I read it from books, whats up and other blogs. Then i heard it from my friends and relatives. Finally what i saw
Thursday, February 26, 2015
Wednesday, February 25, 2015
Monday, February 23, 2015
கோலாவும் ஒலாவும் .... ஆம் ஓலா டாக்ஸி பற்றி நாணயம் விகடனின் பதிவு . பிப் 25 இதழில் ...
ஜெயிக்கப்போவது யாரு?டாப் கியரில் டாக்ஸி பிசினஸ்சித்தார்த்தன் சுந்தரம், மு.ச.கெளதமன்
ஓலா நிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 6000 மினி கார்கள் ஓடுகிறதாம். ஒரு டிரைவர் தனது காரை ஓலாவுடன் இணைக்கும்போது தரும் ரூ.6,000 டெபாசிட் மூலம் அந்த நிறுவனத்துக்கு 3.6 கோடி ரூபாய் கிடைக்கும். இதுபோக, ஒவ்வொரு மாதமும் கால் சென்டருக்குக் கட்டும் கட்டணம் ரூ.1,000 மூலம் மாதமொன்றுக்கு 60 லட்சம் ரூபாய் கிடைக்கும். டெபாசிட் பணத்தை அப்படியே வங்கி டெபாசிட்டில் போட்டு வைத்திருந்தால்கூட ஓர் ஆண்டுக்கு சுமாராக 28.80 லட்சம் ரூபாய் ஓலாவுக்கு வட்டியாகக் கிடைக்கும். இது சென்னையில் மட்டும் கிடைக்கும் லாபம். தமிழகத்தில் 8 நகரங்களிலும், இந்தியா முழுக்க 68 நகரங்களிலும் ஓடும் கார் மூலம் ஓலா நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு உள்நாட்டு கோலா கம்பெனிகளுக்கும் வெளிநாட்டு கோலா கம்பெனிகளுக்கும் நடந்த போரைப்போல, இப்போது பெரிய கால் டாக்ஸி நிறுவனங்களுக்கும் சிறிய கால் டாக்ஸி நிறுவனங்களுக்கும் இடையே பெரிய போரே நடந்துகொண்டிருக்கிறது. இந்தப் போரில் கார்ப்பரேட் ரீதியில் இயங்கும் ஹைடெக் நிறுவனங்கள் ஜெயிக்கப்போகிறதா, இல்லை உள்ளூர் கால் டாக்ஸி நிறுவனங்கள் ஜெயிக்கப்போகிறதா, இந்தப் போரில் 'ஹைடெக்’ கால் டாக்ஸி நிறுவனங்கள் பயன்படுத்தும் யுக்திகள் என்னென்ன, உள்ளூர் நிறுவனங்களால் ஏன் இந்தப் போட்டியைச் சமாளிக்க முடியவில்லை என்கிற கேள்விகளுக்கு பதில் தேடிப் புறப்பட்டோம்.

இந்தக் கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ளும் முன், இந்தியாவில் கால் டாக்ஸி பிசினஸ் எப்படி இருக்கிறது என்பதை முதலில் பார்த்துவிடுவோம்.
இந்திய கால் டாக்ஸி சந்தையின் மதிப்பு ரூ. 36,000 கோடியை எட்டும் என்று கன்சல்டன்சி நிறுவனங்கள் கணித்திருக்கின்றன. கால் டாக்ஸி நிறுவனங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். முதலாவது, அக்ரிகேட்டர் (Aggregator) எனப்படும் சிங்கிள் பிராண்ட் கம்பெனிகள். உதாரணமாக, ஓலா, உபர், டாக்ஸி ஃபார் ஸூர். இரண்டாவது, அஃப்ளியேட்டர் (Affiliator) எனப்படுகிற இணைப்பு நிறுவனங்கள். உதாரணமாக, சவாரி, டாக்ஸி பிக்ஸி. மூன்றாவது, ரேடியோ கேப்ஸ் ஸ்கீம் (Radio Cabs Scheme)-ல் பதிவு செய்து செயல்படும் நிறுவனங்கள். உதாரணமாக, மேரு, ஈஸி, மெகா, டேப்.
