Sunday, August 23, 2015

வழக்கறிஞராக மாறி எஸ்பிஐ வங்கியிடம் வெற்றி பெற்ற டீக்கடைக்காரர்!-நன்றி விகடன்


http://www.vikatan.com/news/article.php?aid=51390


டீ விற்றவர் பிரதமர் ஆன கதை அனைவரும் அறிந்ததே. போபாலை சார்ந்த ராஜேஷ் சக்ரே எனும் டீ விற்பவர் வழக்கறிஞராக மாறியுள்ளார்.

கடந்த 2011ஆம் ஆண்டு டிசம்பர் 23ஆம் தேதி அன்று ராஜேஷ் சக்ரே தனது எஸ்.பி.ஐ. வங்கியின் கணக்கில் இருந்து ரூ.10,800 எடுத்திருக்கிறார். மீதி ரூ.9,200 இருந்திருக்கிறது. ஆனால், அடுத்த நாள் தனது வங்கி கணக்கில் ஒரு ரூபாய் கூட இல்லாமல் போனதை பார்த்த ராஜேஷ் சக்ரேக்கு பேரதிர்ச்சி.

இது குறித்து வங்கி அலுவலர்களிடம் புகார் தெரிவித்து இருக்கிறார். அவர்கள் சரியாக பதிலளிக்கவில்லை. மேலும், அவரே கவனக்குறைவாக இருந்ததாக வங்கி பதில் குற்றச்சாட்டு வைத்தது. இதையடுத்து, மும்பையில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தலைமை அலுவலத்தில் ராஜேஷ் முறையிட்டார். அங்கும் அவருக்கு தீர்வு கிடைக்கவில்லை.

இறுதியாக, மாவட்ட நுகர்வோர் வழக்கு தீர்க்கும் மையத்தில் புகார் செய்தார். அங்கேயும் வங்கி ராஜேஷின் பெயரிலேயே குற்றம் இருப்பதாக வாதிட்டது. இதனால், ஆத்திரமடைந்த ஐந்தாவது படித்த டீக்கடைக்காரரான ராஜேஷ், வழக்கறிஞர் போல் மாறினார். நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து தானே வாதாடினார்.

ஸ்டேட் பாங்க் தனது சார்பில் திறமையான வழக்கறிஞர்களை வைத்து வாதாடி வந்தது. ஆனால், அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுத்து ராஜேஷ் சக்ரே, தனது உரிமைகளுக்காக தொடர்ந்து போராடினார்.
அதற்கான வெற்றி தற்போது கிடைத்திருக்கிறது. இந்த வருடம் ஜூன் மாதம் 16ஆம் தேதி இந்த வழக்கில் ராஜேஷுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வாரம் எஸ்.பி.ஐ. வங்கி 6% வட்டியுடன் அந்த 9200 ரூபாயை திருப்பி அளித்தது. அது மட்டுமல்லாமல் அவரை கஷ்டப்படுத்தியதற்கு நிவாரணமாக 10,000 ரூபாயும், வழக்கின் செலவிற்காக 2000 ரூபாயும் வழங்கியது.

தனி ஒரு மனிதன் நினைத்தால்கூட மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியும் என்பதற்கு இதுவே சிறந்த எடுத்துக்காட்டு.
கிருத்திகா மாடசாமி

Wednesday, August 5, 2015

Hanuman Temple That Fulfills Wishes, With guarantee!

What if you get to know there is a temple that guarantees you wish-fulfillment? You may be surprised to know that such a temple does exist. Situated in Gulbarga, Karnataka, there is a Hanuman temple which is famous by the name ‘Koranti Guarantee Temple’.
It is believed that if you visit this temple with utmost faith and pray with all your heart, your prayers will be heard and that’s a guarantee. This temple was built in 1957. It got this name because of the medical college situated nearby. The students from that college used to throng the temple and got their wishes fulfilled. That is how others also came to know about the significance of Koranti temple and it eventually got named as ‘Koranti Guarantee Temple’. According to one of the temple priests, if you visit Koranti temple and chant Hanuman Chalisa for half an hour to one hour, Lord Hanuman pays heed to your prayers and you can see the results soon.
 Kishkindha Parvat
Kishkindha Parvat, considered as Lord Hanuman’s birthplace is also situated in Bellary district, Karnataka. It is said that Lord Hanuman’s mother, Mata Anjani meditated and did tapasya for a son on this mountain range and she was blessed with Hanuman.

