Tuesday, April 24, 2018

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும்?
(Thanks to Whastup)

1892 ஆம் ஆண்டு. அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் அவன். அவனுக்கு உற்றார் உறவினர் எவரும் இல்லை. தன்னுடைய படிப்பிற்கான கட்டணத்தை கட்ட கூட அவனுக்கு வசதியில்லை. அவனும் அவன் நெருங்கிய நண்பன் ஒருவனும் சேர்ந்து ஒரு முடிவுக்கு வருகிறார்கள்.

பிரபல இசைக் கலைஞர் ஒருவரை வைத்து கல்லூரியில் ஒரு இசை நிகழ்ச்சி நடத்தி அதன் மூலம் இவர்கள் படிப்பிற்கு தேவையான நிதியை திரட்டுவது என்று முடிவானது. அதற்காக அந்த சமயத்தில் அமெரிக்காவிலும் ஏன் உலகம் முழுதும் உலகப் புகழ் பெற்று விளங்கிய போலந்து நாட்டை சேர்ந்த பியானோ இசைக்கலைஞர் இக்னேஸி ஜே.பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து தேதி கேட்டார்கள். அவரது மேனேஜரோ “சார் வருவார்…. ஆனால் நீங்கள் அவருக்கு $2000 தரவேண்டும்” என்று கூற, இவர்களும் சந்தோஷமாக ஒப்புக்கொள்கிறார்கள்.

பேட்ரெவ்ஸ்கி வருவதாக சொன்னதே மிகப் பெரிய வெற்றி என்பதால் இவர்கள் அந்த நிகழ்ச்சியை சூப்பர் ஹிட்டாக்க முடிவு செய்து அல்லும் பகலுமாக நிகழ்ச்சிக்காக திட்டமிட்டு உழைக்கிறார்கள்.

நிகழ்ச்சிக்கான அந்த நாளும் வந்தது. அந்த நாளில் எதிர்பாராதவிதமாக நகரில் வேறு சில முக்கிய நிகழ்வுகள் இருந்தபடியால் எதிர்பார்த்தபடி டிக்கெட்டுகள் விற்பனையாகவில்லை. ஆகையால் அரங்கம் நிரம்பவில்லை. அரும்பாடுபட்டு விழாவை ஏற்பாடு செய்த இவர்களுக்கு எப்படி இருக்கும்? மனதை திடப்படுத்திக்கொண்டு பேட்ரெவ்ஸ்கியை சந்தித்து நடந்ததை கூறி, நிகழ்ச்சியை ரத்து செய்து விடலாம் என்கிறார்கள். ஆனால் பேட்ரெவ்ஸ்கி மறுத்துவிடுகிறார். “நான் திட்டமிட்டபடி நடத்தியே தீருவேன்” என்கிறார்.

ஒரு வழியாக நிகழ்ச்சி முடிந்த பின்னர் அவரை சந்திக்கும் மாணவர்கள் அவரிடம் $1600 கொடுத்து, “இது தான் மொத்தம் வசூலான தொகை. மீதியுள்ள தொகைக்கு முன் தேதியிட்டு செக் கொடுத்துவிடுகிறோம். கூடிய சீக்கிரம் அந்த கணக்கில் பணம் செலுத்திவிடுகிறோம். பெரிய மனதுடன் வாங்கிக்கொள்ளுங்கள்” என்று கூறி கெஞ்சியபடி அவரிடம் பணத்தையும் காசோலையையும் கொடுக்க, அதை வாங்கி காசோலையை கிழித்துப் போடும் பேட்ரெவ்ஸ்கி அவர்கள் கொடுத்த தொகையை அவர்களிடமே கொடுத்து “நீங்கள் எனக்கு தரவேண்டிய கட்டணத்தை தரவேண்டாம். அதை தள்ளுபடி செய்கிறேன். இந்த பணத்தை வைத்துக்கொண்டு உங்கள் படிப்புக்கான கட்டணத்தை கட்டுங்கள்”. என்கிறார்.

அவர்கள் கண்கள் கலங்கியபடி அவருக்கு நன்றி கூறுகின்றனர்.

நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு வாடகை கொடுக்க கூட வசதியின்றி அந்த மாணவர்கள் சிரமப்படுவதை அறிந்துகொள்ளும் பேட்ரெவ்ஸ்கி அந்த தொகையையும் இறுதியில் தானே செலுத்திவிடுகிறார்.

பேட்ரெவ்ஸ்கி மிகப் பெரிய செல்வந்தர். அவரை பொறுத்தவரை அது சாதாரண தொகை தான். ஆனால் அவருக்குள் இருந்த மனிதாபிமானத்தை அந்த சம்பவம் உணர்த்தியது.

ஆனால் பேட்ரெவ்ஸ்கி, “நான் உதவாவிட்டால் இவர்களுக்கு வேறு யார் உதவுவார்கள்? இவர்களுக்கு உதவுவதால் நாமொன்றும் குறைந்துபோகப்போவதில்லை…” என்று கருதியே அந்த உதவியை செய்தார்.

ஆண்டுகள் உருண்டன.

பேட்ரெவ்ஸ்கி காலப்போக்கில் மேலும் புகழின் உச்சிக்கு சென்று ஒரு கட்டத்தில் போலந்து நாட்டின் பிரதம மந்திரியாகவே ஆகிவிட்டார். மிகப் பெரும் தலைவராக விளங்கி நல்லாட்சி நடத்தி வந்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக முதல் உலகப் போர் துவங்கிய காலகட்டம் அது. போலந்து நாடு போரின் பிடியில் சிக்கி சின்னாபின்னமானது. போர் முடிவுக்கு வரும் தருவாயில் மக்கள் அனைத்தையும் இழந்து வறுமையில் உழன்றனர். எங்கும் பஞ்சம் தலைவிரித்தாடியது. இது 1918 ஆம் ஆண்டு.

எப்படி நிலைமையை சமாளிப்பது? பசியோடிருக்கும் தன் லட்சக்கணக்கான மக்களுக்காக யாரிடம் போய் உதவி கேட்பது? கலங்கித் தவிக்கிறார் பேட்ரெவ்ஸ்கி. கடைசியில் அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழு அராவை அணுகுகிறார். (American Relief Administration ARA). அதன் தலைவராக இருந்தவர் ஹெர்பெர்ட் ஹூவர் என்பவர். (இவர் பின்னாளில் அமெரிக்காவின் 31 வது ஜனாதிபதியானார்.)

பேட்ரெவ்ஸ்கி கேட்டுக்கொண்டதையடுத்து அமெரிக்காவின் உதவிக்கரம் போலந்துக்கு நீள அடுத்த சில நாட்களில் அமெரிக்காவிலிருந்து போலந்து நாட்டிற்கு ஆயிரக்கணக்கான டன்கள் உணவு தானியங்கள் மற்றும் மளிகை பொருட்கள் அனுப்பப்பட்டன. அதன் மூலம் சுமார் 1.5 மில்லியன் போலந்து மக்கள் பசியாறினர்.

ஒரு பேரழிவு மற்றும் பஞ்சத்திலிருந்து போலந்து மக்கள் தப்பினர். பேட்ரெவ்ஸ்கி நிம்மதி பெருமூச்சுவிட்டார். தான் கேட்டவுடன் தன் மக்களுக்கு உணவு பொருட்களை டன் கணக்கில் அனுப்பி அவர்களை பட்டினி சாவிலிருந்து காப்பாற்றிய அமெரிக்காவின் ஆபத்துக்கால உதவிக் குழுவின் (American Relief Administration) தலைவரை நேரில் சந்தித்து நன்றி சொல்ல விரும்பினார் பேட்ரெவ்ஸ்கி.

ஹெர்பெர்ட் ஹூவரை நேரில் சந்தித்து கண்கள் பனிக்க நன்றி தெரிவிக்கிறார்.

“நோ… நோ… மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். நீங்கள் நன்றி சொல்லக்கூடாது. நீங்கள் செய்த உதவியை தான் நான் உங்களுக்கு திருப்பி செய்தேன். உங்களுக்கு நினைவிருக்கிறதா? 25 ஆண்டுகளுக்கு முன்பு இங்கே கல்லூரி மாணவர்கள் இருவருக்கு அவர்கள் ஃபீஸ் கட்ட உங்கள் நிகழ்ச்சியை இலவசமாக நடத்திக்கொடுத்து உதவினீர்கள் அல்லவா?அந்த மாணவர்களில் ஒருவன் தான் நான்” என்கிறார் ஹெர்பெர்ட் ஹூவர்.

பேட்ரெவ்ஸ்கி கண்கள் கலங்கியபடி அவரை அணைத்துக்கொள்கிறார்.

காலம் எப்போது யாரை எங்கு வைக்கும் என்று ஒருவராலும் கூற முடியாது.

இத்தோடு முடியவில்லை ஹூவரின் நன்றிக்கடன். இரண்டாம் உலகப் போர் முடிந்த தருவாயில் (1946) போலந்துக்கு உதவுவதற்கு என்றே ஒரு தனி கமிஷன் ஹூவர் தலைமையில் அமைக்கப்பட்டது. அதன் சார்பாக போலந்துக்கு நேரில் சென்ற ஹெர்பர்ட் ஹூவர், அந்நாட்டிற்கு அடுத்த முப்பது ஆண்டுகளுக்கு தேவையான உணவுத் திட்டங்களை வகுத்துக்கொடுத்துவிட்டு அவற்றிற்கான அமெரிக்க அரசின் உதவிகளையும் ஏற்பாடு செய்துவிட்டு வந்தார். இதன் காரணமாக போலந்து நாட்டின் நாடாளுமன்றத்தில் ஹெர்பெர்ட் ஹூவரை புகழ்ந்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவருக்கு போலந்து நாட்டு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டங்கள் வழங்கின. போலந்து மக்கள் மனதில் ஒரு ஹீரோவாக வாழ்ந்து வந்தார் ஹெர்பெர்ட் ஹூவர்.

அதுமட்டுமல்லாமல் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் UNICEF & CARE என்று இரண்டு புதிய சர்வதேச தொண்டு அமைப்புக்களை ஹூவர் ஏற்படுத்தினார். அதன் மூலம் உலக முழுதும் பல லட்சம் மக்கள் இன்றும் பசியாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனிப்பட்ட ஒருவருக்கு செய்த உதவி, எப்படி ஒரு நாட்டிற்கே பன் மடங்கு திரும்ப கிடைத்தது பார்த்தீர்களா?

இந்த உலகில் நீங்கள் எதை விதைக்கிறீர்களோ அதை பன்மடங்கு அறுவடை செய்வீர்கள்.

ஏனெனில்…… விதைத்தவன் உறங்கினாலும், ஏன் அந்த படைத்தவனே உறங்கினாலும் விதைகள் ஒரு போதும் உறங்குவதில்லை! பலன் கருதாமல் பேட்ரெவ்ஸ்கி செய்த உதவி இது. ஆனால் காலத்தினால் செய்த உதவியாயிற்றே…..
காலம் குறித்து வைத்துகொண்டது....

(உண்மை சம்பவம்.)
நன்றி ராஜப்பா தஞ்சை

ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்

ஜோதிடம் - கிடைத்தது  பாதி, எரிந்தது பாதி.

மகாபாரதத்தில் கௌரவர்கள் விதித்த நிபந்தனைப்படி, சூதாடித் தோற்ற பாண்டவர்கள், 12 வருட வனவாசமும், ஓராண்டு விராட நாட்டில் அஞ்ஞாத வாசமும் முடித்த பின்பு, சூதாட்ட நிபந்தனைப்படி, தாங்கள் இழந்த ராஜ்ஜியத்தையும், அரசு உரிமையையும் பெற விரும்பினார்கள்.

உறவையும், நட்பையும், அமைதியையும் பெரிதும் விரும்பிய யுதிஷ்டிரன், தங்கள் கோரிக்கைகளை துரியோதனனுக்கு எடுத்துக் கூறி, தங்கள் ராஜ்ஜிய பாகத்தைப் பெற, பொறுப்பும் திறமையும் மிக்க ஒருவரை ராஜதூதனாக அனுப்ப விரும்பினான்.

அவன் அறிவுக்கு எட்டியவரையில், பகவான் ஸ்ரீகிருஷ்ணனைத் தவிர, வேறு எவரும் இதற்குத் தகுதியுடையவர்களாகப் படவில்லை.

எனவே, ஸ்ரீகிருஷ்ணனை அழைத்து தன் கருத்தைச் சொன்னான்.

''தம்பிமார்கள் கோபமாக இருக்கின்றனர். பட்ட துயரங்களுக்கெல்லாம் காரணமானவர்களைப் பழிவாங்கத் துடிக்கிறார்கள். எப்படியாவது போர் தொடுத்து, கௌரவர்களை அழித்து, தர்ம ராஜ்ஜியம் ஸ்தாபிக்க வேண்டும் என்று பீமனும் அர்ஜுனனும் உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் நானோ, அமைதியையும் சமாதானத்தையும்தான் விரும்புகிறேன்.

துரியோதனனிடம் பாண்டவர் தூதுவனாக நீ செல். நிபந்தனைப்படி எங்களுக்குச் சேர வேண்டிய ராஜ்ஜியத்தைக் கேள். பாதி ராஜ்ஜியம் தர மறுத்தால், நமக்கென ஐந்து சிறிய நாடுகள் கேள். அதுவும் இல்லை யென்றால், ஐந்து ஊர்களைக் கேள். அதையும் அவர்கள் தர மறுத்தால், ஐந்து இல்லங்களையாவது கேள். எப்படியும் அதையாவது கேட்டு வாங்கி, போர் வராமல் தடுத்து, தர்மத்தை நிலைநாட்டு'' என்றான் தர்மன்.

''யுதிஷ்டிரா, நிச்சயம் தர்மத்தை நிலைநாட்ட என்னால் ஆனதைச் செய்கிறேன். உங்களுக்காகத் தூது போய், நீ கூறியபடி, ஐந்து வீடுகளாவது யாசகம் கேட்டுப் பார்க்கிறேன். எதற்கும் தம்பிகளிடமும் திரௌபதியிடமும் கலந்தாலோசித்து, அவர்கள் அபிப்ராயங்களையும் கேட்டுத் தெரிந்துகொண்டு விடைபெற்றுச் செல்கிறேன்'' என்று கூறி, பீமார்ஜுனர்களைக் காணப் புறப்பட்டான் கண்ணன்.

பீமன், ராஜ்ஜியத்தை யாசகம் கேட்டுப் பெறுவதை விரும்பவில்லை. சூதாட்ட மண்டபத்தில் தான் செய்த சபதம் நிறைவேற, போர் வந்தே ஆக வேண்டும் என அவன் கர்ஜித்தான். அதே கருத்தை கண்ணனிடம் அடக்கமாகத் தெரிவித்தான் அர்ஜுனன். அதன்பின் திரௌபதியையும் நகுலனையும் சந்தித்தான் கண்ணன்.

'அண்ணா, நீ தூது போவது தர்மமா? அதுவும் ஐந்து வீடுகள் யாசகமாகக் கேட்கப் போகிறாயாமே! அதை அவர்கள் தர சம்மதித்துவிட்டால், அவிழ்ந்த என் கூந்தல் முடிவது எப்போது? உன் மீது ஆணையாக நாங்கள் செய்த சபதங்கள் என்னாவது?'' எனக் கண்ணீர் வடித்தாள் திரௌபதி. நகுலனும் தர்மனின் எண்ணத்துக்கு உடன்படவில்லை.

''பாஞ்சாலி, நீங்கள் அனைவரும் என் மீது ஆணையிட்டுத்தான் சபதங்கள் செய்திருக்கிறீர்கள். அதை நிறைவேற்றுவதில் உங்களைவிட என் பொறுப்புதான் அதிகம். அவை நிச்சயம் நிறைவேறும். எப்படி என்று மட்டும் இப்போது கேட்காதே! நம்பிக்கையோடு பொறுத்திரு. நான் ஸஹதேவனைக் கண்டுவிட்டு, நாளை ஹஸ்தினாபுரம் புறப்படுகிறேன்.'' எனக் கூறி, ஸஹதேவன் குடில் நோக்கிப் புறப்பட்டான் கண்ணன்.

அங்கே, அமைதியாக ஜோதிடச் சுவடிகளை ஆராய்ந்து கொண்டிருந்த ஸஹதேவன், கண்ணனைக் கண்டதும் பணிந்து, வரவேற்றான்.

