போயிடிச்சு.  என்னப்பா சொல்றேன்னார்.

உண்மைதான்... நீங்க சொன்ன மாதிரி  சின்ன கண்ணன் வந்தான்.  என்ன அழகு.  என்ன சிரிப்பு,  அவனை அப்படியே பார்த்துகிட்டே இருக்கலாம் போல இருக்கு.

நான் கேட்டதும் எந்த மறுப்பும் சொல்லாம அப்படியே கழட்டி கொடுத்துட்டான்.   இதோ அந்த நகை எல்லாம் இருக்கு.  உனக்கு கொஞ்சம் பங்கு தரவான்னு கேட்டான்.

பாகவதரால நம்பவே முடியலை.  என்ன சொல்றேன்னார். அவனை பார்த்தியான்னு கேட்டார்.

ஆமாம் சாமி.   உங்களுக்கு சந்தேகம் இருந்தா என் கூட வாங்க ... அந்த சோலைலதான் இன்னும் விளையாடி கிட்டு இருக்கான்.  வாங்க கட்டுறேன்னு சொன்னான்.

நம்பவே முடியாம பாகவதர் அவன் கூட போனார்.  சோலை கிட்டே வந்ததும் அதோ.... பாருங்க... சின்ன கண்ணன்... நீல வண்ணன் விளையாடிகிட்டு இருக்கான் பாருங்கன்னு சொன்னான்.

பாகவதர் கண்ணுக்கு எதுவுமே தெரியலை.  சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டது.

இது என்ன சோதனை...  என் கண்ணுக்கு தெரியலை... கேவலம் இந்த திருடன்  கண்ணுக்கு  தெரியுறியா கண்ணானு பாகவதர் அழவே ஆரம்பிச்சுட்டார்.

அப்போ .. அந்த திருடன் கையை பிடிங்கோனு ஒரு குரல் கேட்டது.  உடனே அவன் கையை பிடிச்சார்.  நீல வண்ண கண்ணன் அவர் கண்ணுக்கு தெரிஞ்சார்.

கண்ணா... இது தர்மமா... என் நினைவு தெரிந்த நாள் முதல் உன் கதையை சொல்றேன்.  அதை தவிர வேற எதுவுமே எனக்கு தெரியாது.  இது வரை எனக்கு தரிசனம் தராத நீ.... இந்த திருடன் கண்ணுக்கு தெரிகிறாய்.  அவன் கையை பிடித்த பிறகுதான் நீயே எனக்கு தெரிந்தாய்.

பாகவதரே.... உங்கள் வருத்தம் புரிகிறது.  ஆனால்... இத்தனை ஆண்டு காலம் என் கதையை சொன்னாலும்,  நான் வருவேன் என்ற எண்ணம் உங்களுக்கு வந்ததே இல்லை.  நான் இருக்கேனா இல்லையா என்பதே உங்களுக்கு சந்தேகம்தான்.

ஆனால் இந்த திருடன் அப்படி இல்லை.  நான் இருக்கேன் என்று நம்பினான்.  நான் வருவேன் என்று நம்பினான்.  அதனால் வந்தேன்.  கடவுள் பத்தி என்பதே நம்பிக்கைதான் என்று சொல்லி விட்டு கண்ணன் மறைந்து விட்டான்.

தி.பார்த்தசாரதி.
உடுமலைப்பேட்டை

Wednesday, October 5, 2016

இசைஞானி புதுமைகள் 28 -Thanks to Whats up Madurain group P Venkatesh

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼

இசைஞானி புதுமைகள் 28 !

🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼🎼
1. ஒரு பாடலை உருவாக்க வெளிநாட்டு பயணமோ, அழகான லொகேஷன்களோ, வார அல்லது மாதக்கணக்கில் நேரமோ இளையராஜாவுக்குத்
தேவைப்பட்டதில்லை. தென்றல் வந்து தீண்டும்போது... என்ற பாடலை உருவாக்க இசைஞானி எடுத்துக் கொண்டது வெறும் அரை மணி நேரம்தான்.

2. இளையராஜா வெறும் அரைநாளில் மொத்த ரீரிகார்டிங்கையும் செய்துமுடித்த படம் ''நூறுவாது நாள்"

3. சிகப்பு ரோஜாக்கள் படத்திற்கான ரீரிகார்டிங்கிற்கு ஆன மொத்த செலவு வெறும் பத்தாயிரம்.. மூன்றே நாளில் வெறும் ஐந்தே ஐந்து இசைக்கலைஞர்களை கொண்டு அந்த படத்திற்கு இசை சேர்க்கப்பட்டது

4. எல்லோரும் இசையை வாசித்துதான் காட்டுவார்கள். ஆனால் ராஜா மட்டும்தான் இசையை 'பக்கா' நோட்ஸாக இசைக் கலைஞர்களுக்கு எழுதியே கொடுப்பவர். அவர் நோட்ஸ் எழுதும் வேகம் பார்த்து சர்வதேச இசை விற்பன்னர்களே மிரண்டு போனது வரலாறு.

5. அமிர்தவர்ஷினி என்ற மழையை வரவழைப்பதற்கான தனித்துவமுடைய ராகத்தை ஒரு கோடைப்பொழுதின் பிற்பகலில் "தூங்காத விழிகள்
ரெண்டு" பாடலை அமைத்து மழையையும் வரவழைத்தவர் இசைஞானி

6. பாடலின் மெட்டும் அதற்கான 100% orchestration ஐயும் ஒருவரே செய்யும்போது கிடைக்கும் அத்தனை முழுமை! அத்தோடு ஒவ்வொரு வாத்தியத்தையும் வித்தியாசமாய் கையாளும் ஆளுமை மற்றும் பாங்கு, அதுவும் மற்றவர்களிடமிருந்து இவரை வேறுபடுத்திக்
காட்டுகிறது

7. இசைஞானி தான் முதல்மிறையாக ரீதிகௌளை என்ற ராகத்தை சினிமாவில் பயன்படுத்தினார் ."கவிக்குயில்" என்னும் படத்தில் "சின்ன
கண்ணன் அழைக்கிறான்" என்ற பாடல்தான் அது.

8. Counterpoint என்ற யுக்தியை சர்வதேச இசையின் நுட்பங்களை இசைஞானி சிட்டுக்குருவி படத்தில் இடம்பெற்ற "என் கண்மணி" என்ற பாடலில் பயன்படுத்தி வெற்றி கண்டவர்.

9. இந்தியத் திரை இசையில் காயத்ரி என்ற படத்தில்தான் முதன் முதலாக இசைஞானி "எலெக்ட்ரிக் பியானோ" உபயோகபடுத்தினார்.

10. இசைஞானி செஞ்சுருட்டி ராகத்தில் இசையமைத்த ஒரே பாடல் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு.

11. உலகில் வேறு எந்த இசையமைப்பாளரும் முயற்சி செய்திருக்கவே முடியாத விஷயம்., ஓர் இசையமைப்பாளர் ஏற்கனவே இசையமைத்து,
பாடல் வரிகள் எழுதப்பட்டு, படமாக்கப்பட்டு, அந்த சவுண்ட் ட்ராக்கை அப்படியே நீக்கிவிட்டு, அந்தக் காட்சியை மட்டும் அப்படியே வைத்துக்கொண்டு, உதட்டசைவு, உடலசைவு, காட்சித்தேவை அனைத்துக்கும் பொருத்தமாக புதிய இசையை எழுதி வியப்பின் உச்சிக்கு நம்மை அழைத்து சென்றவர் இசைஞானி ( ஹேராம் )

12. முன்பெல்லாம் பின்னணி இசைச்சேர்ப்பில் ஒரு ரீல் திரையிட்டு காண்பித்ததும் இயக்குனரோ மற்றவர்களோ இசையமைப்பாளரிடம் வந்து அமர்ந்து அந்த படத்தில் வந்ததுபோல போடுங்கள், இந்த படத்தில் வந்தது போல போடுங்கள் என்றெல்லாம் சொல்லிப் பின் இசைச்சேர்ப்பு முடிந்து, அது சரியில்லாமல் மறுபடி இசையமைப்பாளரே வேறு மாதிரி இசை சேர்ப்பார். ஆனால் இளையராஜாவிடம் அப்படி இல்லை. ஒரு ரீல்
திரையில் பார்த்தால் போதும் உடனே இசைக்குறிப்புகளை எழுத ஆரம்பித்து விடுவார். அதை வாசித்தாலே போதும். இப்படி வேண்டாம்,
வேறுமாதிரி போடுங்கள் என்று சொல்வதற்கான வாய்ப்பே இருக்காது.

13. இந்தியாவில் அல்ல ஆசியாவிலே முதன் முறையாக சிம்பொனி இசை அமைத்தவர் இசைஞானி, சிம்போனி கம்போஸ் பண்ண குறைஞ்சது
ஆறு மாசமாவது ஆகும். வெறும் 13 நாளில் மற்ற கம்போஸர்களை மிரள செய்தவர் இசைஞானி.

14. விசிலில் டியூன் அமைத்து அதை ஒலினாடாவில் பதிவு செய்து பின்பு பாடகரை வைத்து பாடிய பாடல் "காதலின் தீபம் ஒன்று".

15. படத்தின் கதையை கேட்காமல் பாடலுக்கான சூழ்நிலைகளை மட்டும் கேட்டு இசையமைத்த ஒரே படம், "கரகாட்டக்காரன்".

16. வசனமே இல்லாத காட்சியில் கூட, அந்த காட்சியை இசையால், மௌனத்தால் செழுமைபடுத்தி பார்வையாளர்களுக்கு கொண்டு போய்
சேர்க்க முடியும் என்பது ராஜாவிற்கு நன்றாக தெரியும். அதில் ராஜா கிரேட். இரண்டு பேர் மௌனமாக இருக்கும் காட்சியாக இருந்தால் கூட, அவர்களின் மன உணர்வுகளை கூட புரியாதவர்களுக்கும் புரிய வைத்துவிடுவார் ராஜா. அந்த அற்புதமான ஆற்றல் இளையராஜாவிற்கு உண்டு. இந்திய சினிமாவில் பின்னணி இசையில் நம்பர் ஒன் ஜீனியஸ் இளையராஜா.

17. ராஜா சார் ரீ-ரெக்கார்டிங் பண்றதுக்கு முன்னாடி ஒரு முறைக்கு இரண்டு முறை படத்தை பார்ப்பார், மூன்றாவது முறை படம் திரையில் ஆரம்பிக்கும்போது நோட்ஸ் எழுத ஆரம்பிச்சிடுவார், அவர் ஆரம்பிச்சு முடிக்கும்போது படம் கரெக்டா முடியும். அந்த அளவுக்கு எந்த இசையமைபாளராலும் நோட்ஸ் எழுத முடியாது.

18. இந்தியாவிலேயே பின்னணி இசை கேசட்டாக வந்து ஹிட்டான ஒரே படம் ‘பிள்ளை நிலா’

19. பருவமே புதிய பாடல் பாடு என்ற பாடலுக்கு தொடையில் தட்டி தாளத்திற்கு புதிய பரிமாணத்தை கொடுத்தவர் இசைஞானி

20. இந்தியாவில் முதல் முறையாக சிறந்த பிண்ணனி இசைக்கான விருதை வாங்கியவர் இசைஞானி ( பழசிராஜா )

21. இசைஞானி முதன் முதலாக 'ஸ்டீரியோ'' முறையில் பாடல்களை பதிவு செய்த படம் பிரியா.

22. 137 வாத்தியங்கள் பயன்படுத்தப்பட்ட பாடல் "சுந்தரி கண்ணால் ஒரு சேதி"

23. இசைஞானியின் பாடலுக்காக கதை எழுதிய வெற்றிக்கண்ட படங்கள் "வைதேகி காத்திருந்தால்", "அரண்மனைக்கிளி".

24. இந்தியாவுக்கு கம்ப்யூட்டர் இசையை அறிமுகப்படுத்தியவர் இசைஞானி ( புன்னகை மன்னன் )

25. “பஞ்சமுகி” என்றொரு ராகம் நமது ராகதேவனால் இயற்றப்பட்டுள்ளது.. ஆனால் இதுவரை அவர் இந்த ராகத்தினை எந்த பாடலிலும் பயன்படுத்தாமல் ரகசியமாக வைத்துள்ளார்..