இந்த மூன்று வகையான நிறுவனங்களும் சேர்ந்து இந்தியா முழுக்க 12 சதவிகித சந்தையைத் தற்போதைக்குப் பிடித்திருக்கின்றன. மீதமுள்ள 88 சதவிகித சந்தையை அமைப்புசாரா பிரிவைச் சேர்ந்த (Unorganised) சிறிய கார் ஓட்டுநர்கள், டாக்ஸி ஸ்டாண்ட், ப்ரீபெய்டு டாக்ஸிகள் வைத்திருக்கின்றன.
தற்போது 12 சதவிகித சந்தை மட்டுமே வைத்திருக்கிற கால் டாக்ஸி நிறுவனங்கள்தான் 88 சதவிகித சந்தையை வைத்திருக்கிற அமைப்பு சாரா கால் டாக்ஸி நிறுவனங்களுக்கு நெருக்கடி தந்துவருகின்றன. அதிலும், ஓலா நிறுவனம் வளரும் வேகத்தைப் பார்த்து அனைத்து கால் டாக்ஸி நிறுவனங்களும் ஆடிப்போயிருக்கின்றன.
ஜனவரி 2011-ல் பரீஷ் அகர்வால் மற்றும் அன்கித் பாதி என்கிற இரண்டு ஐஐடி (மும்பை) இளைஞர்களால் உருவாக்கப்பட்டதுதான் ஓலா கேப்ஸ். அசூர வேகத்தில் வளர்ந்துவரும் இந்த நிறுவனத்துக்குச் சொந்தமாக ஒரு கார்கூடக் கிடையாது. இந்த நிறுவனத்திடம் பதிவு செய்துகொண்ட கார் டிரைவர்களுக்குத் தாங்கள் உருவாக்கிய செயலியைக் (App) கொடுக்க, அந்த செயலி பயணம் செய்பவர், கார் டிரைவர், ஒருங்கிணைப்பாளர் ஆகிய மூவரையும் இணைக்கும் ஒரு பாலமாகச் செயல்படும்.
கடந்த ஜனவரி 2014-ல் இந்தியாவின் ஐந்து முக்கிய பெருநகரங்களில் ஓலா தனது சேவையை விரிவுபடுத்தியது. அடுத்த ஒரே ஆண்டில் இந்தியாவில் அதிக மக்கள்தொகையுள்ள 68 நகரங்களைத் தேர்ந்தெடுத்து தனது சேவையை வழங்கத் தொடங்கியது. இந்த நிறுவனம் தற்போது மாதமொன்றுக்கு 40% வளர்ச்சியில் இந்தியா முழுவதும் 60,000 டாக்ஸிகள் மூலம் நாளொன்றுக்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாடிக்கை யாளர்களுக்கு தன் சேவையை வழங்கி வருகிறது.

2013 நவம்பரில் 'மேட்ரிக்ஸ் பார்ட்னர்ஸ் இந்தியா லிமிடெட்’ நிறுவனத்திடமிருந்து 20 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.120 கோடி) திரட்டியது ஓலா. பிறகு, 2014 அக்டோபரில் 210 மில்லியன் டாலர் (தோராயமாக ரூ.1,260 கோடி) முதலீட்டை ஜப்பான் டெலிகாம் நிறுவனமான சாஃப்ட் பேங்க் கார்ப் என்கிற குழு முதலீட்டாளர்களிடமிருந்து திரட்டி இருக்கிறது.
ஓலா நிறுவனம், 44 நகரங்களில் செயல்படும் டாக்ஸி ஃபார் ஸூர் நிறுவனத்தை ரூ.1,250 கோடி கொடுத்து வாங்க இருப்பதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் ஆக்சல், குவால்காம் போன்ற வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீடு செய்திருக்கின்றன.
குறுகிய காலத்தில் ஓலா நிறுவனம் மட்டும் கால் டாக்ஸி சந்தையில் முன்னணி இடம்பிடித்தது எப்படி என்பதை தெரிந்துகொள்ள ஓலா நிறுவனத்தின் டிரைவர் ஒருவருடன் பேசினோம்.
'நான் கடந்த இரண்டு மாதங்களாக ஓலாவில் சொந்த டாக்ஸி ஓட்டுகிறேன். கடந்த மாதம் என் வருமானம் 60,000க்கும் மேல். என் நிகர லாபம் தோராயமாக 40,000 ரூபாய். இந்த வருமானம் பெட்ரோல், டீசல், பராமரிப்புச் செலவுகள் போக எனக்கு கிடைத்த நிகர லாபம்'' என்று அவர் ஆரம்பத்திலேயே நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்க, மேற்கொண்டு கேட்க ஆரம்பித்தோம்.