''ஸஹதேவா, இந்த உலகில் அமைதியை நிலைநாட்டுவதற்காக, நான் நாளை ஹஸ்தினாபுரம் செல்கிறேன். அதற்காக எல்லா உபாயங்களையும் கையாளப் போகிறேன். நீ சாஸ்திர வல்லுநன்; சிறந்த அறிவாளி. அமைதியை விரும்புபவன். போரைத் தடுக்க ஏதாவது வழியிருக்கிறதா, சொல்... அதையும் முயன்று பார்க்கிறேன்'' என்றான் கண்ண பிரான்.

ஸஹதேவன் சிரித்தான். ''போர் வராமல் தடுக்கத்தானே உபாயம் தேடுகிறாய்! நல்லதொரு உபாயம் உண்டு. சொல்கிறேன். செய்ய முடியுமா, பார்?'' என்று ஆரம்பித்தான் ஸஹதேவன்.

தர்மத்தை நிலைநாட்ட ஒரு குருக்ஷேத்திரப் போரை உருவாக்கவே, கண்ணன் தூது செல்கிறான் என்பதை, அவனது ஆரூட சாஸ்திர அறிவால் ஊகிக்க முடிந்தது. அதனால், அவன் வேடிக்கையான வழி ஒன்றைச் சொன்னான்.

''கண்ணா, கேள்... பீமன் கையில் உள்ள கதையை முறித்து, அர்ஜுனன் வில்லை ஒடித்து, பாஞ்சாலி கூந்தலை அறுத்துவிட்டு, கர்ணனுக்கு முடிசூட்டிவிட்டு, எல்லாவற்றுக்கும் மேலாக, நீ அஸ்தினாபுரத்துக்கு தூது போக முடியாமல் நான் உன்னைக் கட்டிப்போட்டால், போரை நிச்சயம் தடுக்கலாம்'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் உரக்கச் சிரித்தான். ''என்னைக் கட்டுவதா? எப்படி முடியும் ஸஹதேவா?'' என்றான். ''ஏன் முடியாது?'' என்று எதிர் சவால் விட்டான் ஸஹதேவன். அந்தக் கணமே, பல்லாயிரம் கண்ணனாக வடிவெடுத்து மண்டபம் எங்கும் வியாபித்தான் ஸ்ரீகிருஷ்ணன். பார்த்த பரவெளியெல்லாம் கிருஷ்ணனாகத் தோன்றியது. இத்தனைப் பரிமாணங்களையும் எப்படிக் கட்டுவது?

ஸஹதேவன் கலங்கவில்லை. பத்மாசனத்தில் அமர்ந்தான். கண்களை மூடினான். பகவான் ஸ்ரீகிருஷ்ணனின் ரூப, குண, நாமங்களை மனதில் தீவிரமாகத் தியானித்தான். பக்திப் பரவச நிலையில் கண்ணனின் புகழை, அவன் நா ஒலித்தது. அப்போது பிறந்தது ஸஹதேவன் இயற்றிய கிருஷ்ண மந்திரம்.

'ஓம் நமோ விஸ்வரூபாய விஸ்வ சித்யந்த ஹேதவே
விஸ்வேஸ்வராய விஸ்வாய கோவிந்தாய நமோ நமஹ
நமோ விக்ஞான ரூபாய பரமானந்த ரூபினே
கிருஷ்ணாய கோபிநாதாய கோவிந்தாய நமோ நமஹ!’

என்பதே அந்த மந்திரம்.

ஸஹதேவன் மந்திரத்தை உச்சரிக்க உச்சரிக்க, கண்ணன் எடுத்த வடிவங்கள் ஒவ்வொன்றாய்க் கலந்து, ஒன்றோடொன்று இணைந்து ஒரே கண்ணனாகி, அவனும் ஸஹதேவனின் இதயத்துக்குள்ளே கட்டுண்டான்.

''ஸஹதேவா, நீ வென்றுவிட்டாய்! என் தாய் என்னை உரலில் கட்டினாள். பிருந்தாவன கோபியர், கட்டுத்தறியில் கட்டினார்கள். நீயோ இதயத்தில் கட்டிவிட்டாய். பக்தியினால் கடவுளையும் கட்ட முடியும் என்று காட்டிவிட்டாய். போதும்! என் கட்டுக்களை அவிழ்த்து, என்னைப் போக விடு!'' என்று கூறினான் கண்ணன்.

இப்போது ஸஹதேவன் பேரம் பேசினான். ''கட்டுக்களை அவிழ்த்துவிடுவதானால், எனக்கு ஒரு வரம் கொடு'' என்றான்.

''கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

''பாரதப் போரில் குந்தி புத்திரர்களான எங்கள் ஐவரையும் காப்பாற்றுவதாக வரம் கொடு'' என்றான் ஸஹதேவன்.

கண்ணன் மீண்டும் உரக்கச் சிரித்தான். ''ஸஹ தேவா! சற்று அவகாசம் தருகிறேன். ஏதாவது விட்டுப் போயிருந்தால், அதையும் வரத்தில் சேர்த்துக் கொண்டு வாசகங்களைச் சரியாக அமைத்து வரத்தை மீண்டும் கேள், தருகிறேன்'' என்றான் கண்ணன்.

இல்லை கிருஷ்ணா! நீ என்னைக் குழப்பப் பார்க்கிறாய். நான் கேட்டது கேட்டதுதான். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் எங்கள் ஐவரையும் எப்படியாவது காப்பாற்றிவிடு!'' என்றான்.

''நல்லது ஸஹதேவா. வரம் மட்டுமல்ல. வாக்கும் அளிக்கிறேன். பாரதப் போரில் குந்தி புத்திரர்கள் உங்கள் ஐவரையும் காப்பாற்றுகிறேன். என்னைக் கட்டவிழ்த்து விடு'' என்றான் கண்ணன்.
ஸஹதேவன் தியான நிலையைக் கலைத்து கண்ணனைக் கட்டவிழ்த்தான்.

கர்ணனோடு சேர்ந்து குந்திக்கு ஆறு புதல்வர்கள் என்பதை அறியாமல், 'குந்தி புத்திரர்கள் ஐவரை மட்டும் காப்பாற்று’ என வரம் கேட்டுவிட்டானே ஸஹதேவன். பாவம், கர்ணனைக் காப்பாற்ற இவனும் தவறிவிட்டானே! விதி யாரை விட்டது!'' என்று எண்ணிக் கொண்டே கண்ணன் ஹஸ்தினாபுரப் பயணத்தை தொடங்கினான்.

கண்ணன் சங்கல்பப்படி, குருக்ஷேத்திரப் போர் தொடங்கியது. போரின் கடைசி நாட்களில் கர்ணனின் மரணம் நிகழ்ந்தது. அப்போது அவனுக்குக் கொடுத்த வாக்கின்படி யுத்த பூமியில் வந்து, தன் மகன் கர்ணனை மடி மீது கிடத்தி, ''மகனே'' என்று கதறி அழுதாள் குந்தி. அப்போதுதான் பாண்டவர்களுக்கு, கர்ணன் தங்கள் சகோதரன் என்பது தெரிந்தது. அனைவரும் கதறினர்.

ஸஹதேவனின் நினைவலைகள் பின்னே சுழன்றன. கட்டுண்ட கண்ணனிடம் தான் கேட்ட வரமும், அப்போது அவன் தந்த வாய்ப்பும், தன் அறியாமையால் அந்த வாய்ப்பை இழந்து, ஐவரை மட்டுமே காப்பாற்ற தான் கேட்ட வரமும், அவன் நினைவுக்கு வந்தன. தான் கற்ற சாஸ்திர அறிவு தன்னைக் காப்பாற்றவில்லை என்பதை ஒரு கணம் உணர்ந்தான்.

''ஊருக்கெல்லாம் ஜோசியமும் ஆருடமும் சொல்ல உதவிய சாஸ்திரம், எனக்குக் கூடப் பிறந்த சகோதரன் இன்னொருவன் இருக்கிறான் என்பதைச் சுட்டிக் காட்டவில்லையே? இதனை நான் கணிக்கத் தவறிவிட்டேனே... இது மாயை. கண்ணன் காட்டும் வழி ஒன்றே மெய். அதுவே உயர்ந்த சாஸ்திரம். இனி எந்த சாஸ்திரமும் வேண்டாம்'' என்று கோபத்தில் தன் ஜோதிடச் சுவடிகளை எல்லாம் கிழித்தெறிந்தான்.

அவற்றில் பல, போர்க்களத் தீயில் விழுந்து அழிந்தன. எஞ்சியவற்றை ஸஹதேவனின் சீடர்கள் எடுத்து, பல வருடங்கள் ஆராய்ச்சி செய்து, விட்டுப் போன பல விஷயங்களை ஊகத்தால் சேர்த்து, ஸஹதேவனின் ஜோதிட சாஸ்திரத்துக்கு மறு உயிர் தந்தார்கள். மறைந்தவை மறைந்தே போயின.

அதனால்தான் இன்றும் ஆரூட ஜோஸ்ய சாஸ்திரத்தில் 'ஜோஸ்யம் பாதி, ஹேஷ்யம் மீதி’ என்று சொல்கிறார்கள்!

தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்



*காளையார் கோவில் தேர் பவனி*

(Thanks to Whastup)

ஒரு கோயிலுக்குள் மூன்று மூலவர்கள் தனித்தனி சந்நிதிகளாக அமைக்கப்பட்ட பெருமைக்குரிய கோயில் காளையார்கோயிலில் அமைந்துள்ள சொர்ண காளீஸ்வரர் கோயில்

 இக்கோயிலின் ராஜகோபுரத்துக்கு பெருமை சேர்க்கும் வகையில் திருத்தேர் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று *மருது சகோதரர்களுக்கு* எண்ணம் ஏற்பட்டது.

தைப்பூசத் திருவிழாவின்போது தேர்த் திருவிழா நடத்துவது என முடிவு செய்யப்பட்டு தேர் உருவாக்கும் பொறுப்பு மாலகண்டான் கிராமத்தைச் சேர்ந்த *குப்பமுத்து ஆசாரி* என்பவரிடம் ஒப்படைக்கப்பட்டது. இப்பொறுப்பை பெருமையுடனும், மகிழ்ச்சியுடனும் ஏற்றுக் கொண்டார் *சிற்பி.*

புதிதாக வடிவமைக்கப்பட்டு வரும் தேரின் சக்கரங்களை இணைக்க மருதமரங்கள் தேர்வு செய்யப்பட்டன.

தேர் செய்வதற்காக முதல் முதலாக சிற்பி உளியை எடுத்து விநாயகர் சிலை செய்ய முற்பட்டபோது விநாயகரின் துதிக்கை சிதைந்து விட்டது.

இதனால் கவலையடைந்த சிற்பி, உடனடியாக பெரிய மருதுவை சந்தித்து *தேர் செய்யக் கூடிய கூலியை உடனுக்குடன் வழங்கி விட வேண்டும்.*

 எனது தலைமையில் தேர் செய்யப் படுவதால் எனக்குத் தர வேண்டிய தட்சிணையை மட்டும் முதல் முதலாக தேரோடும் நாளில் கேட்டு பெற்றுக் கொள்கிறேன் என்று கூறி விட்டார்.

தேர் செய்யும் தொழிலாளர்களுக்கு உடனுக்குடன் கூலித் தொகை வழங்கப்பட்டது.

தலைமைச் சிற்பி கேட்டுக் கொண்டதற்கிணங்க அவருக்குரிய தட்சிணை தொகை மட்டும் வழங்கப்படாமலேயே இருந்து வந்தது.

தேரும் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு *தைப்பூசத் திருநாளில்*
முதல் முதலாக தேர் ஓடத் தொடங்கியது.

தேருக்கு பலி பூஜை செய்ய சென்ற குப்பமுத்து ஆசாரி தேருக்கு அடியில் சென்று தேர் ஓட முடியாத வகையில் ரகசியமாக ஆப்பு ஒன்றை வைத்து விட்டு வந்து விட்டார்.

இது தெரியாத மருது சகோதரர்கள் இருவரும் ஆர்வத்துடன் புதிதாக வடிவமைக்கப்பட்ட தேரின் மீதேறி தேரை கொடியசைத்து துவக்கி வைக்க முற்பட்டனர்.

ஊர் மக்கள் ஆர்வத்துடன் தேரை இழுக்கத் தொடங்கியபோது *தேர் அசைய மறுத்து விட்டது.*

 அப்போது தான் பெரிய மருதுவுக்கு சிற்பியின் நினைவு வந்தது.
தேரை வடிவமைத்தமைக்காக சிற்பிக்கு தட்சிணை கொடுக்க மறந்து விட்டோமே என்பதை உணர்ந்தார்.

இதன்பின் அவரை அழைத்தனர்.

பெரிய மருது *தேர் சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருப்பதால் என்ன வேண்டுமோ, கேளுங்கள் தருகிறேன்* என்றார்.

அதற்கு சிற்பி

*உங்களது கிரீடம், உடைவாள், செங்கோல் இவை மூன்றையும் என்னிடம் தாருங்கள் அவற்றை நான் அணிந்து கொண்டு இன்று ஒரு நாள் மட்டும் தேரில் வர வேண்டும். அதுவே எனது தட்சிணையுமாகும்' என்றார்.*

சிற்பி இவ்வாறு கூறக் கேட்டதுமே அருகில் இருந்த சின்ன மருது ஆத்திரத்துடன் தனது உடைவாளை ஓங்கியபோது, பெரிய மருது குறுக்கிட்டு "சிற்பி ஏற்கெனவே என்னிடம் சொல்லியிருந்தார். தேரோடும் நாளில் அவர் கேட்கும் தட்சிணையை தருவதாகவும் சொல்லியிருந்தேன். இன்று ஒருநாள் தானே கேட்கிறார். அவரது ஆசையை பூர்த்தி செய்வோம்' என்று கூறிக் கொண்டே தான் அணிந்திருந்த கிரீடம் மற்றும் உடைவாள், செங்கோல் ஆகியவற்றை எடுத்துக் கொடுத்தார்.

மன்னர் வழங்கியவற்றை சிற்பி அணிந்து கொண்டு தேருக்கடியில் சென்று தேரை வணங்குவது போன்று அவர் ஏற்கெனவே வைத்த ஆப்பினை எடுத்து விட்ட பிறகு தேரின் மேலேறி கொடியசைக்க தேர் புறப்பட்டது.

பொதுமக்களும் ஆரவாரத்துடன் தேரை இழுத்தனர்.

தேர் நிலைக்கு திரும்பும் சமயத்தில் வீதியில் கிடந்த ஒரு கல் மீது ஏறி இறங்க தேரின் மீதிருந்த *சிற்பி நிலைகுலைந்து தடுமாறி சற்றும் எதிர்பாராமல் தலைகுப்புற கீழே விழுந்தார். தேர்ச் சக்கரம் அவர் மீது ஏறியதால் சிற்பியின் உயிரும் பிரிந்தது.*

பேராசைக்காரன் இறந்து விட்டான்' என்று பலரும் சொல்லிக் கொண்டே இறந்து கிடந்த சிற்பியை உற்றுப் பார்த்த போது அவரது வலது கை அவரது இடுப்பில் அணிந்திருந்த பட்டு வஸ்திரத்தை பிடித்துக் கொண்டிருந்தது.

*அந்த பட்டு வஸ்திரத்தைப் பிரித்துப் பார்த்தபோது அதில் பனை ஓலை ஒன்று இருந்தது. அதை எடுத்து அதிலிருந்த எழுத்துக்களை மருதுபாண்டியர்கள் படித்துப் பார்த்தனர்.*

*மன்னா, நான் தேர் செய்யத் தொடங்கியபோது விநாயகரின் துதிக்கை சிதைந்ததால் எனது வம்சாவளியாக வானசாஸ்திரம் தெரிந்த நான் முத்துப் போட்டு பார்த்த போது இத்தேர் ஓடத் தொடங்கும் நாளில் மன்னருக்கு மரணம் நிகழும் எனத் தெரிந்து கொண்டேன்.*

ஏராளமான கோயில்களை கட்டியும், ஏழை மக்களின் காவலராகவும் இருந்து வரும் எங்கள் சிறுவயது மன்னர் பல நூறு ஆண்டுகள் நீடூழி வாழ வேண்டும்.
 வயதான நான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று கருதியே தங்களின் கிரீடத்தையும், செங்கோலையும் வாங்கினேன்.

எதைக் கேட்டாலும் கொடுத்து விடுவார்கள் எங்கள் மருது மன்னர்கள் என்ற எண்ணத்தில் தான் இந்தச் செய்தியையும் ஓலையில் எழுதிக் கொண்டு வந்தேன். *மருது பாண்டியர்கள் வாழ்க, சிவகங்கைச் சீமை வாழ்க' என்று எழுதப்பட்டிருந்தது.*

சிற்பியின் தியாகச் செயலுக்காக காளையார்கோயிலுக்கு வெளியே, கோயிலைப் பார்த்தவாறு சிற்பி குப்பமுத்து இறைவனை வணங்கி நிற்பது போன்ற சிலையையும் அமைத்தார்கள்.