26. பொதுவாக 2 அல்லது 3 நாட்களிகல் படத்திற்கான இசையமைப்பை முடித்துவிடுவார் ராஜா, ஆனால் அதிகபட்சமாக, அதாவது 24 நாள் பின்னணி இசைகோர்ப்புக்காக எடுத்துக்கொண்ட படம் ( காலாபாணி ) தமிழில் ( சிறைச்சாலை )

27. முன்பெல்லாம் கிட்டார், தபேலாக் கலைஞர்கள் உதவியுடன் ஆர்மோனியத்தை இசைத்து டியூன் உருவாக்குவார். அதற்கு பிறகு ஆர்மோனியத்தில் வாசித்துப் பார்ப்பதில்லை, கண்களை மூடிச் சிந்திப்பார், இசை வடிவங்கள் அவர் மூளையில் இருந்து புறப்படும். அவற்றை அப்படியே இசைக் குறிப்புகளாக எழுதிவிடுவார். ஆர்மோனியம் இல்லாமல் இசை அமைக்கும் இந்த ஆற்றல், இந்திய சினிமா இசை
அமைப்பாளர்களில் இவரிடத்தில் மட்டுமே இருக்கிறது என்பது பிரமிப்பான உண்மை.

28. ராஜா இசை வித்தகர் மட்டுமல்ல... அற்புதமான கவிஞர். காவியக் கவிஞர் வாலிக்கே வெண்பா கற்றுக் கொடுத்தவர். அதனால் ராஜாவை தனது 'குரு' என்றும் கூறி மகிழ்ந்தவர் வாலி.
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷

Tuesday, September 27, 2016

கர்ணன் பட இசை ஒரு ராக மதிப்பீடு Thanks to Praveen through Whatsapp

கர்ணன் பட இசை ஒரு ராக மதிப்பீடு:
           தமிழ் திரை உலகில் வந்த கர்ணன் திரைப்படம் ஒரு இசை காவியம் என்றால் மிகை ஆகாது. இந்த படத்தில் உள்ள டைட்டில் சாங் முதல் கடைசி பாடல் வரை உள்ள பாடல்கள் ஒவ்வொன்றும் கர்நாடக மற்றும் ஹிந்துஸ்தானி இசை கிளாச்சிக் ஆக உள்ள ராகங்களைக் கொண்டு நேர்த்தியாக அமைக்கப்பட்ட இசை. ஒவ்வொரு பாடலும் அந்தந்த ராகங்களுக்கு ஒரு ஷோ கேஸ் பாடலாக விளங்கும் வண்ணம் அவ்வளவு அற்புதமாக MSV /TKR  இரட்டையர் இசைத்திருப்பார்கள் ! அவற்றைப் பற்றி ஒரு சிறு கண்ணோட்டம் தான் இது. முதலில் :
    “பெற்றவர் வீதியில் பிள்ளையை விட்டெறிந்தால்
   குற்றமுடையோர் அந்த குழந்தைகளா ?
   பெற்ற மக்கள் சுற்றமும் அந்த சுய மதிப்பும் விட்டனரே
   அர்ப்பணம் செய்தோம் அவர்களுக்கு “ என்ற டைட்டில் .
1. முதலில் கர்ணனை  அறிமுகப்படுத்தி வரும் பாடலே அருமை. அது டைட்டில் சாங் : ‘மன்னவர் பொருள்களைக் கைக் கொண்டு நீட்டுவார் மற்றவர் பணிந்து கொள்வார் , மாமன்னன் கர்ணனோ தன் கரம் நீட்டுவான் மற்றவர் எடுத்துக் கொள்வார் .வலது கை கொடுப்பதை இடது கை அறியாமல் வைப்பவன் கர்ண தீரன்.வறுமைக்கு வறுமையை வைத்ததோர் மாமன்னன் வாழ்கவே வாழ்க வாழ்க ‘ என்ற இந்த பாடல் TMS பாடியது ; மோகன ராகம் !
2. துரியோதனன் அந்தப்புரத்தில் அவன் மனைவி பானுமதி பாடும் பாடல் களை கட்ட வரும் . அது என்னுயிர் தோழி கேளொரு சேதி இது தானோ உங்கள் மன்னவன் நீதி – என்று P.சுசீலா பாடல் : அருமையான பிருகாக்களுடன் வரும் – இதன் ராகம்: ஹமீர் கல்யாணி!
3. பிறகு கர்ணன் அங்க தேசத்து மன்னனாக மாறிய பிறகு அரியணை ஏறி அமரும் போது இரு புலவர்கள் பாடுவார்கள் . முதல் பாடல் சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் பாடிய  ‘மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம் ‘ என்ற பாடல் – இது ஹிந்தோளம் ராகம்.
4. கூடவே இன்னொரு புலவர் பாடுவது திருச்சி லோகநாதன் அவர்கள் பாடிய பாடல் : ‘நாணிச் சிவந்தன மாதரார் கண்கள் நாடு தோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள் , நற்பொருளை தேடி சிவந்தன ஞானியர் நெஞ்சம் – தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தன கர்ண மாமன்னன் திருக்கரமே’ – இது கானடா .
5. பிறகு தன் தந்தை சூர்யனை வழிபட கர்ணன் வருகிறான் – அங்கே அவன் தன் தந்தையை வணங்கி பாடும் பாடல் : ‘ஆயிரம் கரங்கள் நீட்டி அணைக்கின்ற தாயே போற்றி அருள் பொங்கும் முகத்தைக் காட்டி இருள் நீக்கும் தந்தாய் போற்றி ‘ என்று ஆதித்ய ஹ்ருதயம் ஸ்தோத்ரத்தின்  தமிழாக்க பாடலை TMS, சீர்காழி கோவிந்தராஜன் ,திருச்சி லோகநாதன் மற்றும் PBS அனைவரும் கோரஸ் ஆக பாடுகிறார்கள் . – இந்த ராகம் : ரேவதி. குறிப்பு : இந்த ரேவதி ராகம் தான் நாம் இன்று உச்சாடனம் செய்யும் வேத கோஷத்திற்கு அடிப்படை!
6. கர்ணன் இடம் கூடப்பிறந்த கவச குண்டலத்தைப் பறிக்க அர்ச்சுனனின் தந்தையாகிய இந்திரன் அந்தணர் வேடத்தில் வந்து யாசிக்கிறான்- அப்போது அவன் பாடிய பாடல்: ‘என்ன கொடுப்பான் எவை கொடுப்பான் என்றிவர்கள் எண்ணும் முன்னே பொன்னும் கொடுப்பான் பொருளும் கொடுப்பான் போதாது போதாது என்றால் – இன்னும் கொடுப்பான் இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன் , தன்னைக் கொடுப்பான் தன் உயிரும் தான் கொடுப்பான் தயாநிதியே – என்ற இந்த PBS பாடல் ஹம்சானந்தி ராகம்!
7. பிறகு கர்ணன் பிரம்மாஸ்திரத்தை பெறுவதற்காக பரசுராமரிடம் வித்தை கற்கிறான்- அப்படி பயிற்சி பெறும் போது சொல்லப்படும் ஸ்லோகம்- ‘குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மஹேஸ்வரஹ : இது வரும் ராகம் – மாயா மாளவ கௌளை (இது படத்தில் மட்டும் வரும் ஒரு சிறு பாடல்)
8. பிறகு கர்ணனும் சுபாங்கியும் சந்தித்த பிறகு பிரிந்த பிறகு சுபாங்கி கர்ணனை நினைத்து தன் அந்தப்புரத்தில் பாடும் பாடல் : கண்கள் எங்கே நெஞ்சமும்அங்கே – P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம் – சுத்த தன்யாசி
9. பிறகு கர்ணனும் சுபாங்கியும் ஒருவரை ஒருவர் நினைத்து கனவில் பாடும் ஒரு அற்புத பாடல் – ‘இரவும் நிலவும் வளரட்டுமே இனிமை சுகங்கள் பெருகட்டுமே –‘ அருமையான இந்த பாடல் அமைந்த ராகம்: சுத்த சாரங்கா!
இந்த பாடலை பாடியவர்கள் : TMS மற்றும் P. சுசீலா .
10. கர்ணன் தன் மாமனாரால் அவமதிக்கப்பட்டு வீடு திரும்பியதும் சுபாங்கி பாடுவது –‘ கண்ணுக்கு குலம் ஏது- P.சுசீலா பாடிய இந்த பாடல் அமைந்த ராகம்- பஹாடி !
11.  கர்ணன் மனைவி சுபாங்கியை அவள் தாய் வீட்டில் அழைத்து வர சொன்ன போது அவளை வழி அனுப்ப துரியோதனன் மனைவி பானுமதி பாடும் பாடல் : ‘போய் வா மகளே போய் வா ‘ இந்த பாடலை பாடியது சூலமங்கலம் ராஜலக்ஷ்மி – இந்த பாடல் ராகம்: ஆனந்த பைரவி.
12. கர்ணன் மனைவி சுபாங்கி கர்ணன் பேச்சைக் கேளாமல் தாய் வீடு சென்று தாய் வீட்டில் வளைகாப்பு நடத்திக்கொள்ள சென்றபோது தந்தையால் அவமதிக்கப் பட்டு கணவனிடம் திரும்பி வந்து துரியோதனன் மனைவி பானுமதியால் ஆதரிக்கப் பட்டு அவளை வாழ்த்தி பானுமதி பாடும் பாடல் :மஞ்சள் முகம் நிறம் மாறி மங்கை உடல் உரு மாறி கொஞ்சும் கிளி போல் பிள்ளை உருவானதே- இது ராக மாலிகை; முதலில் வருவது – காபி ராகம் ; பிறகு “மலர்கள் சூடி  “ என்று வருவது சுத்த சாவேரி.
13. பிறகு குருக்ஷேத்திர யுத்தம் துவங்கியவுடன் அர்ஜுனன் தன் உறவினர்கள் அனைவரையும் யுத்த களத்தில் தனது எதிரிகளாக பார்த்து மனம் தளர விட்டு தான் போர் புரியப் போவதில்லை என்று கிருஷ்ணனிடம் கூறி தன் காண்டீப வில்லை கீழே போட்டு அமர்ந்த போது கிருஷ்ணனால் உபதேசம் செய்யப் பட்ட போது வந்த பாடல் “மரணத்தை எண்ணி கலங்கிடும் விஜயா’  ! இந்த பாடலை இயற்றிய  கண்ணதாசனை எவ்வளவு பாராட்டினாலும் தகும் ! ஒரு சாதாரண பாமரனுக்கும் புரியும் வகையில் இந்த கீதோபதேசத்தின் சாராம்சத்தை சிறிய வார்த்தைகளில் வடித்து அவர் இந்த பாடலை இயற்றி இருக்கிறார்.இந்த பாடலுக்கு அட்சர லக்ஷம் பொற்காசுகள் கொடுக்கலாம் – அவ்வளவு சிறப்பான பாடல் ! இந்த பாடலை மனம் உருகும் வகையில் பாடிய சீர்காழி கோவிந்தராஜனை நாம் எப்படி பாராட்டுவது என்றே எனக்கு தெரியவில்லை .                 இந்த பாடல் அமைந்த ராகங்கள் : மரணத்தை எண்ணிக் கலங்கிடும் விஜயா- நாட்டை : என்னை அறிவாய் எல்லாம் எனது உயிர் என கண்டு கொண்டாய் – இது சஹானா ; புண்ணியம் இதுவென்று உலகம் சொன்னால் அந்த புண்ணியம் போகட்டும் கண்ணனுக்கே – இது மத்யமாவதி ! மொத்தத்தில் இந்த பாடல் ஒரு அருமையான ராக மாலிகை!
14. யுத்த களத்தில் அம்புகளால் வீழ்த்தப் பட்டு சாகும் தருவாயில் கர்ணன்  செய்த புண்ணியங்களின் பலனாக தர்ம தேவதையே கர்ணனை காப்பாற்றிக்கொண்டு இருக்கும் உச்ச கட்டத்தில் அவனிடம் ஏழை அந்தணன் போல் வேடமிட்டு அவன்  செய்த புண்ணியங்களை எல்லாம் தாரை வார்த்து கொடுக்க கிருஷ்ணன் யாசித்த போது சிறிதும் தயங்காமல் இப்போதும் தன்னால் கொடை செய்ய ஒரு அருமையான சந்தர்ப்பம் கிடைத்ததே என்று மகிழ்ந்து தன் தான பலன்களையெல்லாம் அருகில் யுத்த களத்தில்  தாரை வார்க்க நீர் இல்லாததால்  தன் குருதியினால் தாரை வார்த்துக் கொடுக்கும் முன் வரும் பாடல் “ உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காததென்பது வல்லவன் வகுத்ததடா ‘ இந்த பாடல் அமைந்த ராகம் : ஆஹிர் பைரவி என்கிற சக்ரவாகம் ! இந்த பாடலை பாடிய சீர்காழி கோவிந்தராஜன் இன்றளவும் நம்முடைய மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகை ஆகாது. இந்த படம் வந்து நாற்பது வருடங்கள் ஆகியும் இந்த பாடல் ஒலிக்காத இசை மேடையே கிடையாது என்று சொல்லலாம். இந்த பாடலின் இசையாகட்டும் இந்த பாடலில் உள்ள கருத்துக்களாகட்டும் நம்மை கண் கலங்கச் செய்து கொண்டிருக்கின்றன இன்றளவும் ! தி எவர் ஹிட் சாங் !!
(ஒரு குறிப்பு : இந்த பாடலில் வரும் செஞ்சோற்று கடன் தீர சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா..... வஞ்சகன் கர்ணனடா ! ‘’ என்று வருமே அது கிருஷ்ணரால் தரப்படும் ஒப்புதல் வாக்குமூலம். இது உண்மையில் மகாபாரத போர் கடைசியில் துரியோதனன் வீழ்ந்த பிறகு தன் மரணத்தை எதிர் பார்த்து அவன் கிருஷ்ணனை நிந்திக்கிற போது ‘கிருஷ்ணனும் ‘ஆமாம் , வஞ்சகத்தால் தான் நாம் ஜெயித்தோம். இந்த வெற்றி வஞ்சத்தால் தான் பெற்றது ‘ என்று கூறுகிறான். அதைக் கூறும் போது துரியோதனன் மேல் பூ மாரி பொழிகிறது. கோவிந்தனும் வெட்கித் தலை குனிகிறான் “.)
15. இந்த பாடலகளைத் தவிர படத்தில் வராத இன்னொரு அருமையான பாடல் ஒரு டூயட் “ மகாராஜன் உலகை ஆளுவான் அந்த மகா ராணி அவனை ஆளுவாள் “ இந்த பாடல் அமைந்த ராகம் : கரஹரப்ரியா ! இந்த பாடலை பாடியவர்கள் TMS /P.சுசீலா !
16. இந்த படம் முடிகையில் வரும் பாடல் ஒரு பகவத் கீதை ஸ்லோகம் .......
‘பரித்ராணாய சாதூனாம் விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம சம்ஸ்தாபனார்த்தாய சம்பவாமி யுகே யுகே “
“परिथ्रानाय  साधूनां विनाशाय च धुष्क्र्थां धर्म संस्थापनार्थाय संबवामि युगे युगे”
என்று வரும் ஒரு ஸ்லோகம் – நல்லவர்களை காப்பாற்றுவதற்கும் கெட்டவர்களை அழிப்பதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் அவதரிக்கிறேன் ‘ என்ற கீதையின் வாசகம் வரும் ராகமும் மத்யமாவதி !