Saturday, August 1, 2015

சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு

இதுவும் ஒரு கிரேக்கக் கதையே. வரலாற்றின் சுவாரஸ்யமான தீர்வு காணப்படாத முரண்பாடுகளில் ஒன்று இது.
ப்ரொடகோரஸ் (Protagoras 485-415 B.C) அந்தக் காலத்திய ஒரு சட்ட நிபுணர் சட்ட ஆசிரியரும்கூட. அவரிடம் மாணாக்கனாக ஒரு புத்திசாலி வந்து சேர்ந்தான். அவன் பெயர் யுதலாஸ் (Euthalos). அவனிடம் ஆசிரியருக்கு குரு தட்சினையாகக் கொடுக்கப் பணவசதி இல்லை. அவன் ப்ரொடகோரஸிடம் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டான். ஒப்பந்தமாவது: யுதலாஸ் வழக்காடி வெற்றி பெறும் முதல் வழக்கின் வழக்குரைஞர் கட்டணத்தை அவன் குரு தட்சினையாகக் கொடுத்து விடவேண்டும்.
வருடங்கள் உருண்டன. யுதலாஸ் தர்க்கமும் சட்டமும் நன்கு கற்றுத் தேர்ந்தான். பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு தர்க்க சாஸ்திரம் சொல்லிக் கொடுத்து நிறைய சம்பாதிக்கவும் செய்தான்.ஆனால் கட்டணம் பற்றி வாயே திறக்கவில்லை. வழக்காடும் வேலையையும் செய்யாமல் நாள் கடத்தி வந்தான்.
ஒரு சமயத்தில் ஆசிரியர் ப்ரொடகோரஸ் பொறுமை இழந்து யுதலாஸ் மீது குருதட்சினைக்காக உள்ளூர்க்கோர்ட் ஒன்றில் வழக்குத் தொடர்ந்தார். அவருடைய வாதமாவது:
யுதலாஸ் எனக்கு குருதட்சினை கொடுக்கவில்லை. ஆகவே அவரை எனக்கு குரு தட்சிணை வழங்கச் சொல்லி இந்த நீதிமன்றம் உத்தரவிடவேண்டும். இந்தவழக்கில் தீர்ப்பு அப்படிப்பட்ட உத்தரவானால் யுதலாஸிடம் இருந்து இந்த நீதிமன்றம் எனக்கு எனது கட்டணத்தை வசூலித்துத் தரவேண்டும். இல்லை இந்த வழக்கில் அவர் வெற்றி பெற்றால் எங்கள் இருவருக்கிடையில் உள்ள ஒப்பந்தப்படி நீதிமன்றம் இந்த வழக்கின் காஸ்ட் எனக் கருதி அறிவிக்கும் தொகையை எனக்கு அவர் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
யுதலாஸ் தனது எதிர்வாதத்தில் இவாறு சொன்னார்: நான் அவருக்கு குருதட்சினைக்கட்டணம் செலுத்த வேண்டிய தில்லை.ஒப்பந்தப்படி நான் முதல் வழக்கில் வெற்றி பெற்றால்தான் அவருக்கு குருதட்சினை செலுத்த வேண்டும். நான் இன்னும் என்னுடைய முதல் வழக்கில் வெற்றிபெறவில்லை. ஆகவே நான் வென்று விட்டால் நீதிமன்றமே சொல்லிவிடும் நான் கட்டணம் செலுத்த வேண்டாமென்று. தோற்று விட்டால் ஒப்பந்தப் படி நான் குருதட்சினை செலுத்த வேண்டியதில்லை.
எப்படி?
விடாகண்டனுக்கேற்ற கொடாக்கண்டன். குருவையே மிஞ்சிய சிஷ்யன்.
வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த சரித்திரப் புகழ் பெற்ற முரண்பாட்டிற்குப் பெயர்( Protagoras's Paradox.) ப்ரொடகோரஸின் முரண்பாடு. இன்றும் தர்க்க சாஸ்திர வகுப்புகளிலும் சட்ட வகுப்புகளிலும் வவாதிக்கப்டும் பிரசித்தமான Paradox இது