அரசனை காப்பது குடியானவன் கடமையென்று உயிர் தியாகம் செய்த குப்பமுத்து ஆசாரி

சாதாரண பிரஜைக்காக  சொன்ன சொல்லை காத்து காளையார் கோவில் தேருக்காக பதவியை துறந்த  மாமன்னர் மருது பாண்டியர்கள்

இப்படி பட்ட தியாக வேங்கைகள் வாழ்ந்த தமிழக மண்ணில் நாம் பிறந்ததே பெருமை தான்..

*வரலாற்றை மறந்தும் விடாதீர்கள் மறைத்தும் விடாதீர்கள் என்றும்...*

பள்ளத்தூர் சாரதி. 

அச்சமின்மையே ஆரோக்கியம்!

அக்பரிடம் ஒருவர் சவால் விட்டார். என் வேலைக்காரன் நல்லா சாப்பிடுவான் அவனை ஒரு மாதம் வைத்திருந்து நிறைய நல்ல உணவுகளைக் கொடுங்கள். அவன் வேலையோ உடற்பயிற்சியோ செய்யக்கூடாது. ஆனால் ஒரு கிலோகூட எடை கூடக் கூடாது.

அக்பர் யோசிச்சார். பீர்பாலை பார்த்தார். பீர்பால் அரசர் சார்பாக அந்த சவாலை ஏற்றார். மூன்று வேளைகளும் மகத்தான விருந்து படைக்கப்பட்டது.

மாதக்கடைசியில் எடையும் அப்படியே இருந்தது. அக்பருக்கு ஆச்சரியம். பீர்பால் சொன்னார்.

அவனுடைய இரவுப்படுக்கையை சிங்கக்கூண்டுக்கு அருகே அமைத்தேன். கூண்டின் கதவு சரியாக இல்லை என்று சொன்னேன். அச்சம் காரணமாய் சத்து உடலில் ஒட்டவில்லை.

பயம் ஒரு பெரிய நோய். நிறைய பேர்களுக்கு வியாதி வர காரணம், தங்களுக்கு வந்துவிடுமோ என்ற பயம்தான்.

அச்சமின்மையே ஆரோக்கியம்!

பின்குறிப்பு:
இந்த கதையை எனக்கு நெருங்கிய நண்பர் ஒருவர் சொன்னார். சொன்ன நண்பரை மேலும் கிழும் பார்த்தேன்.
அவர் கல்யாணத்துக்கு முன் எப்படி இருந்தாரோ அப்படியேதான் இப்போதும் இருந்தார்.

சரிதான். சிங்கத்துடன் வாழ்க்கை நடத்துறாரு போல!!!!!

யாருக்கு விதி?!! எங்கே எப்படி முடியும்!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!

📮இந்திரன்மனைவி இந்திராணி ஒரு கிளியை மிகவும் பிரியமாகவளர்த்துவந்தாள்.

ஒருநாள் அந்த கிளி நோய்வாய்ப்பட்டுவிட்டது.

அதை பரிசோதித்த மருத்துவர்
இனி அது பிழைக்காது என்று கூறிவிட்டார்.

உடனே தன் கணவனை அழைத்த இந்திராணி,
இந்த கிளியை எப்படியாவதுக்காப்பாற்றுங்கள்.
கிளி இறந்துவிட்டால் நானும் இறந்துவிடுவேன் என்றாள்.

இந்திரன்,
கவலைப்படாதே இந்திராணி...நான் உடனே பிரம்மாவிடம்சென்று முறையிடுகிறேன்...
ஒவ்வொருவரின் தலையெழுத்தையும் எழுதுபவர் அவர்தானே?

அவரிடம்சென்று கிளியின் தலையெழுத்தை மாற்றியெழுதிவிடுவோம் என்று சொல்லிவிட்டு
பிரம்மாவிடம் சென்று விஷயத்தை கூறினான்..

விஷயத்தைக்கேட்ட பிரம்மா ,

இந்திரா.... படைப்பது மட்டுமே என்வேலை.

உயிர்களை காப்பது சாட்சாத் மஹாவிஷ்ணுவின் தொழில்.

நாம் அவரிடம்சென்று உதவிகேட்போம்...வா ...நானும் உன்னுடன் வருகிறேன் என்று இந்திரனை அழைத்துக்கொண்டு
மஹாவிஷ்ணுவிடம்சென்று விஷயத்தை தெரிவித்தார் பிரம்மா.

மஹாவிஷ்ணுவோ, உயிர்களை காப்பது நான்தான்.

ஆனால் உன் கிளி இறக்குந்தறுவாயிலிருக்கிறது.

அழிக்கும்தொழிலை மேற்கொண்ட சிவன் தான் அதைக்காப்பாற்ற வேண்டும்.

வாருங்கள் நானும் உங்களுடன்வந்து சிவனிடம் பேசுகிறேன் என்று கிளம்பினார் விஷ்ணு.

விபரங்களைக்கேட்ட சிவன் , அழிக்கும் தொழில் என்னுடையதுதான்.

உயிர்களையெடுக்கும்பொறுப்பை நான்
எமதர்மராஜனிடம் ஒப்படைத்துள்ளேன்.

வாருங்கள் ....நாம் அனைவரும்சென்று எமதர்மனிடம்கூறி அந்த கிளியின் உயிரை எடுக்கவேண்டாம் என்று சொல்லிவிடுவோம் என்றுசொல்லி அவர்களை அழைத்துக்கொண்டு எமலோகம் செல்கிறார் சிவன்.

தன்னுடைய அவைக்கு சிவன் , மஹாவிஷ்ணு , பிரம்மா , இந்திரன் ஆகிய நால்வரும் வருவதைக்கண்ட எமதர்மன் உடனே எழுந்து ஓடிவந்து வரவேற்கிறார்.

விஷயம் முழுவதையும்கேட்ட அவர் ,
ஒவ்வொரு உயிரையும் எந்தநேரத்தில் ,
எந்தசூழ்நிலையில் ,
என்னகார‌ணத்தால் எடுக்கவேண்டும் என்ற காரணத்தை ஒரு ஓலையில் எழுதி ஒரு பெரிய அறையில் தொங்கவிட்டுவிடுவோம்.

அந்த ஓலை அறுந்துவிழுந்துவிட்டால், அவரின் ஆயுள் முடிந்துவிடும்.

வாருங்கள் அந்த அறைக்குச்சென்று
கிளியின் ஆயுள் ஓலை எது என்று பார்த்து , அதை மாற்றி எழுதிவிடுவோம் என்று அவர்களை அழைத்துச்செல்கிறார்.

இப்படியாக
இந்திரன் ,பிரம்மா ,விஷ்ணு , சிவன் , எம்தர்மன் ஆகிய ஐவரும் அந்த அறைக்குச்சென்றனர்.

அவர்கள் உள்ளே நுழைந்தவுடன் ஒரு ஓலை அறுந்து விழுகிறது.

உடனே அவர்கள் அவசரமாகச்சென்று அந்த ஓலையை எடுத்து பார்க்கின்றனர்.

அது அந்த கிளியின் ஆயுள் ஓலை.

அவசரமாக அதை படித்துப்பார்க்கின்றனர்....

அதில்,,,

இந்திரன் , பிரம்மா , விஷ்ணு , சிவன் , எம‌தர்மன் ஆகிய ஐவரும் எப்போது ஒன்றாக இந்த அறைக்குள் நுழைகிறார்களோ
அப்போது இந்த கிளி இறந்துவிடும்.. என்று எழுதப்பட்டிருந்தது.

இதுதான் விதி!!

விதியை மாற்றுவது என்பது முடியாது என்பதே கதை?!

யாருக்கு விதி?!!
எங்கே எப்படி முடியும்!!!
என்பது எழுதினவனுக்கே
தெரியாது என்பது தான் உண்மை?! 
வாழும் காலம் நிரந்தரம் இல்லை?                   வாழும் காலத்திலாவது அனைவரிடமும் அன்பாக இருக்க கற்றுக்கொள்ளுங்கள்!

சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது

அவர் ஒரு பிரபல ஜோதிடர். அவர் ஒருவருடைய ஜாதகத்தை கணித்து ஒரு விஷயத்தை சொன்னால், அது அந்த பிரம்மாவே சொன்னது போல. அந்தளவு ஜோதிடத்தில் பாண்டியத்மும் நிபுணத்துவமும் பெற்றவர். எனவே அவரை சந்தித்து தங்கள் எதிர்கால பலன்களை தெரிந்துகொள்ள பல ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் வருவார்கள்.

தனது எதிர்காலம் குறித்தும் மிகவும் கவலை கொண்ட ஒரு ஏழை கூலித் தொழிலாளி அந்த ஜோதிடரை சந்திக்க வந்தான்.

“நான் மிகவும் வறுமையில் இருக்கிறேன். கடன் பிரச்சனை வேறு என்னை வாட்டுகிறது. எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் வேறு. அவர்களை எப்படி கரையேற்றப் போகிறேன் என்று தெரியவில்லை. நான் நன்றாக வாழ ஏதாவது வழி இருக்கிறதா? என்று என் ஜாதகத்தை பார்த்துச் சொல்லுங்கள்” என்று தன் ஜாதகத்தை கொடுத்தார்.

ஜோதிடரும் அந்த ஏழை தொழிலாளியின் ஜாதகத்தை கணிக்கத் தொடங்கினார். சோழிகளை உருட்டிப்போட்டார். கட்டங்களாய் ஆராய்ந்தார். ஒரு கட்டத்தில் ஜோதிடரின் முகம் சுருங்கியது.

பிறகு தொழிலாளியிடம், “ஐயா எனக்கு இன்றைய தினம் மிகவும் முக்கியமான பணி ஒன்று இருக்கிறது. உங்கள் ஜாதகத்தை சற்று விரிவாக ஆராயவேண்டி இருக்கிறது. எனவே அது என்னிடம் இருக்கட்டும். நீங்கள் இன்று போய் நாளை இதே நேரத்திற்கு வாருங்கள். நான் உங்களுக்கு அனைத்தையும் சொல்லிவிடுகிறேன்” என்றார்.

“சரிங்க ஐயா நான் நாளைக்கு வர்றேன். இப்போ பார்த்ததுக்கு எதாச்சும் தரணுமா ஐயா?” என்று ஜோதிடரிடம் கேட்டார்.

“அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்… நாளைக்கு வரும்போது கொடுங்க போதும்…”

“ரொம்ப நன்றிங்க ஐயா… நான் நாளைக்கு வர்றேன்…”

தொழிலாளி அங்கிருந்து புறப்பட்டார்.

அப்போது அங்குவந்த ஜோதிடரின் மூத்த மகள், “”அப்பா… ஏன் அவர்கிட்டே அவசர வேலை இருக்குன்னு சொல்லி அனுப்பினீங்க? இன்னைக்கு எனக்கு வேலை எதுவும் இல்லை. முழுக்க முழுக்க வர்றவங்களுக்கு ஜாதகம் தான் பார்த்து பலன் சொல்லப்போறேன்னு சொன்னீங்க?” என்று கேட்டாள்.

அதற்கு ஜோதிடர், “அம்மா… அவரது ஆயுட்காலம் இன்றிரவு முடியப்போகிறது. அவரது ஜாதகம் உணர்த்துவது அதைத் தான். மேலும் சோழி உருட்டிகூட பார்த்துவிட்டேன். பரிகாரம் செய்வதற்கு கூட அவருக்கு அவகாசம் இல்லை. இதை அவரிடம் தெரிவிக்க மனமில்லை. அதனால்தான் பொய் சொல்லி அவரை இங்கிருந்து அனுப்பினேன்… பாவம்…” என்றார்.

இதற்கிடையில் அந்த தொழிலாளி தனது ஊரைநோக்கி வயல்வெளிகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்தார்.

அப்போது திடீரென வானம் மேகமூட்டமாகி இருள் சூழ்ந்தது. சிறிது நேரத்தில் மழைதூற ஆரம்பித்து வலுப்பெற்று, இடியுடன் பலத்த மழை கொட்டியது.

வயல்வெளிக்குள் ஒதுங்க இடமின்றி, ஓட்டமும் நடையுமாக அந்த தொழிலாளி விரைந்து நடக்க ஆரம்பித்தான். சற்று தூரத்தில் ஏதோ ஒரு ஆள் அரவமற்ற கோவில் போன்ற கட்டிடம் ஒன்று தென்பட, அதை நோக்கி ஓடினான் தொழிலாளி.

அது ஒரு பாழடைந்த சிவன் கோவில். அங்குசென்று மழைக்கு ஒதுங்கினான் அந்த தொழிலாளி.

மண்டபத்தில் நின்றிருந்த அவர் சிதிலமடைந்து கிடக்கும் கோவிலின் நிலைமையைக் கண்டு மிகவும் வருந்தினார். “ஈசன் குடியிருக்கும் கோவில் இப்படி கவனிப்பாரற்று சிதிலமடைந்து காணப்படுகிறதே… நான் மட்டும் ஏழையாக இல்லாமல் பணவசதியுடன் இருந்தால் இந்த கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் செய்துவிடுவேன்’ என்று நினைத்துக்கொண்டார்.

அத்துடன் அவர் மனஓட்டம் நிற்காமல் சிவன் கோவிலை தான் புதுப்பிப்பதாக மானசீகமாக நினைத்துக்கொண்டார். கோபுரம், ராஜகோபுரம், பிராகாரங்கள், மண்டபங்களை திருப்பணி செய்து சீரமைத்தார். கும்பாபிஷேகத்திற்கு புரோகிதர்களை அமர்த்தி வேத மந்திரங்கள் முழங்க திருக்குடத்தை ஊர்வலமாக எடுத்துவந்து கும்பாபிஷேகம் நடத்தி, கருவறையில் உறையும் இறைவனை வணங்குவதுபோல் தனது சிந்தனையை ஓடவிட்டார்.

அந்த சிந்தனையினூடே அவர் மண்டபத்தின் மேற்பகுதியைப் பார்த்தபோது, அங்கே அவரது தலைக்குமேல் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து அவரை கொத்த தயாராக இருப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வினாடி கூட தாமதிக்காமல் அம்மண்டபத்தை விட்டு வெளியே ஓடினார்.

இவர் வெளியே வந்தது தான் தாமதம், அடுத்த நொடி ஒரு பேரிடி விழுந்து அந்த மண்டபம் இருந்த பகுதி அப்படியே நொறுங்கி தூள் தூளானது. அதில் ஒரு கல்லானது இவர் கால் மேல் விழுந்து தெறிக்க சிறு காயத்துடன் இவர் தப்பினார். நாகத்தை கண்ட அதிர்ச்சியிலிருந்தே மீளாத அந்த தொழிலாளி மேலும் அதிர்ச்சியில் உறைந்துபோனார். அப்போது சரியாக இரவு ஏழரை மணி.

வீட்டுக்கு சென்று தன் மனைவி மக்களிடம் தான் தப்பித்த கதையை திகிலுடன் கூறினார்.

மறுநாள் மாலை வழக்கம்போல ஜோதிடரை சந்திக்க சென்றார். தொழிலாளியை பார்த்த ஜோதிடருக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அவரை வரவேற்று அமரவைத்துவிட்டு ஒருவேளை தான் சரியாக பலன் கணிக்கவில்லையா என்ற சந்தேகத்துடன் மீண்டும் அந்த தொழிலாளியின் ஜாதகத்தை ஆராய்ந்தார்.

ஜோதிட நூல்களை, ஓலைச் சுவடிகளை மீண்டும் புரட்டினார். அவர் கணக்கு சரியாகவே இருந்தது. பின் அவர் எப்படி பிழைத்தார்? இதுபோன்ற கண்டத்திலிருந்து தப்பிக்கவேண்டுமென்றால், அந்த நபர் சிவன் கோவில் ஒன்றைக் கட்டி அதற்கு கும்பாபிஷேகம் செய்த புண்ணியம் பெற்றிருக்கவேண்டும் என்று ஜோதிட நூல்களில் பரிகாரம் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் இவரோ பரம ஏழை. அந்த பரிகாரத்தை இவர் சொல்லியிருந்தாலும் அதை இவரால் செய்திருக்க முடியாது. இவரால் எப்படி கோவில் கட்டி கும்பாபிஷேகம் செய்யமுடியும்? அதுவும் ஒரு இரவுக்குள்? இப்படி பலவாறு சிந்தித்தபடி, “நேற்றிரவு என்ன நடந்தது?” என்று அந்த தொழிலாளியிடம் கேட்டார்.