Thursday, August 25, 2016

எது? உலக அதிசயம். Thanks to indru oru thaval face book


நான் தாஜ் மஹாலை பார்க்க சென்று இருந்தேன். பார்த்து திரும்பி பஸ்ஸில் வரும் பொழுது தாஜ் மஹாலை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவுமே இல்லை என்பதை போல் என்னுடன் பஸ்ஸில் பயணம் செய்தவர்கள் பேசி கொண்டார்கள். தாஜ் மஹால் மிக அழகான கட்டிடம் தான். அதை யாரும் மறுக்க முடியாது. ஆனால்?
தாஜ் மஹால் மட்டும் தான் உலகில் அழகான கட்டிடமா. அதை விட அழகான ஒரு கட்டிடம் உலகில் வேறு எதுவும் இல்லையா. ஏன்? இல்லை. நிறையவே இருக்கிறது. சரி உலக அதிசயம் என்றால் என்ன? ஒன்று உருவான பின் அதே போல் ஒன்றை உருவாக்க முடியாது என்பது தான் உலக அதிசயம்.
நெல்லையப்பர் கோவிலில் கல் தூனை தட்டினால் ச, ரி, க, ம, ப, த, நி என்கிற ஏழு இசை ஸ்வரங்கள் ஒலிக்கும். கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைத்தார்களே. அது உலக அதிசயம்.
திருப்பூரில் உள்ள குண்டடம் வடுக நாத பைரவர் கோவிலில். குழந்தை தாயின் வயிற்றில் இருக்கும் பொழுது. குழந்தை இந்த, இந்த மாதத்தில் இந்த, இந்த வடிவத்தில். இவ்ளவு விதமான Positions ல இருக்கும் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே கல்லில் சிற்ப்பங்களாக வடித்து வைத்துள்ளார்கள் என் முன்னோர்கள். அது உலக அதிசயம்.
அன்னியர் படை எடுப்பின் பொழுது கூட. இந்த அதிசய சிற்ப்பங்களை அவர்களால் சிதைக்க முடியவில்லை.
இன்றும் நிறைய கோவில்களில் சூரிய ஒளி குறிப்பிட்ட ஒரு தேதி, நேரத்தில் மாலை போல் வந்து சிவலிங்கத்தின் மீது விழும். அப்ப எவ்ளவு துல்லியமாக Measure செய்து ஆலயங்களை கட்டி இருப்பார்கள் என்று பாருங்கள். சில கோவில்களில் தினமுமே சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். வட சென்னையில் உள்ள வியாசர் பாடி ரவீஸ்வரர் சிவன் கோவிலில் 3 வேளையும் சூரிய ஒளி சிவலிங்கத்தின் மீது மாலை போல் வந்து விழும். இந்த கோவிலில் உள்ள சிவலிங்கம் எவ்ளவு ஆண்டுகள் பழமையான லிங்கம் தெரியுமா? ஐயாயிரம் ஆண்டுகள். இது உலக அதிசயம். மதுரை மீனாக்ஷி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில் சிற்ப்ப, கட்டிட வேலைபாடுகளில் உள்ள அதிசயங்களை பற்றி சொல்வதென்றால். அதற்கு எனக்கு இந்த ஒரு பிறவி பத்தாது.
ஓசோன் 20 ம் நூற்றாண்டில் கண்டு பிடிக்கப்பட்ட படலம். 700 ஆண்டுகளுக்கு முன்பே மதுரை மீனாக்ஷி அம்மன் கோவிலில் ஓசோன் படலத்தின் படம், அதன் முக்கியத்துவம், அதை நாம் எவ்வாறு பாதுக்காக்க வேண்டும் அனைத்தும் அங்கே வைக்கப்பட்டு உள்ளது. அது உலக அதிசயம். யாழி என்கிற மிருகத்தின் சிலை. பல பழங்கால கோவில்களில் இருக்கும். டைனோசர் போல். அதுவும் உலகில் வாழ்ந்து அழிந்த மிருகம் என்று சொல்கிறார்கள். சில பழம்கால கோவில்களில் உள்ள யாழி சிலையின் வாயில் ஒரு உருண்டை இருக்கும். அந்த உருண்டையை நாம் உருட்டலாம். ஆனால் ஆயிரம் குன்பூ வீரர்கள் ஒன்று சேர்ந்து முயற்சித்தாலும். யாழி வாயில் உள்ள உருண்டையை வெளியே உருவ முடியாது. அது உலக அதிசயம்.
இன்று தாஜ் மஹாலை விட மிகப்பெரிய மார்பிள் கட்டிடங்கள் உலகில் உருவாகி விட்டது. இன்று ஒரு வல்லரசு நாடு நினைத்தால். ஆயிரம் தாஜ் மஹாலை உருவாக்க முடியும். ஆனால் கல்லுக்குள் 7 ஸ்வரங்களை வைக்கும் அந்த வித்தையை. எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. வாயில் உள்ள உருண்டையை உருட்டலாம். ஆனால் உருவ முடியாது. இந்த வித்தையை இன்று எந்த வல்லரசாலும் செய்ய முடியாது. மிகப்பெரிய பிரும்மாண்ட கற் கோவில்களை. அழகிய கலை வேலைபாடுகளோடு உருவாக்குவது. இதை எந்த உலக வல்லரசாலும் செய்ய முடியாதது.
அது போல் ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவில் ஒரு வரலாற்று சிறப்பு மிக்கது. அக்கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாயில் ஒரு கதவு தென்படும். அதன் மூலம் கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.அன்றைய ராணிகளுக்காகவே கட்டப்பட்ட கிணறு அது.
அது போல் அக்கோவிலில் உள்ள கருவறையில் சுவர்களில் மரகதகற்கள் பதித்துள்ளனர். அதனால் வெளியே வெயில் அடித்தால் உள்ளே குளிரும். வெளியே மழை பெய்தால் உள்ளே கதகதப்பாக இருக்கும்.
அது போல் கோவில் மேற்கூரையில் ஒரு ஆள் பதுங்கும் உயரத்தில் பாதுகாப்பு பெட்டகம் உள்ளது. போர் காலத்தில் ஆயுதங்களும் படைவீரர்களும் பதுங்கும் வகையில் கட்டியுள்ளார் நமது ராஜேந்திர சோழர். மறதமிழரின் கட்டிடகலையை வாழ்த்துவோம்.
தமிழர் பண்பாட்டை போற்றி பாதுகாப்போம்.
[படித்ததை பகிா்ந்தது ]
முன்னோா்களின் திறமையையும்& கலைநயத்தையும் போற்றி தலை வணங்குவோம்
இம்மண்ணில் பிறந்தமைக்கு பெருமிதம் கொள்வோம்.
தாய் மண்ணே வணக்கம்.