'பொதுவாக, டாக்ஸி டிரைவர்களுக்கு கிலோ மீட்டர் கணக்கில்தான் காசு கிடைக்கும். ஒரு ட்ரிப்பில் ஆறு கிலோ மீட்டர் பயணம் செய்தால் முதல் நான்கு கிலோ மீட்டருக்கு ரூ.100-ம், அடுத்த இரண்டு கிலோ மீட்டருக்கு வாடிக்கையாளர் களிடமிருந்து ரூ.12-ம், ஓலா நிறுவனத்திடமிருந்து ரூ.4-ம் என ஒரு கிலோ மீட்டருக்கு ரூ.16-ம் கிடைக்கும். இது நாங்கள் ஓட்டும் தூரத்துக்குக் கிடைக்கிற வருமானம். ஒரு நாளைக்கு 10 ட்ரிப்புகளுக்குமேல் ஓட்டினால் 10-வது ட்ரிப் முடியும்போது ரூ.2,500-ம், 11-ம் ட்ரிப்பிலிருந்து ஒவ்வொரு ட்ரிப்புக்கும் கூடுதலாக ரூ.250-ம் இன்சென்டிவ் கிடைக்கும். ஒரு மாதத்துக்கு முன் இந்த இன்சென்டிவ் 10 ட்ரிப்புக்கு ரூ.5,000ஆக இருந்தது. இப்போதுதான் குறைத்தார்கள்'' என்றார். இதனால் ஓலாவுக்கு என்ன லாபம்?
''ஒவ்வொரு மாதமும் 1000 ரூபாயை நாங்கள் கம்பெனிக்கு கால் சென்டர் கட்டணமாகச் செலுத்த வேண்டும். ஆரம்பத்தில் ஓலாவில் காரை இணைத்தபோது 6,000 ரூபாய் திரும்பப் பெறும் டெபாசிட்டாகச் செலுத்தினேன். இதுதான் கம்பெனிக்குக் கிடைக்கும் லாபம்'' என்றார் அவர்.
ஓலா நிறுவனத்துக்கு சென்னையில் மட்டும் 6000 மினி கார்கள் ஓடுகிறதாம். ஒரு டிரைவர் தனது காரை ஓலாவுடன் இணைக்கும்போது தரும் ரூ.6,000 டெபாசிட் மூலம் அந்த நிறுவனத்துக்கு 3.6 கோடி ரூபாய் கிடைக்கும். இதுபோக, ஒவ்வொரு மாதமும் கால் சென்டருக்குக் கட்டும் கட்டணம் ரூ.1,000 மூலம் மாதமொன்றுக்கு 60 லட்சம் ரூபாய் கிடைக்கும். டெபாசிட் பணத்தை அப்படியே வங்கி டெபாசிட்டில் போட்டு வைத்திருந்தால்கூட ஓர் ஆண்டுக்கு சுமாராக 28.80 லட்சம் ரூபாய் ஓலாவுக்கு வட்டியாகக் கிடைக்கும். இது சென்னையில் மட்டும் கிடைக்கும் லாபம். தமிழகத்தில் 8 நகரங்களிலும், இந்தியா முழுக்க 68 நகரங்களிலும் ஓடும் கார் மூலம் ஓலா நிறுவனத்துக்கு எவ்வளவு லாபம் கிடைக்கும் என்பதை நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக் கொள்ளுங்கள்.
