அதிகரித்த ஏடிஎம் கட்டணம்.
நண்பர்களே இது அநியாயம் ... RBI மக்களுக்கு இழைக்கும் அநீதி. இதனை எதிர்ப்பதற்கு நாம் அனைவரும் ஒன்று சேரவேண்டும். எப்படி?.. வங்கியில் கவுன்டரில் பணம் எடுப்பதற்கு ஒன்றும் தடை இல்லை. அதிலும் எவ்வளவு என்று நிர்ணயம் இல்லை. எனவே எல்லாரும் ஏதேனும் ஒரு நாளில் ஒன்று கூடி வரிசையில் நின்று ருபாய் நூறு எடுக்க வேண்டும். இப்படி செய்வதனால் வங்கிகளுக்கு புரியும் ATM மூலமாக எவ்வளவு சேமிப்பு என்று.. சரி ஆர் பி ஐ முடிவில் எனக்கு ஏன் இந்த ஆதங்கம் என்று கேட்கிறார்கள? கொஞ்சம் கீழே படியுங்கள்.
1. எல்லா நிறுவனங்களுமே தங்களுடைய ஊழியர்களுக்கான மாதந்திர சம்பளத்தை வங்கி மூலமாக கொடுக்க துவங்கி பல வருடங்கள் ஆகிவிட்டது. அதிலும் ஒரு கொடுமை அந்த நிறுவனம் சொல்லும் வங்கியின் ஒரு குறிப்பிட்ட வங்கி கிளையில் மட்டுமேய்ய்ய்யி நமது கணக்கு துவங்கப்படும். அவர்கள் ஏ டி எம் அட்டை கொடுப்பார்கள். இது சவுகரியம் தான்.. ஆஆனால் நம்முடைய சண்முகம் அண்ணாச்சி வாங்கும் சம்பளம் ரூ 10,000... கூலிக்கு வேலை செய்யும் கழிவறை சுத்தம் செய்பவர். அவாரலே எல்லா தொகையும் ஒரே நாளில் எடுத்து கையில் வைத்துகொள்ள முடியுமா. அவர் இரண்டு நாளுக்கு ஒரு முறை ரூ 100 ரூ 200 ரூ 500 எடுக்கும் வசதியினால் மட்டுமே கொஞ்சமாவது பணம் சேர்க்கிறார். கையில் காசு இருந்தால் செலவாகிவிடும். இனி அவர் பிழைப்பில் மண் போடுவார்களோ ?
2. பெரும்பாலான ....ஆஆம் பெரும்பா....லான வங்கிகள் தங்களுடைய ஏ டி எம் மையத்தை முறையாக பராமரிப்பது இல்லை. பாதி நேரம் கனெக்டிவிட்டி பிரச்சினை.. மீதி நேரம் பணம் இருக்காது.. அப்படியே இருந்தாலும் அதில் சரியான டினாமிநேஷன் இருக்காது.. என்னுடைய அனுபவம் ஒரிஎண்டல் பேங்க் டவுன் ஹால் ரோடு மதுரை. சரி பக்கத்தில் வேறு ஒரு பாங்கின் ATM இருக்கிறது என்று எடுத்தால் ...அய்யோடா அதுக்கு ஒரு சார்ஜ் போடுவாங்க. இல்லையா அதே வங்கியின் இன்னொரு இடம் தேடி ஓட வேண்டும். அதுக்கு ஆட்டோ அல்லது வேறு வகையில் ருபாய் 50 செலவழிக்க வேண்டும். அவசரத்துக்கு வேற வழி தண்டம் அழ வேண்டும். (அப்பவே சொன்னேனே கேட்டியா என்று மைவியிடம் ஒரு இடி வேறு) இன்னொரு உதாரணம் இந்தியன் பேங்க்-மதுரையின் பெரும்பாலான கிளைகள்.