Wednesday, June 24, 2015

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?-நன்றி விகடன் வாசகர் பக்கம்

http://www.vikatan.com/news/article.php?aid=48459

ஹெல்மெட் சட்டம் வந்தாச்சு... மற்ற சட்டங்கள் என்னாச்சு?
தரமற்ற சாலை, வாகன நெரிசல், வாகனப்பெருக்கம் போன்றவற்றை மக்களுக்காக தாமாக வந்து விசாரிக்காமல், அன்றாடம் புதியனவாக பதியப்படும் வாகனத்தின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த முடியாமல் ஹெல்மெட் மூலமே உயிர் காக்கப்படும் என்று வரும் ஜூன்-1 முதல் மீண்டும் கட்டாய ஹெல்மெட்  சட்டம் அமலுக்கு வருவதாக நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

விபத்துக்களை குறைக்காமல், ஹெல்மெட் விற்பனை எண்ணிக்கையை உயர்த்தி, 'ஆயிரம் ரூபாய் ஹெல்மெட் ஆயுள் காக்கும்' என்ற போலீசின் பிரசாரம் இடைத்தேர்தலை விட சூடு பிடித்துள்ளது.

ஆண்டுக்கு பல ஆயிரம் கோடி செலவழித்து போடப்படும் தரமற்ற சாலையின் அவல நிலையை பார்த்து நீதிமன்றம், அரசிடம் சாலையின் தரத்திற்கான தரச் சான்று கேட்காமல், ஆயிரம் ரூபாய்க்கு வாங்கும் ஹெல்மெட் சர்வதேச தரச் சான்றுடன் ரசீதுடன் உள்ளதா என சோதனை செய்யச் சொல்வதை,  புரியாத புதிராக உள்ளதாக மக்கள் புலம்பி வருகின்றனர்.

திரும்பிய இடமெல்லாம் ஹெல்மெட் கடைகள். தலைக்கு விலை வைக்கும் தலைக் கவசம், கடைகளில் தலை கீழாகத் கட்டித் தொங்க விடப்பட்டு, உயிரின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஊழலில் ஊறிப்போன உயிரற்ற சாலைகளில் செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் உயிர் காக்க சட்டம் போட்ட நீதிமன்றம், சாலையின் உயிருக்கு எந்த உத்தரவாதமும், கேள்வியும் கேட்காத நிலையில், சாலையை முழுவதுமாக தரமாக போடாமல் (கமிஷன் பிரச்னையோ? ) சாலைக்கு பஞ்சர் ஒட்டும் வேலையை அரசு துரிதமாக நடத்தி வருகிறது.

வண்டி ஓட்டுனர்  பின்னால் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம் கண் முன்னாலிருக்கும் சாலையை தரமாக போடச் சொல்ல மறந்து விட்டதே?
 
மோட்டார்  வாகனச் சட்டம், நீதிமன்றம், போலீசாரால் எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது  என்பதே  புரியாத நிலையில், விபத்தை கொடுக்கும் வாகன நெரிசல் பற்றியும், விடை தெரியாத இதர  சட்டம் பற்றிய கேள்விகள் தொடர்கின்றன...
1. காரில் முன் இருக்கையில் அமர்ந்து செல்பவர்கள் சீட் பெல்ட்  அணிய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. முன்னணித் தலைவர்களான ஜெயலலிதா, கருணாநிதி, ராமதாஸ், வைகோ, விஜயகாந்த் போன்றவர்கள் கூட சீட் பெல்ட் அணியாமல்தான் வாகனத்தில் வருகின்றனர். சட்டம் பேச முடியுமா?

போலீஸ் உயர் அதிகாரிகள் முன் இருக்கையில் அமர்ந்து செல்கையில் சீட் பெல்ட் அணிந்துள்ளனரா? போக்குவரத்து போலீசார் சீட் பெல்ட் அணிந்து  வந்ததாக செய்தி உண்டா? வட்டாரப் போக்குவரத்து ஆய் வாளர் ஓட்டுனர், சீட் பெல்ட்  அணிந்து  வருகிறார்களா? சட்ட மேதைகளின் ஓட்டுனர்கள் கூட சீட் பெல்ட்   அணிகின்றனரா?