Thursday, August 4, 2016

"கடவுளைக் கண்ணால் காண முடியுமா?'' திருமுருக கிருபானந்தவாரியார்

Thanks to Balaguru ratnam - Face book friend
"கடவுளைக் கண்ணால் காண முடியுமா?''
(திருமுருக கிருபானந்தவாரியார் சொன்ன குட்டிக்கதை)
"உன் கேள்விக்குப் பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி, தம்பீ! இந்த உடம்பை நீ கண்ணால் பார்க்கின்றாயா?''
"என்ன ஐயா! என்னைச் சுத்த மடையன் என்றா நினைக்கின்றீர்? எனக்கென்ன கண் இல்லையா? இந்த உடம்பை எத்தனையோ காலமாகப் பார்த்து வருகிறேன்.''
"தம்பீ! நான் உன்னை மூடன் என்று ஒருபோதும் சொல்ல மாட்டேன். நீ படித்த அறிஞன்தான். ஆனால் நீ படித்த அறிவில் விளக்கம்தான் இல்லை. கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும்.
காது இருந்தால் மட்டும் போதுமா? காது ஒலி கேட்பதாக அமைய வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும் திட்பமும் அமைந்திருத்தல் வேண்டும்.
உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?''
"ஆம். நன்றாகத் தெரிகின்றது.''
"அப்பா! அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'' "என்ன ஐயா! தெரிகின்றது, தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுவது? எல்லாம்தான் தெரிகின்றது?''
"அப்பா! எல்லா அங்கங்களும் தெரிகின்றனவா?'' "ஆம்! தெரிகின்றன.'' "முழுவதும் தெரிகின்றதா?'' அவன் சற்று எரிச்சலுடன் உரத்த குரலில் "முழுவதும் தெரிகின்றது'' என்றான்.
"தம்பீ! உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'' மாணவன் விழித்தான். "ஐயா! பின்புறம் தெரியவில்லை.''
"என்ன தம்பீ! முதலில் தெரிகின்றது தெரிகின்றது என்று பலமுறை சொன்னாய். இப்போது பின்புறம் தெரியவில்லை என்கின்றாயே.
சரி, முன்புறம் முழுவதுமாவது தெரிகின்றதா?''
"முன்புறம் முழுவதும் தெரிகின்றதே.'' "அப்பா! அவசரம் கூடாது. முன்புறம் எல்லாப் பகுதிகளையும் காண்கின்றாயா? நிதானித்துக் கூறு....''
"எல்லாப் பகுதிகளையும் காண்கின்றேன். எல்லாம் தெரிகின்றது.''
"தம்பீ! இன்னும் ஒருமுறை சொல். எல்லாம் தெரிகின்றதா? நன்கு சிந்தனை செய்து சொல்.''
"ஆம்! நன்றாகச் சிந்தித்தேச் சொல்கின்றேன். முன்புறம் எல்லாம் தெரிகின்றது.''
"தம்பீ! முன்புறத்தின் முக்கியமான முகம் தெரிகின்றதா?
மாணவன் துணுக்குற்றான்.
நெருப்பை மிதித்தவன் போல் துள்ளினான். தன் அறியாமையை எண்ணி வருந்தினான்.
பின்பு தணிந்த குரலில் பணிந்த உடம்புடன், "ஐயனே! முகம் தெரியவில்லை!'' என்றான்.
"குழந்தாய்! இந்த ஊன உடம்பில் பின்புறம் முழுதும் தெரியவில்லை. முன்புறம் முகம் தெரியவில்லை. நீ இந்த உடம்பில் சிறிதுதான் கண்டிருக்கிறாய். இருப்பினும் கண்டேன் கண்டேன் என்று பிதற்றுகின்றாய்.
அன்பனே! இந்த உடம்பு முழுவதும் தெரிய வேண்டுமானால் என்ன செய்ய வேண்டும், நீயே சொல்.''
"ஐயனே! இருநிலைக் கண்ணாடிகளின் இடையே நின்றால் உடம்பு இருபுறங்களும் தெரியும்.''
"தம்பீ! இந்த ஊன் உடம்பை முழுவதும் காண்பதற்கு இருநிலைக் கண்ணாடிகள் தேவைப்படுவது போல், ஞானமே வடிவாய் உள்ள கடவுளைக் காண்பதற்கும் இரு கண்ணாடிகள் வேண்டும்.''
"ஐயனே! அந்தக் கண்ணாடிகள் எந்தக் கடையில் விற்கின்றன? சொல்லுங்கள்.''
"அப்பனே! அவை கடையில் கிடைக்காது. வேதாகமத்தில் விளைந்தவை அவை அதில்தான் கிடைக்கும். ஞான மூர்த்தியைக் காண இருநிலைக் கண்ணாடிகள் வேண்டும்.
ஒரு கண்ணாடி திருவருள், மற்றொன்று குருவருள். இந்தத் திருவருள், குருவருள் என்ற இரு கண்ணாடிகளின் துணையால் ஞானமே வடிவான இறைவனைக் காணலாம்.
"தம்பீ! திருவருள் எங்கும் நிறைந்திருப்பினும் அதனைக் குருவருள் மூலமே பெற வேண்டும். திருவருளும் குருவருளும் இறைவனைக் காண இன்றியமையாதவை.'' அந்த மாணவன் தன் தவறை உணர்ந்து அவரின் காலில் விழுந்தான்

Saturday, July 16, 2016

நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே-Thanks to Siripparangam Face Book

தலைக்கனம் பிடித்த ஒரு பண்டிதர் இருந்தார்.
அடர்த்தியான புருவம் , பெரிய மீசை , அடிக்கடி மொட்டை போட்டுக் கொள்ளுவதால் ஈர்குச்சி போல் காணப்படும் முடிகளுடன் கூடிய தலை. இதுவே அவரது அடையாளம் ....
வீதியில் அவரைக் கண்டுவிட்டாலே மக்கள் ஓடி ஒளிந்து கொள்வார்கள்...
ஏனென்றால் கண்ணில் படும் யாராயிருந்தாலும் ஏதாவது கேள்வி கேட்டு மடக்கித் தமது வாதத்திறமையால் மட்டந்தட்டிவிடுவார். இதில் சிலர் அழுதுவிடுவது கூட உண்டு....
ஒரு நாள் அவருக்கு மட்டந்தட்ட யாருமே கிடைக்கவில்லை.
ஊர் எல்லை வரை வந்து விட்டார்....
அங்கே ஒரு மரத்தடியில் தொழில் செய்து கொண்டிருந்த ஒரு நாவிதரைப் பார்த்து விட்டார்....
அவரது உடைகள் நைந்து போய் அவரது வறுமையைக் காட்டினாலும், அதை அவர் சுத்தமாய்த் துவைத்து , நேர்த்தியாய் உடுத்தியிருந்த விதம் அவருக்கு ஒரு தனி கம்பீரத்தைக் கொடுத்தது....
இது பண்டிதருக்கு எரிச்சலை மூட்டியது. இன்று இந்த மனிதனைக் கதறி அழவைத்தே ஆகவேண்டுமென்று முடிவெடுத்து அவரது கடையை நெருங்கினார்....
" என்னப்பா ! முடி வெட்ட எவ்வளவு ? சவரம் பண்ண எவ்வளவு ?" என்றார்...
அவரும் "முடிவெட்ட நாலணா , சவரம் பண்ண ஒரணா
சாமி ! " என்று பணிவுடன் கூறினார்...
பண்டிதர் சிரித்தபடியே ,
"அப்படின்னா என் தலையை சவரம் பண்ணு " என்று கூறிவிட்டு வெற்றிப் புன்னகையோடு அமர்ந்தார்...
வயதில் பெரியவர் என்பதால் நாவிதர் அதைப் பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை. வேலையை ஆரம்பித்தார்...
பண்டிதருக்கு சற்று ஏமாற்றந்தான். நாவிதர் கோபப்படுவார் என்று எதிர்பார்த்திருந்தார். அவர் அமைதியாக இருக்கவே அடுத்த கணையைத் தொடுத்தார்...
" ஏன்டாப்பா ! உன் வேலை முடி வெட்டுறது . உன் கைகளைத்தான் பயன்படுத்தி வெட்டுறே. அப்புறம் எதுக்கு சம்மந்தமில்லாம உன்னை நாக்கோட சம்மந்தப் படுத்தி நாவிதன்னு சொல்றாங்க ? "
இந்தக் கேள்வி அவரை நோகடிக்குமென்று நம்பினார். ஆனால் நாவிதர் முகத்திலோ புன்னகை.

"நல்ல சந்தேகங்க சாமி .
நாங்க தொழில் செஞ்சா மாத்திரம் பத்தாது.
முன்னால உக்காந்து இருக்கறவங்களுக்கு அலுப்புத் தட்டாம இருக்க நாவால இதமா நாலு வார்த்தை பேசுறதனாலதான் நாங்க நாவிதர்கள்.
எங்க பேச்சைக் கேக்குறதுக்குன்னே எத்தனை பேர் எங்களைத் தேடி வராங்க தெரியுமா? "
இந்த அழகான பதில் பண்டிதரை மேலும் கடுப்பேற்றியது.
அடுத்த முயற்சியைத் துவங்கினார் .
" இதென்னப்பா , கத்தரிக் கோல்னு சொல்றீங்க. கத்தரி மட்டுந்தானே இருக்கு . கோல் எங்கே போச்சு ?''
இந்தக் கேள்விக்கு பலமான சிரிப்பு மட்டுந்தான் பதிலாக வந்தது.
"சாமி ரொம்ப சிரிப்பா பேசுறிங்க " என்று சொல்லி நிறுத்திக் கொண்டார்.....
இதிலும் பண்டிதருக்கு ஏமாற்றம் . கொஞ்சம் கடுமையாகவே ஆரம்பித்தார்...
" எப்பப் பாத்தாலும் வெட்டித் தள்ளிக்கிட்டே இருக்குற .
ஊர்லயே நீ தான் பெரிய வெட்டிப் பய போலருக்கு
இந்த வார்த்தை நாவிதர் மனதைக் கொஞ்சம் காயப்படுத்திவிட்டது...
அவர் முகத்தில் கொஞ்சம் வித்தியாசம் .

இதைத்தானே பண்டிதரும் எதிர்பார்த்தார். கொஞ்சம் உற்சாகமாகி அடுத்த நக்கலை யோசித்துக் கொண்டிருந்தார்....
இப்போது நாவிதர் பேச ஆரம்பித்தார். பண்டிதரின் பிரியமான மீசையைத் தொட்டுக் காட்டிக் கேட்டார் ,
"சாமிக்கு இந்த மீசை வேணுங்களா?"
பண்டிதர் உடனே ஆமாம் என்றார்.....
கண்ணிமைக்கும் நேரத்தில் பண்டிதரின் மீசையை வழித்தெடுத்து அவர் கையில் கொடுத்தார்.
"மீசை வேணுமுன்னிங்களே சாமி. இந்தாங்க " .
பல வருடங்கள் ஆசையாய் வளர்த்த மீசை இப்போது வெறும் மயிர்க் கற்றையாய். அதிர்ச்சியில் உறைந்து போனார்....
நாவிதரோ அடுத்த நடவடிக்கையில் இறங்கினார் . அவரது அடர்த்தியான புருவத்தில் கை வைத்தபடிக் கேட்டார்,
"சாமிக்கு இந்தப் புருவம் வேணுங்களா ?"
இப்போது பண்டிதர் சுதாரித்தார்.
"வேணும்னு சொன்னா வெட்டிக் கையிலல்ல குடுத்துடுவான் " . உடனே சொன்னார்.
"இந்தப் புருவம் எனக்கு வேண்டாம் . வேண்டவே வேண்டாம்".
நாவிதர் உடனே பண்டிதரின் புருவங்களையும் வழித் தெடுத்தார்...
"சாமிதான் புருவம் வேண்டாம்னு சொன்னீங்கள்ல? அதைக் குப்பைல போட்டுடுறேன். சாமி பேச்சுக்கு மறுபேச்சே கிடையாது ". என்றபடி கண்ணாடி அவர் முகத்துக்கு முன்பாகக் காட்டினார்....
நாற்பது வருஷமாய் ஆசை ஆசையாய் வளர்த்த மீசையில்லாமல் , முகத்துக்கு கம்பீரம் சேர்த்த அடர்த்தியான புருவமும் இல்லாமல் , அவருடைய முகம் அவருக்கே மிகுந்த கோரமாக இருந்தது....
கண்கள் கலங்கக் குனிந்த தலை நிமிராமல் ஒரணாவை அவர் கையில் கொடுத்து விட்டு நடையைக் கட்டினார்...
நம்முடைய அறிவும் திறமையும் மற்றவர்களுக்கு உதவுவதற்கே தவிர மட்டம் தட்ட அல்ல.
இதை உணராதவர்கள் இப்படித்தான் அவமானப்பட நேரும்....
பண்டிதருக்கு நேர்ந்த அவமானம் நமக்கு வேண்டாமே.

Friday, July 15, 2016

மனிதர்களின் சுவாசக்கணக்கு



ஸ்ரீமத் சத்குரு சாந்தானந்த சுவாமிகள் அருளிய   'கந்த குரு கவசம்'
கலியுகத் தெய்வமே கந்தனுக்கு மூத்தோனே
முஷிக வாகனனே மூலப் பொருளோனே........ இப்படி துவங்குகிறது.  

சூலமங்கலம் சகோதரிகள் குரலில் இவற்றை கேட்காதவர்களும், கேட்டு உருகாதவர்களும்  இல்லை என்று கூறலாம்.   இதில் 226 வது வரி இப்படி வருகிறது. 

சீக்கிரம் வந்து சிவசக்தியும் தந்தருள்வாய்
இடகலை பிங்கலை ஏதும் அறிந்திலேன் நான்
(Thanks to: http://www.kaumaram.com/text_new/kg_t_kavasam_u.html)

இடகலை பிங்கலை என்றால் என்ன.?   

சுழுமுனை மார்க்கமாய் ஜோதியை காட்டிடுவாய் என்பது 294 வது வரி 
சுழுமுனை என்றால் என்ன.?

இது சுவாசம் பற்றிய ஒரு சொற்றோடர். இனி கீழே விரிவாக பார்ப்போம்.