ஓலா நிறுவனத்தின் சர்வீஸ் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள, அந்த நிறுவனத்தின் காரில் ஏறினோம். அந்த காரில், ஜிபிஎஸ் வசதி, ஏசி, சுத்தமான இன்டீரியர் என கச்சிதமாக இருந்தது. மிதமான வேகத்தில் மவுன்ட் ரோட்டிலிருந்து சரியான இடத்துக்கு (பாரிமுனையில் இருக்கும் காளிகாம்பாள் கோயில்) சரியான நேரத்தில் போய்ச் சேர்ந்தோம். நாம் பயணம் செய்த 7.2 கிலோ மீட்டருக்கு 192 ரூபாய் வாங்கிக்கொண்டார் ஓலா டிரைவர். இதில், 50 ரூபாய் பீக் ஹவர்ஸ் சார்ஜ் என்று வாங்கிக் கொண்டார். அதேசமயம், டிராஃபிக்கில் நிற்கும் ஒவ்வொரு நிமிடத்துக்கும் ரூ.2 என கணக்கிடப்பட்டு ஆறு நிமிடத்துக்கு ரூ.12 வெயிட்டிங் சார்ஜாக வசூலிக்கப்பட்டது. ஓலாவில் ஒரு கிலோ மீட்டர் பயணத்துக்கு ஆன செலவு ரூ.27. ஓலா இப்படி எனில், 'டாக்ஸி ஃபார் ஸூர்’ நிறுவனம் எப்படி செயல்படுகிறது என்பதைத் தெரிந்துகொள்ள, அந்த நிறுவனத்தின் டாக்ஸி ஒன்றில் ஏறினோம். ஓலாவில் கிடைத்த சர்வீஸ் அனைத்தும் 'டாக்ஸி ஃபார் ஸூரிலும்’ நமக்குக் கிடைத்தது. கட்டணமும் ஓலாவை ஒட்டியே இருந்தது.
ஓலா மற்றும் டாக்ஸி ஃபார் ஸூரின் சர்வீஸ் இப்படி இருக்க, உள்ளூர் டாக்ஸி நிறுவனங்களின் சர்வீஸ் எப்படி உள்ளது என்பதை அறிய சமீப காலத்தில் சென்னையிலும் மற்றும் தமிழகத்தில் முன்னணியில் இருந்த ஒரு நிறுவனத்தின் காரை புக் செய்தோம். அந்த நிறுவனத்தின் கார் டிரைவர் சொன்ன நேரத்துக்கு வரவில்லை. நம்முடன் போனில் தொடர்புகொள்ளவும் இல்லை. அவருடைய போனில் நாமே அழைத்து பேசியபோது 'இதோ வந்துட்டே இருக்கேன் சார்’ என்று சொன்னார். நாம் இருக்கும் இடத்தைத் தெரிந்து கொள்ள நமக்கு பலமுறை போன் செய்து 20 நிமிடம் காலதாமதமாக வந்து சேர்ந்தார். ஓலா, டாக்ஸி ஃபார் ஸூர் போல அந்த காரில் ஜிபிஎஸ் வசதி இல்லை.
அந்த டிரைவரிடம் வருமானம் பற்றி பேச ஆரம்பித்தோம். முதலில் தனது நிறுவனத்தைப் பற்றி பெருமை பொங்க பேசியவர், சிறிது நேரத்தில் புலம்ப ஆரம்பித்தார்.
''முன்பு இருந்ததைப்போல இப்போது இல்லை. இன்று இது என் ஐந்தாவது சவாரிதான். இன்னும் ஒரு ஐந்து ஷார்ட் ட்ரிப் சவாரியாவது கிடைத்தால் தான் இன்று எனக்கு ஏதாவது கிடைக்கும். ஓலா மாதிரி நல்ல இன்சென்டிவ் கொடுத்தால் நன்றாக உழைக்கலாம். ஓலாவில் ஒரு ட்ரிப்புக்குத்தான் காசு. ஆனால், எங்கள் நிறுவனத்தில் கிலோ மீட்டர் கணக்குதான். பொங்கல் விழாவினால் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஓலா ட்ரைவரின் வருமானமும் லட்சத்துக்குமேல். ஆனால், எனக்கு சரியாகச் சவாரி கிடைக்காமல், பொங்கலன்றுகூட வீட்டில் இருக்க முடியாமல் லாங் ட்ரிப் செல்ல வேண்டியிருந்தது.....’ என்று புலம்பித் தள்ளினார் அந்த டிரைவர்.

இறுதியாக, மற்ற டாக்ஸி நிறுவனங்களைக் காட்டிலும் அதிகக் கட்டணத்தையும் வாங்கிக் கொண்டு பில் கொடுக்காமல் பறந்தார். பில் பெறுவதற்காக மீண்டும் அதே நிறுவனத்துக்கு போன் செய்து பேசியும் கடைசி வரை பில் கிடைக்கவில்லை. அவர் வாங்கிய கட்டணம் 2.8 கிலோ மீட்டருக்கு 147 ரூபாய். தோராயமாக ஒரு கிலோ மீட்டருக்கு 52.5 ரூபாய்.