2.
சக  பயணிகளை தொந்தரவு செய்தால் அபராதம் விதிக்க  மோ.வா சட்டத்தில் கூறப்பட்டுள்ளது. திண்டுக் கல்லில் போலீஸ் உடையில் இருந்த எஸ் .ஐ.,  பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதற்கு என்ன அபராதம் விதிக்கப்பட்டுள்ளது??  .

3.
சட்டப்படி மூன்று பேர் இரு சக்கர வாகனத்தில் செல்வது தவறு தான்....அதற்காக  சென்னை கே.கே நகரில்  இரு சக்கர வாகனத்தில் சென்றவரின்  சட்டையை பிடித்து இழுத்து ஒருவரை கொன்றதை சட்டம் வேடிக்கை மட்டுமே பார்ப்பது நியாயமா?

4.
விபத்தை ஏற்படுத்தும் வகையில் வேகமாக ,மோசமாக பொறுப்பற்ற வகையில்  வண்டி ஓட்டினால் ரூ.1000 அபராதம் விதிக்க சட்டமுள்ளது. சென்னையில் இருந்து 464 கிமீ தூரமுள்ள மதுரைக்கு,  இரவு 10 மணிக்கு கிளம்பும்  வண்டி, 5 மணி நேரம் 30  நிமிடத்தில்,  சராசரியாக 85 கிமீ  வேகத்தில்   மதுரைக்கு வரும் பட்சத்தில் அது வாகன சட்ட வேக வரைமுறைக்கு உட்பட்டதா?

இந்திய மோ.வா.  சட்டப்படி கனரக பயணிகள் போக்குவரத்து  வாகனம்,  மணிக்கு 65 கிமீக்கு மேல் செல்ல தடையும், அபராதமும் விதிக்க சட்டம் உள்ளது. தோராயமாக மணிக்கு 100 கி.மீ. வேகத்தில்  ஓடும்  வாகனத்திற்கு போக்குவரத்து போலீசார் அபராதம் விதித்துள்ளார்களா?
5. படிக்கட்டில் நின்றபடி, தொங்கியபடி  பயணம் செய்ய அனுமதித்தால் ரூ.100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. சென்னையில் அரசுப்பேருந்துகளில் படிக்கட்டில் தொங்காத மாணவர்களைப் பார்ப்பதே அரிது. எத்தனை பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது?

6.
குடிபோதையில் வண்டி ஓட்டினால் ரூ. 2000 அபராதம், 6 மாதம் சிறை  விதிக்க சட்டம் சொல்கிறது. சமீபத்தில் போதையுடன் பயணிகளிடம் பிடிபட்ட  தனியார் நிறுவன பேருந்து ஓட்டுனருக்கு சட்டம் என்ன தண்டனை அளித்துள்ளது? அப்பாவிகள் உயிரை எமனிடம் சேர்க்க முற்பட்ட குடிபோதை ஓட்டுனர் மீது  சட்டப்படி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனரா?

டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை 6821. அங்கு வரும் வண்டிகளின் எண்ணிக்கையோ பல ஆயிரம். நாளொன்றுக்கு ஒரு கடைக்கு  வரும் போதை ஆசாமி ஒருவர் வீதம் 6821 வண்டிகள் மீது வழக்குப்போட முடியுமா? தமிழ்நாட்டின் அவலமே இதுதான். குடிக்காதவர்  ஹெல்மெட் மறந்து வைத்து விட்டு போனால் அபராதம்... குடித்து விட்டு வண்டி ஓட்டினால் கூட  அபராதம் போட  போலீசுக்கு  அதிகாரமில்லை. நீதிமன்றமே நேரடியாக டாஸ்மாக் கடை முன் வண்டிகளை நிறுத்த தடை விதிக்கலாமே?

7.
மோசமான டயர் கொண்ட வண்டிக்கு ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் சொல்கிறது. அரசுப்பேருந்துகளின் டயர் நிலைக்கு எவ்வளவு அபராதம் போடப்பட்டுள்ளது?