ஜோதிடர் தான் சென்றபோது மழை பெய்ததையும், அப்போது மழைக்கு ஒரு பாழடைந்த சிவாலயத்தின் பக்கம் தான் ஒதுங்கியதையும் கூறினார்.

மேற்கொண்டு என்ன நடந்தது என்று ஜோதிடர் ஆர்வத்துடன் கேட்க, இவர் அந்த சிதிலமடைந்த ஆலயத்தை பார்த்த வருத்தமுற்றதாகவும், பணமிருந்தால் கும்பாபிஷேகம் செய்து வைக்கலாமே என்று தான் கருதியதாகவும் கூறினார்.

ஜோதிடருக்கு அடுத்த நொடி அனைத்தும் விளங்கிவிட்டது. இந்த தொழிலாளி மனதளவில் செய்ய நினைத்த சிவாலய புனருத்தாரனமும் கும்பாபிஷேகமுமே அவருக்கு முழுமையான பலன்களை தந்து ஈசனருளால் அவரது விதி மாற்றி எழுதப்பட்டதை உணர்ந்துகொண்டார்.

“இது உங்களுக்கு மறுஜென்மம். அதுவும் ஈசன் கொடுத்த ஜென்மம். இனி உங்களுக்கு எந்தக் குறையும் இருக்காது போய் வாருங்கள்” என்று அவரை வழியனுப்பி வைத்தார்.

*ஆக, போகிற போக்கில் நம்மிடம் தோன்றும் நல்ல சிந்தனை கூட நமது விதியை மாற்ற வல்லவை. எனவே எப்போதும் நல்லதையே நினைக்கவேண்டும்.* அந்த தொழிலாளிக்கு அடிப்படையிலேயே நல்ல சிந்தனையும் பக்தியும் இருந்ததால் மழைக்கு ஒதுங்கிய இடத்தில் அப்படி ஒரு சிந்தனை தோன்றி அதன் மூலம் விதி மாற்றி எழுதப்பட்டது.

நீங்கள் சிவபுண்ணியச் செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வரவேண்டும்.

சிவபுண்ணியம் என்பது மிக மிக எளிமையானது. ஆனால், தலையெழுத்தையே மாற்றவல்லது. அந்த தொழிலாளி அன்றிரவு இடி தாக்கி மரணமடையவேண்டும் என்பது விதி. ஆனால் அவர் மனதால் செய்த சிவபுண்ணியம் அவரை கடைசி நேரத்தில் காப்பாற்றிவிட்டது. இதன் பெயர் தான் வினை சுருங்குதல். அதாவது அனுபவித்தே தீரவேண்டும் என்ற விதியை மாற்றுவது. தலைக்கு வருவதை தலைப்பாகையோடு போகச் செய்யும் சக்தி சிவபுண்ணியத்துக்கு உண்டு. கர்மவினைக் கொள்கை சிவனை வழிபடுகிறவர்களிடம் எடுபடாது. இதை நாம் சொல்லவில்லை திருஞானசம்பந்தரே சொல்லி இருக்கிறார்.

தொண்டணை செய்தொழில் துயரறுத் துய்யலாம்
வண்டணை கொன்றையான் மதுமலர்ச் சடைமுடிக்
கண்டுணை நெற்றியான் கழுமல வளநகர்ப்
பெண்டுணை யாகவோர் பெருந்தகை யிருந்ததே.

சீர்காழி பிரம்மபுரீஸ்வரரை நோக்கி சம்பந்தப் பெருமான் பாடிய இந்தப் பாடலின் பொருள் என்ன தெரியுமா?

“தொன்றுதொட்டு உயிர்களைப் பற்றி வருகின்ற வினையால் உண்டாகும் துன்பத்தை நீக்கி உய்விக்கும் பொருட்டு , வண்டுகள் மொய்க்கின்ற தேனையுடைய கொன்றை மலர்களைச் சடைமுடியில் அணிந்தும், நெற்றியில் ஒரு கண் கொண்டும், கழுமலம் (சீர்காழி) என்னும் வளநகரில் உமாதேவியை உடனாகக் கொண்டும் பெருந்தகையாகிய சிவபெருமான் வீற்றிருந்தருளுகின்றான்!”

ஆம்… நமக்கு அருள் செய்வதற்கென்றே காத்திருக்கிறான் அந்த காருண்யமூர்த்தி! அவன் கழல் பற்றுவோர் பாக்கியசாலிகள்!!

‘சிவபுண்ணியம்’ என்கிற வார்த்தை எத்தனை வலிமையானது என்று இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நம்புகிறோம்!

செயற்கரிய செய்வார் பெரியர்

!!ஸ்ரீ கிருஷ்ணர் கேட்ட தானம்!!

இந்திர பிரஸ்தத்தின் மன்னன் யுதிஷ்டிரன் ..

ரத்னபுரி அரசன் மயூரத்வஜன் ....

இவ்விருவரும் , ஒரே சமயத்தில் யாகம் செய்யத் தீர்மானித்தனர் ; ஆனால் ஒருவர் தீர்மானித்தது மற்றவர்க்கு தெரியாது அதன் படி யாகக்குதிரையை தக்க காவலோடு நாடு சுற்ற தீர்மானம் செய்யப்பட்டது

அவ்வகையில் யுதிஷ்டிரனின் குதிரைக்கு கிருஷ்ணரும் , அர்ஜுனனும் மயூரத்வஜனின் குதிரைக்கு அவனது மகனான தாம்ரத்வஜனும் அனுப்பி வைக்கப்பட்டனர்(மயூரத்வஜனுக்கு ஸ்ரீ கிருஷ்ணர் மேல் அதீத பிரேமை உண்டு )
இரு தரப்பினரும் இடையில் சந்தித்து ஒருவர் குதிரையை ஒருவர் பிடிக்க முற்பட ......கடும் சண்டை நடந்தது !

( கண்ணனின் திருவுளப்படி ) அர்ஜுனன் மயங்கி விழ ........தாம்ரத்வஜன் இரு குதிரைகளோடு நாடு திரும்பினான் ; நடந்ததையறிந்த மயூரத்வஜன் வருந்தி ,
" மகனே ....ஸ்ரீக்ருஷ்ணர் அந்த இடத்தில் இருக்கிறார் என்று தெரிந்துமா சண்டையிட்டாய் ? இதற்கு என்ன பிராயச்சித்தம் செய்யப்போகிறோம் "
என்று நொந்து கொண்டான்....

.இதற்கிடையில் மயக்கம் தெளிந்து எழுந்த அர்ஜுனன் , தன் தோல்வியை எண்ணி கொதித்துப்போய் புலம்பி தீர்த்தான்

ஆனால் , ஸ்ரீக்ருஷ்ணரோ அமைதியாக ,
" அர்ஜுனா ...பொறுமையாக இரு !...நாம் இருவரும் ரத்னபுரி செல்வோம் ...ஆனால் ஒரு நிபந்தனை ! நீ அங்கே என்ன நடந்தாலும் வாயே திறக்கக்கூடாது !...எந்த கேள்வியும் கேட்ககூடாது !"என்று கூற , அர்ஜுனனும் அதற்கு சம்மதித்தான் ; இருவரும் ரத்னபுரியை அடைந்தார்கள்

 மகிழ்ச்சியுடன் அவர்களை வரவேற்றான் மயூரத்வஜன் ; பின் பணிவுடன்
" தவறு நடந்து விட்டது !....என் மகன் ஏதோ அறியாமல் பிழை செய்து விட்டான் ! தயை கூர்ந்து எங்களை மன்னித்தருள வேண்டும் "....

குற்றஉணர்ச்சியில் தலை குனிந்தவாறு கம்மிய குரலில் பேசிய மயூரத்வஜனை மந்தஹாச புன்னகையுடன் ஏறிட்டார் பரந்தாமன்

" மயூரத்வஜா ....அபராதத்தை சும்மா மன்னிக்க முடியாது .....ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டும் !"
என்றார்

" கண்டிப்பாக ...பரிகாரம் எதுவாயினும் அடியேன் செய்ய தயாராயிருக்கிறேன் ...கூறுங்கள் !"..

.என்றான் மயூரத்வஜன் பரபரப்பாக ;
" நல்லது !...தவறு செய்த உன் மகனை மனப்பூர்வமாக நீயும் உன் மனைவியும் சேர்ந்து இரண்டாக அறுத்து வலது பாகத்தை அடியேனுக்கு தானமாக தரவேண்டும் ...உங்கள் மூவரில் யார் சோகமாக இருந்தாலும் , கண்ணீர் சிந்தினாலும் தானத்தை ஏற்க மாட்டேன் !...சம்மதமா ?"....

கேட்ட பரந்தாமனை அமைதியாய் ஏறிட்டான் மயூரத்வஜன் ; அவன் முகத்தில் எவ்வித சலனமும் இல்லை;
" கிருஷ்ணா .....எனக்கு பரி பூரண சம்மதம்.என்னிடம் இருப்பதை கேட்டதற்காக ஆனந்தபடுகிறேன்

 உங்களுக்கு தானம் செய்ய நங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும்",....
உணர்ச்சி பொங்க கூறிய மயூரத்வஜன் , அடுத்தக்கணம் மகனுக்கு தைல ஸ்நானம் செய்து வைத்து கிழக்கு திசை பார்த்து மணை பலகையில் அமர்ந்தான்.

மனைவி ஆடாத படி மகன் உடலை பிடித்து கொள்ள மயூரத்வஜன் கத்தியால் பிள்ளையை அறுக்க தொடங்கினான்.
தாம்ரத்வஜனின் இடது கண்ணிலிருந்து நீர் வழிந்தது இப்போது

மறு கணம் கிருஷ்ணர் பரபரப்புடன்,
" நிறுத்துங்கள் !.. அவன் வலி பொறுக்க முடியாமல் அழுகிறான் ....அழுது கொண்டே தரப்படும் தானம் பாபத்தையே தரும் "...

கிருஷ்ணனின் இந்த வார்த்தைகளைக் கேட்டு அர்ஜுனனுக்கு தூக்கிவாரி போட்டது !
' இதென்ன ...கிருஷ்ணன் ஏன் இப்படி இரக்கமின்றி நடந்து கொள்கிறார் ?' ..இந்த ரீதியில் அவன் சிந்தித்துக்கொண்டிருக்கும் போதே தாம்ரத்வஜனின் குரல் அவன் சிந்தனையைக் கலைத்தது

" பரந்தாமா ......பெரியவர்கள் பேச்சில் குறுக்கிடுவதற்கு மன்னிக்க வேண்டும் ....கண்ணீர் வழிவது என் இடது கண்ணில் !...தாங்கள் தானம் கேட்டது என் உடலின் வலது பாகத்தை !...ஒரே உடம்பாயிருந்தும் தானம் போக நான் அருகதையற்றுப் போனேனே என்று இடது பக்கம் அழுகிறது சுவாமி !..இரு கரங்களும் சேர்ந்து தானே இறைவனை வணங்குகின்றன ?....அப்படியிருக்கும் போது நான் எவ்விதத்தில் தாழ்வு ஆனேன் என்று எனது இடது கண் வருந்தி கண்ணீர் விடுகிறது ! மற்றபடி ..சத்ரியனை ரத்தமும் , கத்தியும் பயப்படுத்தாது பரந்தாமா

.அவன் பேசி முடிக்க ....இப்போது அர்த்தபுஷ்டியுடன் அர்ஜுனை பார்த்தார் கிருஷ்ணர்
அந்த பார்வையின் வீரியத்தை தாங்க முடியாமல் தலை குனிந்த அர்ஜுனனின் மனதில் இப்போது ஆயிரமாயிரம் எண்ண அலைகள் !
' பார்த்தாயா ?...இப்படிப்பட்ட தேக சமர்ப்பணத்தை செய்த இவன் உன்னை வெற்றி கண்டது பொருத்தமானது தானே ? உன் அகந்தை அழிந்ததா ?'

.கிருஷ்ணன் கேட்பது போலிருக்க ......
.மறு கணம் அர்ஜுனன் வாயிலிருந்து அனிச்சையாய் வார்த்தைகள் வெளி வந்தன

" மன்னா .....தாம்ரத்வஜா .....அடியேன் உங்கள் முன் கூனிக் குறுகி சிறுமைப்பட்டு நிற்கிறேன் !...செயற்கரிய செயலை செய்து நீவிர் இருவரும் மலையளவு உயர்ந்து நிற்கிறீர்கள் !....

..குரல் கம்ம பேசிய அர்ஜுனனை புன்னகையோடு ஏறிட்டார் பரந்தாமன் ; .
..பின்னர் அவனருளால் தாம்ரத்வாஜன் பூரண தேஜஸோடு மீள .......விருந்துண்டு விடைபெற்றனர் ஸ்ரீக்ருஷ்ணரும் , அர்ஜுனனும்

" செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்"(விளக்கம்: செய்வதற்கரிய செயல்களை செய்ய வல்லவர் பெரியவர்; செய்வதற்கரிய செயல்களை செய்ய முடியாதவர் சிறியவர்)

மகாபாரதத்தில் இடம் பெற்றிருக்கும் இந்த சம்பவம் இந்த திருக்குறளை நினைவூட்டுகிறதல்லவா?

புத்திரசோகம்

புத்திரசோகம்
------------------------
(Thanks to Whastsup)

"" பெரியவாளிடமோ, மஹான்களிடமோ பக்தியும், ஶ்ரத்தையும்கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டமே வராது என்று அர்த்தமில்லை. நம்முடைய ப்ராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்.""

ஶ்ரீ பரணீதரனின் உறவுக்காரப் பையன் ஒருவன் அழகு, குணம், அறிவு என்று எல்லாவற்றிலும் உயர்வாக இருந்தான். I.A.S பரிக்ஷையில் நன்றாக ஶோபித்து, அரஸாங்கத்தில் உயர் அதிகாரியாக பணியாற்றினான்.

யாருடைய கண் பட்டதோ! க்ஷணத்தில் ஒரு கொடூரமான கார் விபத்தில், அத்தனை பேரையும் ஶோகத்தில் ஆழ்த்திவிட்டு போய்ச் சேர்ந்துவிட்டான்!

பெற்றவர்களும், நண்பர்களும், சுற்றமும் அந்த பேரிடியிலிருந்து மீளவே முடியாமல் தவித்தனர். யாருடைய ஆறுதலான வார்த்தைகளும் அங்கு ஒரு க்ஷணத்துக்கு கூட எடுபடவில்லை!

தங்கமாக பொத்தி பொத்தி வளர்த்த தலைச்சனை இழந்து அந்த தாயார் கதறிய போது, அத்தனை பேருமே அந்த துக்கத்தை அனுபவித்தனர். துக்கம் அதிகமாகும் போது, உலகத்தில் உள்ள எப்பேர்ப்பட்ட உயர்ந்த ஸுக போகங்களும், துச்சமாகத்தான் தெரியும்.

ஆனால்….. அந்த துக்கம், அதுவும் “புத்ர ஶோகம்” என்னும் பெருந்துக்கத்தையும் ஸமனப்படுத்தி, மனஸை அமைதிப்படுத்தும் ஶக்தி…. மஹான்கள், தெய்வம்… இந்த ஸந்நிதானத்துக்கு மட்டுந்தான் உண்டு.

ஏனென்றால்….. நமக்கெல்லாம் ‘மனஸ்’ என்ற ஒன்று இருப்பதால்தான், அத்தனை அர்த்தமும், அதனால் வரும் அனர்த்தமும்! அதனால்தான், பந்தம், பாஶம், ஸுகம், துக்கம், இத்யாதிகள்…

பகவானின் ஸந்நிதியில், மஹான்கள் ஸந்நிதியில் மட்டுந்தான், இந்த மனஸால், தன்னுடைய கைவரிஸையை காட்ட முடியாது.

அதுவும் ஸந்தோஷமாக இருக்கும் நேரத்தை விட, நம்முடைய துக்கத்தில், கஷ்டத்தில்… நாம் பகவானை பிடித்துக் கொள்ளும் பிடிக்கு, [மர்கட கிஶோரம்-குரங்குப்பிடி] அதிக பலம் உண்டு! அவனும், அந்த ஸமயத்தில் நம்மை அணைத்துக் கொள்ளும் அணைப்புக்கு [மார்ஜாரம்-பூனையம்மா] அதிக வாஞ்சை உண்டு!

இந்த அம்மாவும், தன் புத்ரஶோக ரணத்துக்கு, மாமருந்தை நாடி, தேனம்பாக்கம் ஶிவாஸ்தானம் சென்றாள்.

பெரியவா அன்று அதிக கூட்டமில்லாமல், ஏகாந்தமாக இருந்தார். ஶ்ரீ பரணீதரன் அந்த பையனின் பெற்றோரை அழைத்துச் சென்று, பெரியவாளிடம் அவர்களுடைய துக்கத்தைச் சொன்னார்.