புதிய தொழில்நுட்பங்கள், புதிய பிசினஸ் மாடல், வெளிப்படையான கட்டணம், திருப்திகரமான சேவை என பலவகையிலும் புதிதாக வந்திருக்கும் நிறுவனங்கள், உள்ளூர் நிறுவனங்களுக்கு கடும் போட்டியைத் தந்து வருகின்றன. இந்தப் போட்டி பற்றியும் உள்ளூர் டாக்ஸி நிறுவனங்களின் கருத்தைத் தெரிந்துகொள்ள ஃபாஸ்ட் டிராக் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சி.அம்பிகாபதியைச் சந்தித்துப் பேசினோம்.
'நம் நாட்டில் யார் வேண்டுமானாலும் எந்தத் தொழில் வேண்டுமானாலும் செய்யலாம். அதை அரசாங்கம் கண்டுகொள்வதில்லை. இன்று அந்த நிலைமை டாக்ஸி தொழிலுக்கும் வந்துவிட்டது. இத்தனை நாள் வரை சீராக வளர்ந்து கொண்டிருந்த இந்தத் துறை, இப்போது 500 கோடி, 1,000 கோடி பணம் படைத்த சில பெரிய முதலாளிகள் வந்த தால் கட்டணங்கள் தாறுமாறாகக் குறைந்திருக்கிறது அல்லது குறைந்ததுபோல ஒரு தோற்றம் ஏற்படுத்தப் பட்டிருக்கிறது.
நாங்களும் கார்களை அட்டாச் செய்ய 10,000 ரூபாய் ரீஃபண்டபிள் டெபாசிட்டாக வசூலித் தோம். கால் சென்டர் கட்டணமாக மாதம் 4,000 ரூபாய் வசூலித்தோம். ஆனால், நேற்றுவந்த ஓலா நிறுவனம் தொடக்கத்தில் கார்களை அட்டாச் செய்ய 6,000 ரூபாயையும், மாதம் கால் சென்டர் கட்டணமாக 1,000 ரூபாயும் வசூலித்தது. ஆனால், இப்போது டெபாசிட் வாங்குவதைத் தவிர்த்து விட்டு, கால் சென்டர் கட்டணம் மட்டும் மாதம் 1,000 ரூபாய் என்று வசூலிக்கிறது. இது எப்படி சாத்தியப்படும் என்று எனக்குத் தெரியவில்லை. அதேபோல, ஓலா டிரைவர்களுக்கு இன்சென்டிவ் என மாதமொன்றுக்கு ரூ.10,000 தருகிறது. இந்தப் பணமெல்லாம் ஃபண்டின் மூலம் திரட்டப்பட்ட பணம். வரும் பணத்துக்கு எப்படி லாப, நஷ்டம் கணக்கிடுகிறார்கள் என்று புரிந்துகொள்ள முடியவில்லை
இப்போது அவர்கள் கையில் பணம் இருக்கிறது. அந்தப் பணத்தைப் பயன்படுத்தி முதலில் டிரைவர்களைக் கவர இன்சென்டிவ், ஆஃபர்கள் தந்து, மற்ற நிறுவனங்களைப் பின்னுக்குத் தள்ளி முதல் இடம்பிடிக்கக் கட்டணக் குறைப்பு என்கிற பிரம்மாஸ்திரத்தைப் பயன்படுத்தி வருகிறது.நிச்சயமாக இது நீண்ட நாட்களுக்கு நீடிக்காது. திடீரென ஒருநாள் நிறுவனத்தை வேறு ஒரு நிறுவனத்துக்கு விற்கமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்? இன்றைக்கு ஆஃபர்களை அள்ளித் தருகிறவர்கள், சந்தையை முழுமையாகப் பிடித்தபின் மற்ற தனியார் கம்பெனிகளைப் போல கடுமையான விதிகள் விதித்தால், அன்று டிரைவர்கள் எங்களைத் தேடி திரும்ப வருவார்கள்'' என்று பொறுமினார்.