மேலும் சுவாசத்தை சூரிய நாடி என்றும் சந்திர நாடி என்றும் பிரிப்பர். இதை புரிந்து கொள்ள உதவிய இயற்கை மருத்துவர் உயர்திரு ஹரிஷங்கர், மதுரை அவர்களுக்கு நன்றி. 
(Doctor Mr.Harishankar, Keep fit Hospital, Shenoy Nagar, Madurai)

Thanks to : http://spy.ind.in/
SPY = SCIENTIFIC PRANA YOGA
Following content is copied from this site.

மனிதர்களின் சுவாசக்கணக்கு

ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்கு
கூற்றை உதைக்கும் குறிஅது வாமே - திருமந்திரம்
பதிணென் சித்திர்களில் ஒருவராக விளங்கும் திருமூலர் தமது திருமந்திரத்தில் கூறியுள்ள செய்தி ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 சுவாசம் வீதம் நாள் ஓன்றுக்கு
21,600 சுவாசங்களா உள்வாங்கி வெளியிடுவதாக குறிப்பு.

நாசித் துவாரங்கள் வழியாக உட்செல்லும் காற்றை சித்தர்கள் அங்குலக் கணக்கில் அளந்துள்ளனர். வலது நாசித்துவாரம் வழியாக போகும் போது 12 அங்குலமும்,
இடது நாசி வழியாகப் போகும் போது 16 அங்குலமும், இரு துவாரங்களின் வழியே இணைந்து சுழுனையில் சஞ்சரிக்கும் போது 64 அங்குலமும் உட்செல்கிறது. இதே போன்று வெளியேசெல்லும் காற்றையும் அளந்துள்ளனர். அமர்ந்து இருக்கும் போது 12 அங்குலமும், நடக்கும் போது 16 அங்குலமும், ஓடும்போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடலுறவின் போது 64 அங்குலமும் வெளியாகின்றன. மனித உடலில் சேமிப்பில் இருக்கும் பிராணன் அவரவர் செயலுக்கேற்ப அழிகின்றது என்பதை முன்சொன்ன கணக்கு தெளிவாக்குகிறது.


சுவாசத்திற்கும் மனித ஆயுளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. 12 அங்குலம் சுவாசம் உள்ளே செலுத்தி 4 அங்குலம் வெளியே விட்டு மிதமுள்ள 8 அங்குலம்
உள்ளே உலவச் செய்தால் 120 ஆண்டுகள் ஒரு மனிதன் வாழ முடியும் என்பது சித்தர்கள் கண்டறிந்த உண்மை. எனவே தான் பிராணாயாமத்தை நம் முன்னோர்கள்
முறையாகப் பழகி வந்துள்ளனர்.

மனிதனின் வெற்றி தோல்விகளையும், சுவாசம் நிர்ணயம் செய்கின்றது என ஞானசர நூல் விளக்குகிறது. 

1. இடது நாசியில் சுவாசம் நடக்கும் போது தாயின் உயிர்த்தன்மையின் செயல்பாடுகள் இயக்கத்துக்கு வரும் என்பது சித்தர்கள் கண்டுபிடிப்பு. எனவே இட நாடியின் சுவாசத்தை தாய் நாடி எனவும், பெண் நாடி எனவும், சந்திர நாடி எனவும், சந்திரகலை எனவும் அழைத்தனர். இட நாசியில் சுவாசம் நடைபெறும் போது அர்ச்சனை, குடமுழக்கு, திருமணம் போன்ற சுபநிகடிநவுகள் இயற்றிட உத்தமம்.  (இடகலை)

2. வலது நாசியில் சுவாசம் நடக்கும்போது தந்தையின் உயிர்ப்புத்தன்மையின் செயல்பாடுகள் நிகழும் நேரத்தை ஆண்நாடி எனவும், தந்தை நாடி எனவும், பிங்கலை எனவும், சூரிய நாடி எனவும், சூரியகலை எனவும் அழைத்தனர். இந்த நாடி செயல்படும்போது சங்கீதம், உபதேசம், கற்றல் ஆகிய பணிகளைச் செய்யலாம்.

3. சுழுமுனை, இரு நாசிகளிலும் சுவாசம் சமமாக ஓடும் போது இறைசிந்தனை, தியானம், பிராணயாமம் செய்வது நலம். பிறர் நலம் நாடி வேண்டினால் வெற்றி
உண்டாகும். இந்த சுழுமுனையை இறை நாடி எனவும், அலி நாடி எனவும், நடு நாடி எனவும் அழைத்தனர்.

ரேசகம் - உள் வாங்குதல்
பூரகம் - வெளி விடுதல்
கும்பகம் - உள்ளே நிறுத்துதல்

Wednesday, July 13, 2016

ஏந்திழை - இளையராஜாவின் அற்புதமான ஒரு சொல்லாடல்

நாடோடி தென்றல் என்ற ஒரு படம் (கார்த்திக் உடன் ரஞ்சிதா நடித்தது)

படம் : நாடோடி தென்றல் 
பாடல் : மணியே மணிக்குயிலே
இசை : இளையராஜா
பாடலாசிரியர்: இளையராஜா
பாடியவர்கள் : எஸ்.ஜானகி, மனோ

இந்த படத்தில் வரும் மேற்சொன்ன பாடல்  மணியே மணிக்குயிலே.  மிக அற்புதமான இசையமைப்புடன் வந்த பாடல். எங்கு ஒலித்தாலும் நின்று கேட்க தோன்றும்.  அதில் ஒரு வரி

கண்ணிமையில் தூண்டிலிட்டு..காதல் தனை தூண்டிவிட்டு
எண்ணி எண்ணி ஏங்க வைக்கும் ஏந்திழையே


இந்த வரிகள் என்னுடைய மனதில் ரீங்கரித்துகொண்டே  இருந்தது. நாம் தான் தப்பாக கேட்டுவிட்டோமோ. ஏந்திழை என்றொரு வார்த்தை இருக்குமா என்று ஒரு தயக்கம்.

இருந்தாலும் பார்ப்போமே என்று கொஞ்சம் இணையத்தில் துழாவினேன். ஆச்சரியம். இது ஒரு அற்புதமான சொல்லாடல்.  அபூர்வமான இலக்கிய சொல் என்று தெரிந்துகொண்டேன்.

பாமரன் எழுதும் பாடல் என்று சொல்லி ஒரு பா-அமரன் (பாட்டுக்கே தேவன்) என்று சொல்லவைக்கும் அளவுக்கு சொல் தேர்ந்திடுத்திருக்கிறார் இளையராஜா.

சரிதான்  ஏந்திழை என்ற சொல்லுக்கு என்ன பொருள். அழகிய ஆபரணங்களை அணிந்த பெண் என்பதுவாகும்.  கதாநாயகன் ஒரு தங்க ஆபரணம் செய்யும் தட்டனாக இருந்ததால் இந்த வார்த்தையை பயன்படுத்தினார் போலும். .

சரி இந்த சொல்லாடல் இலக்கியத்தில் எங்கு வருகிறது என்று பார்ப்போம்.

பெரிய திருமொழி - நாலாயிர திவ்ய பிரபந்தம் 
(1110)
சாந்தமும் பூணும் சந்தனக் குழம்பும் தடமுலைக் கணியிலும் தழலாம்,
போந்தவெண் திங்கள் கதிர்சுட மெலியும் பொருகடல் புலம்பிலும் புலம்பும்,
மாந்தளிர் மேனி வண்ணமும் பொன்னாம் வளைகளும் இறைநில்லா, என்தன்
ஏந்திழை யிவளுக் கென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.
நன்றி : http://dravidaveda.org/

பிற்சேர்க்கை 23-அக்டோபர்-2019

தேன்கிண்ணம் மற்றும் டீப்லிரிக்ஸ் என்கிற வலைப்பூக்களுக்கு  நன்றி தெரிவித்து இந்த பிற்சேர்க்கை இடுகையை பதிவிடுகிறேன் 

http://thenkinnam.blogspot.com/2008/05/446.html#comment-8281358860975972799
https://deeplyrics.in/song/naan-erikkarai-melirunthu

நான் ஏரிக்கரை மேலிருந்து எட்டு திசை பார்த்திருந்து
ஏந்திழைக்கு காத்திருந்தேன் காணல

என்கிற பாடல் கேட்க்கும் வாய்ப்பு கிடைத்தது அதிலும் இந்த ஏந்திழை என்கிற சொற்பதம் கிடைத்தது.

படம் : சின்னதாயீ 
நடிப்பு : விக்னேஷ் உடன் பத்மஸ்ரீ 
வருடம் : 1992
பாடியவர் : K  j  யேசுதாஸ்,  ஸ்வர்ணலதா 
எழுதியவர் : வாலி 
இசை : இளையராஜா 


ஒரு ஒற்றுமை .. நாடோடி தென்றல் திரைப்படமும் 1992 ல் வெளிவந்த படமே ... எனவே வாலியிடமிருந்து இளையராஜாவுக்கு இந்த சொல்லில் ஒரு ஈர்ப்பு வந்திருக்க வாய்ப்புள்ளது என்று நினைக்கிறேன்.  அதே சமயம் வாலி அவர்களுக்கு நாலாயிர திவ்ய பிரபந்தம் அத்துப்படி எனவே அவர்தான் இந்த சொல்லை முதலில் பயன்படுத்தினார் என நான் நம்புகிறேன் 




இந்த பதிவு நானே சொந்தமாக எழுதியது - ரமணன்






Tuesday, June 28, 2016

மனித உறவுகளை பலப்படுத்திக்கிறது-Thanks to SakthiVikatan-26Jun2016


மனித உறவுகளை பலப்படுத்திக்கிறது பத்திப் பேசிட்டிருந்தோம், இல்லையா? ஆமாம், இங்கே யாரும் தனியா வாழ்ந்துட முடியாது. வீம்புக்கு வேணா சொல்லலாம், நான் யாரை நம்பியும் இல்லை; எனக்கு எவன் தயவும் தேவையில்லைன்னு! ஆனா, நல்லா யோசிச்சுப் பார்த்தோம்னா, நாம சாப்பிடற ஒவ்வொரு பிடி சோறும் பலருடைய உழைப்பினாலயும் உதவியினாலயும்தான் நமக்குக் கிடைக்குது!
அன்பால கட்டப்பட்டதாகவும் அக்கறையினால நெய்யப் பட்டதாகவும் இருக்கிற சமுதாயம்தான் நம்மோட பலம். உறவுச் சங்கிலிகள் வலுவா இருந்தாதான் ஒரு சமுதாயம் முன்னேறும். இங்கே நான் உறவுன்னு சொல்றது மாமன், மச்சான் உறவுகளை இல்ல. மனித உறவுகளை! ஒவ்வொரு சக மனிதனும் நம் சொந்தம்; நமது பந்தம்.


சக மனிதனுடனான உறவுகளை மேம்படுத்திக்க பாசாங்கு இல்லாத அன்பும், ஆத்மார்த்தமான அக்கறையும் வேணும்.

சமீபத்துல ஒரு நியூஸ் கேள்விப்பட்டிருப்பீங்க. கால் டாக்ஸி கூப்பிட்டாராம் ஒருத்தர். வந்த டிரைவர், கார் டயர் பஞ்சராகி நடுவழியில நின்னதாலதான் இவர் நம்மளைக் கூப்பிட்டிருக்காருன்னு தெரிஞ்சு, அங்கேயே அப்பவே டயரை மாத்திக் கொடுத்தாராம். “வேணாம்ப்பா! டயர் மாத்தணும்னா அரை மணி, முக்கா மணி ஆகும். இதை அப்புறமா பார்த்துக்கலாம்”னு இவர் சொல்லியும், “இல்ல சார், இதோ இப்ப மாத்திடலாம்”னு சொல்லி, இருபதே நிமிஷத்துல ஸ்டெப்னி டயரை மாத்திக் கொடுத்து, அவர் தன்னோட கார்லேயே ஆபீஸுக்குப் போகும்படியா பண்ணிட்டாராம். டயர் மாத்திக் கொடுத்ததுக்காகப் பணம் கொடுக்க இவர் முன்வந்தப்போகூட, “வேண்டாம் சார், இதெல்லாம் ஒருத்தருக்கொருத்தர் செய்துக்கற ஹெல்ப்தானே!”னு மறுத்துட்டாராம் அந்த டிரைவர். ‘இந்தக் காலத்துல இப்படியும் ஒரு மனுஷனா!’ன்னு ஃபேஸ்புக்ல கொண்டாடுறாங்க அவரை.