8. அதிவேகத்துடன் ஓட்டப்படும் வண்டிக்கு, அபராதம் ரூ. 1000 விதிக்க சட்டமுள்ளது. மோ.வா. ச  112 இன் படி ஒவ்வொரு வாகனத்திற்கும் வேகம் குறிப்பிடப்பட்டு இருக்கும்போது அதிவேகமாக செல்லும் வகையில், வாகனம் தயாரிக்க நீதிமன்றம் எப்படி அனுமதிக்கிறது. உதாரணமாக  இரு சக்கர வண்டி 65 கி.மீ.க்குள்தான் செல்லவேண்டும் என்றால் 120 கி.மீ.க்கு ஓட்டும் அளவிற்கு வண்டி வடிவமைப்பை அனுமதிப்பதேன்?

9.
உச்ச நீதிமன்றம் ஆணையிட்டும், கருப்பு நிற ஸ்டிக்கர் நீக்காமல் ஓடும் பணக்கார கார்களை போலீசாரால் நிறுத்தி அபராதம் விதிக்க முடியுமா? இரு சக்கர வாகனச் சாவியை பிடுங்குவது போல காரை நெருங்கி பார்க்கும் தைரியம் உள்ளதா?

10.
பக்க கண்ணாடி,  சைகை  விளக்கு,  ஒலிப்பான் (ஹாரன்) இல்லாமை, அதி வேகத்துடன் முந்திச் செல்வது (over taking ) போன்றவற்றிற்கும் மோ.வா சட்டம் ரூ.100 அபராதம் விதிக்கச் சொல்கிறது. இன்றைக்குள்ள பெரும்பாலான ஆட்டோக்களில்  பக்க கண்ணாடி இருக்காது. இடதுகைப்  புறமாக முந்திச் செல்வதில் ஆட்டோக்கள் முதலிடம் பிடிக்கின்றன.  இதுவரை எத்தனை வாகனங்கள்  மீது போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்?

11.
அனைத்து அரசு, தனியார் வாகனத்தின் ஹெட் லைட்டுகள் (முகப்பு விளக்குகள்)  கண்கள் கூசும் அளவிற்கு உள்ளது. கண்கள் கூசும் அளவிற்கு  ஹெட் லைட்டுகள், ஒரு வண்டிக்கு 10 விளக்குகள், பகலில் கூட விளக்கு வெளிச்சம் போட்டு கண்கள் கூசச் செவதற்கு இந்திய மோட்டார் வாகனச் சட்டத்தின்படி ரூ. 100 அபராதம் விதிக்க சட்டம் உள்ளது. இதுவரை எத்தனை வாகனத்திற்கு போலீசார் அபராதம் விதித்துள்ளார்கள்?

12.
இரு சக்கர வண்டியின் பின் இருக்கையில் அமர்பவரும் ஹெல்மெட் போடச் சொல்லும் சட்டம்,  காரில் பின் இருக்கையில் அமர்பவரும் சீட் பெல்ட் கட்டாயம் அணிய வேண்டும் எனச் சொல்லாதது ஏன்?

13.
நிறுத்தக்கூடாத இடத்தில்ஆட்களை ஏற்றி அனைத்து வாகனத்திற்கும் இடையூறு செய்யும் மினி பஸ், ஆடோக்கள் மீது சட்டப்படி எவ்வளவு அபராதம் இது வரை விதிக்கப்பட்டுள்ளது? போக்குவரத்திற்கு இம்சை செய்யும் கார்கள், அரசியல் கட்சிக் கொடியுடன் நிறுத்தப்படும் வண்டிகளுக்கு போலீசாரால் அபராதம் விதிக்க முடியுமா? அப்பளம் போல நொறுங்கிப்போகும் நான்கு சக்கர வண்டிகளின் விபத்தின் விகிதம் அதிகரித்து வருவதை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
14. சென்னையில் பணக்கார வீட்டுப்பிள்ளைகள் வாரம் ஒருநாள் சென்னையின் முக்கிய இடங்களில் இருசக்கர வாகன பந்தயம் நடத்துவது போக்குவரத்துப் போலீசாருக்கு தெரியுமா...சமீபத்தில் சென்னையில் அப்பாவி உயிர்கள் பலியான சம்பவங்கள் அதன் விளைவுதான் என தெரிந்தும், அதற்கான உரிய சட்டப்பிரிவுகளில்தான் காவல்துறை வழக்குப்பதிந்ததா? காலம் காலமாக நடந்துவரும் இந்த பந்தயத்தினால் முக்கிய சாலைகளில் பயணம் செய்யவே பொதுமக்கள் அஞ்சுகின்றனரே அது காவல்துறைக்கு தெரியுமா?