பெற்றவர்களுக்கும், அந்த லோக ஜனனியைப் பார்த்ததும், துக்கம் பீறிட்டுக் கொண்டு வந்தது. கதறி விட்டார்கள்!

பெரியவா எதுவுமே பேசவில்லை. பிறகு பரணீதரனிடம் கேட்டார்….

“எம்பிள்ளை ஆக்ஸிடென்ட்ல போய்ட்டானே!…. ஒனக்குத் தெரியுமோ?…”

என்னது? கோடானுகோடி ஜீவன்களின் தாயும், தந்தையுமான நம் ஸ்வாமி, தன்னுடைய எந்தப் பிள்ளையைப் பற்றி சொல்கிறார்!

பரணீதரன் முழித்தார்!

“அதாண்டா…! என் [பூர்வாஶ்ரம] அண்ணாவோட பிள்ளை…! மணி ஶாஸ்த்ரி….! அவனை நீ பாத்திருக்கியோன்னோ?..”

“ஆமா… மடத்ல பாத்திருக்கேன்….”

“அவன்… கொஞ்ச நாள் முன்னாடி, பெங்களூர்கிட்ட, ஒரு கார் ஆக்ஸிடென்ட்ல போய்ட்டான்! விடிகார்த்தால, நாலஞ்சு பேரோட, கார்ல வந்துண்டிருந்திருக்கான்! ரயில்வே லெவல் க்ராஸிங்ல நொழையறப்போ, ரயில் வந்து மோதி, காரைத் தூக்கியடிச்சுடுத்து! ரெண்டு, மூணு பேர்… on the spot செத்துப் போய்ட்டா! அதுல, மணியும் ஒர்த்தன்! தலை ஒரு பக்கம், கை ஒரு பக்கம், கால் ஒரு பக்கம்-னு ஒடம்பு செதறிப் போச்சு!….”

“பெரியவாளுக்கே பிள்ளையை பறிகுடுத்த ஶோகமா?…”

அங்கிருந்தோர் திகைத்தனர்.

அப்போது அம்மாக்காரி பெரியவாளிடம் அழுதாள்.

“எங்களால இந்த துக்கத்தை தாங்கவே முடியல.. பெரியவா! எதுக்காக இப்டியொரு தண்டனைன்னே புரியல! என் பஸங்க.. பெரியவா மேல உஸுரையே வெச்சிருக்கா…! காமாக்ஷி மேல, அபாரபக்தியும், நம்பிக்கையும் வெச்சிண்டிருக்கா! இப்டி நடந்ததுக்கு அப்றம், அவாளுக்கு எல்லாத்துலயும் நம்பிக்கை போய்டுத்து பெரியவா…! “நமக்கு ஏம்மா இப்டி நடந்துது? ஸாமியாவுது! பூதமாவுது!..”ன்னு ரொம்ப விரக்தியா பேசறா.! அவாளுக்கு என்ன ஸமாதானம் சொல்றதுன்னு எனக்குப் புரியல…! பெரியவாதான்.. எங்களுக்கு நல்ல வழி காட்டணும்”

பெரியவா கொஞ்ச நேரம் ஆழ்ந்த மௌனத்தில் இருந்தார். பிறகு மயில்தோகையைக் காட்டிலும் ம்ருதுவாக வருடும் குரலில், பெற்றுப் பறிகுடுத்த மனங்களை ஆற்றிக் கொடுக்கும் வகையில் சொன்னார்……

“நமக்கு ரொம்ப துக்கமோ, கஷ்டமோ வரச்சே, அம்பாள் பேர்ல கோபம் வர்றது ஸஹஜம். அம்பாள் நம்மள தண்டிச்சு கஷ்டம் குடுக்கற மாதிரி தோணினாலும், அவ மேல இருக்கற பக்தியை மட்டும் விட்டுடக்கூடாது! இன்னும் ஜாஸ்தியா நம்பிக்கை வெக்கணும். செல ஸமயம் அம்மா கொழந்தையை கோவிச்சுக்கறா.! ஓங்கி ரெண்டு அடி கூட வெக்கறா ! அப்போ, கொழந்தை நெஜமா துக்கப்படறது!… ‘ஓ’!-ன்னு அழறது…! ஆனா, ஒடனே எந்த அம்மா அடிச்சாளோ… அவகிட்டயேதான் அது போறது… அடிச்ச கையையே பிடிச்சிக்கறது. அவளோட காலையே கட்டிண்டு அழறது…

….அதுமாதிரி, அம்பாளோட கொழந்தேளான நாமளும், துக்கம் வந்தா… அம்பாள்தான் அந்தக் கஷ்டத்தை குடுத்தா-ன்னு நெனச்சா… “எனக்கேம்மா இந்த தண்டனையைக் குடுத்தே? என்னால தாங்க முடியலியே ! ஒன்னை விட்டா… எனக்கு வேற யாரு இருக்கா?..” ன்னு அவ பாதத்தையே பிடிச்சிண்டு அழணும்.! மறுபடியும் அவகிட்டதான் போயாகணும்! வேற வழியே இல்ல!…”

அத்தனை நாட்கள் பலரது தேறுதல் வார்த்தைகள் தராத ஒரு வகை அமைதியை, அன்று அந்தப் பெற்றோர், ஶ்ரீ மாதாவின் தெய்வீக வார்த்தைகளில் உணர்ந்தார்கள்.

கண்டிப்பதற்காக அடித்தபின், தன் காலையே கட்டிக்கொண்டு அழும் குழந்தையிடம் ஸாதாரண அம்மாவுக்கே, அன்பு பல மடங்கு பெருகும் எனும் போது, லோகமாதாவின் அன்பு எப்பேர்ப்பட்டதாக இருக்கும்!

“பெரியவா அந்தக் குழந்தையை ஸ்மரித்ததாலேயே, அந்தக் குழந்தைக்கும் நல்ல கதியை குடுத்துவிட்டார்! இனி அவன் அம்பாளுடைய குழந்தை” என்ற பேருண்மையை உணர்ந்த க்ஷணமே, அவர்களுடைய மலையளவு துக்கம்…. சிறு மருவைப் போல் சிறுத்தது.

ஜகத்குருவான, பகவான் க்ருஷ்ணனின் ஸஹோதரி, ஸுபத்ரையின் மகன் அபிமன்யு பாரதப் போரில் 16 வயதே நிரம்பியவனாக இருந்தும், ஸொந்த பெரியப்பா, சிற்றப்பாக்களால் கொடூரமாக கொல்லப்பட்டான்.

க்ருஷ்ணன் நினைத்திருந்தால், தன்னுடைய மருமகனை, அதுவும் குழந்தையிலிருந்தே தன் மார் மேலும், தோள் மேலும் தூக்கிக் கொஞ்சிய ப்ரியமான குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாதா?

அர்ஜுனன்தான், ஆப்த நண்பனாயிற்றே! தன்னுடைய ஆப்தர்களாக இருந்தாலும், விதிப்படி இன்னதுதான் நடக்கவேண்டும் என்று இருந்தால், அதை தனக்கு ஸாதகமாக செய்து கொள்ள மாட்டான் பகவான்!

க்ருஷ்ணனின் யாதவ குலத்துக்கே நாஶத்தை [அழிவை] கொண்டு வந்தது வேறு யாருமில்லையே! ஸாக்ஷாத் க்ருஷ்ணனின் புத்ரனான ஸாம்பன்தான்!

பெரியவாளிடமோ, மஹான்களிடமோ பக்தியும், ஶ்ரத்தையும் கொண்டிருப்பவர்களுக்கு கஷ்டமே வராது என்று அர்த்தமில்லை. நம்முடைய ப்ராரப்த கர்மாவை அனுபவித்துத்தான் கழிக்க வேண்டும்.

பகவானை, குருவை ஆஶ்ரயித்தவர்களுக்கு, எந்தவித கஷ்டத்தையும் தாங்கிக் கொண்டு, அதை அப்படியே குருவின் பாதங்களில் ஸமர்ப்பித்து விட்டு, நிஶ்சிந்தையாக, அமைதியாக இருக்கும் வல்லமை வந்து சேரும்.

பகவானின், குருவின் சரணத்தில் நம்முடைய ஸுக துக்கங்களை போட்டுவிட்டு, இனியாவது அமைதியை அடைவோம்.
Nib
ஆசார்யாள் பாதங்களில் ஸமர்ப்பணம்

Compiled & penned by Mr.Gowri Sankar.

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை

அனைவரும் பின்பற்ற வேண்டிய
நாகரிகங்கள் இவை :
(Thanks to Whatsup)

> ஒருவரோ , பலரோ உறங்கிக் கொண்டிருக்கும் அறையில் நுழையும் போது டமால் டுமீல் தட் புட் தடால் பணால் என்று சத்தம் போடாதீர்கள். வியாக்ர பாதர், தேனீ உட்காராத பூக்களைக் கண்டுபிடிக்க புலிப்பாதம் வேண்டிக் கொண்டாராம். அப்படி நீங்களும் புலி/பூனைப் பாதத்துடன் நடந்து சென்று காரியத்தை முடித்துக் கொள்ளுங்கள்.

> பொது இடங்களில் நிற்கும் போது யாருடைய வழியையேனும் அடைத்துக் கொண்டு நிற்கிறீர்களா என்று உறுதி செய்து கொள்ளுங்கள். ரயிலில் பஸ்ஸில் தேவை இல்லாமல் எழுந்து நிற்காதீர்கள். த்ரீ சீட்டர் சீட்களில் உங்கள் இடத்தை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். பைகளை சீட்டில் வைக்காதீர்கள். ரயிலில் இரவுப் பயணத்தில் ஏதேனும் காரணத்துக்காக லைட்டைப் போட்டால் மீண்டும் அணைக்க மறக்காதீர்கள்.

>நண்பர்கள்/உறவினர்கள் வீடுகளுக்கு செல்லும்போது அவற்றின் அமைப்பைக் குறை சொல்லாதீர்கள். (பாத்ரூம் இங்கே இருந்திருக்கலாம்!) அமைப்பை மாற்ற யோசனை சொல்லாதீர்கள். (இந்த பிரிட்ஜை இங்கே வெச்சுக்கலாமே! - none of your business!). அவர்கள் படுக்கையறைக்கு செல்லாதீர்கள். அவர்கள் போனைக் கேட்காதீர்கள். அவர்கள் வைஃபை பாஸ்வேர்ட் கேட்காதீர்கள்.

> கடனைத் திருப்பிக் கேட்கும் முன்னர் அதற்கு  ஒரு குறிப்பிட்ட குறைந்தபட்ச நாட்கள் காத்திருங்கள்.

> ஒருவர் கைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றால் தொடர்ந்து விடாமல் மீண்டும் மீண்டும் அழைப்பது வேண்டாம். அது கொஞ்சம் சைக்கோத் தனம் . அவர்களையும் தேவையில்லாமல் பயமுறுத்தும்.

>ஒருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறீர்கள். அவரை விட வயதிலோ, அந்தஸ்திலோ, பதவியிலோ, முக்கியத்துவத்திலோ உயர்ந்த ஒருவர் உங்களை அழைக்கிறார். பலர் அந்த முதல் நபரை அப்படியே அம்போ என்று விட்டுவிட்டு பரபரப்புடன் இரண்டாம் நபரிடம் ஓடி விடுவார்கள்.
அவரிடம் குறைந்தபட்சம் 'ஒரு நிமிடம், போய் வந்துவிடுகிறேன்' என்று சொல்லிச் செல்லவும்.

>பரபரப்பான சாலைகளில் குழந்தைகளை / குடும்பத்தை போட்டோ எடுக்காதீர்கள். கேமெராவுக்கும் போட்டோ எடுக்கப்படுபவருக்கும் இடையே நடக்க நிறைய பேர் தயங்கித் தயங்கி நின்றிருப்பார்கள்.

> பொதுக் கழிப்பிடங்களை உபயோகித்தபின் நிறைய தண்ணீர் ஊற்றிவிட்டு வாருங்கள்.

> பஸ்ஸிலும், ரயிலிலும், லிப்டிலும் முதலில் உள்ளே இருப்பவர்கள் இறங்கிய பின் தான் நீங்கள் எற வேண்டும்.

>பொது இடங்களில் பேசும்போது கத்திப் பேசாதீர்கள். மொபைல் கால் வந்தால் தனியாகப் போய் ஓரிடத்தில் பேசி விட்டு வாருங்கள். டாக்சிதான் ஏறிவிட்டோமே என்று டாக்சியில் கத்திப் பேசாதீர்கள். அது ஓட்டுனரை தொந்தரவு செய்யும். ஹெட்செட்டில் பாட்டு கேட்டுக்கொண்டே சத்தமாகப் பேசவோ , பாடவோ, டான்ஸ் ஆடவோ வேண்டாம்.

>நீங்கள் ஓட்டுனராகவோ, அல்லது சேவை வழங்குநராகவோ (எலக்ட்ரீசியன், பிளம்பர் , பெயிண்டர் etc ) இருந்தால் கஸ்டமரின்  personal விஷயங்களை/தகவல்களைக் கேட்காதீர்கள் . உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்.

> சூப்பர் மார்க்கெட்டில் உங்களுக்குப் பின்னே கியூ நிற்கிறது. அப்போது பில் போடுபவரிடம் தேவையில்லாத தகவல்களைக் கேட்டுக்கொண்டு இருக்காதீர்கள்.(இந்த ஸ்கீம் பத்தி டீட்டெயில்ட்டா சொல்றீங்களா?). 
அதே போல "இருங்க, ப்ரெஷ் வாங்க மறந்துட்டேன்" என்று ஓடாதீர்கள். consider others !

> ஒருவர் உங்களுக்கு treat தரும் போது இதுதான் சாக்கு என்று விலையுயர்ந்த அயிட்டங்களை ஆர்டர் செய்யாதீர்கள்.

>ஒருவர் வீட்டுக்குப் போகும் முன்னர் பல மணிநேரங்களுக்கு முன்னரே தகவல் சொல்லுங்கள். no surprises ! நீங்கள் சர்ப்ரைஸ் விசிட் என்று நினைத்துக் கொண்டு போவது அவர்களை எரிச்சல் படுத்தும்.

>நீங்கள் guest ஆக ஒரு உறவினர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்குத் தேவையான மாத்திரை மருந்துகளைக் கொண்டு செல்லுங்கள். அங்கே போய் ராத்திரி 9 மணிக்கு 'ரகு ,எனக்கு இந்த மாத்திரை வாங்கி வந்திடறியா ' என்று கடுப்பேற்றாதீர்கள்.

> முதல் சந்திப்பிலேயே ஒருவரைப் பற்றிய opinion களைத் தவிருங்கள். 'நீங்க ரொம்ப shy டைப்பா? ' .வந்ததில் இருந்து பத்து வார்த்தை கூட பேசி இருக்க மாட்டீங்க.

>நீங்கள் சந்திக்கும் நபரைப்பற்றி அதிகம் கேளுங்கள் /பேசுங்கள். உங்களைப் பற்றி அல்ல. (நான் எப்படின்னா, நான் இப்படித்தான், எனக்கு இது பிடிக்காது, ஒருநாள் நான்...etc )

>யாராக இருந்தாலும் ஒருவர் வாசலை விட்டு நகர்ந்த அடுத்த மைக்ரோ வினாடி கதவை அடைக்காதீர்கள் . அவர்கள் கொஞ்ச தூரம் போகும்வரை காத்திருங்கள்.

>வயது, சம்பளம் , விவாகரத்து காரணம் , இவைகளைக் கேட்காதீர்கள். தம்பதிகளிடம் எப்போது குழந்தை என்று கேட்காதீர்கள்.

>உங்களை விட வயதில் சிறியவர்களிடம்  உரையாடும்போது அட்வைஸ் செய்யாதீர்கள். no one likes advices.

>வீட்டில் உறவினர்கள் வருகிறார்கள் என்றால் அவர்களுக்கு அன்றாடம் தேவையானவற்றை வாங்கி வையுங்கள். அவர்களை பாத்ரூம் சென்று என்றோ தீர்ந்து போன பேஸ்டை பிதுக்க வைக்காதீர்கள்.

> புதுமனைப் புகுவிழாவின் போது வீடு வாங்கியவரை முந்திரிக் கொட்டை போல 'ஸ்கொயர் பீட் எத்தனை?' என்று கேட்காதீர்கள். 'எங்க ஏரியாவில் கம்மி ரேட் ' என்றெல்லாம் சொல்லாதீர்கள். 'வீடு நல்லா இருக்கு , கங்கிராட்ஸ் ' என்று முதலில் சொல்லுங்கள்.