சில மாசங்களுக்கு முன்னால ஒரு நியூஸ் படிச்சேன். சென்னை, எக்ஸ்பிரஸ் அவென்யூ ஷாப்பிங் மால்ல பார்க்கிங் பண்ணியிருந்த தன்னோட பைக்கை எடுக்க வரும்போது, அதன் டெயில் லைட் உடைஞ்சிருந்ததைப் பார்த்து ஷாக்காயிட்டார் ஒருத்தர். யாரோ தன் வண்டியை ரிவர்ஸ் எடுக்கும்போது மோதி உடைச்சிருக்கணும்னு புரிஞ்சுடுச்சு. கடுப்பாகி, முகம் தெரியாத அந்த நபரைக் கன்னாபின்னானு திட்ட வாய் வரைக்கும் வார்த்தை வந்துடுச்சு இவருக்கு. அப்பத்தான் பார்த்தாரு, உடைஞ்ச லைட்டுக்குள்ளே ஏதோ பேப்பர் சுருட்டி வெச்சிருந்துது. 

எடுத்துப் பிரிச்சாரு. ‘ஸாரி சார், தெரியாம உங்க பைக் லைட்டை உடைச்சிட்டேன். ரொம்ப ஸாரி! இதுல 500 ரூபா வெச்சிருக்கேன். உங்க லைட்டை சரி பண்ணிக்குங்க!’ன்னு எழுதி, கூடவே 500 ரூபா நோட்டு ஒண்ணும் வெச்சிருந்தான் அவன். சட்டுனு இவரோட கோபம் தணிஞ்சிருச்சு. ரூபா பெரிசில்லை; நாம உடைச்சதை யாரும்தான் பார்க்கலையே, நமக்கென்னன்னு அப்படியே போகாம, ஸாரி கேட்டு அவன் ஒரு சின்ன குறிப்பு எழுதி வெச்சிருந்ததுதான் இவர் மனசைத் தொட்டுடுச்சு.

நம்ம ஜனங்ககிட்டே இந்த மாதிரியான மேன்மையான குணங்களெல்லாம் ஒரேயடியா காணாம போயிடலை; இன்னமும் இருக்கத்தான் செய்யுதுன்னு இந்த மாதிரியான சின்னச் சின்ன சம்பவங்கள் மூலமா தெரிய வர்றப்போ, உள்ளூர ஒரு சந்தோஷம் வருது; நம்ம சமூகத்து மேல ஒரு நம்பிக்கை வருது. இந்த குணங்களை இன்னும் வளர்த்தெடுக்கணும். தப்பு யார் மேல வேணா இருக்கட்டும், ஸாரி கேக்கறதுனால ஒண்ணும் கொறைஞ்சு போயிட மாட்டோம்கிற எண்ணம் வரணும். விட்டுக் கொடுத்தவன் கெட்டுப் போவதில்லை.

பொம்மைகள் விக்கிற ஒரு கடை. எட்டு வயசுள்ள ஒரு சின்ன பெண்ணும், அவளோட அஞ்சு வயசு தம்பியும் அந்தக் கடையை கிராஸ் பண்ணிப் போனாங்க. அந்தப் பொண்ணு மட்டும் சட்டுனு நின்னு, ரெண்டு ஸ்டெப் பின்னாடி வந்து அந்தக் கடையையும், அதுல அலங்காரமா அடுக்கியிருந்த பொம்மைகளையும் வெச்ச கண்ணு வாங்காம பார்த்தா. அவ கண்ணுல ஏக்கமான ஏக்கம். அந்தக் குட்டிப் பையன் அதைக் கவனிச்சுட்டான். “என்ன, உனக்கு அந்த பொம்மை வேணுமா?”ன்னு பெரிய மனுஷன் மாதிரி கேட்டான். அவ ஆமான்னு தலையாட்டினா. “சரி, வா!”ன்னு அவளைக் கடைக்குக் கூட்டிட்டுப் போனான் அந்தப் பையன்.  

“உனக்கு என்ன பொம்மை வேணும், சொல்லு?”னு கேட்டான். அந்தப் பொண்ணு ஒரு பொம்மையைக் காண்பிக்க, அதை சுவாதீனமா எடுத்து அவகிட்டே கொடுத்துட்டு, கடைக்காரரைப் பார்த்து, “எவ்ளோ சார் இந்த பொம்மை விலை?”ன்னு கேட்டான் அந்தப் பையன். 

ஆரம்பத்துலேர்ந்தே அந்தக் குட்டிப் பையனோட பெரிய மனுஷ தோரணையைப் பார்த்து மனசுக்குள்ளே ரசிச்சுட்டிருந்தார் அவர். ஏதோ அவர் விலையைச் சொன்னதும் பர்ஸ்லேர்ந்து நோட்டு நோட்டா எடுத்துக் கொடுத்துடறவன் மாதிரி அவன் பெரிய மனுஷ தோரணையில் கேட்கவும், ஒரு புன்னகையோடு, “நீ எவ்வளவு தருவே?”ன்னு கேட்டார். 

அவன் தன் டிராயர் பைக்குள் கை விட்டு, கடற்கரை மணல்ல பொறுக்கின சின்னச் சின்ன கிளிஞ்சல்களை வெளியே எடுத்து, அவர் மேஜை மீது பரப்பினான். அவரும் சீரியஸா பணத்தை எண்ணுறவர் மாதிரியே அந்தக் கிளிஞ்சல்களை ஒவ்வொண்ணா எண்ணினார். அப்புறம் அவனைப் பார்த்தார்.

அவன் முகம் வாடிப் போச்சு. “என்ன சார், பணம் குறையுதா?”ன்னு கவலையோடு கேட்டான். “சேச்சே! அதெல்லாம் இல்லே. நிறையவே இருக்கு”ன்னவர், ஒரு ஐந்தாறு கிளிஞ்சல்களை மட்டும் தன் பக்கம் நகர்த்திக்கிட்டு, “இதுதான் இந்த பொம்மை யோட விலை. மீதிப் பணமெல்லாம் உனக்குதான்”னார். அந்தப் பையன் ரொம்ப குஷியா அந்தக் கிளிஞ்சல்களை எடுத்துத் தன் டிராயருக்குள்ளே போட்டுக்கிட்டு, அக்காவோடு நடையைக் கட்டினான்.

இதைப் பார்த்துட்டிருந்த கடைப் பணியாள் ஒருத்தனுக்கு ஆச்சரியம் ப்ளஸ் குழப்பம்! அவன் தன் முதலாளியைப் பார்த்து, “என்னங்க ஐயா, விலை உசத்தியான அந்த பொம்மையை அந்தப் பையனுக்கு வெறும் அஞ்சு கிளிஞ்சலுக்கு வித்துட்டீங்க?”ன்னு பொறுக்கமாட்டாம கேட்டான்.

“அடேய், நமக்குத்தான் அது வெறும் கிளிஞ்சல். அந்தப் பையனைப் பொறுத்த வரைக்கும் அது பெரிய பொக்கிஷம். இந்த வயசுல அந்தப் பையனுக்குப் பணம்னா என்னன்னு தெரியாது; அதோட மதிப்பு புரியாது. பெரியவனாகும்போது கண்டிப்பா புரிஞ்சுப்பான். அப்போ, சின்ன வயசுல நாம நம்ம அக்காவுக்குப் பணத்துக்குப் பதிலா வெறும் அஞ்சே அஞ்சு கிளிஞ்சல்களைக் கொடுத்து ஒரு பொம்மையை வாங்கிக் கொடுத்தோமேனு அவனுக்கு ஞாபகம் வரும். அப்போ, இந்தக் கடையைப் பத்தியும் என்னைப் பத்தியும் நினைப்பான். இந்த உலகம் நல்ல மனிதர்களால் நிரம்பியதுதான்னு அவன் மனசுல ஓர் அழுத்தமான எண்ணம் விழும். அந்த பாஸிட்டிவ் எண்ணத்தை அவன் மத்தவங்களுக்கும் பரப்புவான். எனக்கு அதுதான் வேணும்!”னு சொல்லிட்டுப் புன்னகைச்சார் அந்தக் கடைப் பெரியவர்.
உண்மைதானே? மேலே சொன்ன அந்த டாக்ஸி டிரைவரும், ஸாரி கேட்டு லைட் ரிப்பேர் செலவுக்குப் பணம் வெச்சுட்டுப் போன முகம் தெரியாத அந்த நபரும் அப்படியான பாஸிட்டிவ் எண்ணங்களைத்தானே பரப்பிட்டுப் போயிருக்காங்க! அதுக்காக அவங்களுக்கு என்னோட மகிழ்ச்சியையும், மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவிச்சுக்கறேன். 

‘ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒரு சேதி கொண்டு வருகிறது; கடவுள், மனித இனத்தை இன்னும் வெறுக்கத் தொடங்கவில்லை என்கிற சேதியே அது’ன்னு புகழ்பெற்ற ஒரு வசனம் உண்டு. அது மாதிரி, இந்த பொம்மைக் கடைக்காரர், டாக்ஸி டிரைவர் மாதிரியான நபர்களைப் பத்தின செய்திகள் வெளியாகுறபோதெல்லாம், மனித நேயம் முற்றிலுமாகத் தொலைஞ்சு போயிடலை; இன்னும் பல இடங்கள்ல அது உயிர்ப்புடன் தான் உலவிக்கிட்டிருக்கு என்கிற நம்பிக்கை விதை தூவப்படுதுன்னு நினைக்கிறேன்.  

Friday, June 17, 2016

சாமானியனின் சாதனை!-இளம்பகவத் - IAS -சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில்

சாமானியனின் சாதனை!

Thanks to Vikatan
http://www.vikatan.com/article.php?module=magazine&aid=119551&utm_source=vikatan.com&utm_medium=search&utm_campaign=1
அதிஷா
ளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?' எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை. 

இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத். 

ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.
அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை. 

தன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது. 

‘`வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.
ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார். 

‘`நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது'. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை’’ என்கிறார் இளம்பகவத்.
அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில்  குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத். 

2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்' என நினைத்தார்.  

`இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்’ எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலமாக நிறைவேறிவிடவில்லை. 

‘`என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.
2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில் 
குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல... ஐ.ஏ.எஸ்! 

2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத். 

இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர். 

 தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம். 

‘`அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்’’ என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள். 

‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்'’ எனப் புன்னகைக்கிறார் இளம் ஐ.ஏ.எஸ் இளம்பகவத்!

Thursday, June 16, 2016

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! #ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்


Thanks to Vikatan
http://www.vikatan.com/cinema/tamil-cinema/pokkisham/65252-actirulokchandar-memorial-article.art

முதன்முதலாக ஆஸ்கருக்கு சென்ற தமிழ்ப்படத்தின் இயக்குநர் இவர்! #ஏ.சி.திருலோகச்சந்தர் நினைவலைகள்

'அவருக்கு பதில் இவர்' என்று டிவி சீரியல்களில் சர்வ சதாரணமாக கதாபாத்திரங்களுக்கு ஃபிரேம் போட்டு மாட்டிவிடுகிறார்கள் இன்று. ஆனாலும் அது கதையோட்டத்தில் சிறு கீறலையாவது ஏற்படுத்தத்தான் செய்கிறது. ஆனால் சுமார் 35 வருடங்களுக்கு முன் திரைப்படம் ஒன்றில் அந்த விஷப்பரீட்சையை நிகழ்த்தவேண்டிய நிர்பந்தம் ஒரு பிரபல இயக்குனருக்கு உருவானது. அந்த திரைப்படம்தான் 'அவருக்கு பதில் இவர் ' கலாச்சாரத்தை துவக்கி வைத்த முதல் திரைப்படம்.
பெரிய இயக்குனரின் தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் வெளியான அந்தத் திரைப்படம் முக்கால் பாகம் முடிந்திருந்த நிலையில், வெளிநாட்டிற்குக் கலைநிகழ்ச்சி ஒன்றிற்கு புறப்பட்டுச் சென்ற கதாநாயகி மறுநாள் விமான விபத்தில் மரணமடைந்த தகவல் வந்து சேர்ந்தது. பழகிய ஒரு பெண் மரணமடைந்த சோகம் ஒரு பக்கம். இனி படத்தின் நிலை என்ன என்ற குழப்பம் ஒரு பக்கம்.  லட்சங்களில் படமெடுத்துவந்த அந்தக்காலத்தில் பல லட்சம் முதலீடு முடங்கிப்போனால் அது ஒரு தயாரிப்பாளரின் வாழ்வை முடித்துவிடும். சோர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர்.