சட்டப்படிதான் நடக்க வேண்டும் எனச்  சொல்லும் காவல் துறை மீது லஞ்சப்புகாரும், பாலியல் புகார்களும் குவிந்த வண்ணம் உள்ளன. சட்டப்படி யார் நடவடிக்கை எடுக்க முடியும்? ஏற்கனவே லஞ்சப்புகாரில்  முதலிடம் வகிக்கும் போலீசார்,  ஹெல்மெட் மூலம் தொடர்ந்து முதலிடம் பெறுவார்கள் என்ற (அவ) நம்பிக்கையை தகர்க்க லஞ்ச ஒழிப்பு போலீசார், " சட்டப்படி" நடவடிக்கை எடுப்பார்கள் என பொதுமக்கள்  நம்புகிறார்கள்.

நீதிமன்றத் தீர்ப்பை மதிப்பதில் உடன்பாடுதான். ஆனால் ஹெல்மெட் மட்டுமே முக்கியம் எனக் கருதாமல் இதர போக்குவரத்து சட்ட விதிமுறைகளை போலீசார் முறையாக அமல்படுத்தினால் விபத்திற்கு விடுதலை கட்டாயம் உண்டு.

- எஸ். அசோக்  


Tuesday, June 23, 2015

வாடகை பாக்கி செலுத்த ஜூலை 10 வரை கெடு-நன்றி தினமலர்


"நான் என்னத்த சொல்றது.. கொடுமை கொடுமைன்னு கோவிலுக்கு போனாளாம் அங்க நாலு கொடுமை வந்து ஆடுச்சாம" என்கிற சொலவடைக்கு பொருந்துவது போலே... என் வாடகைய வசூலிச்சு தாங்க சாமின்னு கோர்டுக்கு போனா அங்க கோர்ட்டே வக்கீலுங்ககிட்ட பாக்கி வசூலிக்கலயாம் படிங்க இந்த செய்திய

Advertisement
சென்னை : வழக்கறிஞர்கள் அறைக்கான வாடகை பாக்கி செலுத்த, ஜூலை, 10ம் தேதி வரை, உயர் நீதிமன்ற நிர்வாகம் கெடு விதித்துள்ளது.சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில், வழக்கறிஞர்களுக்கான அறைகள், 500க்கும் மேல் உள்ளன. அறைகளுக்கான வாடகையை, உயர் நீதிமன்ற பதிவு துறையில், வழக்கறிஞர்கள் செலுத்த வேண்டும்.அறையின் அளவைப் பொறுத்து, வழக்கறிஞர்களின் எண்ணிக்கை மாறுபடும். ஒரு வழக்கறிஞருக்கு, மாத கட்டணம் என பார்த்தால், 250 ரூபாய் அளவுக்கு வரும்.அறைகளுக்கான வாடகையை, வழக்கறிஞர்கள் பலர் செலுத்தாமல் உள்ளனர். வாடகையை செலுத்தும்படி, அவ்வப்போது, பதிவு துறையும், வழக்கறிஞர்களை அறிவுறுத்தி வருகிறது.தற்போது, 3,000 ரூபாய்க்கு மேல், வாடகை பாக்கி வைத்திருப்பவர்களின் பெயர்களை, வழக்குப் பட்டியலில், பதிவுத் துறை வெளியிட்டுள்ளது. அதில், உயர் நீதிமன்றத்தில் உள்ள, பிரபலமான வழக்கறிஞர்களின் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.வாடகை கட்டணத்தை, ஜூலை, 10ம் தேதிக்குள் செலுத்தவில்லை என்றால், 'நோட்டீஸ்' கொடுக்காமல், ஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என, பதிவுத் துறை எச்சரித்துள்ளது.