>உங்கள் பிள்ளைகளின் நண்பர்கள் வீட்டுக்கு வந்தால் அவர்களை பேச விடுங்கள். நடுநாயகமாக உட்கார்ந்து கொண்டிருக்காதீர்கள். allow them freedom! அதே போல இளைஞர்களின் விஷயத்தில் தலையிடாமல் ஒதுங்குங்கள். 70 வயதானாலும் ஜோவியலாகப் பேசுகிறேன் பேர்வழி என்று 'என்னடா அஷோக் ,நேத்து ராத்திரி அஜால்ஸ் குஜால்ஸ் தானா ?' என்றெல்லாம் கேட்காதீர்கள்.

>ஒருவர் உங்களிடம் அன்பளிப்பை கிஃப்ட் ரேப் செய்து கொடுத்தால் 'பிரிக்கலாமா?' என்று கேட்டுவிட்டுப் பிரியுங்கள் . 'ஓ , சாண்டிவிட்ச் மேக்கரா, ஏற்கனவே என் கிட்ட இருக்கே' என்றெல்லாம் சொல்லாதீர்கள். accept it .

> பழைய நண்பர்கள் சந்திப்பில் உங்களைப் பற்றி/உங்கள் குழந்தைகள் பற்றி  உயர்வாகவோ தாழ்வாகவோ பேசிக் கொள்ளாதீர்கள். உங்கள் designationஐ கேட்டால் மட்டும் குறிப்பிடுங்கள்.

> ஒருவருடைய மதம்/இனம்/ஜாதி பற்றி கேட்கவோ பேசவோ செய்யாதீர்கள்.

> உறவினர்களுக்கு சமைக்கும்முன் இந்த அய்ட்டம் உங்களுக்குப் பிடிக்குமா என்று கேட்டுவிட்டு சமையுங்கள்.

> ராத்திரி 8 மணிக்கு மேல் ஒருவருடைய வீட்டுக்கு செல்ல வேண்டாம். 9 மணிக்கு மேல் போன் செய்ய வேண்டாம். (unless they are your spouse / lovers )
நீங்கள் guest ஆக சென்றிருந்தால் காலை சீக்கிரம் எழுந்து கொள்ளுங்கள். 10 மணிவரை குறட்டை விட்டுத் தூங்க வேண்டாம்.

>வெளியில் போகையில் சில்லறை கொண்டு செல்லுங்கள். 100 ரூபாய் பில்லுக்கு 2000 ரூபாய் நீட்டி சர்ப்ரைஸ் தராதீர்கள். அதே போல முதலிலேயே ரூபாயை எடுத்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ளுங்கள். சிலர் அவர்கள் முறை வந்த பின்பு தான் நிதானமாக ஹேண்ட் பேக்கை அகழ்வாராய்ச்சி செய்வார்கள்.

>ஒருவரை 3 வினாடிகளுக்கு மேல் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது offensive . (அந்த ஒருவர் உங்கள் காதலியாகவோ காதலனாகவோ இல்லாத பட்சத்தில்!). அதேபோல் ஒருவர் சமையல் செய்யும்போதோ, கோலம் போடும்போதோ , வரையும்போதோ பின்னால் நின்று கொண்டு உற்றுப் பார்த்துக்கொண்டே இருக்காதீர்கள்.

> கைக்குழந்தைகளை தியேட்டர்-களுக்குக் கூட்டிப் போகாதீர்கள்.

> பாடல்களை எப்போதும் இயர் போனிலேயே கேளுங்கள்.சைனா செட்டை இயக்கி மற்றவர்களை கதிகலங்க வைக்காதீர்கள்.

> ஒருவரின் உடல் அமைப்பைப் பற்றி comment செய்யாதீர்கள். என்ன சார்? தொப்பை பெருசாயிருச்சு போல!

> டாய்லெட் யூரினலில் ஏற்கனவே ஒருவர் இருந்தால் அவர் பக்கத்தில் இருக்கும் யூரினலைத் தவிருங்கள்.

> Service industry யில் இருப்பவர்கள் எல்லாரிடமும் அப்படித்தான் பேசுவார்கள். அதை சிக்னல் என்று எடுத்துக்கொண்டு வழியாதீர்கள்.

> மற்றவரின் taste /preference களைக் குறை சொல்லாதீர்கள். இந்த புக்கெல்லாம் எப்படித்தான் படிக்கிறீர்களோ/ இந்தப் பாட்டெல்லாம் எப்படி கேட்கறீங்களா!

>ஒருவர் போட்டோ பார்க்க போனை உங்களிடம் நீட்டினால் அந்த போட்டோவை மட்டும் பாருங்கள்.

>அளவுக்கதிகமான பெர்ப்யூம் போட்டுகொண்டு போய் எல்லாருக்கும் தலைவலி வரவழைக்காதீர்கள்.

முகநூலில் நட்பு கிடைத்தவுடன் அவர் அனுமதி கேட்காமல் video Chat அழைப்பு விடுக்காதீர்கள்

குழந்தை இன்னும் இல்லை என்றால் அத்துடன் விட்டு விடுங்கள்.ஏன் என்று என்று குடையாதீர்கள்

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா? - விளக்கும் கதை

பல்சுவை

எது நடந்தாலும் நன்மைக்கே என்ற பாசிட்டிவ் அணுகுமுறை சரியா? - விளக்கும் கதை #MotivationStory

Last Updated : 09-04-2018 06:35:45

- ஜி.லட்சுமணன்

THANKS TO VIKATAN MOBILE APP

`எதிர்மறையான சூழ்நிலையா... அதை நேர்மறையான சூழலுக்குத் திருப்பப் பாருங்கள்!’ - இப்படி ஒருமுறை குறிப்பிட்டார் பல சாதனைகளைப் புரிந்த, பிரபல பேஸ்கெட்பால் விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் (Michael Jordan). விளையாட்டுக்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இது பொருந்தும். பல நேரங்களில் நம் சோர்வுக்கு, மனக் குழப்பத்துக்கு, அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு, தோல்விகளுக்குக் காரணமாக இருப்பவை நம் நெகட்டிவ் எண்ணங்களே! பாசிட்டிவ் அணுகுமுறைக்குத்தான் பலம் அதிகம். `நல்லதே நினை, நல்லதே நடக்கும்’ என்பது வெறும் வாக்கியமல்ல. நாம் ஒவ்வொருவரும் கடைப்பிடிக்கவேண்டிய வேதம். நமக்கு நடப்பதெல்லாம் மோசமானதாகவே இருக்கட்டும்... அவற்றையும் பாசிட்டிவான கோணத்தில் பார்த்தால், `எல்லாம் நன்மைக்கே...’ என்று எடுத்துக்கொண்டால் எப்படி இருக்கும்? அந்த நிறைவை அனுபவித்தால் மட்டுமே உணர முடியும். அதை எடுத்துச் சொல்லும் கதை இது.

This article will continue after this advertisement

அவர் இங்கிலாந்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளர். அது இரவு நேரம். மணி பத்தைத் தாண்டியிருந்தது. ஏப்ரல் மாதம் தொடங்கியிருந்தது. கடந்த வருடம் ஏப்ரல் தொடங்கி, மார்ச் மாதம் வரை அவருக்கு என்னவெல்லாம் நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பார்த்தார். நினைக்க நினைக்க சோகம் கவ்விக்கொண்டது. மேசைக்கு முன்பாக அமர்ந்தார். ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக்கொண்டார். அவற்றையெல்லாம் பட்டியலிட ஆரம்பித்தார்...



* எனக்கு ஒரு ஆபரேஷன் நடந்தது. அதில் என் பித்தப்பையை அகற்றிவிட்டார்கள்.

* அறுவைசிகிச்சை காரணமாக நான் பல நாள்களுக்கு படுக்கையிலேயே இருக்கவேண்டியதாகிவிட்டது.

* எனக்கு 60 வயது நிறைவடைந்தது. எனக்குப் பிரியமான வேலை, என் முதுமை காரணமாக என்னைவிட்டுப் போனது.

* சுமார் 30 ஆண்டுகளாக வேலை பார்த்த பப்ளிஷிங் நிறுவனத்திலிருந்து நான் வெளியேறினேன்.

* அதே ஆண்டில், அதே நேரத்தில்தான் பிரியத்துக்குரிய என் தந்தை இறந்து போன துயரமும் நிகழ்ந்தது.

* என் மகனுக்கு ஒரு விபத்து நடந்ததும் கடந்த ஆண்டில்தான். அதனாலேயே அவனுடைய மருத்துவப் படிப்புக்கான தேர்விலும் தோற்றுப் போனான்.

* கால்களில் அடிபட்டதால், என் மகன் கால்களை அசைக்க முடியாமல் பல வாரங்களுக்குப் படுத்த படுக்கையாகக் கிடந்தான்.

* விபத்தில் மகனுக்கு அடிபட்டதோடு, என்னுடைய காரும் மிக மோசமாகச் சேதமடைந்திருந்தது.

இதையெல்லாம் எழுதிவிட்டு, கடைசியாக அவர் இப்படி எழுதினார்... `கடவுளே... இது மிக மோசமான வருடம்.’



எழுத்தாளரின் மனைவி, அந்த அறையின் வாசலில் வந்து நின்று எட்டிப் பார்த்தார். கணவர் சோகம் கவிந்த முகத்தோடு ஏதோ யோசனையிலிருப்பதை கவனித்தார். அவர் மேசைக்கு முன் அமர்ந்து ஏதோ எழுதுவதும் தெரிந்தது. அவர் சத்தமில்லாமல் அங்கிருந்து நகர்ந்தார்.

அன்றைக்கு இரவு கணவர் உறங்கச் சென்ற பிறகு, அந்த அறைக்குள் நுழைந்தார். கணவர் எழுதிய குறிப்பு மேசை மேலேயே இருந்தது. அதை எடுத்துப் படித்துப் பார்த்தார். ஒரு கணம் யோசித்தார். இன்னொரு பேப்பரை எடுத்து சில குறிப்புகளை எழுதினார். தன் கணவர் எழுதியிருந்ததை அகற்றிவிட்டு, அந்த இடத்தில் தான் எழுதிய பேப்பரை வைத்தார். வெளியேறினார்.

அடுத்த நாள் காலை, அந்த எழுத்தாளர் அந்த அறைக்குள் நுழைந்தார். மேசையில் தன் குறிப்புக்கு பதிலாக வேறொன்று இருப்பதைக் கண்டார். எடுத்துப் படித்தார். அதில் இப்படி எழுதியிருந்தது...

* பல வருடங்களாக எனக்கு பயங்கர வலியைத் தந்துகொண்டிருந்த பித்தப்பையை அகற்றி, அதற்கு விடை கொடுத்தேன்.

* என்னுடைய 60-வது வயதில் நல்ல ஆரோக்கியத்துடன் என் பணியிலிருந்து ஓய்வு பெற்றேன்.

* இனி என் நேரத்தை அமைதியான முறையில் கழிப்பேன். இனி, எந்தத் தொந்தரவும் இல்லாமல் நான் நினைத்ததை எழுத எனக்கு இப்போது அதிக நேரமிருக்கிறது.

* என் தந்தை தன்னுடைய 95-வது வயதில், இறுதிவரை யாரையும் சார்ந்து வாழாத அற்புதமான அந்த மனிதர், எந்தப் பிரச்னையுமில்லாமல் இயற்கை எய்தினார்.

* கடந்த வருடம்தான் கடவுள், என் மகனுக்குப் புதிதாக ஒரு வாழ்க்கையைக் கொடுத்தார்.

* என் கார் சேதமடைந்துபோனது. அது பரவாயில்லை, என் மகனுக்கு பெரிதாக எதுவும் ஆகாமல், காலில் அடியோடு தப்பித்தானே... அது போதும்.

இந்தக் குறிப்புகளுக்குக் கீழே இப்படி எழுதியிருந்தது. `ஆக, கடவுளின் அளப்பரிய கருணை என் மேல் விழுந்த இந்த வருடம் நல்லவிதமாகக் கடந்துபோனது. நன்றி கடவுளே!’

***

Published Date : 09-04-2018 06:29:01

ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா

தமிழ்நாடு
THANKS TO VIKATAN MOBILE APP

கம்ப்யூட்டர், ஃபேன், கடிகாரம்... 2 லட்சம் பொருள்களுடன் அரசுப் பள்ளிக்கு வந்த சீர்வரிசை!

Last Updated : 17-04-2018 16:40:30

- எஸ்.தேவராஜன்

சிதம்பரம் அருகே உள்ள நந்திமங்கலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கிவருகிறது. இந்தப் பள்ளியில் மாணவர்களைச் சேர்க்க வலியுறுத்தியும் பொது மக்களுக்கு அரசுப் பள்ளிமீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும், தன்னார்வ அமைப்புகள் பள்ளிக்கு வழங்கிய பொருள்களைக் கிராம மக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாக எடுத்துவரும் ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா என்ற வித்தியாசமான விழா நடந்தது.



This article will continue after this advertisement

தமிழகத்தில் மக்களின் ஆங்கிலக் கல்வி மோகத்தால் அரசுப் பள்ளிகளில் நாளுக்கு நாள் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. இதனால் தமிழகத்தில் உள்ள பல பள்ளிகள் மூடு விழா காணும்நிலை உள்ளது. தமிழக அரசுப் பள்ளிகளில் மாணவர்களைச் சேர்க்க வலியுருத்தி மாணவர் சேர்க்கை விழிப்பு உணர்வுப் பேரணி, ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்குச் சென்று மாணவர்கள் சேர்க்கையில் ஈடுபடுவது எனப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகின்றது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நந்திமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தில் இயற்கை பேரிடர்கள் வரும் போதெல்லாம் பாதிக்கப்படும் இந்தக் கிராமம். ஏழை, எளிய விவசாயிகள் அதிகம் வசிக்கும் பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கிய கிராமம்.

இந்தக் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உதவி தலைமையாசிரியராகப் பணிபுரியும் சத்தியசீலன் என்ற பட்டதாரி ஆசிரியர் பள்ளியை மேம்படுத்தவும் மாணவர்கள் சேர்க்கையை ஊக்குவிக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை ஆர்வமாக எடுத்து வருகிறார். அதன் ஒரு பகுதியாக அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை வலியுறுத்தியும் பொது மக்களுக்கு அரசுப் பள்ளிகள்மீது நல்ல எண்ணங்களை ஏற்படுத்தவும் பள்ளிக்கு தன்னார்வ அமைப்புகள் வழங்கிய கம்ப்யூட்டர், ஃபேன், கடிகாரம் தேசிய தலைவர்களின் படம் உள்ளிட்ட சுமார் 2 லட்சம் மதிப்புள்ள பொருள்களைப் பெண்கள், கிராம பொதுமக்கள் மேள தாளத்துடன் ஊர்வலமாகக் கிராமத்தின் முக்கிய தெருக்கள் வழியாக எடுத்து வந்து விழிப்பு உணர்வை ஏற்படுத்தினார்கள். பின்னர், பள்ளியில் நடந்த விழாவில் காட்டுமன்னார்கோயில் எம்.எல்.ஏ முருகுமாறன், சிதம்பரம் எம்.எல்.ஏ பாண்டியன், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள், கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர். மிகவும் பின்தங்கிய பகுதியில் உள்ள பள்ளியில் நடந்த இந்த ஊர் கூடி கல்விச் சீர் திருவிழா அந்தக் கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Published Date : 17-04-2018 14:41:54

பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்

படித்ததில் பிடித்தது
(Thanks to Whatsup)

எலி சாதாரணமாக இருக்கும்போது மரத்தால் ஆன பொருட்களை ஓட்டை போட்டு நாசம் செய்யும்.

அதே எலி அதற்கென வைக்கப்பட்ட மரப்பொறியில் சிக்கிக் கொண்டால், எப்படி தப்பிக்கலாம் என பயத்தில் அங்கும் இங்கும் அலையுமே தவிர, மற்ற மரப்பொருட்களை ஓட்டை போட்டது போல, இம்மரப் பொறியையும் ஓட்டை போட்டு வெளியில் சென்று விடலாம் என யோசிக்கவே யோசிக்காது.

ஆமாம், இப்படி யோசித்தால், அதிகபட்சம் ஐந்து நிமிடத்தில் பொறியையே ஓட்டை போட்டு வெளியேறி விடும். ஆனால், மரப்பொறியில் சிக்கிய எலியை நீங்கள் ஐந்து நாட்கள் அப்படியே வைத்திருந்தாலும், அது தன்னால் வெளிவர முடியாத ஏதோவொரு பொறியில் அடைத்து வைத்து விட்டது போன்றே அங்கும் இங்கும் அலைபாயும்.