சில மாத ஓய்வுக்குப்பின் படத்தின் கதாநாயகன் சிவகுமார் அந்த இயக்குனரை தேடி வந்தார். தான் ஒரு நடனக்குழு பெண்ணைக் கண்டதாகவும் அவர் ஒரு சாயலில்  கதாநாயகிபோல இருப்பதாகச் சொல்ல நிமிர்ந்து உட்கார்ந்தார் இயக்குனர். அந்தப் பெண்ணை வைத்து மீதிப்படத்தை முடித்தார். படத்தைப் பார்த்தவர்கள் இரண்டு பெண்களுக்கும் இடையே குறைந்தபட்சம் 6 வித்தியாசங்களைக் காணக் கூடத் திணறினர். அத்தனை தத்ரூபம். பாராட்டு முழுவதும் அந்த இயக்குனரை போய்சேர்ந்தது. காரணம் வித்தியாசம் தெரியாதபடி திட்டமிட்ட கேமிரா கோணங்கள், வசன பாணி, நடை, உடை பாவனை என அத்தனையும் மாற்றி பழைய கதாநாயகியாகவே அந்தப் பெண்ணை உலவ விட்டிருந்தார் திரையில்.
அந்த இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர். ஆற்காடு செங்கல்வராய முதலியார் திருலோகசந்தர்தான், ஏ.சி.டி என அந்நாளில் அழைக்கப்பட்ட ஏ.சி.திருலோகசந்தர். நெடுநெடு உயரம், கம்பீரத் தோற்றம், பின்னோக்கி வாரப்பட்ட படர்ந்த தலைமுடி, இதுதான் ஏ.சி.டி.
தமிழ், தெலுங்கு, மலையாளம் என மும்மொழிகளிலும் 60 க்கும் மேற்பட்ட படங்களை இயக்கிய ஏ.சி திருலோகசந்தர் தனது 86 வயதில் நேற்று காலமானார்.
சென்னை புரசைவாக்கத்தில் செல்வந்தர் குடும்பத்தில் பிறந்த திருலோகசந்தரை ஐ.ஏ.எஸ். ஆக்க விரும்பியது அவரது குடும்பம். ஆனால் விதி வேறுவிதமாக அவரது வாழ்க்கையை மாற்றியது. ஆங்கில நாவல்கள் படிப்பதில் ஆர்வம் கொண்ட அவரது தாயார் சிறுவயதில் ஏ.சி.டியை படிக்கச் சொல்லிகேட்பது வழக்கம். இந்த பழக்கம் திருலோகசந்தரையும் வாசிப்பு பழக்கத்திற்கு அடிமையாக்கியிருந்தது. படிக்க ஆரம்பித்தவர் எழுத ஆர்வம் கொண்டார். பள்ளிவயதிலேயே சந்திரா என்ற புனை பெயரில் பத்திரிகைகளுக்குக் கதை, கட்டுரை எழுத ஆரம்பித்தார். அந்நாளில் எழுதி அகில இந்திய வானொலியில் அவர் பெற்ற சம்பளம் பத்து ரூபாய். அன்று இதில் சில சவரன் நகைகளை வாங்கிவிடலாம்.
எழுத்தார்வத்தோடு படிப்பிலும் கெட்டிக்காரராக இருந்தார் ஏ.சி.டி. பள்ளிப்படிப்புக்குப்பின் கல்லுாரிப்படிப்பை முடித்து  ஐ.ஏ.எஸ் தயாரானவருக்கு வயது காரணமாக அந்த வருடம்  ஐ.ஏ.எஸ் எழுத முடியவில்லை.
பக்கத்து தெருவில் வசித்துவந்த பள்ளி நண்பன் ராஜகோபாலின் வீட்டிற்கு அவர் அடிக்கடி செல்வது வழக்கம். அவரது தந்தை பத்மநாப ஐயர் அப்போது திரைப்படம் தயாரித்துவந்தார். குமாரி என்ற அந்த படம் துவங்கும் தருவாயில் இருந்தது. படத்தின் இயக்குனரும் அவரேதான். எழுத்தார்வம் உள்ள தன் நண்பனை பற்றி ராஜகோபால் தன் தந்தையிடம் ஏற்கனவே சொல்லிவைத்திருந்ததால் ஒருநாள், 'என் படத்தில் பணியாற்றச்சொல்' என அவர் கூப்பிட்டனுப்பினார். தனக்கு ஐ.ஏ.எஸ் படிக்கவே ஆசை என அந்த வாய்ப்பை மறுத்தார் ஏ.சி.டி. 'இன்னும் ஒரு வருடம் இருக்கிறதல்லவா அதற்குள் படம் முடிந்துவிடும். பிறகு படிக்கப்போகலாம்' என நண்பன் வற்புறுத்த,  படத்தின் உதவி இயக்குனர்களில் ஒருவராக சேர்ந்தார் ஏ.சி.டி.

பெயருக்குதான் உதவி இயக்குனர் வேலை. ஆனால் படத்தின் எல்லா வேலைகளையும் அவர் செய்யவேண்டியிருந்தது. திரைப்படம் என்ற கவர்ச்சி மீடியத்தை அவர் புரிந்துகொள்ள அந்த பணிகள் உதவியாக இருந்தது அவருக்கு.
படத்தின் கதாநாயகன் அப்போது வளர்ந்துவந்துகொண்டிருந்த நடிகர் எம்.ஜி.ராம்சந்தர். ஆம் அப்போது எம்.ஜி.ஆரின் பெயர் அதுதான். படப்பிடிப்பில் ராஜ உடையில் நடிக்கவேண்டிய எம்.ஜி.ஆர் தன் வழக்கமான உடை மற்றும் தான் அணிந்திருந்த நகைகளை ஏ.சி.டியிடம்தான் கழற்றிகொடுப்பார். ஏ.சிடியின் ஏதோ ஒரு குணம் எம்.ஜி.ஆரை கவர்ந்திருந்தது. ஓய்வின்போது ஏ.சி.டியின் வாசிப்பு ஆர்வத்தை கேட்டு ஆச்சர்யமாவார் எம்.ஜி.ஆர். பின்னாளில் ஏ.வி.எம் மின் 50 வது படமாக, குறிப்பாக அந்நிறுவனத்தின் முதல் கலர்ப்படமாக வெளிவரப்போகும் படத்தின் இயக்குனர் ஏ.சி.டி என்பதும் கதாநாயகன் எம்.ஜி.ஆர் என்பதும் இருவருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. காரணம் இருவருக்கும் அது ஆரம்பகாலம். அதுதானே வாழ்வின் சுவாரஸ்யம்.
குமாரி படத்திற்குப்பின் ஏ.சி.டிக்கு சினிமா மீது ஆர்வம் அதிகமாகியிருந்தது. இப்போது ஐ.ஏ.எஸ் கனவை மூட்டை கட்டி வைத்திருந்தார். பத்மநாப ஐயர் படத்தயாரிப்பை நிறுத்தியபின் சற்று இடைவெளியில் ஏ.சி.டி, பச்சையப்பன் கல்லுாரியில் முதுகலை முடித்திருந்தார். திரைத்துறையில் இன்னொரு நண்பரான அபிபுல்லா மூலம் மீண்டும் சினிமா வாய்ப்பு கதவைத் தட்டியது. அபிபுல்லா பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனமான ஜூபிடர் பிக்சர்ஸ் நிர்வாகியின் மகன். ஏ.சி.டிக்கு நெருங்கிய நண்பன். ஏற்கனவே குமாரி அனுபவத்தை கேள்வியுற்றிருந்த அபிபுல்லா தங்கள் நிறுவனத்தில் பணியாற்ற ஏ.சி.டிக்கு அழைப்பு விடுத்தார்.
பெரிய நிறுவனம், நண்பனின் அழைப்பு... தட்டாமல் வேலைக்கு சேர்ந்தார் ஏ.சி.டி...கதை விவாதக்குழுவில் வேலை. அக்காலத்தில் பிரபல நிறுவனங்கள் கதை விவாதத்திற்காக தேர்ந்த கதை ஞானமுள்ளவர்களை கொண்ட குழுவை வைத்திருந்தது. தொடர்ந்து அந்நிறுவனங்களில் படங்களில் பணியாற்றி தன் இயக்குனர் ஆர்வத்திற்கு தேவையான அடிப்படைய விஷயங்களை கற்றுத்தேர்ந்த ஏ.சி.டி, சினிமா தொழில்நுட்பம் தொடர்பான நுால்களை தேடித்தேடிப் படித்து அதிலும் தனது அறிவை வளர்த்துக்கொண்டார்.

இயல்பில் நல்ல பின்னணி, மெத்தப்படிப்பு இந்த குணங்களால் சினிமாவில் சில விஷயங்களில் தனித்த குணத்துடன் இயங்கினார் ஏ.சி.டி. அவரது குணத்தை சோதிக்கும்படி, ஜூபிடர் பிக்சர்ஸின் படமொன்றின் தயாரிப்பின்போது ஒரு சம்பவம் நடைபெற்றது. அது உண்மையிலேயே அவரது வாழ்க்கையை முடிவு செய்கிற விஷயமும் கூட. படம் துவங்கி நடந்துவந்த நிலையில் பிரபலமான அந்த இயக்குனருக்கும் நிறுவனத்திற்கும் முட்டல் மோதல் எழுந்தது. நவீனத்தை விரும்பும் அந்த இயக்குனரின் சில காட்சியமைப்புகளை நிறுவனம் விரும்பவில்லை. இயக்குனரும் விடாப்பிடியாக நின்றார் தன் விஷயத்தில். பனிப்போர் முற்றிய நிலையில் இயக்குனர் சில நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு சென்றுவிட்டார். அதிருப்தியடைந்த தயாரிப்பாளர்கள் ஏ.சி.டியிடம் வந்தனர். “இனி அவருடன் ஒத்துபோகமுடியாது.  தொடர்ந்து இந்த படத்தை நீங்களே இயக்குங்கள்” எனக் கூறினர்.
உண்மையிலேயே இப்படி ஒரு சந்தர்ப்பம் உதவி இயக்குனர் வாழ்வில் பெரும் அதிர்ஷ்டம். பிரபல நிறுவனம், பெரிய பட்ஜெட் படம் நல்ல கதை...வேறுயாராக இருந்தாலும் ஒப்புக்கொண்டு படத்தை தொடர்ந்திருப்பர். ஆனால் ஏ.சி.டி நிதானத்துடன் அதை மறுத்துவிட்டார். 'இது நாகரிகமில்லை. உங்களுக்குள்ள பிரச்னையில் நான் இப்படி வாய்ப்பு பெற்றால் நம்பிக்கையுடன் சென்றுள்ள அவர் எத்தனை வேதனைப்படுவார். அவருடன் கலந்துபேசி படத்தை இயக்கவையுங்கள். நான் உதவியாளராகவே தொடர்கிறேன்' -தீர்க்கமான சொன்னார் ஏ.சி.டி.

சினிமாத்துறையில் அரிதான இந்த குணம் கண்டுபிரமித்துப் போனார்கள் தயாரிப்பாளர்கள். முடியும் தருவாயில் இந்த விஷயம் தெரியவந்து ஏ.சி.டியை சந்தித்து கட்டித்தழுவி உருகினார் அந்த பிரபல இயக்குனர். 'நீ நல்லா வருவே திருலோக்...சினிமாவில் உனக்கு நிச்சயம் ஒரு இடம் உண்டு' என ஆசிர்வதித்தார் அந்த மேதை. அடுத்த 10 ஆண்டுகளில் அது நிகழ்ந்தது. நிற்க நேரமின்றி  தமிழ் தெலுங்கு மலையாளம், இந்தி என அத்தனை மொழி கதாநாயகர்களை ஆட்டுவித்தார் ஏ.சி.டி
இத்தனை இயக்குனர்கள் தயாரிப்பாளர்களிடம் பணிபுரிந்தாலும் ஏ.சி.டி பிரமித்து மிரண்டுபோயிருந்தது அந்நாளில் பிரபல இயக்குனரான எல்.வி. பிரசாத்த்தின் இயக்கத்தை பார்த்துதான். சினிமாத்துறையில் சில வருட அனுபவங்களோடு அவரது வீட்டுக்கதவை தட்டினார் ஒருநாள். நான் உங்களிடம் உதவியாளராக சேரவேண்டும்...அது என் பாக்கியம் என்றார். 'என்னிடம் தேவையான ஆட்கள் இருக்கிறார்கள் தம்பி. உன்னை வேலைக்கு எடுத்துக்கொண்டால் இன்னொருவர் வேலை இழக்கவேண்டிவருமே... பரவாயில்லையா' என்றார் எல்.வி. பிரசாத் வழக்கம்போல் தன் சன்னமான குரலில்.