கால் டாக்ஸி நிறுவனங்கள் இடையே நடக்கும் இந்தப் போரில் உள்ளூர் கால் டாக்ஸி நிறுவனங்கள் ஜெயிக்க வேண்டும் எனில், சரியான சேவையை, காலம் தவறாமல், நியாயமான கட்டணத்தில் வழங்க வேண்டும். அப்போதுதான் நம் மக்கள் வேறு நிறுவனங்களைத் தேடிப்போக மாட்டார்கள். உள்ளூர் கால் டாக்ஸி நிறுவனங்கள் பிறரைக் குறை சொல்வதை விட்டுவிட்டு, தங்களை தொழில்நுட்ப ரீதியாக சரிசெய்துகொண்டால், மக்களின் ஆதரவு என்றைக்கும் கிடைக்குமே!
Friday, February 13, 2015
மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா
மவுஸை தட்டினால் வீட்டுக்கே வரும் திருநெல்வேலி அல்வா,பால்கோவா, மைசூர்பாக் வீட்டில் இருந்து கொண்டே ஆன்லைனில் இனிப்புகள் வாங்க வசதியாக வந்துள்ளது ஸ்வீட்கானா.காம். ஸ்வீட்கானா.காம் டிசம்பர் மாதம் துவங்கப்பட்டது. நெல்லையில் தலைமை அலுவலகமும் பிற இடங்களில் கிளைகளும் உள்ளன. இந்த இணையதளம் துவங்கிய ஒரு மாதத்திற்குள் 1,000க்கும் அதிகமான ஆர்டர்கள் வந்துள்ளன. முதலில் அல்வாவில் துவங்கி தற்போது வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பிற இனிப்புகளும் விற்கப்படுகிறது. சர்வதேச ஷிப்பிங் முறை அடுத்த மாதம் துவங்கப்படும். இந்த இணையதளத்திற்கு இந்தியா முழுவதும் வாடிக்கையாளர்கள் உள்ளனர். கார்பரேட் நிகழ்ச்சிகள் மற்றும் பார்ட்டிகளுக்கும் இனிப்புகளை சப்ளை செய்கிறார்கள். ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த வினோத் என்ற வாலிபர் தனது 5 நண்பர்களுடன் சேர்ந்து துவங்கியது தான் ஸ்வீட்கானா.காம். அவர்கள் ஆறு பேரும் கல்லூரி காலத்தில் இருந்தே நண்பர்கள். அப்போதில் இருந்தே ஏதாவது சொந்த வியாபாரம் துவங்க வேண்டும் என நினைத்துள்ளனர். இது குறித்து வினோத் கூறுகையில், இந்த இணையதளத்தை டிசைன் செய்ய ஒரு மாதம் தான் ஆனது. ஆனால் இனிப்புகளின் சிறப்புகள் மற்றும் தரத்தை அறிந்து கொள்ள நாங்கள் ஓராண்டு காலமாக பணிபுரிந்தோம். நாங்கள் நெல்லையைச் சேர்ந்தவர்கள் என்பதால் முதலில் திருநெல்வேலி அல்வா விற்பனையுடன் இணையதளத்தை துவங்கினோம். இவர்களின் தனித்துவமாக இருப்பது எந்த ஊரில் எந்த ஸ்வீட் பிரபலமாக இருக்கிறதோ அதை அந்த ஊரில் இருந்தே ஷிப்பிங் செய்வதுதான். அதனால் தான் வாடிக்கையாளர்கள் திருப்தி அடைகிறார்கள். தற்போது ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா, கோவை மைசூர்பாக், தூத்துக்குடி மக்ரூன் உள்ளிட்ட பல வகை இனிப்புகளை விற்பனை செய்கிறோம். இந்த சேவை வெளிநாட்டில் இருப்பவர்களும் இந்தியாவில் இருக்கும் தங்களின் குடும்பத்திற்கு அனுப்ப சுலபமாக உள்ளது.கம்ப்யூட்டர் மவுஸை ஒரு கிளிக் செய்தால் உங்கள் வீட்டு வாசலில் இனிப்புகளை டெலிவரி செய்ய விரும்பி அந்த முயற்சியில் வெற்றி பெற்றுள்ளோம் என்றார்.
Read more at: http://tamil.oneindia.com/news/business/tirunelveli-halwa-at-your-doorsteps-is-just-click-away-218089.html
Read more at: http://tamil.oneindia.com/news/business/tirunelveli-halwa-at-your-doorsteps-is-just-click-away-218089.html
Wednesday, February 11, 2015
Subscribe to:
Comments (Atom)