நம்மை யாரும் காப்பாற்ற மாட்டார்களா என ஏக்கத்தோடு பார்க்கும்.

அதற்கே உயிர் பிழைக்க வழி தெரிந்தாலும்  அந்த பதட்டத்தில் அதனது மூளை வேலை செய்யாது.

மனிதனும் பல நேரத்தில் இப்படித்தான் பல பிரச்சினைகளிலிருந்து வெளியே வர தெரிந்தும் பொறுமை இல்லாததால் தனது வாழ்க்கையை துறக்கிறான்.

நான் சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க!!

தலைமுறை இடைவேளி🤔🤔
(Thanks to Whatsup)

அன்று பரிட்சை எழுத காலண்டர்அட்டையை கொடுத்த என் தந்தையிடம்

சரி மேல மாட்டுற கிளிப்பாவது(வெறும் 3 ரூபாய்)வாங்கி தாங்க என்று அழுதபோது ,

டேய் உனக்காவது இது கிடைத்தது நான் படிக்கும்போது இதுக்குகூட எனக்கு
வசதியில்லை என்று சொன்ன என் தந்தையை பார்த்து நம்பாமல் நக்கலாக சிரித்தேன்!!!

இன்று மூன்றாவது வகுப்பு படிக்கும் என் மகளுக்கு exam board வாங்க போனபோது 150ரூபாய் மதிப்புள்ள   exam board ஐ பார்த்து உதட்டைபிதிக்கி "இதவிட betterஆ வேற இல்லையா?" என்று கடைக்காரரை பார்த்து கேட்டபோது எனக்கு தூக்கிவாரிபோட்டது,,

என் மகளிடம் பொருமையாக பாரும்மா அப்பா படிக்கும்போது பரிட்சைஎழுத காலண்டர்அட்டையை தான் கொண்டு போவேன், ink பாட்டில்  வாங்கவசதி இல்லாமல்(10ருபாய்) 10 பைசாவிற்கு கடையில் மை வாங்கியிருக்கிறேன், சில சமயம் பக்கத்தில்இருப்பவர்களிடம் ஒரு சொட்டு மை கடன் கேட்பேன்,புதிய புத்தகங்கள்வாங்க காசில்லாமல் போனவருடம் பாசான அண்ணன்மார்களிடம்  இருந்து புத்தகங்களை வாங்கி பள்ளிக்கு போனேன்; bookஐ மறந்தாலும் மதிய சத்துணவுக்காக தட்டை கொண்டுபோக மறந்ததில்லை;என்று  என் மகளிடம் நான் பட்ட கஷ்டங்களை எல்லாம் சொன்னபோது

நம்பாமல் நக்கலாக சிரிக்கிறாள் நான் அன்று என் தந்தையை பார்த்து சிரித்ததுபோலவே!!!!

நாசமா போறவ குடிக்கிறதண்ணீய குடம் நாலானா(25பைசா)  சொல்லுறா என்று புலம்பிக்கொண்டே பக்கத்து தெருவிலிருந்து தண்ணீர் பிடித்த என் தாயாரை பார்த்த அதே கண்களால்  இன்று  அப்பா filter water கேன் (2குடம் இருக்குமா?) வெறும் 35 ரூபாய்தானாம் என்று ஆச்சரியப்படும் என் மகளையும் (3 std படிக்கிறாள்) பார்க்கிறேன்

இதுதான் தலைமுறை இடைவேளியா?

நாய் கூட நடக்காத நண்பகல் வேளையில் நண்பர்களோடு கண்மாய்கரையை ஒட்டிய groundல் கிரிக்கெட் விளையாண்டுவிட்டு தாகம் எடுத்தால்  ஏதாவது ஒரு வீட்டின் கதவை தட்டி
(அவங்க என்ன ஆளுங்க என்றுகூட எங்களுக்கு  தெரியாது, நாங்க என்ன ஆளுங்க என்றுகூட அவங்களுக்கும் தெரியாது! ! அக்கா குடிக்க கொஞ்சம்தண்ணீ தாங்க என்று கேட்டால் சொம்பில் தண்ணீர் கொண்டு வந்து தருவார்கள்  நாங்கள் எல்லாரும் போட்டிபோட்டு கொண்டு மூச்சிரைக்க சட்டை நனைய தண்ணீர் குடிக்கும்அழகை ரசித்துகொண்டே தம்பி போதுமா இன்னும் வேணுமா என்று கேட்பார்கள் (ஆளுக்கு ஒரு சொம்பு என்றால் குறைந்தது 10 சொம்பு கிட்டத்தட்ட 4 லிட்டர்) ; இன்று என் வீட்டின் கதவை 10 பசங்க தட்டி தண்ணீர் கேட்டால் என் மனைவி தருவாளா? சந்தேகம்தான்?  என்மனைவியிடம் கேட்டேன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள் " நான் கதவையே திறக்க மாட்டேன்"!!!!!!!

இன்று jio SIM ல் இலவசமாக பேசிக்கொண்டு 10 ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு இருக்கும் நான் , ஒரு காலத்தில் 1ரூபாய்க்கு வடையை சாப்பிட்டு கொண்டு 6ரூபாய்க்கு போன் பேசி இருக்கிறேன் (ஞாயிற்று கிழமை ஆப் charge என்று வரிசையில் நின்று இருக்கிறேன்)!!!!

இன்று 64gb memory card ல்10 படங்களை வைத்து இருக்கும் நான்  ஒரு காலத்தில் யாருடைய வீட்டில்லாவது டெக்கில் புது படம் போடுகிறார்கள் என்றால் பிச்சைக்காரனை போல வாசலில் தவம் கிடந்து இருக்கிறேன்; "!!!

 இன்று ஒரு லிட்டர்  gold winner oil வாங்க ஓடும் நான் ஒரு காலத்தில் 100 ml எண்ணெய் வாங்க டானிக் பாட்டிலில் சரடை கட்டி  கொண்டு ஓடி இருக்கிறேன்

 Boost is secrete of my energy என்று விளம்பரத்தில் சொன்ன கபில்தேவை பார்த்து வாழ்க்கையில் ஒரு முறையாவது boostஐ வாங்கி குடித்து விடவேண்டும் என்று நினைத்தேன்;  இன்று பூஸ்ட் ,ஹார்லிக்ஸ், காம்பிளான் , பீடியா சுயர் ,என்று எதை வாங்கி குடுத்தாலும் taste சரியில்லை என்று பிள்ளைகள் சாப்பிடாமல் குப்பைக்கு போகிறது;

நான்  சாப்பாட்டுக்கு கஷ்டப்பட்டேன்; இப்ப இருக்கிற புள்ளைங்க சாப்படுறதுக்கு கஷ்டப்படுதுங்க!!

இது நெட்டில் சுட்டது இல்லை,
என் வாழ்கையில் நான் பட்டது!! Taken from Whatsup (But matches for most of us)

மனத்திருப்திகாக வேலை செய்

*🌳தினமும் ஒரு நற்சிந்தனை🌳*
(Thanks to Whastup)

ஒரு பணக்காரர் தன் வீட்டில் கடவுள் சிலை வைக்க, ஒரு சிற்பியை அணுகி சென்றார். அவர் சென்ற நேரம் அந்த சிற்பி ஒரு பெண் கடவுள் சிலையை செதுக்கிக் கொண்டிருந்தார்.
கொஞ்ச நேரம் அவர் செதுக்குவதை வேடிக்கை பார்த்த அவர், சிற்பி செதுக்கிய இன்னொரு சிலை அதே மாதிரி இருப்பதை கவனித்தார்.
உடனே பணக்காரர், ”ஒரே கோவிலில் எப்படி ஒரே மாதிரி சிலைகள் வைப்பார்கள்? இல்லை... இந்த இரண்டு சிலைகளும் வெவ்வேறு கோவிலுக்காக செதுக்குகிறீர்களா?” என்று சிற்பியிடம் கேட்டார்
சிற்பி சிரித்துக்கொண்டே, “இல்லை ஐயா. கீழே கிடக்கும் சிலையானது உடைந்து போனது...” என்றார்.
பணக்காரர் ஆச்சரியத்துடன், ”என்ன சொல்றீங்க... மிகவும் அழகாக தானே இருக்கிறது அந்த சிலை. எந்த பாகமும் உடையக்கூட இல்லையே!” எனக் கேட்டார்
“அந்த சிலையின் மூக்கில் சின்ன கீறல் இருக்கிறது... பாருங்கள்” என்றார் சிற்பி.
“ஆமாம்!.அது சரி.... இந்த சிலையை எங்கே வைக்கப் போகிறீர்கள்?” என்று கேட்டார் பணக்காரர்.
“இது கோவில் கோபுரத்தில், நாற்பது அடி உயரத்தில் வரும் சிலை!” உளியை உயர்த்திக் காட்டி சொன்னார் சிற்பி.
பணக்காரர் வியப்புடன், ”நாற்பது அடி உயரத்தில் இந்த சின்ன கீறலை யார் கண்டுபிடிக்கப் போகிறார்கள்? இதற்காக ஏன் இன்னொரு சிலை செய்கிறாய்... முட்டாள்!” என்றார்.
“அந்த சிலையில் கீறல் இருப்பது, எனக்கு தெரியுமே! எப்போது அந்த கோவில் வழி சென்றாலும், எனக்கு என் தொழிலில் உள்ள குறை உறுத்துமே.... அதனால் தான் இன்னொரு சிலை செய்கிறேன்” என்றார் சிற்பி.

*நீதி: அடுத்தவர் பாராட்டுக்காக வேலை செய்யாதே. உன் மனத்திருப்திகாக வேலை செய்!*

அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம், உயர்பதவி?’ - பொருமுபவர்களுக்கு

பல்சுவை

`அவருக்கு மட்டும் ஏன் இவ்வளவு சம்பளம், உயர்பதவி?’ - பொருமுபவர்களுக்கு விளக்கம் சொல்லும் கதை #MotivationStory

Last Updated : 06-04-2018 07:48:30

- பாலு சத்யா

THANKS TO VIKATAN MOBILE APP

`வேலையில் தரம், திறமை என்பதெல்லாம் ஒருபோதும் தற்செயலாகக் கிடைப்பதில்லை. புத்திசாலித்தனமான தொடர் முயற்சியால் மட்டுமே அது கிடைக்கும்’ - அழகாகச் சொல்லியிருக்கிறார் ஆங்கிலக் கலை விமர்சகர் ஜான் ரஸ்கின் (John Ruskin). எந்தத் தொழிலாக இருந்தாலும் எல்லோருக்கும் உயர்ந்த பீடம் கிடைத்துவிடுவதில்லை. உயரம் தொட்டவர்கள் அனைவருக்கும் அந்த இடம் தானாக வந்து சேர்வதுமில்லை. தொடர் முயற்சி, கடின உழைப்பு, புத்தி கூர்மை, சூழ்நிலைக்கேற்ப செயல்படும் சாதுர்யம் இவையெல்லாம்தான் ஒருவரைப் படிப்படியாக உயர்த்தி முன்னேற்றப் பாதையில் நடைபோடவைக்கும். உதாரணமாக வழக்கறிஞர் தொழிலை எடுத்துக்கொள்வோம்... ஒரு வழக்குக்கு சில ஆயிரம் ரூபாய்களை வசூல் செய்வரும் உண்டு; ஒரு மணி நேரத்துக்கு லட்சக்கணக்கில் ஃபீஸ் வாங்குபவரும் உண்டு. ஒரே துறை, ஒரே சட்டங்கள்... ஆனால் சிலர் மட்டும் மிக அதிகமாக சம்பாதிப்பது எப்படி?  திறமை... தொடர்ந்து தங்கள் புத்திசாலித்தனத்தால் பல முயற்சிகள் செய்து, போராடிப் பெற்ற திறமை. அதுதான் அவர்களுக்கு பணத்தோடு புகழையும் சேர்த்துக் கொடுக்கிறது. திறமைக்கு மரியாதை ஏன் தர வேண்டும் என்பதை உணர்த்தும் கதை இது.

அது இங்கிலாந்திலுள்ள ஒரு பெரிய கப்பல் நிறுவனம். அதற்குச் சொந்தமாக பதினான்கு சரக்குக் கப்பல்கள் இருந்தன. ஐரோப்பாவிலுள்ள சில நாடுகளுக்கும் அமெரிக்காவுக்கும் அவை சரக்குகளை ஏற்றி, இறக்கிக்கொண்டிருந்தன. இரண்டு மாத காலமாக அவற்றில் ஒன்றே ஒன்றில் மட்டும் பிரச்னை. திடீரென்று ஒரு நாள் கப்பலின் இன்ஜின் ஓடாமல் நின்றுவிட்டது. எவ்வளவோ முயற்சி செய்தும் நிறுவனத்தின் இன்ஜினீயர்களால் என்ன கோளாறு என்பதைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை.

அந்த நிறுவனத்துக்கு இரண்டு பேர் உரிமையாளர்கள். ஒரு சரக்குக் கப்பல் சரக்கை ஏற்றுவதற்காகவும் இறக்குவதற்காகவும் கரையில் நிற்கலாமே தவிர, சும்மா நிற்கக் கூடாது. அது நிறுவனத்துக்கு இழப்பு. கப்பல் கடலில் தொடர்ந்து பயணம் செய்தால்தான் நிறுவனத்துக்கு ஆதாயம். இப்போது பழுதாகி நின்றுபோன இன்ஜின் ஓடினால் போதும் என்றிருந்தது உரிமையாளர்களுக்கு. வேறு வழியில்லாமல் வெளியிலிருந்து இன்ஜினைச் சரிசெய்ய ஆட்களை வரவழைத்துப் பார்த்தார்கள். அவர்களும் வந்து என்னென்னவோ செய்து பார்த்தார்கள்; இன்ஜின் மட்டும் கொஞ்சம்கூட அசையாமல் அப்படியே நின்றுகொண்டிருந்தது. இன்ஜின் சரியாகவில்லையே என்கிற கவலையிலேயே நாளுக்கு நாள் நிறுவனத்தின் உரிமையாளர்களுக்கு பிரஷர் எகிறிக்கொண்டே போனது.

இந்தநிலையில்தான் ஓர் அதிகாரி தகவல் ஒன்றைத் தயங்கித் தயங்கிச் சொன்னார்... ``சார்... நார்விச் (Norwich) நகரத்துல வயசானவர் ஒருத்தர் இருக்காராம். சின்ன வயசுலருந்தே பல கப்பல் இன்ஜின்களைச் சரி பண்றதையே தொழிலா செஞ்சவராம். ஓடாம நிக்கிற எப்பேர்ப்பட்ட இன்ஜினையும் ஓடவெச்சுடுவாராம்... அவரை வேணா வரச் சொல்லலாமா?’’

ஓர் உரிமையாளர் கேட்டார்... ``ரொம்ப ஃபீஸ் வாங்குவாரோ?’’

``கொஞ்சம் அதிகமாத்தான் கேட்பாருனு சொல்றாங்க...’’

இன்னோர் உரிமையாளர் சொன்னார்... ``அதனால பரவாயில்லை. இன்ஜின் ஓடினா போதும். வரச் சொல்லுங்க.’’

அந்த முதிய இன்ஜினியரை அழைத்துவர நிறுவனத்திலிருந்து இரண்டு ஊழியர்கள் உடனே கிளம்பிப் போனார்கள். அடுத்த நாளே அவரும் வந்துவிட்டார். அவருடைய தோளில் ஒரு பெரிய பை தொங்கிக்கொண்டிருந்தது. பார்த்தாலே உபகரணங்களை வைத்திருக்கும் பை (Tool Bag) என்பது புரிந்தது. அவர் யாரிடமும் எதுவும் பேசாமல் நேராக கப்பல் இன்ஜினுக்கு அருகே போனார். இன்ஜினின் தலை முதல் கால் வரை அங்குலம் அங்குலமாக கவனமாக ஆராய்ந்தார்.

நிறுவனத்தின் உரிமையாளர்கள் இருவரும் அவரின் நடவடிக்கைகளையே கவனித்துக்கொண்டிருந்தார்கள். அவர் நடவடிக்கைகளைப் பார்க்கப் பார்க்க இன்ஜின் கோளாறை அவர் சரிசெய்துவிடுவார் என்றே அவர்களுக்குத் தோன்றியது. எல்லாவற்றையும் ஆராய்ந்த பிறகு அந்த முதியவர் தன் உபகரணப் பையைத் திறந்தார். அதிலிருந்து ஒரு சின்ன சுத்தியலை எடுத்தார். இன்ஜினின் ஒரு குறிப்பிட்ட இடத்தில் சுத்தியலால் லேசாக ஒரு தட்டுத் தட்டினார். உடனே சுத்தியலை பின்னுக்கு இழுத்தும்விட்டார். அவ்வளவுதான்... கப்பல் இன்ஜின் பழையபடி சீராக ஓடத் தொடங்கிவிட்டது. வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த கப்பல் நிறுவன உரிமையாளர்களுக்கும், அதிகாரிகளுக்கும், ஊழியர்களுக்கும் ஆச்சர்யம் தாங்கவில்லை.