‘சரி.. ஆனால் என்றைக்கும் நீங்கள்தான் என் துரோணாச்சாரியார். நான் உங்கள் ஏகலைவன். நன்றி வருகிறேன்” என்று கிளம்பிவிட்டார் ஏ.சி.டி.  இதுதான் அந்நாளைய தமிழ்சினிமா. நேர்மை, நம்பிக்கை, நாணயம் என இயங்கிவர்கள் நிரம்பியிருந்த காலகட்டம்!

ஏ.சி.டியின் தன்னம்பிக்கை வழிந்த அந்த வார்த்தைகள் பின்னாளில் பலித்தது. தன் படப்பிடிப்பிற்கு அருகே ஏ.சி.டியின் படப்பிடிப்பு நடந்தால் எல்.வி பிரசாத் மறக்காமல் அங்கு வந்து ஏ.சி.டியின் இயக்கத்தை பார்த்து ரசிப்பார். 'சொன்னதை நிரூபிச்சிட்டியே' என தட்டிக்கொடுத்துவிட்டு செல்வார்.
ஜூபிடர் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் நடிகர் அசோகனின் நட்பு கிடைத்தது ஏ.சி.டிக்கு. அசோகனும் அந்நாளில் டிகிரி படித்தவர். மணிக்கணக்கில் உலக விஷயங்களை பேசும் நட்பு அவர்களுடையது. அறிவாளிகளை அணைத்துக்கொள்ளும் சுபாவம் கொண்ட ஏ.வி.எம் சரவணனுக்கு ஏ.சி.டியை அசோகன் அறிமுகப்படுத்தி வைக்க ஏ.வி.எம் பேனரில் ஏ.சி.டியின் முதல்படம் விஜயபுரிவீரன் வெளிவந்தது. வாள்வீச்சில் எம்.ஜி.ஆருக்கு இணையான திறமைபெற்ற ஆனந்தன் கதாநாயகன்.
விஜயபுரிவீரன் வெற்றிக்குப்பின் திரையுலகில் ஏ.சி.டி காலம் தொடங்கியது. ஏ.வி.எம் பேனரில் தொடர்ந்து ஏ.சி.டியின் படங்கள் வெளியாகி சக்கைபோடு போட்டன. குடும்பப் பாங்கான படங்கள் எடுப்பதில் பெயர் பெற்றவரானார் ஏ.சி திருலோகசந்தர். 'உருக்கமான சம்பவங்கள்', 'நேர்த்தியான திரைக்கதை, திறமையான கலைஞர்கள், விரசமில்லாத காட்சியமைப்புகள் இவற்றின் ஒரு கலவையாக ரசிகர்களுக்கு படங்களை தந்தார் ஏ.சி.டி.

வீரத்திருமகன் விஜயபுரிவீரன், நானும் ஒரு பெண், தெய்வ மகன், எங்கிருந்தோ வந்தான், இருமலர்கள், பாபு, பாரதவிலாஸ், அன்பே வா, பத்ரகாளி, எங்க மாமா போன்ற அவரது படங்கள் தமிழ் ரசிகர்களால் என்றும் மறக்கமுடியாதவை. ஏ.வி.எம் பேனரில் முதல் கலர்ப்படம் எடுக்க நினைத்தபோது மெய்யப்ப செட்டியாருக்கு நினைவுக்கு வந்த கதாநாயகன் எம்.ஜி.ஆர். இயக்குனராக நினைவுக்கு வந்தவர் ஏ.சி.டி...எம்.ஜி.ஆருக்கான கதை ஏ.சி.டி யிடமே கைவசம் இருக்க எம்.ஜி.ஆர் பாணி படங்களுக்கான எந்த அடையாளங்களுமின்றி அன்பே வா வெளியானது.
படத்தின் கதாநாயகி கதாநாயகனை தேடிவந்து காதலிக்கவில்லை...கதாநாயகன்தான் கதாநாயகியை துரத்தி துரத்தி காதலித்து உருகுகிறான். அம்மா...என்ற உரக்க குரலெடுத்து சுவரில் சாய்ந்து கதாநாயகன் கண்ணீர் விட்டு கதறவில்லை. அப்பாவை கொன்றவனை பழிவாங்க புறப்படவில்லை.மொத்தத்தில் இந்த படத்தில் எம்.ஜி.ஆருக்கு அப்பா அம்மா கதாபாத்திரங்களே இல்லை. படத்தில் வரிசைகட்டி எம்.ஜி.ஆரை புகழ்ந்து பாடவில்லை...மாறாக திட்டிப் பாடினர்.
இதைவிட அதிசயம் இதில் கதாநாயகன் ஏழை எளியவர்களுக்கு குரல்கொடுக்கும் ஏழைப்பங்காளன் இல்லை; பெரும்பணக்காரன்! எம்.ஜி.ஆர் ஃபார்மூலாவிலிருந்து முற்றிலும் வேறுபட்ட  விஷயங்கள் இருந்தும் படம் சூப்பர் ஹிட்.
தனது படங்களின் வெற்றி ஃபார்முலா எதுவும் இல்லாதபோதும் எம்.ஜி.ஆர் இந்த படத்தினை ஒப்புக்கொள்ள ஒரே காரணம் ஏ.சி.திருலோகசந்தர் என்ற திறமையாளர். படத்தின் வெற்றி அதை உறுதிப்படுத்தியது. படத்தின் வெற்றிவிழாவில் பேசிய எம்.ஜி.ஆர், 'என்னை நான் ஏ.சி.டியிடம் ஒப்படைத்துவிட்டேன். அவர் எப்படி ஆட்டுவித்தாலும் ஆடத்தயாராக இருந்தேன்' என மனம்விட்டு பாராட்டினார்.
ஏ.வி.எம் நிறுவனத்திலிருந்து வெளியேறிய பின் அடுத்தடுத்து வெளிப்படங்களின் வாய்ப்பு வந்தன. சிவாஜி படங்களை தொடர்ந்து இயக்கி புகழடைந்தார் ஏ.சி.டி. அத்தனையும் ரசிகர்களை கட்டிப்போட்ட வெற்றிப்படங்கள். தெய்வமகன் படத்தில் மூன்று சிவாஜிகளைப் பேச வைத்து ரசிகர்களை உருக வைத்திருப்பார் ஏ.சி.டி.

சிவாஜி பத்மினி நடித்து வெளியான இருமலர்கள் பெரிய அளவில் வெற்றிபெறவில்லையென்றாலும் மூன்று கதாபாத்திரங்களால் ரசிகர்களை நெக்குருக வைத்திருப்பார். 'காக்கும் கரங்கள்' படத்தின்மூலம் கோவையைச் சேர்ந்த ஓர் ஓவியக்கலைஞனை, நாயகனாக அறிமுகப்படுத்தினார். அவர்தான் பின்னாளில் சிவகுமார் எனப் புகழ்பெற்ற நடிகரானார். நகைச்சுவை நடிகை 'சச்சு'வை கதாநாயகியாக்கியதும் ஏ.சி.டிதான்.
குடும்பப்பாங்கான திரைப்படங்களை எடுத்து புகழ்பெற்ற ஏ.சி.டி, 60 களின் இறுதியில் ஹிட்ச்சாக் பாணியில் த்ரில்லர் கதை ஒன்றை இயக்கினார். அதே கண்கள் என்ற அப்படம் தமிழின் சிறந்த திரில்லர் படங்களில் ஒன்று.
 
ஏ.சி.டியின் திரைப்பட பட்டியலில் இன்னுமொரு முக்கியமான படம் பத்ரகாளி. தமிழ் பிராமண பெண்ணிற்கும் அவளது கணவனுக்குமிடையேயான பந்தத்தை உருக்கத்துடன் சொன்ன படம். எதிர்பாராதவிதமாக மனப்பிறழ்வு அடையும் அவள் அதற்குப்பின்னால் நடந்துகொள்ளும் முறையினால் தன் குழந்தையையே இழக்க நேரிடுகிறது. விவாகரத்து வரை சென்றபின்னுமான தம்பதிகளின் அழுத்தமான உறவை  உணர்ச்சிகரமான குடும்ப வாழ்வைச் சொன்ன பத்ரகாளி படத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வுதான் கட்டுரையின் முதலில் குறிப்பிட்ட நிகழ்ச்சி. அந்தப்படத்தின் வெற்றி ஏ.சி.டியின் தன்னம்பிக்கையை மட்டுமல்ல, அவரது சினிமா தொழில்நுட்ப திறமையையும் நிரூபித்தது தமிழ்த்திரைலகில்.
தன் விருப்பத்திற்கு எதிராக உள்ள படங்களை ஏ.சி.டி எத்தகைய விலைகொடுத்தாலும் ஒப்புக்கொள்ள மாட்டார். ஏ.சி.டியிடம் இருந்த அரிய குணம் இது. தன்னை வளர்த்தெடுத்த ஏ.வி.எம். நிறுவனத்திடமே இப்படி ஒரு விஷயத்தில் முரண்பட்டார் அவர். அந்தக்கதையை ஏ.சி.டி எடுத்தால் சிறப்பாக இருக்கும் என ஏ.வி.எம் நிறுவனம் விருப்பம் தெரிவிக்க அது தன்னால் முடியாது என திட்டவட்டமாக மறுத்தவர் ஏ.சி.டி.

80களின் மத்தியில் படம் எடுப்பதை குறைத்துக்கொண்ட ஏ.சி.டி தொலைக்காட்சி தொடர்கள் சிலவற்றை இயக்கினார். வயதும் உடல்நிலையும் இடம்கொடுக்காதபோது கண்ணியமாக திரையுலகிலிருந்து ஓய்வு பெற்றார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அவரது வீட்டில் தனது இறுதிக்காலத்தை கழித்தார். சில வருடங்களுக்கு முன் அவரது மனைவி இறந்துவிட துக்கத்தில் இறுதிநாட்களை கழித்து வந்தார். கடந்த வாரத்திற்கு முன் அவரது மூத்த மகன் அமெரிக்காவில் மரணமடைந்தார். மிகுந்த உடல்நல பாதிப்பில் இருந்த ஏ.சி.டிக்கு இந்த தகவல் சொல்லப்படவில்லை. அந்தளவிற்கு நினைவு தவறியிருந்தார். இந்நிலையில் நேற்று பிற்பகலில் நினைவு திரும்பாமலேயே மரணமடைந்தார். தெய்வமாகிவிட்ட தனது செல்ல மகனை பார்க்க நேரிலேயே சென்றுவிட்டாரோ என்னவோ இந்த தெய்வ மகன்.

ஏ.சி.டிக்கு இன்னொரு பெருமையும் உண்டு. தமிழகத்திலிருந்து முதன்முதலில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட படம் அவர் இயக்கத்தில் வெளியான தெய்வமகன் திரைப்படம்தான்! தமிழக அரசின் கலைமாமணி விருது பெற்ற ஏ.சி.டி அண்ணாவிடம் தமிழகத்தின் ராஜா சாண்டோ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

'ரசிகர்கள் கேட்கிறார்கள் கொடுக்கிறோம்'...என ஒழுக்கக்கேடான விஷயங்களை திரையிட்டு காரணம் சொல்லும் இன்றைய இயக்குனர்கள் மத்தியில் 'ரசிகர்களுக்கு இதைத்தான் கொடுப்பேன்' என்ற சினிமாவையும் ரசிகர்களையும் கண்ணியமாக அணுகிய இயக்குனர் ஏ.சி திருலோகசந்தர் என்றும் திரையுலகில் மறக்கமுடியாதவர் !