3. மேலே சொன்ன வகையில் (எண் 1).. என்னுடைய நிறுவனம் தனது தலைமை அலுவலகம் டில்லியில் இருப்பதால் தனக்கு வசதியாக எல்லா ஊழியர்களுக்கும் அங்கே இருக்கும் ஒரு வங்கி கணக்கில் ஆரம்பிக்க வற்புறுத்துகிறது .. ஆனால் அந்த வங்கிக்கு சென்னை தவிர வேறு எங்கும் ATM கிடையாது.. இந்த நிலையில் என் நிலைமை ஒவ்வூர் மாதமும் தனியாக என்னுடைய பட்ஜெட்டில் ரூ ௨௦௦ எடுத்து வைக்க வேண்டும்..
4. வங்கிகளின் பெரும்பாலான ATM மையங்கள் சுத்தமாக பராமரிக்கப்படுவதில்லை .. வழுக்கும் படிக்கட்டுகள்.. நாற்றம் பிடித்த உள்அறைகள் .. பாதுகப்பற்ற முறையில் தளம் ..காவலர் இல்லாத நிலை.. அப்படியே இருந்தாலும் ஒரு திடமற்ற ஒப்புக்கு ஒரு 60 வயது அப்பாவி .. அவருக்கான பணி என்ன தெரியுமா? சார் பணமில்லீங்க வேற ATM பாருங்க என்று சொல்வது.. என்னுடைய அனுபவம் ஒரியன்டல் பேங்க் டவுன் ஹால் ரோடு மதுரை..
5. முறையான கையேடுகள் இல்லாதது .. உதாரணமாக நீங்கள் சென்னை நங்கநல்லூர் செல்கிறீர்கள் அங்கே நீங்கள் தில்லை கங்கா நகர் செல்கிறீர்கள் AXIS பேங்க் atm எங்கேங்க இருக்கு என்ற ஒவ்வொரு நண்பரிடமும் கேட்க வேண்டும்.. சோதனை நம்ம நண்பரின் வீடு கொல்லைப்பக்கம் தான் இருக்கும்.. ஆனாலும் விதி நம்மை விடாது மேலே சொன்ன வகையில் அங்கே பணம் எடுக்க விடாமல் சதி செய்யும். வேறென்ன அதுக்கு ஒரு சார்ஜ் போடுவார்கள்
6. இதில் இன்னொரு கொடுமை .. ICICI மாதிரியான சில வங்கிகள் இரண்டு அல்லது மூன்று மெஷின் வைத்திருப்பார்கள்.. ஒன்று ரூ 5௦௦௦ க்கு கீழே எடுப்பதற்கு இன்னொன்று அதுக்கு மேலே ஆனால் வேகமான முறையில் எடுப்பதற்கென்று ஸ்டாண்டர்ட் தொகைகளில் .. இன்னொன்று நீங்கள் கேட்கும் முறையில் ஆனால் ரூ 5௦௦௦ க்கும் மேலே எடுப்பதற்கு .. நம்ம ஷனுமகம் அண்ணாச்சிக்கு என்ன தெரியும்.. அவரும் ஒவ்வொன்றாக போட்டு பார்பார்.. பாவம் அவருக்கு தேவை ரூ ௨௦௦ மட்டுமே .. விதி அவரை விடாது போலே இன்னிமே அதுக்கும் இப்படி எதாவது சார்ஜ் போடுவாங்களோ.
7. நம்மளை எல்லாம் விடுங்க.. சில பென்ஷேன் வாங்கும் பெரியோர்களின் கொடுமை சொல்லில் மாளாது.. அவர்களின் அப்போ அப்போ தேவை என மருந்து மாத்திரை செலவளுகளுக்கு பணம் எடுத்தால் அதோ கதி.. அவர்களுடைய ஒரு வேளை டிபன் காசு கானாமாக போகும்.
இன்னும் ஒரு பத்து பாயிண்டு சொல்ல முடியும் .. ஆனாலும் ஒங்க இலகுவான மனசை புண் படுத்த மனசு வல்ல
இப்போ சொல்லுங்க நண்பர்களே என்னுடைய ஆதங்கம் நியாயமா இல்லையான்னு .. சொன்னால் பத்தாது இதை எல்லோருக்கும் சொல்லுங்க .. ஒரு தேதிய குறிங்க.. போராடுவோம். புரிய வெப்போம் நம்ம அவஸ்தைய..
எஸ் ரமணன்
11-Nov-2014

No comments:
Post a Comment