அந்த முதியவர் ``நான் வீட்டுக்கு போய் பில் அனுப்புறேன்...’’ என்று சொன்னார். கிளம்பிவிட்டார்.

இரண்டே நாள்களில் அவர் இன்ஜினை சரி செய்ததற்கான பில் வந்தது. மொத்தம் 10,000 யூரோ பணம் கேட்டிருந்தார் அவர். கப்பல் உரிமையாளர்கள் அதைப் பார்த்துக் கடுப்பாகிவிட்டார்கள். பலரால் சரிசெய்ய முடியாத கோளாறுதான். ஆனால், ஒரு சின்ன சுத்தியலால் ஒரேயோர் இடத்தில் தட்டியதற்கு 10,000 யூரோ என்பது அதிகமில்லையா? இதை அப்படியே ஒரு கடிதமாக எழுதி, முதியவருக்கு அனுப்பி விளக்கம் கேட்டார்கள்.

அடுத்த இரண்டு நாள்களில் அந்த முதிய இன்ஜினியரிடமிருந்து பதில் வந்தது. ``நீங்கள் கேட்டிருக்கும் விளக்கம் நியாயமானதுதான். விளக்கம் இங்கே... சுத்தியலால் தட்டியதற்கு கூலி வெறும் 2 யூரோதான். ஆனால், எங்கே தட்ட வேண்டும் என்று நான் தெரிந்துவைத்திருப்பதற்கான கூலி 9,998 யூரோ.


Published Date : 06-04-2018 07:32:34

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை.

ஆன்மிகம்

மதுரையில் அழகர் ஆற்றில் இறங்கும்போது வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை... ஏன்?

Last Updated : 23-04-2018 21:38:27

- அருண் சின்னதுரை
THANKS TO VIKATAN MOBILE APP

மதுரை ஶ்ரீவீரராகவ பெருமாள் கோயில் சுமார் 1,500 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இங்கே வெள்ளிக்கிழமைகளில் இரவு 8 முதல் 9 மணி வரை சுக்கிர ஹோரையில் நடைபெறும் சிறப்பு பூஜை மிக விசேஷமானது. அந்த பூஜையை தரிசிப்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் வீடு கட்டுதல், மனை வாங்குதல், படிப்பு தொடர்பான சிக்கல்களிலிருந்து விடுபடுதல், வழக்குகளில் வெற்றி போன்ற பலன்களும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

இந்தக் கோயிலில் நின்ற கோலத்தில் வீரராகவ பெருமாளாகவும், கிடந்த கோலத்தில் ரங்கநாதராகவும், அமர்ந்த கோலத்தில் நரசிம்மராகவும்அருள்பாலிக்கிறார். தாயாரின் திருப்பெயர் கனகவல்லித் தாயார். உற்சவர் வீரராகவ பெருமாள் ஶ்ரீதேவி, பூதேவி சமேதராகக் காட்சிதருகிறார்.

மதுரை சித்திரைத் திருவிழாவின்போது, வைகை ஆற்றில் எழுந்தருளும் கள்ளழகரை எதிர்கொண்டு அழைத்து, அவரிடமிருந்து முதல் மரியாதை பெறுபவர் வீரராகவ பெருமாள். இந்தச் சம்பவத்தின் பின்னணியில் நெகிழ்ச்சியான ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

மன்னர் திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்னர் வரை, அழகர்கோயிலிலிருந்து புறப்படும் கள்ளழகர், அலங்காநல்லூர் வழியாக வந்து, தேனூர் வைகையாற்றில்தான் எழுந்தருளுவார். அப்போது விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த பொருள்களை கள்ளழகருக்குக் காணிக்கையாக சமர்ப்பிப்பார்கள். தேனூர் வைகையாற்றில் கள்ளழகர் எழுந்தருளும் மண்டபம் வைக்கோல்களைக் கொண்டு வேயப்பட்டிருக்கும்.


ஒருமுறை கள்ளழகர் வைக்கோல் மண்டபத்தில் எழுந்தருளியபோது, மண்டபம் தீப்பற்றிக்கொண்டது. தீப்பிடித்துக்கொண்ட மண்டபத்துக்குள் சென்று பெருமாள் விக்கிரகத்தை மீட்டு வரும் துணிச்சல் யாருக்குமே வரவில்லை. பெருமாளை தரிசித்து முதல் மரியாதை பெற வந்திருந்த அரசர்கூட தீயின் வெம்மை தாங்க மாட்டாமல் விலகிச் சென்றுவிட்டார். அமைச்சர்களும் மற்றவர்களும் விலகிச் சென்றுவிட்ட நிலையில், அர்ச்சகர் ஒருவர்தான் துணிச்சலுடன் மண்டபத்துக்குள் ஓடிச் சென்று பெருமாளின் விக்கிரகத்தை மீட்டெடுத்து வந்து, ஈரமான ஆற்று மணலில் பதித்துக் குளிர்வித்தவர், வெப்பத்தின் காரணமாக மயங்கிவிட்டார். அவருடைய மயக்கத்தைத் தெளிவிக்க ஏற்பாடு செய்த அரசர், மயக்கம் தெளிந்த அர்ச்சகரிடம், ``ஐயா, நான் பெரிதும் நேசித்து பூஜிக்கும் இறைவனை நீங்கள் துணிந்து காப்பாற்றிவிட்டீர்கள். எனவே, எனக்குக் கிடைக்கும் முதல் மரியாதையை இன்று முதல் நீங்கள்தான் ஏற்றுக்கொள்ளவேண்டும்'' என்று கூறினார்.

அதற்கு அந்த அர்ச்சகர், ''அரசே, தங்களுக்கு பதிலாக நான் முதல் மரியாதையை ஏற்றுக்கொள்வதில் எனக்கு மகிழ்ச்சியோ பெருமையோ இல்லை. நான் அனுதினமும் வழிபடும் வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை வழங்கச் செய்வதே எனக்கு மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கும்'' என்றார்.

அன்றிலிருந்து ஆண்டுதோறும் கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும்போது, வீரராகவ பெருமாளுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது. கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி தேனூரிலிருந்து மதுரைக்கு மாற்றப்பட்ட பிறகும், இந்த வைபவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நாளில் அதிகாலை 2 மணிக்கு வீரராகவ பெருமாள் கோயிலிலிருந்து புறப்பட்டு, யானைக்கல் வழியாக அழகர் ஆற்றில் இறங்கும் நேரத்துக்குச் சரியாக எழுந்தருளிவிடுவார். அழகர் ஆற்றில் இறங்கியதும், வீரராகவ பெருமாள் முன்னும் பின்னும் ஆடிக்கொண்டே அழகரை எதிர்கொண்டு அழைப்பார். பின்னர், கள்ளழகர் சார்பாக வீரராகவ பெருமாளுக்கு மாலை, பரிவட்டம் போன்ற மரியாதைகள் செய்யப்படும். அழகர் ஆற்றில் இறங்கும்போது, 'வாருங்கள் அண்ணா!' என்று வீரராகவ பெருமாள் மனம் நிறைய அழைக்கும் இந்த வைபவத்தை பக்தர்கள் நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாக தரிசிக்கிறார்கள்.

Published Date : 23-04-2018 21:30:52

சிந்தனையை தூண்டும் குட்டி ஜென் கதை

*இன்றைய இரவு உங்கள் சிந்தனையை தூண்டும் குட்டி ஜென் கதை*
(Thanks to Whatsup)

ஒரு டீ கடை காரனிடம் ஒரு மல்யுத்த வீரன் எப்போதும் டீ அருந்துவான்... ஒரு முறை டீ கடை காரனுக்கும் மல்யுத்த வீரனுக்கும் தகராறு வந்து விட்டது.. அப்போது மல்யுத்த வீரன் டீ கடை காரனை மல்யுத்த சண்டைக்கு அழைத்தான்...

அவர்கள் இனத்தில் மல்யுத்த சண்டைக்கு ஒருவன் அழைத்தால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; இல்லா விடில் அது பெரும் அவமானம்.. எனவே டீ கடை காரன் ஒப்பு கொண்டான்.

ஆனால் இதில் எப்படி நாம் ஜெயிக்க போகிறோம் என பயந்தான்..

 அறிவுரைக்காக ஒரு ஜென் துறவியை நாடினான்..

அவனது கதை முழுதும் கேட்ட அவர், " சண்டைக்கு இன்னும் எத்தனை நாட்கள் உள்ளன" என்று கேட்டார். " 30 நாட்கள்" என்றான் அவன். " இப்போது நீ என்ன செய்கிறாய்?" என்று பின்பு கேட்டார். " டீ ஆற்றுகிறேன்" என்றான் அவன்.. " அதையே தொடர்ந்து செய்" என்றார் அவர்..

ஒரு வாரம் கழித்து வந்தான் டீ கடை காரன்.. " இன்னும் ஈடுபாடோடு, இன்னும் வேகமாய் டீ ஆற்று" என்றார் ஜென் துறவி..

இரண்டு வாரம் ஆனது.. அப்போதும் அதே அறிவுரை..

போட்டி நாள் அருகில் வந்து விட்டது.. டீ கடை காரன் நடுக்கத்துடன் ஜென் துறவியிடம், " நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டான்.. "போட்டிக்கு முன் ஒரு டீ சாப்பிடலாம் என நீ அவனை கூப்பிடு" என்றார் துறவி...

மல்ல்யுத்த வீரன் குறிப்பிட்ட நாளன்று வந்து விட்டான்.. "வா.. முதலில் டீ சாப்பிடு" என்றான் கடை காரன். "சரி" என்று அமர்ந்தான் வீரன்... டீ ஆற்றும் வேகம் கண்டு மிரண்டு போய் விட்டான்.. இதற்கு முன்பும் அவன் டீ ஆற்றுவதை பார்த்திருக்கிறான் இப்போது என்ன ஒரு வேகம்! ஒரு சாதாரண டீ ஆற்றும் விஷயத்திலேயே இவ்வளவு முன்னேற்றம் என்றால், போட்டிக்கு எந்த அளவு தயார் செய்திருப்பான் என எண்ணுகிறான்.. போட்டியே வேண்டாம் என சென்று விடுகிறான்..

*உங்களுக்கு தெரிந்தவைகளை வைத்து முன்னேறிக்கொண்டு இருங்கள்...... மிகுதி தானாக எல்லாமே நடக்கும்....*

Monday, April 2, 2018

கடவுளின் தரிசனம்

கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் தவம் இருந்த
அந்த நாட்டின் மன்னனுக்கு அன்று கடவுளின் தரிசனம் கிடைத்தது.....!!

பெரும் மகிழ்ச்சி அடைந்த மன்னன் கடவுளிடம் ஒரு வரம் கேட்டான்.....!!

கடவுளும் என்ன வரம் வேண்டுமோ கேள் என்று மன்னனிடம் சொல்ல..

எப்படி நீங்கள் எனக்கு தரிசனம் தந்தீர்களோ......

அதேபோல..

ராணியாருக்கும்..
மந்திரி மற்றும்
அரச குடும்பத்தினருக்கும்...
நாட்டின் மக்கள்
அனைவருக்கும்
நீங்கள் காட்சி தரவேண்டும்..

என்று ஆவலான வரத்தை கேட்டான்.

இது அவரவர்களின் கர்ம வினையைப் பொறுத்தே அமையும் இருந்தாலும்,

மன்னன் வரத்தை கேட்டுவிட்டதால் கடவுளும் அதற்கு சம்மதித்தார்.....!!

"அதோ தெரிகின்றதே ஒரு உயர்ந்த மலை ,

அங்கே அனைவரையும் அழைத்துக்கொண்டு வா..

காட்சி தருகின்றேன்" என்று சொல்லி மறைந்தார்.....!

மன்னனும் நாட்டில் அனைவருக்கும் தண்டோரா போட்டு

அரச குடும்பத்தினருடனும்.. மக்களுடனும்..
மலையை நோக்கி புறப்பட்டான்....!

அனைவரும் கடவுளை காணும் ஆவலில் மலையேற துவங்கினர்....!

சிறிது உயரம் சென்றவுடன்..

அங்கே செம்பு பாறைகள் தென்பட்டன....!

உடனே,

மக்களில் நிறைய பேர்..

செம்பை மடியில் கட்டிக்கொண்டு..

சிலர் பாறைகளை உடைத்து தலையில் வைத்துக் கொள்ளவும்ஆரம்பித்தனர்.

மன்னன் "அனைவருக்கும் கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது.....!!

இதெல்லாம் அதற்கு முன்னால் ஒன்றுமே இல்லை அனைவரும் வாருங்கள்" என்று உரக்க சப்தமிட்டான்.....!

.அதற்கு "மன்னா இப்பொழுது இதுதான் தேவை....!!

கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்வது" என்று ஒட்டுமொத்தமாக கூட்டத்தில் குரல் எழும்பியது.....!!

எப்படியோ போங்கள் என்று மீதி இருப்பவர்களை அழைத்துக்கொண்டு மலையேறதுவங்கினான் மன்னன்..

மலையின் சில மைல் தூரத்தை கடந்தவுடன் ,

அங்கே வெள்ளியிலான பாறைகளும்.....

வெள்ளி துண்டுகளும் நிறைய இருந்தன....!!

அதை பார்த்த கொஞ்சம் மீதி இருந்த மக்கள் ஓடிச்சென்று வெள்ளி துண்டுகளை மூட்டை
கட்ட ஆரம்பித்தனர்....!!

மன்னன் மறுபடியும் மக்களுக்கு உரக்க சொன்னான்....!!

."விலைமதிக்க முடியாத கடவுளின் காட்சி கிடைக்க போகின்றது....!!

அதற்கு முன்னால் இந்த வெள்ளிக்கட்டிகள் எதற்கு பயன்பட போகின்றன" என்று உரைத்தான்.

மன்னா இப்பொழுது கடவுளின் காட்சியை விட,

வெள்ளிக் கட்டிகளே பிழைப்புக்கு உதவும் என்று சொல்லிக் கொண்டே ,

மக்கள் முடிந்த அளவு அள்ள துவங்கினர்....!!

உங்கள் தலையெழுத்து என்று சொன்ன மன்னன்..

மீதி இருந்த ராஜ குடும்பத்தினரோடு மலையேற ஆரம்பித்தான்.

இப்பொழுது சிறிதுதொலைவில் தென்பட்டது தங்கமலை.....!!

ராஜகுடும்பத்தினர் பாதி பேர் அங்கே சென்றுவிட......

மீதி இருந்தவர்கள் ராணியும்..
மந்திரியும்,
தளபதியும்,

மற்றும் முக்கியமானவர்கள் மட்டுமே.....!

சரி வாருங்கள்..

செல்வோம் என்று மீதி இருந்தவர்களை அழைத்துக்கொண்டு ,

முக்கால் வாசி மலையை கடந்திருப்பான் மன்னன்.. ....!

அங்கே தென்பட்டது வைரமலை....!!

அதைப்பார்த்த ராணி முதற்கொண்டு அங்கே இருந்தவர்கள் ஓடிவிட....

.மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்றான் மன்னன்.....!!!

கடவுள் மன்னன் முன் தோன்றி "எங்கே உன் மக்கள்" என்றார்.....!!

மன்னன் தலை குனிந்தவனாக

"அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்து சென்றது அய்யனே......!!

என்னை மன்னியுங்கள்" என்றான் மன்னன்.....!!

அதற்கு கடவுள் ,
"நான் யாராக இருக்கின்றேன் எப்படி இருக்கின்றேன் என்று கோடியில் ஒரு சிலரே அறிவார்கள்.

அப்படிபட்டவர்களுக்கே எமது காட்சி என்பது கிட்டும்.....!!

உலக இச்சைகள் என்ற சேற்றை பூசிக்கொண்டவர்கள் சிலருக்கு,

உடல்..செல்வம்..சொத்து... என்ற,

செம்பு.. வெள்ளி..
தங்கம்..வைரம்..

போன்ற ஏமாற்றும் மாயைகளில் சிக்கிக் கொண்டுள்ளனர்....!

இவற்றையெல்லாம் கடந்து இச்சையற்ற நிலையில் இருப்பவரே ....
எம்மை அடைவர்" ....!!

என்று சொல்லி விண்ணில் மறைந்தார் ....கடவுள்....!!